Saturday, June 28, 2008

லண்டனிலே குண்டனுக்கு...பாகம் - 1

'London Bridge is falling down..falling down..' ன்னு சின்ன வயசுல ஸ்கூல்ல பாடுற பாட்டு, இப்ப வரைக்கும் பிரபல்யமான ஒன்னு. பாரீஸ், நியூயார்க் கூட முதன்முதல்ல அறியப்படுமுன்னாலேயே, குழந்தை வயசுலேயே அறிமுகமான நகரம் லண்டன்.

பெயரிலேயே ஒரு பணக்காரத்தனம் ஒட்டிக் கொண்ட மாதிரி இருக்கும். சின்ன வயசுல 'Trade' (Monopoly) விளையாட்டு விளையாடிருக்கீங்களா? அதுல லண்டன்ல போயி மாட்டுனா, காசு அதிகமா கறந்துடுவாங்க. நிஜத்துலயும் அப்படித்தாங்க.

சமீபத்துல ஒரு 'வங்கி விடுமுறை' வந்த போது, ஒரு ரவுண்டு அடிச்சிரலாம்னு முடிவு பண்ணி, 'National Express'- ங்கிற பஸ்ல முன்பதிவு செய்தோம். நாங்க இருக்கிற இடத்தில இருந்து போய்வர கிட்டத்தட்ட நான்குமணி நேர பஸ்பயணம். மிக முன்னாடியே பதிவு செய்தால் குறைஞ்ச கட்டணத்துக்கு கிடைக்க வாய்ப்புண்டு. அப்படி ஒரு மாசத்துக்கு முன்னாடி பண்ணி கிடைச்ச டிக்கட்டோட விலை என்ன தெரியுமா? 1 பவுண்டு. நம்மவூர்ல 500 ரூபாய்க்கு 'ஏரொப்ளனு' டிக்கட்டு கொடுப்பாக இல்ல, அதுமாதிரி எல்லாம் இல்லைங்க..நிஜமா 1 பவுண்டுன்னா 1 பவுண்டுதான். போக ஒரு பவுண்டு, வர ஒரு பவுண்டுன்னு ரெண்டு பவுண்டுல சுத்துன கதையப் பேசலாமா?

குடும்பஸ்தாரானாலும் சரி, தனியாளானாலும் சரி, தங்குவதற்கு வசதியான இடம், YMCA. காலை சாப்பாடும், இரவுச் சாப்பாடும் சேர்த்தே ரூம் வாடகை. நிறைய இந்திய மக்களைப் பார்க்கலாம், 'எப்படிப் போக..வரங்கிற குறிப்பெல்லாம் எடுக்க, எளிதா ஆள் கிடைப்பாங்க. லண்டன்ல Tube Train பிரபலம். 'Warren Street' ட்யூப் ரயில் நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது. லண்டன்னாலேயே, முதல்ல பாக்கணும்னு தோணுறது London Bridge -தான, நாங்க முதல்ல போனதும் அத நோக்கித்தான். பக்கத்துல பாக்குறதுதான் லண்டன் பாலம். என்ன முழிக்கிறீங்களா? நாங்களும் அப்படித்தான் முழிச்சோம். அப்புறம்தான், அங்க இருந்தவரு சொன்னாரு, எல்லாரும் அப்படித்தான் நினைப்பாங்க, இங்க வர்ரவங்களுக்குத்தான் விபரம் புரியும்னாரு. இப்ப வரைக்கும் London bridge is falling down..ன்னு பாடிட்டு இருந்தாக் கூட, இதுவரைக்கும் அது உழுந்ததே இல்லையாம். 12ம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டதா சொல்லப் படுகிற இந்தப் பாலம், அவ்வப்போது பழுது பார்க்கப் பட்டிருக்கின்றதே தவிர, வேறு எவ்விதக் குறைபாடும் கண்டதில்லையாம். ஆனால், அந்தப் புகழ்கொண்ட லண்டன் பாலம், இப்போது லண்டனிலேயே இல்லையாம். அது அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் 'Lake Havasu' என்ற இடத்தில் உள்ளதாம், 1968-ல லண்டன் பாலம் மாற்றியமைக்கப் பட்ட போது விடப்பட்ட ஏலத்தில் அமெரிக்கர் ஒருவர் எடுத்து அங்கே கொண்டு போய்விட்டாராம். மலைகளின் பின்னனியில், பக்கத்தில் உள்ள இந்தப் படம், அமெரிக்காவின் 'Lake Havasu' வில் உள்ள 'பெயர்த்தெடுக்கப்பட்ட லண்டன் பாலம்'. லண்டனில் இப்போதுள்ள புதிய லண்டன் பாலம், october 10,1971 திறக்கப் பட்ட ஒன்றாம்.
இந்தப் பாலத்தில் இருந்து கொண்டே, லண்டனின் 'Landmark'-ஆன, 'Tower Bridge'-ஐக் காணலாம். அதனுடைய கம்பீரமும், கலரும் அங்கேயே இருக்கின்ற துரைங்களுக்கும் கூட பார்க்கப் பார்க்க சலிக்காத ஒன்று. அருகேயுள்ள படம், டவர் பிரிட்ஜின் உட்புற வாயிலின் வடிவம். இது போர்ட்லேண்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களாலேயும், ஸ்காட்லண்ட் ஸ்டீல்கள்னாலேயும், தேம்ஸிலிருந்து 140 அடிக்கு மேலே எழுப்பட்ட பாலமாம்.

