Saturday, June 16, 2007

சிவாஜி - The BOSS

ஷங்கரின் படம் என்றாலேயே அழுத்தமாய் ஏதாவது ஒரு சோஷியல் மெஸேஜ்-ஐ தொட்டுச் செல்லும் படமாக இருக்கும். ஆரவாரத்துடன் ரிலீஸாகி இருக்கும் 'சிவாஜி'யும் அதற்கு விதிவிலக்கில்லாமல், 'கறுப்புப் பணப் பிரச்னையைத் தொட்டுச் செல்கிறது. ஆனால், வழக்கமான 'ஷங்கர்' டச் மிஸ்ஸிங்.


அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, சமூகநல எண்ணத்தோடு இலவசக் கல்லூரி,மருத்துவமனை துவக்க எண்ணுகிற ரஜினிக்கு, கல்வி வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கும் 'சுமன்' மூலமாய் தடைகள் வர, ஒரு ரூபாயுடன் வீதிக்கு வந்துவிடுகிறார். தடைகளைத் தகர்த்து, எப்படி நினைத்ததை முடிக்கிறார் என்ற சுஜாதாவின் நூலிழைக் கதையில், ஷ்ரேயாவுடன் காதலையும், ஷங்கரின் பிரம்மாண்டத்தையும் இணைத்து 'ரஜினி ஃபார்முலாவில் படம் பண்ணியிருக்கிறார்கள்.


வழக்கமாய் ஷங்கரின் படத்தின் முக்கிய கரு, கதையின் போக்கில் மெல்ல மெல்ல புரிய வரும். ஆனால், இதில் கதையின் கரு ஆரம்பத்திலேயே ரஜினியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிடிபட்டுப் போய்விடுவதால், படத்தின் சுவாரஸ்யம் குறைந்து போய்விடுகிறது. ஒத்த ரூபாயில், எப்படி முன்னேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும், ஒரு 'அனானி' மிரட்டல் போன்காலில் அனைத்து கறுப்புப் பண ஆவணங்களையும் கைப்பற்றுகிற அரதப் பழசான டெக்னிக் அந்த எதிர்பார்ப்பை பிசுபிசுக்க வைத்துவிடுகிறது.


சுமன் தான் பிரதான வில்லன். ஆனால், காட்சியமைப்புகள் அவரை மிகப் பெரிய வில்லனாக தோன்றச் செய்யாதது பெரிய மைனஸ். கறுப்பு பணம் வைத்திருந்தது தவிர வேறு ஏதும் கொடுரம் நிறைந்தவராக காட்டப்படாத வில்லனை, ஹீரோ கொலை செய்வது என்பதும் ஒட்டவில்லை.


பொதுவாக ரஜினி படங்களில், ரஜினி ஹீரோயின் பின்னாடி போக மாட்டார், அது இந்த படத்தில் மாறியிருக்கிறது. ரஜினியின் காதலை மறுக்கும் ஷ்ரேயாவுக்காக, விவேக்குடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகள் சுவாரஸ்யம் என்றாலும், சற்று அலுப்பு தட்டுவது என்னவோ உண்மை. குடும்ப்பப் பாங்காய் தமிழ் பண்பாட்டுடன் கூடிய பெண்தான் வேண்டும் என்கிற ஹீரோவுக்கு, 'தமிழ்ச்செல்வி' என்ற பெயருடன் ஷ்ரேயா. பாடல் காட்சிகளில் என்னவோ 'ஆங்கிலச் செல்வி'யாய் காட்சி அளிக்கிறார்.


ரஜினி அனுபவித்து நடித்திருக்கிறார். இடைவேளைக்குப் பிறகுதான் ரஜினியின் துள்ளல். காசை சுண்டும் ஸ்டைலும், எம்.ஜி.யாராக வரும் ஸ்டைலும் ரசிக்கும்படி இருக்கிறது. பாடல் காட்சிகள் மிகப் பிரமாதம். கே.வி ஆனந்தின் துல்லியமான ஒலிப்பதிவும், ரஹ்மானின் இசையும் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ். சஹாரா பாடலும், காட்சியமைப்பும், ஷ்ரேயாவின் நடனமும் அருமை. 'பல்லேலக்கா' பாடலும் சூப்பர். திரைக்கதையின் ஏமாற்றத்தை, ஈடு செய்வது பாடலும், பாடலின் காட்சியமைப்பும்தான்.


ரஜினி-ஷங்கர்-சுஜாதா-ரஹ்மான் கூட்டணியும், படத்திற்கு கொடுக்கப்பட்ட விளம்பரமும் கொடுத்த எதிர்பார்ப்பினை, படம் பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சட்டுன்னு சொல்லனும்னா, 'நத்திங் ஸ்பெஷல்'.

9 Comments:

said...

athukkulla paththachcha.. good review..

I can wait for DVD then?

- Sree

said...

மெய்யாலுமே 'சப்புனு' இருந்துதா?

3 மணிநேரம் போனதே தெரியலன்னு, ஆஹா ஓஹோன்னு எல்லாம் ஏழுதியிருக்காங்களே சார்?

நல்லாதாங்க இருந்திருக்கும். இன்னுமொரு பார்த்துவிட்டுச் சொல்லவும் :)

said...

Nice review. Your opinions are well made.

said...

நன்றி ஸ்ரீ, ஸ்ரீகாந்த்.

சர்வேசா,

படம் ஓகே ரகம்னுதான் படுது. நீங்க பாத்துட்டுச் சொல்லுங்க, ஷங்கர் பஞ்ச் கம்மிதான்,

said...

cinesouth.com review also in line with your view, Good and unbiased..

said...

நெல்லை சிவா,

// கறுப்பு பணம் வைத்திருந்தது தவிர வேறு ஏதும் கொடுரம் நிறைந்தவராக காட்டப்படாத வில்லனை, ஹீரோ கொலை செய்வது என்பதும் ஒட்டவில்லை. //

யோசிக்க வேண்டிய விசயம்தான்! அதனாலதான் ஆக்சிடெண்டலா மாணவன் மிதிச்சு செத்தமாதிரி காமிச்சிருக்காங்களோ என்னவோ?! :)

said...

சினிசவுத் ரிவ்யூ படிச்சேன்..எல்லோருடைய எதிர்பார்ப்பும் அதிகம்..ம்ம்..ஆனாலும், ரஜினி என்ற மாஸுக்கு ஓடிடும்,கவிதா.

said...

நீங்க சொல்றமாதிரி இருக்கலாம், இளவஞ்சி, ஷங்கரின் பிரம்மாண்டத்திற்கு, பணமழை சண்டைக்காட்சி அழகாயிருந்தது...

said...

super star MAAPPU vachittaayaa AAPPU.saman seithu theerppai solliyirukkirathu ungal vimarisanath tharaasu.anony1