Friday, May 16, 2008

ஏன் கண்டிக்கவில்லை?

நல்ல இசைக்கு எப்பவுமே ஒரு மரியாதை உண்டு. அதுனாலதான் நல்ல பாட்டை யாராவது கர்ண கொடூரமா பாடுறப்ப, 'யப்பா..பாடுறதை நிறுத்திறியா.. இல்லா இடத்தக் காலிபண்ணவா'ங்கிறோம். இல்லைன்னா, 'கழுதை வந்துடப் போவுது'ன்னு சொல்றோம். ஆனா, இதெல்லாம் இப்ப இசையை வச்சு பொழப்பு நடத்துற இசையமைப்பாளர்களே மதிக்கிறதில்லையோன்னு தோணுது. ரீ-மிக்ஸ்-னு போட்டு, ஏற்கனவே வந்த பாட்டைப் போட்டு சிதைக்கிறது எனக்குச் சுத்தமா பிடிக்காத ஒன்னு. இதைப் பத்தி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கேன். ஒரு பக்கம் ரீமிக்ஸ் பாட்டு, இன்னொரு பக்கம் ட்யூன் கிடைக்கலேன்னுட்டு, பிரபலமாய் இருக்கிற சாமி பாட்டு ட்யூன்களத் திருடி, சினிமாப் பாடல்களுக்குப் போடுறது.. கேவலமாய் இல்லையா இவங்களுக்கு. இதுக்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் என எல்லாத் தலைகளும் ஒத்து ஊதுறாங்க.

ஒருத்தர் பக்தியா கும்புடுற இடத்தில, சத்தம் போடுறது கூட அநாகரீகம்னு ஒதுங்கிப் போகுற இடத்தில, வியாபாரத்திற்காக இந்தக் கூத்தாடி வேசம் கட்டுறது கண்டிக்கத் தக்கது.

சமீபத்துல வந்த சண்டை படத்துல 'செல்லாத்தா..செல்ல மாரியாத்தா'ங்கிற பாட்டு ட்யூனைப் போட்டு காமாசோமான்னு ஒரு பாட்டு. கொடுமைடா சாமி. இன்னொரு பாட்டும், பக்தியிசையின் காப்பி. இடையிடையிலே அசிங்கமாய்ச் சில முனகல்கள் வேறு..

இந்தமாதிரிப் பாடல்களுக்கு முன்மாதிரியிட்டதே தேவாதான்.. முதன் முதல்ல கந்த சஷ்டி ட்யூனைப் போட்டு, 'பதினெட்டு வயதுன்னு' 'சூரியன்'ல போட்டாரு. அடுத்து வழிவழியா ட்யூன் போடத்தெரியாத இசையமைப்பாளர்கள், தொடர ஆரம்பிச்சாங்க.. 'கற்பூர நாயகியே கனகவல்லி' ட்யூன்ல 'கருப்பான கையால'ன்னு ஒரு பாட்டு.

எனக்கு ஒன்னு புரியல...இதுமாதிரியான விசயங்கள் தொடர்ந்துகிட்டு இருக்கிறபோதும், எந்த ஹிந்துயிசக் காவலர்களும் இதுக்கெல்லாம் கண்டனம் தெரிவிச்சதா ஒரு செய்தியும் வரக்காணோம். ஒருவேளை இதெல்லாம் கண்டிக்கிறதுனால அவங்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்காதுன்னு வுடுறாங்களவோ என்னவோ?

கண்ணியமா இருக்கின்ற பக்திப் பாடல்களை, கெடுக்கிறது எனக்குச் சுத்தமாப் பிடிக்கலை. இதேமாதிரி, சபரிமலை சீசன்ல பார்த்தீங்கன்னா, சில பக்தியிசைக் குழுக்களும் பிரபலமான சினிமாப் ட்யூனாப் போட்டு, பக்தி கேசட்டப் போடுவாங்க. அதுவும் அசிங்கம்தான்.

பக்தியிசைங்கிறது நல்சிந்தனையையும், தூய்மைநிறை உணர்வுகளையும் கொடுக்கணுங்கிற நோக்கத்துல உருவாக்கப் படுற ஒன்னு. தயவுசெய்து அதைச் சிதைக்காதீங்க..ப்ளீஸ்..

