Saturday, September 08, 2007

இரைச்சலாய் இசைத்திருந்தால் கேட்டிருக்குமோ?


"இரைச்சலாய்
இசைத்திருந்தால்
கேளாத
செவிகளுக்கும்
கேட்டிருக்குமோ?
மெல்லிசையாய்
இசைத்ததாலேயே
நல்லிசை ஒரமாய்ப்
போனதோ?"
- என்று கேட்கத் தோணுகிறது, நம் மெல்லிசைமன்னரின் இசைக்கு அங்கீகாரம் வழங்கக் கோரும் 'பத்மபூஷனும் விபூஷனனும் ஈயம் பித்தளைக்கு வாங்கரோமுங்கோ... ' என்ற சர்வேசனின் பதிவைப் படித்த போது.

சரி, அங்கீகாரம் வழங்கக் கோரி அவர் எழுப்பியிருக்கிற ஆன்லைன் பெட்டிசன்-ல எத்தனைபேரு கையெழுத்திட்டிருக்காங்கன்னு பாத்தா, மின்மினி மூலமாய் நானிட்ட கையெழுத்தும் சேர்த்து, 60 - தான் வருகிறது.

இப்ப வந்த பசங்க கூட டாக்டர், கம்பவுண்டர் பட்டங்கள எளிதா வாங்கிடறாங்க, ஆனா நம்ம எம்.எஸ்.விக்கு....? என்ன கொடுமை சரவணன் இது?-ன்னுதான் கேட்கத் தோணுது.

இசையில் எவ்வளவோ சாதித்திருந்த போதும், அடக்கமாய் இருப்பவர் அவர், அதனால்தானோ என்னவோ 'விருதார்'கள் கவனிக்காமல் விட்டார்களோ?

நம்ம ஊருல விருது கொடுக்குறதுக்குன்னே சில சட்டதிட்டங்கள் வைத்திருக்காங்க.
1. விருது கொடுக்குறதுனால, தங்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கும்னா, வலியக் கூப்பிட்டு வகைக்கொரு பட்டம் கொடுப்பாங்க
2. காசு கொடுத்தா பட்டம் கொடுப்பாங்க
3. பெரிய இடத்து சிபாரிசு இருந்தா பட்டம் கொடுப்பாங்க
4. அனுசரித்துப் போனா, பட்டம் வாங்குறவங்கள விளம்பரப்படுத்த பட்டம் கொடுப்பாங்க
5. நாங்கதான் முதல்ல பட்டம் கொடுத்தோம்-னு சொல்லிக்க, பாப்புலரா இருக்கறவங்களுக்கு முந்தியடிச்சு பட்டம் கொடுப்பாங்க..

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ம்ம்ம்...MSV இந்த வகை எதிலும் சேர்த்தி இல்லாமல் இருப்பதினாலா என்னவோ, இன்னமும் பட்டம் வாங்காமல் இருக்கிறார். கலையுலகை ஆதரிக்கின்ற எம்ஜியாரும், கருணாநிதியும் கூட கண்டுக்காமல் விட்டது/விட்டுக் கொண்டிருப்பது கூட மன்னிக்கமுடியாதது.

மெட்டுக்கு பாட்டெழுதக் கேட்கிற இசையமைப்பாளர்கள் நடுவே, எழுதுகின்ற கவிஞரின் சிந்தனையைக் கட்டுப்படுத்தாமல் வந்து விழுகின்ற வரிகளுக்கு வாத்தியம் கட்டியவர் அவர்.
'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் வருகின்ற 'சிப்பியிருக்குது ..முத்துமிருக்குது' பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? இரைச்சலோ, இடியோசையோ இல்லாமல், இனிதாயில்லை?
'பூக்காரி' படத்தில் வருகின்ற, 'காதலின் பொன்வீதியில்....' பாடல் மென்மை கூறுவதாயில்லை?
'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் வருகின்ற 'எங்கேயும்..எப்போதும்..', 'யாதும் ஊரே..', 'சிவ சம்போ' பாடல்களெல்லாம், இன்னைக்கும் உங்கள் காதில் ரீங்காரம் இடவில்லையா?
ஹெட்போனிலோ, ஐ-பாடிலோ அல்லது உங்க கார் ஆடியோவிலோ, 'சம்போ..சிவ சம்போ...' பாடலைக் கேட்டுப் பாருங்கள். அதில் இசைத்திருக்கின்ற கருவிகளும், மெட்டும், குரலும் பின்னிப்பிணைந்திருப்பதை உணர முடியும். பாடல் முடிந்த பிறகும் கூட, உங்கள் காதுகளில் அந்த இசை உங்களை ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்.

