Wednesday, March 26, 2008

சுஜாதா...கமலின் பார்வையிலிருந்து....

கமல் மூலமாய்....சுஜாதா ஒரு பார்வை: (மூலம்: சினிசவுத்)

(சினிசவுத் வெளியிட்டிருந்த தகவல்)







"சுஜாதா அவர்களுடைய மரணம் நெருங்குவதை நான் உணர்ந்தேன். அவரும்தான்.
வழக்கமாக எழுத்தாளர்கள் சமரசம் செய்வதை இழுக்காகவும், தோல்வியாகவும் நினைப்பார்கள். ஆனால் சுஜாதா அவர்கள், சமரசம் செய்து கொள்வது அவசியம், சமுதாயக் கடமை என்றே நினைத்தார். அதனால்தான் சிலசமயம் நாம் எதிர்பார்க்கிற வீரியம் குறைந்ததுபோல ஒரு பிரமை தோன்றும். அவருடைய வாழ்க்கைமுறை, நெறி அது.
விஞ்ஞானம் கற்றறிந்தவர் என்பதால் எழுத்தை அவர் தொழிலாக நினைக்கவில்லை. தொடரும் ஒரு காதலைகவே நினைத்தார். அதனால் அவருக்கு தன் எழுத்தை பற்றி செறுக்கு இல்லை. அவருடைய சினிமா எழுத்தை வைத்து தயவுசெய்து யாரும் சுஜாதாவை கணித்துவிடாதீர்கள். அதுவும் பெரும் சமரசம்தான். சினிமாவுக்காகவும், நட்புக்காகவும், அன்புக்காகவும் அவர் செய்துகொண்ட சமரசம். இருந்தாலும் சுஜாதா என்னும் அந்தப் பெயரை பெரியதாக வட்டம் போட்டுக்காட்டிய சினிமாவுக்கு ஓரளவுக்கு வேண்டுமென்றால் நன்றி சொல்லாம். மற்றதெல்லாம் இலக்கியத்திற்கே உரித்தானது.

தர்மம் கிடைக்கும் இடத்தில்தான் பிச்சைக்காரர்கள் கூடுவதுபோல், கொடுக்கும் இடத்தில்தான் இன்னும் எதிர்பார்பார்கள். அப்படிப் பார்க்கும்பொழுது சுஜாதா இன்னும் கொடுத்திருக்கலாம் என்று சொல்வதைவிட கொடுத்ததற்கு நன்றி சொல்லவேண்டிய நேரமாகவே இதை நான் கருதுகிறேன்.


பல விஷயங்களில் அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய எழுத்து ரசனையை, என்னுடைய தமிழ் வாசிப்பு ரசனையை உயர்த்திய முக்கியமான எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். என்னுடைய வாசிப்பு என்று சொல்லும்போது ஏதோ குறுகிய வட்டம்போல் ஆகியது. தமிழகத்தில் சுஜாதாவைப் படித்தவர்கள் எல்லோருமே வாசக தரத்தில் உயர்ந்தவர்களாகவே நான் கருதுகிறேன். நன்றி தமிழ் உலகம் அவருக்கு சொல்லும்." - கமல்



நன்றி: சினிசவுத்

http://tamil.cinesouth.com/masala/hotnews/new/28022008-7.shtml

இந்தவார ஸ்டார் பதிவர் சுப்பையா வாத்தியாரின் சுஜாதா பதிவு காண

4 Comments:

said...

இந்த வார ஸ்டார் சுப்பையா சார், அந்த அந்தந்த காலத்து படங்களுடன் சுஜாதா கதைகள் குறித்து போட்டிருக்கும் பதிவும் அசத்தல், என்னதான் புத்தகமாய்ப் படித்தாலும், முதலில் வந்த எழுத்துக்களுடன்,படங்களுடன் படிப்பது கூடுதல் சுகம்.

said...

Sujatha, Evergreen favorite...

- Arun

said...

http://www.alaikal.com/news/?p=2188#more-2188

said...

சுஜாதா பற்றி இணையத்தில் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டிருந்த போது, வாத்தியார் சுப்பையா அவர்களின் பின்னூட்டத்தில் உங்கள் பெயர் கண்டு 'அட மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நெல்லை சிவா..' என உங்கள் வலைப் பூவுக்கு வந்தேன்.
சுஜாதா சினிமாவுக்கு வந்திருக்கக் கூடாதோ எனக் கருதும் என் மற்றும் வாத்தியார் ஐயா போன்றோரின் கருத்துக்கு ஒரு பதிலாக அமைந்திருக்கிறது இப் பதிவு.