கீழே நீங்க பார்க்கிறதுதான் டவர் பிரிட்ஜ். டவரின் உச்சியில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள். இதுவும் நம்ம ஊரு பாம்பன் பாலம் மாதிரி, கப்பல் வருகையில திறந்து மூடுமாம். அதைப் பார்க்கணும்னா, குறிப்பிட்ட நாள், டைம்ல போயி பார்க்கணும். இந்த டவரின் உள்ளேயும் சென்று பார்க்கும் விதமாய்த்தான் வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. அங்கே டவரின் வரலாறு உட்பட கண்காட்சி வைத்திருக்கின்றார்கள். நீண்ட வரிசையாதலால், நேரம் கருதி உள்ளே செல்லவில்லை. டவர் பிரிட்ஜுக்கு கீழேயே, 'Ferry ride' இருந்ததால, தேம்ஸ் நதியில ஒரு ரவுண்டு போலாம்னு அங்கு போக எத்தனித்தோம்..
படங்களைப் பெரிசாப் பார்க்க, அதனதன் தலையில ஒரு தட்டு தட்டுங்க உங்க மவுசால.
(இந்த ஒரு கட்டுரையிலேயே லண்டனை முடிச்சுட முடியாது, இன்னும் ரெண்டாவது வரும் போல இருக்கு, அதுனால மீதிய பாகம் - 2ல் பார்க்கலாம்னு நினைக்கிறேன்..அது சரி..அது என்ன தலைப்பு 'லண்டனிலே..குண்டனுக்குன்னு தலைப்பு...யோசிக்கீறீங்களா? யோசிங்க..)
இரண்டாம் பாகம் படிக்க
15 Comments:

said...

சிவா,
அலுவலக வேலையாக துபாய் சென்று இன்று காலை சென்னை திரும்பியபோது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தைப் பார்த்து விரைவில் லண்டன் சென்று சுத்திப் பார்த்து வர வேண்டும் என்று நினைத்தேன். வீட்டிற்கு வந்து நான் படிக்கும் முதல் பதிவு உங்கள் லண்டனன் பயணம். பார்போம் எனக்கு எப்போ வாய்க்குதுன்னு!!!!

said...