எத்தனையோ பேரைக் கவர்ந்த, 'சிம்லா ஸ்பெசல்' படத்தில் வருகின்ற 'உனக்கென்ன மேலே நின்றாய்' பாடல், இப்போதைய இளைஞர்களையும் வசீகரிக்கக் கூடிய ஒன்று.


KanaKaanumKangazl....
பாலசந்தரின் 'அக்னிசாட்சி' படத்தில் வரும், எஸ்பிபி பாடிய 'கனாக் காணும் கண்கள் மெல்ல' பாடல் கேட்டிருக்கிறீர்களா? காட்சியையும், கதையின் கருவையும், அர்த்தமிக்க வரிகளையும் தாலாட்டும் விதமாய் 'அருமை' என்ற வார்த்தைக்கு இலக்கணமாய் மனதை உலுக்கும். கேட்காதவர்கள், கேட்டுப் பாருங்கள்.
எத்தனை பேருக்குத் தெரியும், 'ஆயர் பாடி மாளிகையில்' பாடலும், 'புல்லாங்குழல் கொடுத்த' - கண்ணன் பக்திப் பாடலும் MSV-யின் இசை வடிவம் என்று?

அவரது பாடல்களில் மனம் கவர்ந்தது என்றால், பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். MSV ஒரு நிஜக் கலைஞன், சக கலைஞர்களை மதிக்கத் தெரிந்த, 'ஈகோ' இல்லாத, இசையை இசையால் ரசிக்கத் தெரிந்த மனிதன்.
நல்ல கலைஞனுக்கு விருதுகளெல்லாம் இரண்டாம் பட்சம்தான், அது கலைஞனின் பார்வையில். கலைஞனின் ரசிகனின் பார்வையில், விருதும் தேவையான ஒன்று.
அவருடைய பாடல்கள் எத்தனையோ நம்முடைய மனதைத் தொட்டிருக்கின்றது, பிசைந்திருக்கின்றது. அவருடைய ஏதாவது ஒரு பாடல், உங்க மனதை தொட்டிருந்தால் கூட, நீங்கள் உங்களுடைய கையொப்பத்தை, இந்த ஆன்லைன் மனுவில் பதிப்பிக்க கடமைப்பட்டவராகின்றீர்கள்.
'விருதார்கள்' போல, மெத்தனமாய் இல்லாமல், சுறுசுறுப்பாய் இரண்டு நிமிடம் செலவழியுங்கள், அந்த முதுபெரும் இசைக் கலைஞனுக்கு.

19 Comments:

said...

அருமை அருமை அருமை!

நானும் என் பதிவ இந்த மாதிரி போட்டிருந்தேனா, 60 க்கு பதிலா 600 கையெழுத்து வந்திருக்கும். வெரி டச்சிங்!

'காதலின் பொன்வீதியில்' - எவ்ளோ சூப்பர் பாட்டுங்க அது. (mp3 இருக்கா? :) )

கண்ட கண்ட பயலெல்லாம் பத்ம-XYZ வாங்கும்போது, கடுப்பா இருக்கு பாக்க.

அட்லீஸ்ட், இசைத்துறையில் இருக்கும் ராஜா, ரஹமானெல்லாம் சேந்து, ப்ரஷர் போட்டாவது வாங்கிக் கொடுக்கணும்.

லதா மங்கேஷ்கருக்கு, பாரத் ரத்னாவாம், MSVக்கு ஒண்ணும் இல்லியாம். என்ன கூத்துங்க இது.

நன்றி! நன்றி!

said...

Just now I put my signature...

said...

ஆமாங்கன்ணா...

நீங்க சொன்ன பாட்ட எல்லாம் உன்னோரு வாட்டி கேக்கப்போறங்கணா...க‌ல‌க்கிட்டீங்க.

ஆனாலும் அவ‌ருக்கு விருதுகளை விட‌ ந‌ம் (சாரி தங்களை) போன்ற உண்மையான ர‌சிக‌ர்க‌ளின் இது போன்ற‌ ப‌திவுக‌ள் ம‌கிழ்ச்சியை கொடுக்கும் என்ப‌தே என் க‌ருத்து.

இதோட‌ விடாம‌ல் கொஞ்ச‌ம் விலாவ‌ரியா MSV அவ‌ர்க‌ளுடைய‌ சாத‌னைக‌ளைப் ப‌ற்றி உங்க‌ளை போன்ற‌ விவ‌ர‌ம் அறிந்த‌வ‌ர்க‌ள் போட்டால் மிக‌ ந‌ன்றாக‌ இருக்குமே...காத்திருக்கிறேன்...

~மாற‌ன்

said...

