Thursday, June 05, 2008

அறிவுக் கணிணியும், அழகு சினிமாவும்..ம்...ம்...

இன்றைய திரைப்படத்துறை மக்களுக்கு, IT -த்துறையினர் மீது என்ன காழ்ப்புணர்ச்சியோ தெரியவில்லை, சமுதாயப் பாகுபாடுகளுக்கு IT-யே காரணம்ங்கிற மாதிரி சித்தரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.



இதற்கு IT-த்துறையினருக்கு வழங்கப்படுகின்ற சம்பளமே காரணமாய் முன்னிலைப் படுத்தப் படுகிறது. தமிழ் எம்.ஏ -யில் ஆரம்பித்ததுன்னு நினைக்கிறேன். இப்ப அறை எண் ...கடவுளில் வந்து நிற்கிறது. 'ஜாவா'-சுந்தரேசனின் வளர்ச்சி, IT - மக்களிடையே பிரசித்தம். படம் என்னவோ, முயற்சியும், உண்மை உழைப்பையும் முக்கியப்படுத்தியிருந்தாலும், ஜாவா சுந்தரேசன் குறித்த காட்சிகள், காமடிக்குச் சொன்னாலும், மிகைப்படுத்தப் பட்ட காமடி அது.



IT - துறையின் வளர்ச்சியோடு, பிற துறையின் வளர்ச்சிகளும் வளரத் துவங்கியிருக்கின்றது என்பது கண்கூடான உண்மை, அரசு உத்தியோகத்தின் மோகம் குறைந்து சுய தொழில்களின் மீதான கவனமும் வளர்ந்திருப்பதாகவே தோணுகிறது. இன்றைக்கும் சென்னை உள்ளிட்ட பிரபல நகரங்களில் வீடுவாங்குவது என்பது, IT -துறையினருக்கும் சவாலான ஒன்றுதான்..



பாஸிடிவான விசயங்கள் இருக்கின்றபோதிலும், நெகடிவான விசயங்களே முன்னிலைப்படுத்தப் படுவது ஏனோ? ஆனால், இந்தியா வல்லரசாகனுங்கிற படம்னா மட்டும், IT -த்துறை புகழ் பாடுவார்கள். ம்...இதையெல்லாம் என்னன்னு சொல்ல...வியாபார யுக்தின்னு சொல்றதவிட!!!?

11 Comments:

said...

அவங்க சொல்லறது சரிதான்னு பதிவு மேலப் பதிவு வந்தாச்சே!! நீங்க ரொம்ப லேட்!! :))

said...

அவங்க சொன்னது சரிதான்னு சொன்ன பதிவுகளோட லிங்க் கிடைக்குமா, கொத்ஸ்..

ரொம்ப லேட்தான், ஏன்னா, இப்பதான் அந்தப்படம் பார்த்தேன்..லேட்டுன்னாலும், லேட்டஸ்டா மனசுல பட்டத பகிர்ந்துக்கலாம்னுதான்..

said...

வாருங்கள் நெல்லை சிவா!
தாருங்கள் முத்தான பதிவுகளை!
நட்சத்திர வாழ்த்துக்கள்!

said...

// இன்றைக்கும் சென்னை உள்ளிட்ட பிரபல நகரங்களில் வீடுவாங்குவது என்பது, IT -துறையினருக்கும் சவாலான ஒன்றுதான்..//

IT துறையினருக்கே சவாலான ஒன்னுனா.....மத்த துறையில வேலை பாக்குறவுங்கள கொஞ்சம் நினச்சு பாருங்க.....சென்னை சுற்றி எத்தனை மென்பொருள் பூங்காக்கால் உருவாகிக்கொன்று இருக்கின்றன....என்ன பொறுத்த வரையில real estate விலை ஏற்றத்திற்கு காரணம் IT தான்...

said...

நட்சத்திர பதிவர் ஆனதற்கு நானும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் என்கிற ரீதியில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் நெல்லை சிவா. தொடரட்டும் உங்கள் பணி...! வாழ்த்துக்கள்.

said...

நட்சத்திரம் வணக்கம் சிவா !

நற்சிந்தனைகளை தர வாழ்த்துகள் !

said...

நட்சட்த்திர வார வாழ்த்துக்கள்!

இது பழைய பதிவோ!?!?!?

said...

நெல்லை சிவாவிற்கு...
திருமணமான கணிணி பொறியாளர்களுக்கு சென்னையில் வீடு கிடைக்காதா என்ன?

said...

Land prices are appreciating because of the real estate mafia, not because of IT.

I would say only those IT engineers who had worked abroad for the past 5-10 years, would be able to buy a house/flat in Chennai.

In fact, I'm trying to find a house/flat within 30 lakhs in Chennai for the past two years in vain (I'm in IT too)

Blame the system, not the IT engineers!

said...

உண்மைதான் ஜோ..

ஆன்னா..ஊன்னா நம்ம மக்கள் IT மக்களைச் சொல்லிவிடுறாங்க.

சமீபா நான் நம்ம வலைப்பதிவர் முத்துலஷ்மி ஊருக்கு வந்திருக்கேன்..அதாங்க டெல்லி..

இங்க வந்து பார்த்தா, குர்கான் - ல வீடு மற்றும் நில விலை ஏறிடுச்சுன்றாங்க..கேட்டா எல்லாம் மிட்டா மிராசுதார் பண்ணுற வேலைங்கிறாங்க.

ஒரு நிலத்த வித்து..இன்னொரு இடத்துல வாங்கி..அப்படியே கருப்பு பணம் பெருகுதுங்கிறாங்க..

யாருக்கு இந்த உண்மை எல்லாம் புரியப் போகுது..அப்பாவி ஜனங்க இந்த மாதிரி படத்த பாத்து.. ஆமாம் சாமி போடுவாங்க..

இதுக்கெல்லாமா சன் டிவி வாக்கெடுப்பு நடத்தி உண்மை நிலைய அறியப் போகுது..

ம்...சும்மா நமக்கு நாமே புலம்பிக்க வேண்டியதுதான்.. என்ன பண்ணுறது..

காய்ச்ச மரத்திலதான கல்லடி படும் ..

said...

//தமிழ்சினிமா சைட்...
நெல்லை சிவாவிற்கு...
திருமணமான கணிணி பொறியாளர்களுக்கு சென்னையில் வீடு கிடைக்காதா என்ன?//

அய்யா தமிழ் சினிமா,

போஸ்ட்ட படிச்சியா? அது எதப்பத்தி சொல்லி இருக்குன்னு புரிஞ்சுதா?