Saturday, May 10, 2008

Friday Corner: இலவச இதய அறுவை சிகிச்சை

வெள்ளிக்கிழமைன்னாலே ஏதாவது ஜாலி மெயில் சுத்திக் கொண்டிருக்கும்.. இந்த வாரம் உபயோகமான குறிப்போடு வந்தது.. 'தேவைப்படுகின்ற குழந்தைகளுக்கு இலவசமாய், இதய அறுவை சிகிச்சை பண்ணுவது குறித்து...


உங்கள் பார்வைக்கு:மேலும் அதிக தகவலுக்கு : http://sssihms.org.in/


Friday, May 09, 2008

அட.. என் கவிதை இல்லைங்க இது!

"விழுந்தது கல்"


வருண பகவான்
கருணை மழையால்
அணை தாண்டிக்
காவேரி கரை
தொட்டோட
-தண்ணீர் பங்கீட்டுப்
பிரச்சனை-
தற்காலிகமாகவேனும்
தலை தூக்காதெனச்
சற்றே நிம்மதிப்
பெருமூச்செறிந்த
தமிழன்
தலையில்

****************************
"புகையும் கல்"


ஹோகேனக்கல்
என்றால்'
புகையும் கல்' எனப்
பொருளாமே
கன்னடத்தில்.
தம் எல்லை
தாண்டிப் போனாலும்-
தம்க்குப் பயன்படாத
தண்ணீரே ஆனாலும்-
தமிழன் தாகம்
தீர்க்கப் போகிறது
என்றதுமே-
ஒரு சிலரின்
காது வழியே'
புகையும் கல்'தானோ
ஹோகேனக்கல்?***

****************************

ஆமாங்க.. மேலேயுள்ளது நான் எழுதிய கவிதைன்னு நினைச்சீங்கன்னா...மன்னிச்சுடுங்க.. அதுக்கு சொந்தக்காரன் நானில்லைங்க..

ராமலஷ்மி-ங்கிற புதிய பதிவர் எழுதியது. PIT போட்டிக்காக நான் பதிந்த போட்டோவுக்கு, கவிதை எழுதினவங்க....யாரிது புச்சா இருக்கேன்னுட்டு போய்ப் பார்த்தா, நம்ம ஊர்க்காரவுக..

'ஹோகேனேக்கல்''ங்கிற காரணப்பெயர(கன்னடத்தில்) வச்சு, சூப்பரா ஒரு கவித படிச்சிருந்தாங்க.. நல்லாயிருந்தது..

விழுற தண்ணி, அதன் வேகத்தில புகை மண்டலமா சாரல் அடிக்கிறதுனால, 'ஹோகனேக்கல்'ங்கிற காரணப்பெயர் வந்ததுவாம். (அப்ப அது தமிழ்ப் பெயர் இல்லையான்னு கேக்காதீங்க...) புகைய வச்சு, பத்த வச்சுட்டாங்க... ம்..ம்ம்...

http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_02.htmlThursday, May 01, 2008

மொபைல் ப்ளாக்கிங்க் பண்ணுவது எப்படி?

மொபைல் போன் குறித்த முந்தைய பதிவில் சொல்லும்போது, மொபைல் ப்ளாக்கிங்க் பற்றியும் தொட்டுப் போயிருந்தேன். அதை கொஞ்சம் விரிவாய்ச் சொல்லாம்னு நினைக்கிறேன். டெக்னாலஜியோட வளர்ச்சி, மக்கள் அதைப் பயன்படுத்துறவிதம் எல்லாம் காலத்துக்கு காலம் வளர்ந்துகிட்டே போகுது. முன்பு ஒரு விளம்பரத்துல, ஒரு பெண், எதிர் வருகிற ஆணை காமிரா போனில் படம் எடுத்து, SMS அனுப்புறமாதிரி வந்தது, இப்ப எல்லோரும் பார்க்கிறவிதமா இணையத்துலேயே பதிப்பிக்கிற அளவுக்கு மொபைல் உலகம் வளர்ந்துடுச்சு. UK-ல இருக்கிற மொபைல் சேவைபுரிகிற நிறுவனங்கள், அவர்களின் வாடிக்கையாளர்க்களுக்கென புகைப்படம், மற்றும் SMS, MMS தகவல்களை சேகரிக்க உதவும் சேவைகளையும் வழங்குகின்றன. US -ல இது மாதிரி இருக்கிறதா, என்பதை அங்குள்ள நண்பர்கள் சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.

