Saturday, August 25, 2007

யாஹூ புகைப்படச் சேவைக்கு மூடுவிழா

யாஹு(yahoo) வழங்கும் சேவைகளைப் பற்றி அவ்வப்போது சில வதந்திகள் கிளம்புவதுண்டு. 'சாட்' சேவைக்கு கட்டணம் வசூலிக்கப் போவது, மெயில் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக..எனப் பல வதந்திகள். அதுமாதிரிதான் இதுவும் இருக்கும்னு நினைச்சுராதீங்க.

நிஜமாலுமே யாஹு இலவசமாய் வழங்கிய புகைப்படச் சேவையை, செப்டம்பர் 20,2007-உடன் நிறுத்திக் கொள்ளப் போகிறார்கள். இது விசயமாய், உங்கள் யாஹு மின்னஞ்சலுக்குத் தகவல் வந்திருக்கும்.

நீங்கள் சேகரித்து வைத்து இருக்கும் புகைப்படங்களை flickr போன்ற பிற தளங்களுக்கு மாற்ற அவர்களே வழி செய்து தருகிறார்கள்.

மேலதிக தகவல்களுக்கு, கீழேயுள்ள நிரலைச் சொடுக்கவும்.

http://help.yahoo.com/l/us/yahoo/photos/photos3/closing/closing-02.html


நான் மாறிட்டேன், அப்ப நீங்க? :)

8 Comments:

said...

இப்பொவே யாஹூ சாட் சரியாக வேலை செய்வதில்லை, தற்போது எல்லாம் யாஹூ சாட் ரூம்களுக்குள் நுழைய முடிவதில்லை, அதன் சர்வரில் பிரச்சினை என்கிறார்கள்.நீங்கள் முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள், என்னவாயிற்று யாஹூவிற்கு என்று? அதை பற்றி பதிவு போடாலாமா என இருந்தேன்.

said...

Too Late Buddy! We Already Knew This. :)

said...

வவ்வால், நம்ம தோஸ்த் ஒருத்தர் யாஹூ-ல வேலை பண்றார், அவர்கிட்ட உங்க கேள்விய கேட்டிருக்கேன், என்ன பதில் கிடைக்குதுன்னு பார்க்கலாம்.

Flickr,

What to do, to many late comers to the class, may be for them this will help.. :))

said...

ஆமாங்க சிவா எனக்கும் மெயிலில் மெஸேஜ் வரும் வரை இது வதந்தியோன்னு தான் நினைத்தேன்..
வேற வழி உடனே பிளிக்கருக்கு மாத்திக்கவான்னதும் சரின்னு க்ளிக் செய்தாச்சு.. :(

said...

i checked my sify mail ,i recvd the message ...let me act soon.thank u for your timely arivippu.

said...

என்ன நெல்லையாரே,

ரொம்ப நாளா ஆளக் காணும்?

ஃபிளிக்கர் அமக்களமா இருக்கு.

said...

நன்றி நெல்லை சிவா,

யாஹூ சாட்டில் வழக்கமாக நடைபெறுவதை சொல்கிறேன், ஒரு சாட் ரூமில் ஒரே நேரத்தில் 50 பேர் தான் சேர முடியும். சில ஹேக்கர் சைட்களில் தனியாக இதற்கென புரோக்கிராம்கள் இருக்கிறது அதனைக்கொண்டு ஒருவரே 50 யாஹூ ஐ.டி கள் போலியாக உருவாக்கி ஒரு ரூமில் நுழைய முடியும் அதன் மூலம் அந்த சாட் ரூமில் அடுத்தவர் நுழைவதை தடுக்கலாம், இது ஏதோ ஒரு சில சாட் ரூம்களில் முன்னர் நடந்தது தற்போது எந்த யாஹூ சாட் ரூம் போனாலும் 50 நபர்கள் இருப்பதாகவும் , ரூம் புல் எனவும் காட்டுகிறது யாரோ ஒரு ஹேக்கர் தான் இப்படி செய்கிரார் என நினைக்கிறேன்!(இதனை செய்வது ஒரு குறிப்பிட்ட நாட்டவர் என்பதையும் நான் அறிவேன்)

இதனை யாஹூ தடுக்க முடியும் ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் கடந்த 15 நாட்களாக யஹூ சாட் செயல் இழந்து இருக்கிறது

said...

இப்போதான், கொஞ்சம் செயல்படுத்த வேண்டிய வேலையெல்லாம், ஒரு மாதிரி செட்டில் பண்ணி, கொஞ்சம் ரிலாக்ஸாக ஆரம்பிச்சிருக்கேன்.., இனி நெல்லையாரின் தொல்லை ஆரம்பமாக வேண்டியதுதான், சர்வேசா!