Wednesday, June 25, 2008

அட..Butterfly எபெஃக்ட்டுங்க

தசாவதாரம் வந்தாலும் வந்துச்சு. தெரியாமலிருந்த பல அறிவியல் தகவல்களை தமிழுலகம் அறியச் செய்திருக்கு நம்ம வலையுலகம். 'Doppler Effect' கேள்விப் பட்டிருக்கேன்.. இப்பதான் பட்டர்ஃபிளை எபெக்டு பத்தி கேள்விப் படுறேன். தெரிய வச்ச பதிவுலக மக்களுக்கு நன்றி மக்கா.

இந்த பட்டர்ஃபிளை எபெக்டு நமக்குள்ளே, நிறைய பட்டாம்பூச்சிகளை கிளறிவிட்டுச்சு. இன்னைக்கும் 'ஓ..பட்டர்ஃப்ளை' பாடல் ரொம்பப் பிடிச்ச பாட்டுதான். சின்ன வயசுல பசங்களுக்கு தெருவுல போகும்போது, நாம ஒரு பொண்ணப் பார்க்க..அது நம்மளப் பார்க்க.. அண்ணலும் நோக்க..அவளும் நோக்க.. டக்குன்னு நெஞ்சுக்குள்ள ஒரு சிறகடிக்கும் பாருங்க.. அதுதாங்க நாமெல்லாம் உணர்ந்த பட்டர்ஃபிளை எபெஃக்டு. 'அடி..ஆத்தி நெஞ்சுக்குள்ள பட்டாம் பூச்சி பறக்குதா' ன்னு பாடச் சொல்லுது பாருங்க.. 'ஒரு பட்டாம் பூச்சி நெஞ்சுக்குள்ளே சுத்துகின்றதே..அது சுத்திச் சுத்திச் ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே' ன்னு கவிஞர்கள் கூட காதலுக்கு மரியாதை பண்ண பட்டாம்பூச்சியைத்தான கூப்பிடுறாங்க.


யார் கண்டுபிடிச்சாங்களோ இந்தப் பட்டாம்பூச்சி எபெஃக்ட.. அவங்க வாயில சக்கரைதான் போடணும். சின்ன வயசுல இருந்தே எல்லா மக்களுக்கும் பட்டாம்பூச்சி பிடிக்கும்.. அதன் விதவிதமான வண்ணக் கலவைனால. ஒரு வேளை பசங்க பொண்ணுங்களைச் சைட் அடிக்கிறதுக்கு 'கலர் பார்க்கப்' போறேன்னு சொல்றதும் இதுனாலதானோ...ஏன்னா, கலர் பாத்த பின்னாடி தான, 'பட்டாம் பூச்சி நெஞ்சுக்குள்ள சுத்துற butterfly effect வருது.


எனக்கும் butterfly ரொம்பப் பிடிக்கும், (நான் சொல்றது நிசமான butterfly பூச்சிதாங்க). நிறைய வெளிநாடுகள்ல buttefly garden இருக்கிறத பத்தி கேள்விப் பட்டிருக்கேன், அதப் பார்க்கணும்ங்கிற ஆவலும் நிறையதடவ இருந்திருக்கு. ஆனா, அது சமீபத்துலதாங்க நிறைவேறிச்சு. Northwales,uk போயிருந்தப்ப, அங்க பார்க்க வேண்டிய இடத்துல, buttefly garden-ம் ஒன்னுன்னு சொன்னாங்க. ஆஹா, சந்தர்ப்பத்த விட்டுடக் கூடாதுன்னு இடத்தத் தேடி கண்டுபிடிச்சுப் போயி பார்த்தோம்.

பார்க்க ஆசைப்பட்ட அளவுக்கு, பார்க்கிறது ரொம்பச் சுலபமில்லை. அவ்வளவு குளிரான இடத்துலயும், பட்டாம்பூச்சிக்கான வெப்பநிலை மெயிண்டெய்ன் பண்ணுகிறார்கள். ஆகையால், பட்டாம்பூச்சி பார்க்கபோயி, நமக்கு வேர்த்து ஊத்திடும். ஆனா, உள்ள போனா, அது பாட்டுக்கு அங்கேயும் இங்கேயும் ஒடியாடிக் கொண்டிருக்கும். சிலது நம்ம தலையில கையில கூட வந்து உக்காரும். ஒன்னு என்னோட காமிரா மேலேயே உக்காந்துது, அத மொபைல் காமிரால படம் எடுக்கலாம்னு நினைக்கிறதுக்குள்ள, உடல் அசைவுல பறந்து போயிடுச்சு.