சரி, விசயத்துக்கு வருவோம். மேலே உள்ள படம், Sony Ericsson K660i செல்பேசியில் எடுத்து, அதனுடைய மொபைல் ப்ளாக்கிங்க் மூலமாய் அனுப்பி பதிப்பித்தது.. ரொம்ப வசதியில்ல.. உடனடியாய் தகவல்களைத் தர, உபயோகமாய் இருக்கும். பயனிக்கிற வழியில், ப்ளாக்-கிக்க வசதியாய் இருக்கும். ஆனால், மொபைல் Browserகள், இன்னமும் யுனிகோடு பயன்பாடு வரவில்லை. ஆகையால், ஆங்கிலத்தில் புலம்புவது எளிது, தமிழில் கதைப்பது இயலாத காரியம், நண்பர்கள் எவரேனும் அறிந்தால் தகவல் தரவும். குறைந்த பட்சம், படங்காட்டலாமே... நம்ம PIT மக்கள், புகைப்பட போட்டி ஒரு முறை மொபைல் புகைப்பட போட்டி கூட வைக்கலாம்.. :)..

சரி...எப்படி இந்த படத்தை ப்ளாக்கினேன்..என்பதைப் பார்க்கலாமா?

எந்தப் படத்தை ப்ளாக்கணுமோ, அதனை அனுப்ப , option-ல், 'send' பட்டனைத் தட்டினால் அதில் 'To Blog' என்றொரு தெரிவினை அழுத்தினால், அது தேர்ந்தெடுத்த படத்தை ப்ளாக்கருக்கு கொண்டு போய், தலைப்பு, மற்றும் படம் குறித்த விளக்கத்தினை தட்டச்சு செய்ய ஏதுவான பகுதியைக் காட்டும். (தற்சமயம் ஆங்கிலம் மட்டும்தான். ) அதனை முடித்தவுடன், 'Publish' பட்டனைத்தட்டினால், உடன் வெற்றிகரமாய் வெளிஉலகிற்கு தெரிவித்துவிடும்.

முதல் முறை மொபைலில் இருந்து ப்ளாக்கும் போது, பதிப்பிக்கப் பட்டவுடன் உங்களுக்கு SMS வரும். அதில் உங்கள் மொபைலுக்கான டோக்கன் அனுப்பப் பட்டு இருக்கும். அதனை எடுத்து எடுத்து http://www.blogger.com/mobile-start.g தளத்திற்குச் சென்று, உங்களுக்கான டோக்கனைத் தட்டச்சு செய்து submit பண்ணவும். அதனை அடுத்து வரும் பக்கத்தில், அந்தப் பதிப்பினை, ஏற்கனவே உள்ள உங்கள் ப்ளாக்கோடு இணைக்கவா அல்லது புதியதாய் ஒன்றை ஆரம்பிக்கவா என்று கேட்கவும். ஏற்கனவே வைத்து இருக்கும் ப்ளாக்-உடன் இணைக்க, அந்த ப்ளாக் பய்னர் கணக்கினையும், கடவுச்சொல்லையும் கொடுத்தால் போதும். தொடர்ந்து உங்கள் மொபைலில் இருந்து பதிப்பிக்கும் தகவல்கள், நேராக நீங்கள் கொடுத்த ப்ளாக்கில் பதிப்பிக்கப் படும். இலகுவான வேலைதானே!

ஆனால், உங்கள் மொபைலிலும் இணையத் தொடர்பு இருக்கவேண்டும். மொபைலில் இணையத்திற்கான கட்டணம் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொண்டு, முயன்று பாருங்களேன், இதனை! Gadget Game!!