Friday, May 16, 2008

ஏன் கண்டிக்கவில்லை?

நல்ல இசைக்கு எப்பவுமே ஒரு மரியாதை உண்டு. அதுனாலதான் நல்ல பாட்டை யாராவது கர்ண கொடூரமா பாடுறப்ப, 'யப்பா..பாடுறதை நிறுத்திறியா.. இல்லா இடத்தக் காலிபண்ணவா'ங்கிறோம். இல்லைன்னா, 'கழுதை வந்துடப் போவுது'ன்னு சொல்றோம். ஆனா, இதெல்லாம் இப்ப இசையை வச்சு பொழப்பு நடத்துற இசையமைப்பாளர்களே மதிக்கிறதில்லையோன்னு தோணுது. ரீ-மிக்ஸ்-னு போட்டு, ஏற்கனவே வந்த பாட்டைப் போட்டு சிதைக்கிறது எனக்குச் சுத்தமா பிடிக்காத ஒன்னு. இதைப் பத்தி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கேன். ஒரு பக்கம் ரீமிக்ஸ் பாட்டு, இன்னொரு பக்கம் ட்யூன் கிடைக்கலேன்னுட்டு, பிரபலமாய் இருக்கிற சாமி பாட்டு ட்யூன்களத் திருடி, சினிமாப் பாடல்களுக்குப் போடுறது.. கேவலமாய் இல்லையா இவங்களுக்கு. இதுக்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் என எல்லாத் தலைகளும் ஒத்து ஊதுறாங்க.

ஒருத்தர் பக்தியா கும்புடுற இடத்தில, சத்தம் போடுறது கூட அநாகரீகம்னு ஒதுங்கிப் போகுற இடத்தில, வியாபாரத்திற்காக இந்தக் கூத்தாடி வேசம் கட்டுறது கண்டிக்கத் தக்கது.

சமீபத்துல வந்த சண்டை படத்துல 'செல்லாத்தா..செல்ல மாரியாத்தா'ங்கிற பாட்டு ட்யூனைப் போட்டு காமாசோமான்னு ஒரு பாட்டு. கொடுமைடா சாமி. இன்னொரு பாட்டும், பக்தியிசையின் காப்பி. இடையிடையிலே அசிங்கமாய்ச் சில முனகல்கள் வேறு..

இந்தமாதிரிப் பாடல்களுக்கு முன்மாதிரியிட்டதே தேவாதான்.. முதன் முதல்ல கந்த சஷ்டி ட்யூனைப் போட்டு, 'பதினெட்டு வயதுன்னு' 'சூரியன்'ல போட்டாரு. அடுத்து வழிவழியா ட்யூன் போடத்தெரியாத இசையமைப்பாளர்கள், தொடர ஆரம்பிச்சாங்க.. 'கற்பூர நாயகியே கனகவல்லி' ட்யூன்ல 'கருப்பான கையால'ன்னு ஒரு பாட்டு.

எனக்கு ஒன்னு புரியல...இதுமாதிரியான விசயங்கள் தொடர்ந்துகிட்டு இருக்கிறபோதும், எந்த ஹிந்துயிசக் காவலர்களும் இதுக்கெல்லாம் கண்டனம் தெரிவிச்சதா ஒரு செய்தியும் வரக்காணோம். ஒருவேளை இதெல்லாம் கண்டிக்கிறதுனால அவங்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்காதுன்னு வுடுறாங்களவோ என்னவோ?

கண்ணியமா இருக்கின்ற பக்திப் பாடல்களை, கெடுக்கிறது எனக்குச் சுத்தமாப் பிடிக்கலை. இதேமாதிரி, சபரிமலை சீசன்ல பார்த்தீங்கன்னா, சில பக்தியிசைக் குழுக்களும் பிரபலமான சினிமாப் ட்யூனாப் போட்டு, பக்தி கேசட்டப் போடுவாங்க. அதுவும் அசிங்கம்தான்.

பக்தியிசைங்கிறது நல்சிந்தனையையும், தூய்மைநிறை உணர்வுகளையும் கொடுக்கணுங்கிற நோக்கத்துல உருவாக்கப் படுற ஒன்னு. தயவுசெய்து அதைச் சிதைக்காதீங்க..ப்ளீஸ்..

12 Comments:

said...

இந்த மாதிரி பாட்டைக் கேட்டு வாங்கர தயாரிப்பாளர்கள்/டைரக்டர்களைத் தான் ஒதைக்கணும்.

ஆனாலும், சில ரீ-மிக்ஸ் பாடல்கள் கேட்க நல்லாவே இருக்குங்கரதையும் மறுப்பதர்கில்லை.
எங்கேயும் எப்போதும் பாட்டு, முதலில் எரிச்சலூட்டிலானாலும், கேட்க கேட்க இழுக்க ஆரம்பிச்சிடுச்சு ;)

said...

