Tuesday, April 29, 2008

தசாவதாரம் பாடல் எப்படியிருக்கு?'சிவாஜி' என்றொரு பிரம்மாண்ட அலை இப்போதுதான் கடந்து போன மாதிரி இருந்தது..அடுத்த பிரம்மாண்ட அலை அணிவகுத்து வருகுது.. 'தசாவதாரம்' மூலமாய்... தமிழ் சினிமா, பாலிவுட் சினிமாவை மிஞ்சுகிற விதத்தில் பறந்து கொண்டிருக்கின்றது. பாடல் வெளியீட்டு விழாவுக்கு 'ஜாக்கிசான்' வந்து போகிற அளவுக்கு..

விழாவின் பிரம்மாண்டம், பாடல் மீதான ஆர்வத்தை தூண்டாமலில்லை. வைரமுத்துவும் வரிகளில் பிரம்மாண்டத்தைப் பஞ்சம் வைக்காமல், 'ஐ.நாவும்' உன்னை அழைக்கும் என்று கமல் ரசிகர்களை குளிர்ச்சி படுத்தும் விதமாய் 'உலக நாயகனே' என்ற போற்றிப் பாடல் எழுதியிருக்கிறார். ஹீரோயிசப் பாடல் என்பது தவிர்க்க முடியாததாய் விடுகிறது. ரசிகர்களுக்குப் பிடிக்கலாம்.


'க..கருப்பனுக்கும் வே வெள்ளையனுக்கும் பே பேதமில்லை'-ன்னு மல்லிகா ஷெராவத்தோடு ஆடுகிற பாடல்(?) beat நல்லா வந்து இருக்கு. கமலின் நடனம் இன்னமும் துள்ளலாய் இருக்குமா, என்ற ஆவலைத் தூண்டும் விதமாய் இருக்கிறது. ஆரம்பத்தில் வருகின்ற ஆங்கில வரிகள்தான் பாடலை அன்னியப் படுத்துகிறது, பெண் குரலிசை மட்டுமே என்பதால், ஹிட் வரிசையிலிருந்து விலகியும் போகலாம்.

'பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்' - கமல் குரலின் இனிமையோடு துவங்குகிற ஓஹ்..ஹோ..சனம் பாடல் ஹிட் வரிசையில் சேருகின்ற ரகம்தான். பாடலின் அமைப்பு, சில இடங்களில் 'போட்டு வைத்த காதல் திட்டம்' style ஐ நினைவுபடுத்துவது தவிர்க்கமுடியாதது.

"யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது,
அதை மாற்றி யாழ் செய்வது பாடல்தான்..
கடவுளும், கந்தசாமியும் பேசுக்கொள்ளும்
மொழிபாடல்தான்" என்று

இசையின் மேன்மையை சொல்லும் விதமாய் பாடல் செல்வது அழகு. வைரமுத்துவுக்கு ஜே! 'வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்' என்ற தேசீயம் வேறு. பஞ்சாபி வேடத்தில் பாடுகின்ற பாடலாயிருக்குமோ?

மெலடியாய் ஒரு பாடல் வேண்டாமா? 'முகுந்தா...முகுந்தா...' பாடல் பூஜை அறையில் அசின் பாடுகின்ற பாடலாய் இருக்கலாம். சாதனா சர்கமின் குரலினிமையோடு, பாடலின் இறுதியில் கிழவி வேடக் கமல் (?) பாடுவது போல், வயதான கிழவி போல பாடியிருக்கிறார் கமல், வித்தியாசம் காட்டியிருக்கிறார், கேரக்டரோடு பார்க்கும் போது இன்னும் நன்றாயிருக்கலாம். தசாவதாரம் என்பதால், கிருஷ்ணாவதராங்கள் வரிசைப் படுத்தலும் உண்டு.

