Sunday, August 26, 2007

சென்னை டிராபிக் - லைவ் வீடியோ பாக்கறீங்களா?

பொதுவா டிராபிக் பற்றிய செய்திகளை, FM ரேடியோ மூலமா அப்பப்ப சொல்வாங்க, உபயோகமா இருக்கும். இணைய வசதிகளும், hi-speed cable, DSL வசதிகளும் தருகின்ற உற்சாகத்தில், ஒரு படி மேலே போய், அப்படியே டிராபிக்-ஐ நேரிடை ஒளிபரப்புச் செய்கிறார்கள்.

சென்னையின் கத்திப் பாரா சந்திப்பு, கோடம்பாக்கம் சந்திப்பு, திருவான்மியூர், மற்றும் கீழ்பாக்கம் சிக்னல்களை நேரிடை ஒளிபரப்புச் செய்கிறார்கள். வெளிநாடு
வாழ் தமிழர்கள் கத்திப் பாரா மேம்பால வேலைப்பாடுகளைக் பார்க்கவாவது, இந்தக் லைவ் ஒளிபரப்பைப் பாருங்க. (கத்திப்பாரா தொடர்பு கிடைக்க தாமதமாகிறது. மற்ற சிக்னல் தொடர்புகள் உடன் கிடைக்கின்றது. )

http://chennailive.in/chennailive_morevideos.php?cat_id=14491011&Category=Traffic

நல்ல முயற்சிக்கு வாழ்த்துவோம்!

8 Comments:

said...

Very many thanks, Siva. These informations make me feel that I'm not away from my country.
Jagan
Doha, State of Qatar

said...

இது லைவ்வா?
நிழலைப்பார்த்தால் அப்படி தெரியவில்லையே.
இப்போது அங்கு காலை 6.40,ஆனால் நிழலை பார்க்கும் போது 10~11 இருக்கும் போல் உள்ளது.
கத்திப்பாராவுக்கு நிறைய நேரம் ஆகும் போல இருக்கு.

said...

ஆமாம் ஜெகன், ஊரு விட்டு ஊரு போய் வேலை பார்க்கையில, இது மாதிரியான விசயங்கள், நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும், உண்மை.

said...

என்ன குமார், அப்படிச் சொல்லிட்டீங்க, மெட்ராஸ் வெயிலப் பத்தி தெரியாதா உங்களுக்கு? இப்ப ரெண்டு நாளா, வெயில் அதிகம்தான், காலையிலேயே ஆரம்பிச்சுடுது.

said...

ஆஹா.. நம்ம ஊரு..நம்ம ஊரு...
தாங்க்ஸ் சிவா...

said...

உண்மையச் சொல்லட்டுமா? எனக்கு சென்னைக்கே போயிட்டாப்புல இருக்கு. :) ஊரக் காமிச்சதுக்கு நன்றி.

இது நல்ல திட்டம். அப்படியே எங்கக் கோட்டூர்புரம் ரோட்டு டிராபிக்கையும் காட்டுனா நல்லாருக்கும். :)

said...

ஆமாம், கார்த்திக், நம்ம ஊரு ..நல்ல ஊரு.. :)

said...

ஊரு பார்க்க ஆசையா இருக்கா, ராகவ், ஆனா ஊரு வளருகிற வேகத்துக்கு, மத்த வசதிகள், மேம்பாடுகள் உயரக்காணோம். இது குறித்து அடுத்து ஒரு பதிவு ரெடியாகிட்டு இருக்கு.

கோட்டுர்புரம், இன்னமும் நெருக்கடியாக ஆரம்பிக்கலை தலைவா. ஆரம்பிச்சதும், ஒரு லைவ் கவரேஜப் போடச் சொல்லிரலாம். ஓ.கே வா? :)