Monday, June 23, 2008

நட்சத்திர ஜன்னலில் 'மின்மினி' எட்டிப் பாக்குது!!!!

' நட்சத்திர ஜன்னலில் மின்மினி எட்டிப் பாக்குது

தினமும் வந்து படிங்க..

படிச்சுட்டு கருத்துச் சொல்லிப் போங்க' ன்னு


பாட்டுப் பாடத்தோணுது... என்னாங்கிறீங்களா? அட ஆமாங்க, போன மாசம் திடீர்னு தமிழ்மணத்தின் Admin மக்கள்கிட்ட இருந்து, தமிழ்மண 'ஸ்டார் பதிவர்' வாரத்துக்கான அழைப்பு. கண்ணத் துடைச்சுகிட்டு, திரும்ப ஒரு தரம் யார்கிட்ட இருந்து வந்திருக்குன்னு படிச்சு உறுதி பண்ணிகிட்டேன், நிசந்தான்னு.


'ரெக்கை கட்டி பறக்குதடி அய்யாவோட மனசு, ஆசைப்பட்ட ஸ்டாரிலதான் ஏறிக்கோடா சிவா'ன்னு அடுத்த வரி மனசுல பட, உடனே 'சரி'-ன்னு சொல்லியாச்சு. தமிழ்மணத்தினர் முன்னரே அவகாசம் கொடுத்து எழுதச் சொன்னாலும், நம்ம அலுவலக மக்கள் கரீக்டா அப்பதான் நம்மள வேலைல தூக்கி போட்டு, ஸ்டிராங்கா ஆணி புடுங்கச் சொல்வாங்க. இப்படி நடக்கும்னு தெரிஞ்சுதான், முதல்லேயே அவகாசம் இருந்த போதே எழுத வேண்டிய விசயம் எல்லாத்தையும் எழுதி வச்சுகிட்டு, 'டாண்..டாண்'னு தினத்துக்கு ஒன்னா எடுத்து வுட்டுரணும் 'ப்ளான்' பண்ணினேன். ஆனா, வழக்கம் போல, அதுவும் ப்ளானோடேயே நின்னு போச்சு. நினைச்சா மாதிரி 'ஆணி பிடுங்கிற' வேலையும் கூடவே வந்துருக்கு.


ம்ம்ம்...ஆனா மக்கா, திருநெவேலி ஆளு இதுக்கெல்லாம அசந்து போவானா என்ன?, காலையில ஆணி புடுங்குவோம். அப்புறம் வந்து பதிவெழுதுவோம்.. 'ஆணி வரும் போகும், ஸ்டார் வருமா.. அபிராமி..அபிராமி' ....இன்னாங்கிறீங்க.


ரொம்ப காலமாவே எனக்கு தமிழ்ல இணையத்தில எழுதணும்னு ஆசை, ஆனா எப்படி எழுதுறதுன்னுதான் புரியாத புதிராவே இருந்தது. அந்த ஆசையிலதான், ரெண்டு வருசத்துக்கு முன்னாடி, கூகுளின் துணையோடு 'Thamiz'ன்னு போட்டு தேடுறப்ப, தமிழ்மணம் கண்ணுல பட்டுச்சு, 'Wow...' ன்னு ஒரே ஆச்சரியம். எப்படி எழுதுறது, ப்ளாக் எப்படி துவக்குறதுன்னு எல்லாம் கை வந்த கலையாய் எளிதே சொல்லியிருந்தார்கள். மெய்மறந்தது நிசம். ஆர்வக்கோளாறில ஜாலியாய்த் துவங்கின பதிவு. 'மின்மினி' - சின்ன வயசுல லைட்டு பூச்சின்னு சொல்லுவோம், அது பத்தி அக்கா சொல்லுறப்ப, 'கரண்டு போச்சுன்னா, அதப் புடிச்சி வச்சி படிக்கலாமா'ன்னு வேடிக்கையாய் கேட்டிருக்கேன். படிச்ச பதிவுகள்ள, ஆளாளுக்கு ஒரு பேரவச்சுகிட்டு ஆரம்பிச்சு ஓடிட்டுருப்பதை பார்த்த எனக்கு, 'மின்மினி' பிடிச்ச பெயரா போயி, அதையே தலைப்பாவும் வச்சுகிட்டேன். அப்போ தமிழ்மணத்த இன்னும் கொஞ்சம் விரிவாப் படிக்கிறப்பதான், ஸ்டார் பதிவராக 'உங்களைப் பற்றிய அறிமுகமும் பக்காவாய் இருக்கணும்னு' போட்டிருந்ததால, அதைப் பத்தியும் முகப்புல போட்டுருந்தேன். அந்த எல்லா ஆரம்ப்பத்துக்கும், இப்ப ஒரு வாய்ப்பு கிடைச்சுருக்கு.


ஸோ, நான் ரெடியாகிட்டேன்... நீங்க ரெடியா? ரொம்பப் பெரிய விசயமெல்லாம் எனக்குத் தெரியாது, சும்மா மொக்கையாய், ஜாலியாய் ஒரு ஒருவாரம் ரவுசு விடலாமா?