'ஓம் நமோ நாரயணாய' வைத் தொடர்ந்து வாலியின் வரிகளில் 'கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது' பாடல்.... டச்சிங். இசையும் சரி, ஹரிஹரனின் குரலிசையிம் குழைந்திருக்கின்றது. 'ஓம்..ஓம்' என்ற மெல்லிய பின்னொலியும் இனிமை சேர்த்திருக்கிறது. கேட்க மிகச் சிறப்பாய்த் தெரிவது இப்பாடல்தான். பாடலின் காட்சியமைப்பு கைகோர்க்குமானால், பாடலுக்கு கூடுதல் வெற்றி.

வாலி,வைரமுத்துவின் வரிகளைச் சிதைக்காமல், இரைச்சலாய் இல்லாமல் இசைத்திருக்கும் ஹிமேஷ் எதிர்பார்ப்புகளைச் சிதைக்காமல் காப்பாற்றியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஆனாலும், விளம்பரங்களும், கமலின் வித்தியாசங்களும் காட்டுகின்ற பிரமிப்பை, ஆர்ப்பரிப்பாய் காட்டாமல், அமைதியாய் இசைத்திருப்பதாய்ப் படுகிறது, இசையமைப்பு...

சிவாஜி தப்பித்து விட்டார்... கமலுக்கும், பிரம்மாண்டத்திற்கும் உள்ள ராசி எப்படிங்கிறதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


கல்லை மட்டும் கண்ட...
ஆனா, இந்தப் பாட்டு காப்பியாமே.. பாருங்க இங்க

Friday, April 25, 2008

மொபைலு...மொபைலு...
sony-யுடைய Gadgets எல்லாமே, ஒரு தனிமுத்திரையைப் பதிக்கிற ஒன்னா இருக்கும், ஆடியோவாகட்டும், வீடியோவாகட்டும் அதன் முத்திரை தனிதான்..மொபைல் போன்களிலும், அந்த முத்திரைக்கு குறைவில்லை. சோனி மொபைல்களில், காமிரா மிக நேர்த்தியாய் இருக்கும். அந்தந்த விலைக்கு ஏற்ற மொபைல்களின் காமிராக போன்களோடு ஒப்பிடுகையில், சோனியின் காமிரா முத்திரை தனியாய் இருக்கும். சென்ற வருடத்திய போன்களில், K800i தனி இடத்தைப் பிடித்து, UK-வின் Favorite-லும் இடம் பிடித்தது.நிஜமாலுமே அருமையான போன்தான். 3.2 MP கேமிரா உடன் xenon Flash வேறு. குறைந்த வெளிச்சத்திலும், நல்ல படம் பிடிக்கிறது. Auto focus feature இருந்தாலும், force flash feature இல்லாதது ஒரு குறைதான். Point & Shoot கேமிராக்களுக்கு இணையாக போட்டோக்களின் தரம் வருவது சிறப்பு. இதற்கு அடுத்த மாடல் K810i/K850i வந்தபோதிலும், K800i அதன் இடத்தை விட்டுக் கொடுக்கவில்லை.


இதில் எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்க... Kளிக்குக.. web camera features, மொபைல் ப்ளாக் என எல்லா நவீனத்துவமும் உண்டு. வீடியோ features முந்தைய மாடல்களைவிட தேவலாம், ஆனால் நோக்கியாவுடன் N-70/N-95 மாடல்களுடன் ஒப்பிடுகையில் நோக்கியா சிறப்பாய்த் தெரிகிறது.


Nokia N-70/N-95 மாடல் போன்களும் சிறப்பு. Email, Yahoo Chat, MSN Chat & Skype என எல்லா இணைய சாட் தொகுப்புகளையும் உள்ளடக்கி, கணிணியை நாட வேண்டிய தேவைகளை புறந்தள்ளுகிறது. வருகின்ற புதிய மாடல்களின் விலை, கணிணிக்கு இணையாக ஏறிக்கொண்டிருந்த போதும், மக்களிடம் மவுசு குறையாமல் செல்பேசி சந்தை சந்தோசமாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றது.


