Monday, July 07, 2008

லண்டனிலே குண்டனுக்கு - பாகம் 2

புதுசா படிக்கிறவங்க முழிக்காதீங்க.. முதல் பாகத்தைப் படிச்சுட்டு வாங்க. Kளிக்குக

தேம்ஸ் நதிக்கரைங்கிறது ஒரு விசேஷம்தாங்க. சென்னைல 'சும்மா..சும்மா' இங்கிலிபிசுல பேசுறவங்கள, என்னடா ரொம்ப 'பீட்டர் உடுறே' ம்பாங்க.. அதுமாதிரி திருநெவேலில நாங்க படிக்கிற காலத்துல, 'தேம்ஸு' வர்ராண்டாம்போம். தேம்ஸுன்னா தொரைன்னு அர்த்தம். அந்தத் தேம்ஸுல போகப்போறோம்டான்னு பேசிக்கிட்டே, 'Ferry'-க்காக காத்திருந்தோம். அப்ப வலது பக்கம் திரும்பிப் பார்த்தா, இந்த 'டால்ஃபின் பொண்ணு, டால்ஃபின்னோட சேர்த்துத் துள்ளிக்கிட்டு இருந்தா. UK -ல அங்கங்க இதுமாதிரி ஏதாவது ஒரு சிலையை வச்சு, அந்த இடத்துக்கு ஒரு க்ரியேட்டிவிட்டி கொடுத்துராங்க.

வார போற மக்கள், அங்க நின்னு ஒரு 'க்ளிக்'கிட்டு போக வசதியாக. நம்மள ஆண்ட இந்த மக்கா கிட்டதான், நாமளும் இந்த சிலைக் கலாச்சாரத்தக் கத்துக்கிட்டோம். ஆனா, என்ன நம்ம குறைன்னா, இது மாதிரி வித்தியாசமா அந்தச் சிலை இல்லாம, ஏதாவது ஒரு கட்சித்தலைவர்கள் சிலையா நிறுவி வைக்கிறதுனாலயோ என்னவோ, மக்களுக்கு அதுக்குக் கீழ நின்னு போட்டோ எடுக்கத் தோணாம, காக்காதான் நின்னுகிட்டு இருக்குது.
அவ்வளவு பெரிய விசாலமான நதியில, Ferry - சவாரி சுகமாத்தான் இருந்தது. (நம்ம ஊரு கல்கத்தாவில கூட ஹீப்ளில போக நல்லாயிருக்கும்ங்க). தண்ணிதான் ரொம்பப் பழுப்புக் கலர்ல இருக்கும், நயாகரா மாதிரி இல்லாம. தேம்ஸீக்குள்ள இருந்துகிட்டு ஊரப் பார்க்குறது நல்லாவே இருந்தது. பக்கத்துல பார்க்குறதுதான், லண்டன் மேயரோட அலுவலகமாம். முட்டை வடிவிலே இருக்குது. பெர்ரில கமெண்டு கொடுத்துட்டே வர ஒரு வழிநடத்துனரும் இருப்பாரு. நல்லா ஜாலியா, எதையாவது சொல்லிக்கிட்டே வருவாரு. (நமக்குப் புரிஞ்சா!!!?). கொஞ்சம் பேரு காது கொடுத்துக் கேட்பாங்க, நிறையப் பேரு ஊரப் பார்த்துகிட்டு போட்டோ எடுத்துட்டு இருப்பாங்க. கொஞ்சம் பேரு, அலைஞ்ச அலைச்சலுக்கு காலுக்கு ஓய்வு கொடுத்து பராக்குப் பார்த்துட்டு இருப்பாங்க. எப்படியானாலும், ferry ride - மிஸ் பண்ணக்கூடாத ஒன்னு.


வரிசையா நிறைய பாலங்களைக் கடந்து போயிக்கிட்டே இருந்தது, ஒவ்வொரு பாலத்துக்கும் ஒருஒரு கதை சொல்லிக் கிட்டே வந்தார் நம்ம பாலையா, அதாங்க கைடு. கட்டிடக்கலை அசரவைக்கிற ரகம்தான். இன்னொரு படம் பக்கத்தில பாருங்க, வளைவுகளோடு அழகாய். 'London Eye'ன்னு சொல்லக்கூடிய, லண்டனை முழுசும் பார்க்கக் கூடிய ஒரு பெரிய ராட்டினம்தான் கீழே பார்க்கக் கூடியது. இது மேல போய்ப் பார்க்கணும்னாலும் காசுதான், british airways-laஇருந்து ஓட்டிட்டு இருக்கிறாங்க இந்த வீலை. நல்ல லாபத்தைதான் கொடுத்துக்கிட்டு இருக்கு.


தேம்ஸில ஒரு ரவுண்டு போய்வர கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களாச்சு, மணியப் பார்த்தா, ஒரு மணியாகிட்டு இருந்தது. அடுத்து எங்கடா போகலாம்னு பசங்ககிட்ட கேட்டா, 'அண்ணா..வவுத்துல மணியடிச்சுடுச்சுன்னா, சாப்பிடப் போலாம்ணா'ன்னான் குண்டன்.. பசியாளிங்க இந்திய உணவு வகைதான்னு வேணும்னு கேட்க.. சரின்னுட்டு எல்லாரும் நடக்க ஆரம்பிச்சோம்.

- இன்னும் வரும். மிச்சத்தை சாப்பிட்டுச் சொல்லவா?


(PIT - July'08-க்கான படம் பார்த்தீங்களா?)