Monday, February 23, 2009

இசையால் வசமான 'ஆஸ்கார்'



எத்தனைத் திரையுலக நட்சத்திரங்களின் கனவு….ஆஸ்காரிற்கான கதவினை 'கமல் திறந்து வைப்பாரா..அமீர்கான் திறந்து வைப்பாரா..என்று ஏக்கப்பட்டு, 'ஆஸ்கார்' ! பரிந்துரை செய்யப்பட்டாலேயே கொண்டாடிய காலங்கள் நினைவிலேயே இருக்கின்ற பொழுதினிலேயே....இன்று நனவாய்…! Great AR Rahman!!!

பதட்டமாய் இருந்தது பரிசுபெற்ற படைப்பாளி மட்டுமல்ல.. இந்தியத் திரையுலகின் அபிமானிகளும்தான்..


உழைப்பிற்கும், தொழிலின் நேசிப்பிற்கும், திறமைக்கும் கிடைக்க வேண்டிய பரிசு… சரியான தருணத்தில் கிடைப்பதற்கும் கடவுளின் ஆசி வேண்டும். ரஹ்மானுக்கு அது எட்டியிருக்கின்றது!

மெல்லிசையால் தமிழனைத் தன்பால் ஈர்த்தவர் எம்எஸ்வி
இன்னிசையால் இந்தியனையும் தன்பால் ஈர்த்தவர் இளையராஜா
தன்னிசையால் அகில உலகினையும் இந்தியத்தமிழன்பால் ஈர்த்தவர் ரஹ்மான்!
இதில் இவருக்கில்லாமல் அவருக்கா..அவருக்கில்லாமல் இவருக்கா என்று மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வேறுபடுத்திப் பார்க்கமல், எல்லோரும் ஒரே தமிழ்க்குடும்பம்தான் என்ற நோக்கில் ஒன்றுபட்டு ரஹ்மானைப் பாராட்டுவோம்…!

இசைப்புயலே..இந்தக் கிரீடம் முள்கிரிடமாய் மேலும் பல பொறுப்பினைக் கொடுத்து முடக்கிவிடாமல், மலர்க்கீரீடமாய் மேலும் பல மெல்லிசை பரப்ப வாழ்த்துக்கள்!


9 Comments:

said...

///இந்தக் கிரீடம் முள்கிரிடமாய் மேலும் பல பொறுப்பினைக் கொடுத்து முடக்கிவிடாமல், மலர்க்கீரீடமாய் மேலும் பல மெல்லிசை பரப்ப வாழ்த்துக்கள்///

அவரு எதுக்கு அசர்ர ஆளா தெரியலையே.
தொடர்ந்து கலக்குவார்.

என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்?
ஆணியா?

said...

அட ஆமாமுங்க..மார்க்கெட்டு இருக்கிற இருப்புல, ப்லாக் எழுத எங்கேங்க நேரம் கிடைக்குது?

said...

ஆஸ்கார் கதைவை மட்டுமா திறந்தார்? மின்மினியையும்தான்:)!

//மெல்லிசையால் தமிழனைத் தன்பால் ஈர்த்தவர் எம்எஸ்வி

இன்னிசையால் இந்தியனையும் தன்பால் ஈர்த்தவர் இளையராஜா

தன்னிசையால் அகில உலகினையும் இந்தியத்தமிழன்பால் ஈர்த்தவர் ரஹ்மான்!//

எத்தனை அழகாய் சொல்லிவிட்டிருக்கிறீர்கள்!

//ஒன்றுபட்டு ரஹ்மானைப் பாராட்டுவோம்…!//

வாழ்த்துவோம் பாராட்டுவோம்!

said...

ரஹ்மானின் புகழை,அங்கே ராமலஷ்மி கவிதையில் கலக்கியிருக்கிறார் என்றால் நீங்கள் உரை நடையில் உயர்த்தி விட்டீர் .
வாழ்த்துக்கள்.

said...

அலுவலகப் பணியில் மூழ்கி பதிவிட நேரமின்றி இருந்த நெல்லை சிவாவை எழுத வைத்த ரஹ்மானுக்கு நன்றி.

said...

//ஆஸ்கார் கதைவை மட்டுமா திறந்தார்? மின்மினியையும்தான்//

- :))

உண்மைதான்..இசைக்குத் திறக்காத கதவுகள் உண்டா, இறைவன் உட்பட..

தவிரவும் ரஹ்மானின் இசையோடு, எளிமையும்,திறனும் எனக்குப் பிடித்த ஒன்று..

said...

நன்றி கோமா மேடம்..தொடர்ந்து எழுத முடியுதான்னு பார்க்கணும்..

said...

I found this site using [url=http://google.com]google.com[/url] And i want to thank you for your work. You have done really very good site. Great work, great site! Thank you!

Sorry for offtopic

said...

...please where can I buy a unicorn?