சர்வேசா, உங்க பதிவுதான் இதுக்கு இன்ஸ்பிரஷேனே. 'காதலின் பொன்வீதியில்..' MP3 இருக்கிறது. நீங்க சொல்ற மாதிரி, பிற இசை ஜாம்பாவன்களும், முயற்சித்தால், இது எளிதில் நடக்கலாம். ம்..ம்..ஊதுகிற சங்கை ஊதி வைப்போம், கேட்கிற காது மட்டும் கேட்கட்டும்.

said...

நன்றி கவிதா.

said...

நன்றி சிவா
போட்டாச்சு:-)

பிடித்த பாடல்கள் ஆயிரம் ஆயிரம்

said...

நன்றி மதுமிதா, உங்களது முயற்சிக்கும்!

said...

மாறன்,

நீங்க சொல்றது உண்மைதான், அதான் சொல்லியிருக்கேனே, 'கலைஞனுக்கு விருது பற்றி கவலையில்லாமல் இருக்கலாம், ஆனால், அவன் ரசிகனுக்கு அது தேவை.'

நீங்க சொல்ற மாதிரி, MSV இசையில், எனக்கு பிடித்த பாடல்களைப் பற்றியெல்லாம், எழுதலாம் என்றுதானிருக்கிறேன். மெல்ல மெல்ல ஆரம்பிக்கலாம்.

நன்றி உங்கள் கருத்துக்கும், வாக்குக்கும்.

said...

Very Inspirational post, I posted my signature.

said...

Thanks for this great thread and replies.

I request you all to visit MSVTimes.com and join "MSV Club" thro MSVTimes.com/forum and interact with other MSV Fans across the globe.

It is heartening to read these articles on the composing legend, MSV !!!

Regards,
Ram
Hartford USA
Moderator
MSVTimes.com & MSVCLub

said...

நன்றி குமார், உங்க வாக்கும் பார்த்தேன்.

said...

//I request you all to visit MSVTimes.com and join "MSV Club" thro MSVTimes.com/forum and interact with other MSV Fans across the globe.
/// -Ram,Hartford USA,

நன்றி ராம். உங்கள் தகவலுக்கும் நன்றி. மேலும் அதிக தகவல்களுக்கு உங்கள் தளம் உபயோகமாயிருக்கும். நீங்களும், உங்கள் நண்பர்கள் மூலமாய், இந்தத் தகவலைப் பரப்பினீர்களானால், நன்றாயிருக்கும்.

நன்றி உங்கள் வருகைக்கும், தகவலுக்கும்.

அவசியம் எம்எஸ்வி தளத்திற்கு வருகை தருவோம்.

said...

True, MSV needs to be honored. Wish this initiative to achieve its success.

- Sampath,USA.

said...

Thanks Sampath,

said...

Dear Nellai Siva,

An announcement has been given in the Official Website of MSV - MSVTimes.com - on this online petition. And an email blast has been circulated to all the MSV Fans across the globe reg this Movement. We are hopeful that this will yield a positive result!

And your article and Mr.Surveysan's article are also posted in the website's forum.

We welcome your inputs and your writings in the Forum of MSVTimes. This invitation is also for everyone who is reading this message.

This is on behalf of every member of MSV Club.

Regards,
Ram
Moderator
MSVTimes.com & MSVClub.

said...

நம்ம நாட்டுல திறமைக்கு என்னைக்கு மதிப்பு கிடைச்சிருக்கு. உங்க பதிவை பார்த்து நானும், பெட்டிஷன்ல கையெழுத்து போட்டுட்டேன்.

said...

அருமை, அன்புத்தோழி.

உங்கள் வாக்குகளையும் உள்ளடக்கி, 295-ஐத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது வாக்கு எண்ணிக்கை.

இலங்கை நேயர்கள் நிறையபேர், MSV ரசிகர்களாய் இருக்கக் கண்டிருக்கின்றேன், அவர்களில் நிறையப் பேர் வலையுலகிலும் இருக்கின்றார்கள், அவர்கள் எல்லோரும் கையொப்பமிட்டால், இன்னும் உயரும். நண்பர்கள், செவிசாய்ப்பார்களா?

said...

Going up, Current count 338!

said...

தங்கள் கடைசிப் பதிவான "ஏன் கண்டிக்கவில்லை? " யின் பாதிப்பில் MSV பற்றிய இப்பதிவைப் படிக்க வந்தேன். தாமதமாக வந்தாலும் தவறாமல் 474-வது ஆளாய் பெட்டிஷனிட்டு வந்தேன். 60 இந்த இலக்கத்தைத் தொட மெனக்கிட்ட அத்தனை பேரும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் அவர் தந்த இசை எனும் இன்ப வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கும் இலட்சக் கணக்கானோரில் இது எந்த மூலைக்கு என்று தெரியவில்லை...
பதிவில் சுட்டிய பல பாடல்கள் காதில் மறுபடி ஒலிக்க ஆரம்பித்து விட்டன. நன்றி சிவா!