Sunday, June 29, 2008

நன்றி சொல்ல உனக்கு..வார்த்தை இல்லை எனக்கு

'நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்த்தது'ன்னு தொடங்கின நம்ம நட்சத்திர வாரம் முடிவடைகிற தருணம். 'நன்றி சொல்ல உனக்கு..வார்த்தை இல்லை எனக்கு' ன்னு தமிழ்மணத்திற்கும், தமிழ் வாசகர்களுக்கும் நன்றியினைச் சொல்லிக்கொள்ள ஆசை. சில புதிய நட்புகள் இதன் மூலம் பரிச்சயமாகியிருக்கின்றன. அது தொடரவும் ஆசை.

இருந்தது ஒரு வாரம்.. கழிந்தது சீக்கிரம். தனியாய் எழுதிக் கொண்டிருப்பதற்கும், நட்சத்திரமாய் எழுதியதற்கும் நிறையவே வித்தியாசம். தனியாய் எழுதிய போது, தமிழ்மணத்திலேயே லிஸ்ட் ஆன போதும் கூட, படிக்கின்ற வாசகர்களைச் சென்றடைகின்ற வட்டம், நட்சத்திர வாரத்தில் விசாலமாகிறது. நிரந்தரமாய் நட்சத்திர நாற்காலியில் வாரம் முழுக்க நிரந்தரமாய் உங்கள் இடுகைகள் அலங்கரிக்கின்ற போது, படிக்கின்ற வாசகர்கள் ஒரு முறையேனும் 'க்ளிக்கின்ற' வாய்ப்புகள் அதிகம்தானே! இந்த ஒரு வாரத்தில் மட்டும் 2000+ ஹிட்கள். நன்றி தமிழ்மணத்திற்கு.

பண்டைய காலத்தில் காலத்துக்கும் பறைசாற்றவல்ல தகவல்களை எல்லாம் எழுத்துக்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, பார்வையில் வைத்திருப்பதைக் கண்டிருக்கின்றோம். இந்தக் காலத்தில், அறிவியல் வசப்பட்டுக் கொண்டிருக்கின்ற உலகில், இணையத்தில் எழுதப் படுகின்ற எழுத்துக்களும், ஒரு வகையில் நமது கால பரிமாற்றத்தினைக் குறிக்க வல்லதுதான். சுலபமாய் தகவல் தளமாகிக் கொண்டிருக்கின்றது.

நல்லவனுக்கும் பேனா கிடைக்கிறது.. கெட்டவனுக்கும் பேனா கிடைக்கிறது. எழுதுகின்ற மையும் ஒன்றுதான். ஆனால், அவரவர் சிந்தனையால் எழுதுகின்ற எழுத்தின் நிறம் மாறுகிறது. நல்லன அல்லாதவைகளை எழுதாதே என்று யாரையும் கட்டிப் போட்டுவிட முடியாது. 'திருடனாய்ப் பார்த்து திருந்தாதவிட்டால்..' கதைதான் அது. ஆகையால், அதனை நிறம் பிரிக்கும் தன்மையை வாசகர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வதைத் தவிர அதற்குத் தீர்வு கிடையாது. வேண்டிய நேரத்தில் தவறான எழுத்துக்களுக்கு கண்டிப்புக் காட்டவும் தயங்கக் கூடாது.
நம்முடைய எழுத்துக்கள் கல்வெட்டுக்குப் போகிறதோ இல்லையோ, ஆனால் தீய சிந்தனைகளை விதைக்காமல், தீர்வுதரும் சிந்தனைகளையும் நற்பண்புகளையும் விதைப்பதாய் இருக்கவேண்டும். நிறைய புதிய முகங்கள் எழுத வருகிறார்கள்.. அவங்க உட்பட எல்லோருக்கும் எனது வேண்டுகோளிது. உங்கள் எழுத்துக்கள், உங்களின் அறிவு முதிர்வைக் காட்ட வேண்டும், அப்படி இல்லாமல் எழுதப்படுகின்ற எழுத்துக்களை மெத்தப் படித்த மேதாவி எழுதினாலும், அது சின்ன எழுத்துதான். 'வெள்ளத்தனையது நீர்மட்டம்'னு வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறார். நம் உயர்வைக் காட்டுவதாய் இருக்கட்டும் நம் எழுத்துக்கள்!
நட்சத்திர வாரத்தில் என்னோட பதிவுகளை படித்த அன்பு நெஞ்சங்களுக்கும், ஆர்ப்பரிக்கும் பின்னூட்டமிட்டு அன்பினைக் காட்டிய அருமை வாசகர்களுக்கும், வாய்ப்பளித்த தமிழ்மணத்துக்கும் மிகப்பெரிய நன்றி சொல்லி..

நட்சத்திர வாரத்துக்கு டாட்டா சொல்கிறேன்....இந்த வாரத்தில எழுதணும்னு நினைச்சு, நேரமில்லாமையால் எழுதாமப் போன பதிவுகள் இன்னும் கொஞ்சம் இருக்கு.. இந்த உந்துதல்லேயே.. அதனையும் தொடர விழைகிறேன்... எதிர்பார்த்து இருங்க!7 Comments:

said...

சிவா உங்களது நட்சத்திர வாரப் பதிவுகள் அனைத்தையும் தொடர்ந்து படித்தேன். ஆனால் வேலைப் பலுவினாலும் வெளிநாட்டில் இருந்ததால் ரோமிங் கட்டணத்தை நினைத்தும் பொதுவாக யாருக்குமே பின்னூட்டம் இடவில்லை.அதனால் உங்களுக்கு பின்னூட்டம் இடமுடியாமல் போய்விட்டது. நட்சத்திரமாய் ஜொலித்ததற்கு வாழ்த்துகள்!

said...

///நட்சத்திர வாரத்துக்கு டாட்டா சொல்கிறேன்....இந்த வாரத்தில எழுதணும்னு நினைச்சு, நேரமில்லாமையால் எழுதாமப் போன பதிவுகள் இன்னும் கொஞ்சம் இருக்கு.. இந்த உந்துதல்லேயே.. அதனையும் தொடர விழைகிறேன்... எதிர்பார்த்து இருங்க!///


நன்று தொடர்ந்து எழுதுங்க

வாழ்த்துக்கள்...

said...

ஆம், ஆரவாரமாய் கழிந்தது உங்கள் நட்சத்திர வாரம். அனைத்துப் பதிவுகளும் ஜொலித்தன. வாழ்த்துக்கள்!

said...

அப்துல்லா,

பதிவுகள் அனைத்தையும் படித்ததற்கும், மறக்காமல் கருத்தைப் பகிர்ந்ததற்கும், நன்றிகள் பல.

said...

ராஜா சார்,

இப்பதான் உங்கள முதன்முதல்ல பார்க்கிறேன். வாழ்த்துக்கு நன்றி. அப்படியே செய்கிறேன்.

said...

ராஜா சார்,

இப்பதான் உங்கள முதன்முதல்ல பார்க்கிறேன். வாழ்த்துக்கு நன்றி. அப்படியே செய்கிறேன்.

said...

நன்றி ராமலஷ்மி மேடம், 'வலையில் விழுந்துவிட்டதைப் பற்றி எழுதியிருந்ததையும் படித்தேன்..