நிறைய குட்டிக் குழந்தைகளும் வந்திருந்தாங்க. பொண் குழந்தைங்கதான், எட்ட இருந்து ரசித்தாங்க. ஆண் குழந்தைங்க எல்லாம் பட்டாம் பூச்சியப் புடிக்க முற்பட, அங்கேயிருந்த மேற்பார்வையாளர் திட்ட ஆரம்பித்து விட்டார். வேர்வை சிந்தினாலும், பட்டாம்பூச்சி ரம்மியமாய்த்தான் இருந்தது. மேலே பார்க்கிறது எல்லாம் நான் புடிச்ச சில படங்கள உங்க. எப்படி இருக்கு நம்ம butterfly effect ?

21 Comments:

said...

//சின்ன வயசுல இருந்தே எல்லா மக்களுக்கும் பட்டாம்பூச்சி பிடிக்கும்..//

தவத்தின் சக்திக்கு எப்போது மதிப்புத்தாங்க!

புழுவாக இழிநிலையில் இருந்த பிராணி
கூட்டுக்குள் இருந்து செய்த தவத்தின்
அரும் பலன் அல்லவா!
அவ் அழகிய உடல்.

said...

//சின்ன வயசுல இருந்தே எல்லா மக்களுக்கும் பட்டாம்பூச்சி பிடிக்கும்..//

தவத்தின் சக்திக்கு எப்போது மதிப்புத்தாங்க!

புழுவாக இழிநிலையில் இருந்த பிராணி
கூட்டுக்குள் இருந்து செய்த தவத்தின்
அரும் பலன் அல்லவா!
அவ் அழகிய உடல்.

said...

arumaiyaa..arumai..arumai..
appadiye 'saalamon pappaiya' maadhiri kuurikkolkiren.

thanks

said...

அழகுப் படங்கள். அருமையான விளக்கங்கள். படம் மூன்றிலும் ஐந்திலும் பாட்டில் மூடி போன்ற குப்பியில் அவற்றிற்கு உணவு வைத்திருப்பது போலத் தெரிகிறது. தேனா? அதை அவையே தேடிக் கொள்ளுமே பூக்களிலிருந்து. அல்ல எனில் அது என்ன?

said...

அனானிமஸ் அண்ணா,

மன்னிச்சுக்கோங்க..உங்க பின்னூட்டத்த இடுறதுக்கு முன்ன, வரலையோன்னுட்டு நீங்க ரெண்டு முறை பின்னுட்டத்த அனுப்பிட்டீங்க போல இருக்கு..

அதான் ரெண்டையும் போட்டுட்டேன்..

சின்ன வயசுல ugly duggling கதை படிச்சுருக்கேன்.. அதாவது அன்னப்ப் பறவை சின்னதாயிருக்கும்போது, அசிங்கமாயிருக்குமாம். அத, வாத்து கேலி பண்ணுமாம்..

ஆனா, வளர்ந்த பின்னாடி அன்னப் பறவைக்கு இருக்கிற மவுசு, வாத்துக்கு இருக்காது.. 'வாத்து மடையா'ன்னு சொல்றோம்..ஆனா, அதே சமயம், அன்னத்த 'பாலையும்,தண்ணீரையும்' பிரித்தெடுக்கிற சக்தியுடையாதா பண்டைத்தமிழுலகில் சொல்றதா படிச்சுருக்கிறேன்..

இதத்தான் வள்ளுவப் பெருந்தகை, 'உருவு கண்டு எள்ளாமை வேண்டும்னு பாடியிருக்காரோ'..

(ஒரு ஆச்சரியம்..ஸ்டார் பதிவரானால், இம்மாதிரியெல்லாம் தானா எழுத வந்துடுமோ..வீட்டுல சொல்லி திருஷ்டி சுத்திப் போடணும்.. :)) (அட..அதுக்குள்ள யாராவது பெரியார்தாசன்..இல்ல தசாவதார கமல்தாசன் வந்துடாதீங்கய்யா..சும்மா கேலிக்காச்சும் ஸ்மைலி போட்டுட்டேன்..)

said...

தமிழ்நெஞ்சம் இவ்விடம் வருகை தந்ததுக்கு ரொம்ப நன்றிங்க.. இன்னமும் உங்க வலைப்பூவைப் படிக்கல..இதுதான் உங்க முதல் வருகை என்னுடைய வலைப்பூவுக்குன்னு நினைக்கிறேன்..நன்றி உங்களுக்கும், தமிழ்மணத்துக்கும் உரித்தாகுக..

said...

ரா.லஷ்மி மேடம்..

அது தேன் அல்ல..என்னதான் டீ/காபி சாப்பிட்டாலும், நமக்கும் தண்ணீர் தேவைப்படுதில்லையா...அதுமாதிரிதான்..நம்ம பட்டர்ஃபிளைக்கும்..
அதுல இருக்கிறது தண்ணீர்தான்..

said...

மின்மினிக்கு பட்டாம்பூச்சி மேல் காதலா

காதலா!!!!!

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே

படங்கள்ளாம் உங்க பதிவு போலவே

said...

அதிஷா..