'Are you ready..ready..ready... I am ready..ready..ready..?' - இப்படியும் ஒரு தமிழ்ப் பாட்டு ரஜினி படத்துல வந்துருக்கு.. என்ன படம்னு தெரியுமா உங்களுக்கு..? (யாரோ அங்க மொக்கை ஆரம்பிச்சாச்சுன்னு கத்துறது காதுல விழுது, நெருங்கி வந்து அடிக்கிறதுக்குள்ள உடுறேன் ஜீட்டு, சீக்கிரமே அடுத்த பதிவில சந்திக்கிறேன்)

34 Comments:

said...

தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள் !!

கலக்குங்க !!

said...

நன்றி மணியன், கலக்கிறேன் இல்ல, கலக்குவோம்..

said...

பதிவு போட கொஞ்சம் லேட்டானதுனால, மக்கள் நட்சத்திர வாரத்துக்குச் சொன்ன கமெண்டுகள், பழைய பதிவுக்குப் போயிடுச்சு.. அத்த எடுத்து இங்க இட்டாரப் போறேன்..

said...

/'Are you ready..ready..ready... I am ready..ready..ready..?' - இப்படியும் ஒரு தமிழ்ப் பாட்டு ரஜினி படத்துல வந்துருக்கு.. என்ன படம்னு தெரியுமா உங்களுக்கு..?//

:)))

நட்சத்திர வாழ்த்துக்கள்....

said...

SP.VR. SUBBIAH said...
வாருங்கள் நெல்லை சிவா!
தாருங்கள் முத்தான பதிவுகளை!
நட்சத்திர வாழ்த்துக்கள்!

21:56
R A J A said
...
// இன்றைக்கும் சென்னை உள்ளிட்ட பிரபல நகரங்களில் வீடுவாங்குவது என்பது, IT -துறையினருக்கும் சவாலான ஒன்றுதான்..//

IT துறையினருக்கே சவாலான ஒன்னுனா.....மத்த துறையில வேலை பாக்குறவுங்கள கொஞ்சம் நினச்சு பாருங்க.....சென்னை சுற்றி எத்தனை மென்பொருள் பூங்காக்கால் உருவாகிக்கொன்று இருக்கின்றன....என்ன பொறுத்த வரையில real estate விலை ஏற்றத்திற்கு காரணம் IT தான்...

சினிமா நிருபர் said...
நட்சத்திர பதிவர் ஆனதற்கு நானும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் என்கிற ரீதியில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் நெல்லை சிவா. தொடரட்டும் உங்கள் பணி...! வாழ்த்துக்கள்.

00:07
கோவி.கண்ணன்
நட்சத்திரம் வணக்கம் சிவா !

நற்சிந்தனைகளை தர வாழ்த்துகள் !

00:15
மங்களூர் சிவா said...
நட்சட்த்திர வார வாழ்த்துக்கள்!

இது பழைய பதிவோ!?!?!?

01:14
தமிழ்சினிமா said...
நெல்லை சிவாவிற்கு...
திருமணமான கணிணி பொறியாளர்களுக்கு சென்னையில் வீடு கிடைக்காதா என்ன?

said...

சுப்பையா சார்,

நீங்க அசத்துன மாதிரி என்னால அசத்த முடியாதுங்க. உங்க நட்சத்திர வாரம் இன்னும் நினைவில இருக்குது.. வாழ்த்துக்கு நன்றி

said...

ராஜா சார்,

என்னோட இந்தப் பதிவு படிக்கலியா நீங்க..படிச்சுட்டுசொல்லுங்க..

http://vinmathi.blogspot.com/2007/07/blog-post.html

http://vinmathi.blogspot.com/2007/07/2.html

said...

சினிமா நிருபரே

நம்ம ஊரா நீங்க..அடுத்து வர்ர பதிவு பாத்துட்டு உங்க கருத்தச் சொல்லுங்க..

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி

said...

கோவி.கண்ணன் சார்,

நீங்க சொன்னா மாதிரி நிறைய யோசித்து வச்சிருக்கேன்..கண்டிப்பா எழுதுறேன்..

நட்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி

said...

மங்களூர் சிவா,

புதுப் பதிவு எழுதிட்டேங்க.. EST டைம் கேப்பில கொஞ்சம் பிசகிட்டேன்..இதுதான் * பதிவு. :)

said...

வாடகைக்கு ஓகே..சொந்தமா வாங்கணும்னா கஷ்டம்தான், தமிழ்சினிமா நண்பரே

said...

நட்சத்திரமானதிற்கு வாழ்த்துக்கள் சிவா

said...

/
நெல்லை சிவா said...

மங்களூர் சிவா,

புதுப் பதிவு எழுதிட்டேங்க.. EST டைம் கேப்பில கொஞ்சம் பிசகிட்டேன்..இதுதான் * பதிவு. :)
/

ஹா ஹா

புது பதிவுக்கும் வந்தாச்சு

நட்சத்திர வாழ்த்துக்கள்!

said...

