மொபைல் ப்ளாக்கிங்க் பண்ணுவது எப்படி?
சரி, விசயத்துக்கு வருவோம். மேலே உள்ள படம், Sony Ericsson K660i செல்பேசியில் எடுத்து, அதனுடைய மொபைல் ப்ளாக்கிங்க் மூலமாய் அனுப்பி பதிப்பித்தது.. ரொம்ப வசதியில்ல.. உடனடியாய் தகவல்களைத் தர, உபயோகமாய் இருக்கும். பயனிக்கிற வழியில், ப்ளாக்-கிக்க வசதியாய் இருக்கும். ஆனால், மொபைல் Browserகள், இன்னமும் யுனிகோடு பயன்பாடு வரவில்லை. ஆகையால், ஆங்கிலத்தில் புலம்புவது எளிது, தமிழில் கதைப்பது இயலாத காரியம், நண்பர்கள் எவரேனும் அறிந்தால் தகவல் தரவும். குறைந்த பட்சம், படங்காட்டலாமே... நம்ம PIT மக்கள், புகைப்பட போட்டி ஒரு முறை மொபைல் புகைப்பட போட்டி கூட வைக்கலாம்.. :)..
சரி...எப்படி இந்த படத்தை ப்ளாக்கினேன்..என்பதைப் பார்க்கலாமா?
எந்தப் படத்தை ப்ளா
க்கணுமோ, அதனை அனுப்ப , option-ல், 'send' பட்டனைத் தட்டினால் அதில் 'To Blog' என்றொரு தெரிவினை அழுத்தினால், அது தேர்ந்தெடுத்த படத்தை ப்ளாக்கருக்கு கொண்டு போய், தலைப்பு, மற்றும் படம் குறித்த விளக்கத்தினை தட்டச்சு செய்ய ஏதுவான பகுதியைக் காட்டும். (தற்சமயம் ஆங்கிலம் மட்டும்தான். ) அதனை முடித்தவுடன், 'Publish' பட்டனைத்தட்டினால், உடன் வெற்றிகரமாய் வெளிஉலகிற்கு தெரிவித்துவிடும்.
முதல் முறை மொபைலில் இருந்து ப்ளாக்கும் போது, பதிப்பிக்கப் பட்டவுடன் உங்களுக்கு SMS வரும். அதில் உங்கள் மொபைலுக்கான டோக்கன் அனுப்பப் பட்டு இருக்கும். அதனை எடுத்து எடுத்து http://www.blogger.com/mobile-start.g தளத்திற்குச் சென்று, உங்களுக்கான டோக்கனைத் தட்டச்சு செய்து submit பண்ணவும். அதனை அடுத்து வரும் பக்கத்தில், அந்தப் பதிப்பினை, ஏற்கனவே உள்ள உங்கள் ப்ளாக்கோடு இணைக்கவா அல்லது புதியதாய் ஒன்றை ஆரம்பிக்கவா என்று கேட்கவும். ஏற்கனவே வைத்து இருக்கும் ப்ளாக்-உடன் இணைக்க, அந்த ப்ளாக் பய்னர் கணக்கினையும், கடவுச்சொல்லையும் கொடுத்தால் போதும். தொடர்ந்து உங்கள் மொபைலில் இருந்து பதிப்பிக்கும் தகவல்கள், நேராக நீங்கள் கொடுத்த ப்ளாக்கில் பதிப்பிக்கப் படும். இலகுவான வேலைதானே!
ஆனால், உங்கள் மொபைலிலும் இணையத் தொடர்பு இருக்கவேண்டும். மொபைலில் இணையத்திற்கான கட்டணம் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொண்டு, முயன்று பாருங்களேன், இதனை! Gadget Game!!

1 Comments:
தமிழ்மணத்தை செல்பேசி வடிவத்தில் படிக்கலாமாமே...
http://blog.thamizmanam.com/archives/117
தமிழ்மணப் செல்பேசி அறிவிப்பு பதிப்பின் பின்னூட்டத்தில் ஒரு நண்பர் 'java' plugin firmware மூலமாய் எல்லா செல்பேசிகளிலும் தமிழ்வடிவத்தைப் படிக்கலாம்னு சொல்லியிருக்காரு..முயற்சித்துப் பார்த்துட்டுச் சொல்றேன்..
Post a Comment