மின்மினிப்பூச்சிக்கு பட்டாம்பூச்சி மேல காதல் வர்ரது...அதிஷயம்..சாரி..அதிசயம் இல்லையே..ரெண்டும் பூச்சி பேமிலிதான.. :)

ஆமா..உங்களுக்கு பட்டாம்பூச்சி புடிக்குமா..புடிக்காதா..ஏன்னா..'படங்கள்ளாம் உங்க பதிவு போலவே'ன்னு சொல்லியிருக்கீகளே..எந்தா அர்த்தத்தில எடுத்துக்கிறதாம்..

said...

//ஒரு ஆச்சரியம்..ஸ்டார் பதிவரானால், இம்மாதிரியெல்லாம் தானா எழுத வந்துடுமோ..வீட்டுல சொல்லி திருஷ்டி சுத்திப் போடணும்.. :)) //

அவ்வ்வ்வ்வ்..

அப்போ நானெல்லாம் எப்ப இந்த மாதிரி எழுதறது??????

said...

படங்கள் எல்லாம் அருமை....

said...

அழகான படங்கள் பட்டாம்பூச்சி பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா...?

said...

அட மடப்பயலுகளா,
பட்டாம் பூச்சின்னா அது நாம தாண்டா நம் ஒருவருடைய விளைவுகள் தான் உலகில் நடக்கும் எல்லா அழிவுக்கும் காரணம்ன்னு சொல்லுது அது பூகம்பமோ, சூறாவளியோ எல்லாம் தான்

சுருக்கமா சொன்னா ‘பெய் என்றால் பெய்யும் மழை'அப்படின்னா நில்லுன்னா நிக்கும் சூறாவளி

said...

பதிவு படிச்சதும் எனக்கு தோன்றிய சந்தேகத்தை ராமலக்ஷ்மி கேட்டு பதிலும் வாங்கிக்குடுத்துட்டாங்க.... :)

said...

எனக்கு தும்பிதாங்க ரொம்பப் பிடிக்கும்.
படம் பிடிக்க அழகு தும்பிதான்.

மத்தபடி மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கரது சொகந்தேன். :)

பி.கு:
you gotta do this - http://surveysan.blogspot.com/2008/06/blog-post_25.html

said...

/
எனக்கும் butterfly ரொம்பப் பிடிக்கும், (நான் சொல்றது நிசமான butterfly பூச்சிதாங்க).
/

நம்பீட்டோம்!!

எனக்கும் butterfly ரொம்பப் பிடிக்கும்.

said...

//அப்போ நானெல்லாம் எப்ப இந்த மாதிரி எழுதறது??????//

ச்சின்னப்பையரே..

இன்னும் ஓரிரு மாசத்துல பெரிய ஆளாயிடுவீங்க.. அப்புறம் கூப்பிட்டு நட்சத்திர நாற்காலில உட்கார வச்சுடுவாங்க..ஒரு வாரந்தான் தருவாங்க..அப்புறம் ரெண்டு வாரம் வேணும்னு கேட்டு அழக்கூடாது..ஆமா இப்பவே சொல்லிட்டேன்..

said...

தமிழா..

அழகான பட்டாம்பூச்சியை பிடிக்காதவங்க இருப்பாங்களான்னு கேட்டதுக்கு, 'இருக்கமாட்டாங்க'ன்னுதான் சொல்ல வந்தேன்..

ஆனா..நம்ம சர்வேசன் அண்ணனப் பாருங்க..தும்பிதான் பிடிக்கும்னுட்டாரு..

எனக்கும் தும்பியும் பிடிக்கும், தும்பிக்கையும் பிடிக்கும்..

தும்பிக்கைன்னா பொன்ஸ் அக்கா ஞாபகம் வருது..ஆமா எங்க போயிட்டாங்க ரொம்ப நாளா காணோமே..

said...

கயல்விழி மேடம்..

நம்ம ராமலஷ்மி மேடம் பயங்கர ஷார்ப்..

எல்லாப் பதிவும் படிச்சு..உடனே உடனே கமெண்டு போட்டு, அதுலயும் முன்னாடி நிக்கிறாங்க..சீக்கிரமே அவங்கள வலைச்சரம் பகுதிக்கு எழுத அழைப்பு விடுக்கலாம்.. நிறைய நல்ல பதிவுகள சுட்டுமளவுக்கு நிறைய பார்க்கிறாங்கள்ள..

said...

சர்வேசா..

தமிழர் கேட்ட கேள்விக்குப் பதிலா அமைஞ்சுட்டு உங்க பின்னூட்டம்.

நீங்க கேட்ட மாதிரி வந்துட்டேன்..இன்னும் கொஞ்ச நேரத்துல..

said...

/
எனக்கும் butterfly ரொம்பப் பிடிக்கும், (நான் சொல்றது நிசமான butterfly பூச்சிதாங்க).
/

நம்பீட்டோம்!!

எனக்கும் butterfly ரொம்பப் பிடிக்கும்.

//////மங்களூர் சிவா

நம்பீட்டோம்!!!! (ரீப்பிட்டே :)) )