//இதுமாதிரியான விசயங்கள் தொடர்ந்துகிட்டு இருக்கிறபோதும், எந்த ஹிந்துயிசக் காவலர்களும் இதுக்கெல்லாம் கண்டனம் தெரிவிச்சதா ஒரு செய்தியும் வரக்காணோம்//

Why do they do? This won't hinder them, but 'dashavatharam's saivam-vainavam will hinder them, as there is vainavam there. they cry upon it.why do they worry about these.they only worry about perumal.don't worry about tamil gods.

- Sridhar

said...

சர்வேசன்..

வருத்தம் என்னன்னா, இதைப் பத்தி யாரும் கவலைப் படுறது கிடையாது.
ரீமிக்ஸ் பாட்டுக்கு வர்ர அளவு எதிர்ப்பு கூட, பக்தியிசையை மலிவாக்குவதற்கு இல்லைங்கிறது, கஷ்டமாத்தான் இருக்கு.

said...

புகழ்பெற்ற பக்திப் பாடல்களை இப்படி ரீமிக்ஸ் செய்வது கண்டிப்பாக கண்டிக்கப்படவேண்டியதுதான்...

said...

நல்ல பக்திப் பாடல்கள்...டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் காலத்தோடு போயிற்று. இவர்கள் எல்லாம் அதிலே
கை வைக்காதவரை சந்தோசம்!!அங்கே தொட்டால் பொங்கியெழ வேண்டியதுதான்.

said...

ஸ்ரீதர்,

நீங்க சொல்றது ஒரு வகையில சரிதான். பாக்யராஜோட 'சின்னவீடு' படத்தில சில தப்பான சீன்கள், இந்துக் கடவுள காட்டி, டைரக்ஷன் டச்னு காட்டியிருப்பாரு, ஆனா அவரு எடுத்த 'இது நம்ம ஆளு' படத்துக்குப் பார்த்தீங்கன்னா மெட்ராஸ்ல கண்டன ஊர்வலம் போனாங்க.. என்ன ஹிந்துயிமோ.. எல்லாம் அரசியல்தாங்க

said...

வாங்க ச்சின்னப்பையர், உங்க கண்டனத்தையும் சொன்னதுக்கு நன்றி. எவ்வளவு காதுக்கு கேட்குமோ, அவ்வளவு காதுக்கு கேட்கட்டும்..ம்..ம்..

said...

நானானியம்மா,

கந்தசஷ்டி கவசத்துல கைய வச்சதுக்கே கண்டிக்கணுங்கிறேன்.. அப்பத்துல இருந்தே தூங்கிகிட்டுதான் இருக்காங்க, இன்னமும் முழிக்கலை..

said...

ஐயா சர்வேசா! பழைய பாட்டின் மேலுள்ள ஈர்ப்பினால்தான் ரீ-மிக்ஸ் நம்மை இழுக்குது.

said...

"இதேமாதிரி, சபரிமலை சீசன்ல பார்த்தீங்கன்னா, சில பக்தியிசைக் குழுக்களும் பிரபலமான சினிமாப் ட்யூனாப் போட்டு, பக்தி கேசட்டப் போடுவாங்க."

உண்மைதான் சிவா! அதற்கு அவர்கள் சொல்லும் 'மொட்டைச் சாக்கு', மக்கள் மனதில் எளிதில் நிற்கும் இத்தகைய ட்யூன்களால் பக்தி பரவுது என்பதுதான்.

said...

அதே போல தாம் இட்ட எந்த ட்யூனையுமே பவித்திரமாக நினைப்பவர்கள் MSV போன்ற மேதைகள். ரீ-ம்க்ஸ் என்ற பெயரில் அவை நார்நாராய் கிழிக்கப் படுவது கண்டு மனம் நொந்து வாரப் பத்திரிகையில் பேட்டி தந்திருந்தார் அந்தப் பெரியவர். பக்திப் பாடல்களைப் புரட்டிப் போடவே தயங்காத நடிக, தயாரிப்பாள, இயக்குன தலைகள் இவரையேன் கண்டுக்கப் போறாங்க?

said...

நன்றி ராமலஷ்மி..கவிதாயினியா மட்டுமே இருப்பீங்கன்னு நினைச்சா, கருத்தாயினியா கூட மாறீட்டீங்க.. PIT-க்கு போட்டோ எடுத்து, போட்டாயினியா கூட மாறிட்டீங்க... வாழ்த்துக்கள்!

எம்.எஸ்.வி குறித்து நானும் படித்தேன்.. அரசியல்வாதிங்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கிற மாங்காயத்தான் அடிப்பாங்க்..மத்தது எல்லாம் சும்மா...நிஜமான உணர்வு இருந்திருந்தா, இதுமாதிரியான விசயங்களுக்கும் போர்க்கொடி ஏத்தியிருக்கணும்...