//நிஜமா 1 பவுண்டுன்னா 1 பவுண்டுதான். போக ஒரு பவுண்டு, வர ஒரு பவுண்டுன்னு ரெண்டு பவுண்டுல
///

எங்க இருந்து எங்க வரைக்கும் ?

(நமக்கு Usefulla இருக்கும்லே :-)))

said...

அப்துல்லா சார்,

அவசியம் நீங்க போயிட்டுவாங்க, கூடிய சீக்கிரமே உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள்.

அடுத்து எழுத இருக்கிறதையும் படிங்க, உங்க பயணத்துக்கு ஒரு முன்னோடியா இருக்கும்.

said...

வழிப்போக்கன் சார்,

நான் போனது 'செஸ்டர்'-ல இருந்து லண்டனுக்கு.

ஆனா நிறைய ஊர்கள்ல இருந்து இருக்கு..

லிங்க் கீழே பாருங்க..

http://www.nationalexpress.com/coach/Offers/index.cfm

said...

4 மணி நேர பயணத்துக்கு வெறும் 1 பவுண்டா ரொம்ப சீப்பா இருக்கே!

நல்ல அருமையான சுற்றுபயண கட்டுரை.

said...

சிவா, நீங்க இங்கதான் இருக்கீங்களா, நானும் திருநெல்வேலிதான், இப்ப இங்கே u.k ல இருக்கறேன். உங்க ஸ்டார் வாரம் கல்க்கறீங்க போங்க. நம்ம ஊரு காரர் கலக்குங்க தலைவா. உங்கள் எழுத்துக்கள் அனைத்தும் அருமை.

said...

லண்டன் குண்டனா என்னான்னு பாக்கலாம்னு வந்தா குண்டனின் அறிமுகம் அடுத்த பதிவில்தான்னுட்டீங்க. சரி வெயிட் பண்றோம்.

படங்களும் தகவல்களும் அருமை.

//சின்ன வயசுல 'Trade' (Monopoly) விளையாட்டு விளையாடிருக்கீங்களா?//

அத்துப்படி! ஒரே ஆட்டத்தை நாட்கணக்கில், வாரக்கணக்கில் தொடர்வோம்.

said...

அடுத்து எழுத இருக்கிறதையும் படிங்க, உங்க பயணத்துக்கு ஒரு முன்னோடியா இருக்கும்//

கண்டிப்பா படிக்கிறேன் சிவா

said...

மங்களூர் சிவா,

1 பவுண்டு சீப்தான், ஆனா பதிவு செய்றது திட்டமிட்டு முன்னாடியே செய்யணும்ம்ம்..தொடரும் போட்டிருக்கேன்..தொடர்ந்து படிங்க

said...

நன்றி கணேஷ், ஊர்க்காரர்ங்கிறது தோணுற பாசம் மெச்சத்தோணுது, நன்றி நண்பா, உங்க கருத்தைப் பகிர்ந்துகிட்டதுக்கு. நீங்களும் சீக்கிரமே வலைப்பக்கம் வாங்களேன்!

said...

ஆமாம் ராமலஷ்மி மேடம், குண்டன் ஒரு அட்ராக்சன்..

said...

ராமலஷ்மி மேடம்,

இப்ப ட்ரேட், electronic ஆயிடுச்சு தெரியுமா? நான் கூட இப்ப ஒன்னு வாங்கியிருக்கேன், விளையாடுற ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஏடிஎம் கார்டு கொடுத்து, அதுல டோட்டல் பண்ணிக்கிறமாதிரி..இன்னும் விளையாடிப் பார்க்கல..புச்சா வாங்கியிர்ருக்கேன்..

said...

நன்றி அப்துல்லா சார்..

said...

//விளையாடுற ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஏடிஎம் கார்டு கொடுத்து, அதுல டோட்டல் பண்ணிக்கிறமாதிரி..//

இன்ட்ரஸ்டிங்!

said...

தொடர்ச்சி தொடருது...

http://vinmathi.blogspot.com/2008/07/2.html