Saturday, April 05, 2008

மொபைல்-ஆ...மொபைலா...?
'மொபைல்-ஆ..மொபைல்-ஆ..' ன்னு பாட்டு பாடத்தோணுது... இப்ப வர்ர விதவிதமான மொபைல் போன்களைப் பார்க்கும்போது.. Features-ஆகட்டும்..இல்ல கண்கவர் வண்ணங்களாகட்டும்.. எல்லா நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு, விதவிதமாய் உற்பத்தி பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்..
எதை எடுப்பது..எதை விடுப்பதுன்னு தெரியாம முழிக்கிற அளவுக்கு மொபைல் மார்கெட் அள்ளிகிட்டுப் போகுது.. Laptop கணிணியை விட, அதிக விலை போகும் மொபைல்களும், ஜெகஜ்ஜோதியாய் விற்பனையாகிக் கொண்டுதானிருக்கின்றன.

மக்களுக்கு பேசுறதுல மட்டுமல்ல ஆர்வம், மாசத்துக்கொரு மொபைல வச்சு அழகு பார்க்குறதுலயும் ஆர்வம் அதிகமாயிட்டு இருக்கு. சின்னப் பிள்ளைங்களுக்கு விளையாட்டுப் பொருள் மேல இருக்கிறமாதிரி, மொபைல் போன் பெரியவங்களுக்கான விளையாட்டுப் பொருளாயிடுச்சு.. குட்டிப் பையங்களுக்கும், அது பிடித்திருக்கு என்பது எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம். ஆபிசுல என்னோட மேலதிகாரி i-phone வாங்கிட்டு, அதுல விளையாடிட்டு இருக்கிறப்ப குழந்தையா மாறிடுறார்.. இது அப்படி பண்ணும்..இப்படி பண்ணும்னு ஏகப்பட்ட டெமான்ஸ்டிரேஷன் வேறு.. நிஜமாலுமே impressive-வாகத்தான் இருக்கு. காசப் பார்த்தா மயக்கமே வந்துரும்..இந்தியாவுல Vodofone, செப்டம்பர் 2008 -ல இருந்து i-phone சப்போர்ட் தரப்போறதா சொல்றாங்க. போன் மட்டும் 28000 ரூபாய் விலை நிர்ணயமாகலாம்ங்கிறாங்க.. Wi-Fi இண்டர்நெட், தொட்டுத் துழாவுகிற டெக்னாலஜி..என பல்வேறு விதமான அம்சங்கள் இருந்தாலும், கேமிரா போனுக்கான விசயங்கள், பெரிதாகக் கவனிக்கப் படவில்லை என்பது, அந்த விலை கொடுத்து வாங்கக் கூடிய போனுக்கு மைனஸாகிவிட்டது என்பது என் கண்ணோட்டம். ஆனாலும் ஐ-போன் படங்களுக்காக ஒரு Flickr-குழுமமே இருக்கு. பார்க்க:http://www.flickr.com/groups/iphone_users/. ஆனாலும் கேமிரா மொபைல்-னா என்னோட வோட்டு sony மொபைலுக்குத்தான்.. காமிராவுல எடுத்தாலும், நல்ல sharp-ஆ வரும். அது குறித்து அடுத்த பதிவுல பார்க்கலாம்.

2007 -ஆம் வருடத்தைப் பொறுத்தவரையில், Mobile Market நல்ல பிரகாசமா இருந்துருக்கு. Nokia-தான் மிக அதிக Market Share-ஐ வச்சுருக்கு, அடுத்து மிரட்டுறது Sony-யாகத்தான் இருக்கும்.. இன்னும் கொஞ்சம் mobile ஐப் பத்தி பேசலாம்னு இருக்கேன்..நாளை தொடர்கிறேன்..