Tuesday, April 29, 2008

தசாவதாரம் பாடல் எப்படியிருக்கு?'சிவாஜி' என்றொரு பிரம்மாண்ட அலை இப்போதுதான் கடந்து போன மாதிரி இருந்தது..அடுத்த பிரம்மாண்ட அலை அணிவகுத்து வருகுது.. 'தசாவதாரம்' மூலமாய்... தமிழ் சினிமா, பாலிவுட் சினிமாவை மிஞ்சுகிற விதத்தில் பறந்து கொண்டிருக்கின்றது. பாடல் வெளியீட்டு விழாவுக்கு 'ஜாக்கிசான்' வந்து போகிற அளவுக்கு..

விழாவின் பிரம்மாண்டம், பாடல் மீதான ஆர்வத்தை தூண்டாமலில்லை. வைரமுத்துவும் வரிகளில் பிரம்மாண்டத்தைப் பஞ்சம் வைக்காமல், 'ஐ.நாவும்' உன்னை அழைக்கும் என்று கமல் ரசிகர்களை குளிர்ச்சி படுத்தும் விதமாய் 'உலக நாயகனே' என்ற போற்றிப் பாடல் எழுதியிருக்கிறார். ஹீரோயிசப் பாடல் என்பது தவிர்க்க முடியாததாய் விடுகிறது. ரசிகர்களுக்குப் பிடிக்கலாம்.


'க..கருப்பனுக்கும் வே வெள்ளையனுக்கும் பே பேதமில்லை'-ன்னு மல்லிகா ஷெராவத்தோடு ஆடுகிற பாடல்(?) beat நல்லா வந்து இருக்கு. கமலின் நடனம் இன்னமும் துள்ளலாய் இருக்குமா, என்ற ஆவலைத் தூண்டும் விதமாய் இருக்கிறது. ஆரம்பத்தில் வருகின்ற ஆங்கில வரிகள்தான் பாடலை அன்னியப் படுத்துகிறது, பெண் குரலிசை மட்டுமே என்பதால், ஹிட் வரிசையிலிருந்து விலகியும் போகலாம்.

'பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்' - கமல் குரலின் இனிமையோடு துவங்குகிற ஓஹ்..ஹோ..சனம் பாடல் ஹிட் வரிசையில் சேருகின்ற ரகம்தான். பாடலின் அமைப்பு, சில இடங்களில் 'போட்டு வைத்த காதல் திட்டம்' style ஐ நினைவுபடுத்துவது தவிர்க்கமுடியாதது.

"யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது,
அதை மாற்றி யாழ் செய்வது பாடல்தான்..
கடவுளும், கந்தசாமியும் பேசுக்கொள்ளும்
மொழிபாடல்தான்" என்று

இசையின் மேன்மையை சொல்லும் விதமாய் பாடல் செல்வது அழகு. வைரமுத்துவுக்கு ஜே! 'வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்' என்ற தேசீயம் வேறு. பஞ்சாபி வேடத்தில் பாடுகின்ற பாடலாயிருக்குமோ?

மெலடியாய் ஒரு பாடல் வேண்டாமா? 'முகுந்தா...முகுந்தா...' பாடல் பூஜை அறையில் அசின் பாடுகின்ற பாடலாய் இருக்கலாம். சாதனா சர்கமின் குரலினிமையோடு, பாடலின் இறுதியில் கிழவி வேடக் கமல் (?) பாடுவது போல், வயதான கிழவி போல பாடியிருக்கிறார் கமல், வித்தியாசம் காட்டியிருக்கிறார், கேரக்டரோடு பார்க்கும் போது இன்னும் நன்றாயிருக்கலாம். தசாவதாரம் என்பதால், கிருஷ்ணாவதராங்கள் வரிசைப் படுத்தலும் உண்டு.

'ஓம் நமோ நாரயணாய' வைத் தொடர்ந்து வாலியின் வரிகளில் 'கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது' பாடல்.... டச்சிங். இசையும் சரி, ஹரிஹரனின் குரலிசையிம் குழைந்திருக்கின்றது. 'ஓம்..ஓம்' என்ற மெல்லிய பின்னொலியும் இனிமை சேர்த்திருக்கிறது. கேட்க மிகச் சிறப்பாய்த் தெரிவது இப்பாடல்தான். பாடலின் காட்சியமைப்பு கைகோர்க்குமானால், பாடலுக்கு கூடுதல் வெற்றி.

வாலி,வைரமுத்துவின் வரிகளைச் சிதைக்காமல், இரைச்சலாய் இல்லாமல் இசைத்திருக்கும் ஹிமேஷ் எதிர்பார்ப்புகளைச் சிதைக்காமல் காப்பாற்றியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஆனாலும், விளம்பரங்களும், கமலின் வித்தியாசங்களும் காட்டுகின்ற பிரமிப்பை, ஆர்ப்பரிப்பாய் காட்டாமல், அமைதியாய் இசைத்திருப்பதாய்ப் படுகிறது, இசையமைப்பு...

சிவாஜி தப்பித்து விட்டார்... கமலுக்கும், பிரம்மாண்டத்திற்கும் உள்ள ராசி எப்படிங்கிறதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


கல்லை மட்டும் கண்ட...
ஆனா, இந்தப் பாட்டு காப்பியாமே.. பாருங்க இங்க

6 Comments:

said...

நல்ல பாடல் விமர்சனங்க. நன்றி. பாடல்களோட வீடியோ துணுக்குகள் இங்க இருக்கு.

http://premkg.blogspot.com/2008/04/blog-post_27.html

நேரமிருந்தா பாருங்க .

said...

வாலியின் வரிகளில் முகுந்தா முகுந்தாவும் கல்லைமட்டும் கண்டால் பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும். உலக நாயகனே பாடல் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டியபாடல். ரஜனிபோல் கமல் பெரும்பாலும் தன் படங்களில் தன்னைப் புகழும் பாடல்களை அனுமதிப்பதில்லை ஆனாலும் இந்த முறை உலகனாயகனே பாடலை ஏனோ அனுமதிதிருக்கிறார்.

ஓ ஓ சனம் ஓஓ பாடலும் கமலின் குரலும் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது,. ஏனோ சிலபாடல்கள் ஹேராம், திருவாசகம் போன்ற இளையராஜாவின் படைப்புகளை நினைவுபடுத்துகின்றன.

பாடல்வரிகள் மிகவும் தெளிவாக இருப்பது போற்றத்தக்கது.

said...

பிரேம்ஜி..

பாடலின் காட்சித் துணுக்குகள் உங்கள் தளத்தில் பார்த்தேன்..நன்றாயிருந்தன..காண உதவியமைக்கு நன்றி

said...

ரத்தினச் சுருக்கமாக விமர்சித்து விட்டீர்கள் வந்தியத்தேவன்..'பாடல் வரிகள் தெளிவாய் இருப்பது நல்ல விசயம்தான்.

said...

My view:

Not upto the expectations...

- Arun

said...

கொடுமைங்க.. எந்தப் பாட்டு நல்லாயிருக்குன்னு சொன்னோமோ அந்தப் பாட்டு, காப்பியாம்..

பாருங்க இங்க, நம்ம சொக்கன் பதிவ:
http://aayirathiloruvan.blogspot.com/2008/05/blog-post_12.html

எவ்வளவோ காசக் குடுத்து, பிரம்மாண்டமா விளம்பரம் பண்ணி, ஜாக்கிசான் எல்லாம் கூப்பிட்டு, ஒரு டூப்ளிகேட் பாட்ட ரீலிஸு பண்ணனுமா.. ம்..ம்.. என்னமோ போங்க..