ராம்
/'Are you ready..ready..ready... I am ready..ready..ready..?' - இப்படியும் ஒரு தமிழ்ப் பாட்டு ரஜினி படத்துல வந்துருக்கு.. என்ன படம்னு தெரியுமா உங்களுக்கு..?//

:)))

நட்சத்திர வாழ்த்துக்கள்....

-----

என்ன ராமண்ணா, ஒரு சிரிப்பைப் போட்டுட்டு விடையச் சொல்லாம போனா எப்படி? ஆமா, அந்தச் சிரிப்பு எதுக்கு, இங்கிலிபிசுல எழுதி, தமிழ்ப்பாட்டுன்னு சொன்னதுக்கா?

வாழ்த்துக்கு நன்றிங்கண்ணா

said...

மங்களூர் சிவா சார், புதுசையும் படிச்சுட்டு, கமெண்டும் போட்டதுக்கு நன்னி!

said...

ஞானியாரே..

நன்றி உங்க வருகைக்கும், வாழ்த்துக்கும்.

ஆமா, கல்யாணத்துக்கு அப்புறமும் 'சல்யூட்' அடிக்கிற போஸ்ல இருக்கிற மாதிரி ஒல்லியாத்தான் இருக்கீயளா?

said...

'மின்மினி' மினுங்க ஆரம்பித்தக் கதை நல்லாயிருந்தது. இப்போ நட்சத்திர வாரத்திலும் மினுங்க என் வாழ்த்துக்கள்!

said...

அடடா..

இப்பதான் நினைச்சேன்.. சட்டுன்னு வந்துட்டீங்க..வாழ்த்துக்கு நன்றி.

said...

//'கரண்டு போச்சுன்னா, அதப் புடிச்சி வச்சி படிக்கலாமா'ன்னு வேடிக்கையாய் கேட்டிருக்கேன்//

;)
meththap padithavaro thaangal? :)

Dasavatharam pathi ezhudhi pullayaar suzhi podungo. pramadhama, kallaa kattalaam. :)

said...

பட்டையைக் கிளப்புடே!!

said...

வாழ்த்துக்கள் சிவா
கண்மணிக்கு முன்னாலே மின்ன வேண்டிய மின்மினி .....கொஞ்சம் தாமதம்..ஓகே
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா [இருட்டுக்கடை அல்வா போல்]மின்னட்டும்ல வின்மதி..

said...

வாழ்த்துக்கள்

நிறையா எழுதுங்க ..வேலைய காரணம் காட்டி எங்களுக்கு ஹல்வா காட்டிடாதீங்க :-))

said...

வாழ்த்துக்கள் சிவா

அபரிமிதமான பதிவுகளை போட்டு தாக்குங்க

said...

கொத்ஸ் அண்ணே சொல்லிப்புட்டா, சிவா தம்பி கேக்க மாட்டேன்னா சொல்லுவாக, பட்டைய கிளப்பிர்றேன்..

said...

சர்வேசா,

நினைச்சேன்..சொல்லிட்டீங்க..போட்டாச்சு..

said...

கண்மணி மேடம்,

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி, கொஞ்சம் லேட்டா வந்ததும் நல்லதுக்குதானே..பெரிய ஆளுங்க கூட போட்டிய தவிர்த்தாச்சுல்ல.. :)

said...

வாங்க கிரி, ஏற்கனவே டாபிக் எல்லாம் யோசிச்சு வச்சாச்சு..அதுனால 'ஹல்வா' கொடுக்காம..சுவீட் ஹல்வா கொடுத்துடலாம்..

said...

நன்றி அதிஷா, அபரிமிதமா போட்டுத்தாக்கிரலாம்..நினைக்கிறதெல்லாம் எழுதிட வேண்டியதுதான

said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்.

said...

சிவா தீ நரியில் உங்க பதிவுகள் ஜாங்கிரி போல் தெரிகிறதே கொஞ்சம் அலைன் மெண்ட் பார்க்கலாமே...[என்னிடம் ஐ.ஈ இருக்கிறது மற்றவர்களுக்கு ?]

said...

நன்றி கயல்விழி முத்துலஷ்மி,

தற்சமயம் உங்க ஊருதான் வாசம்..இன்னும் ரெண்டு வாரத்துக்கு இங்கதான்..

said...

கண்மணி மேடம்..

தீ நரி நான் உபயோகிக்கல..நீங்க சொன்னது மேற்கொண்டு..சோதிச்சுப் பார்க்கிறேன்..

ரொம்ப நன்றி தகவலுக்கு..

said...

வாரம் முடியப்போகுது இருந்தாலும்

வாழ்த்துக்கள்...

நன்று உங்கள் பதிவுகள்...

said...

நன்றி தமிழன்..

வாரக்கடைசின்னாலும் என்ன, உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.