Wednesday, April 25, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - ஒரு புதிய தொடக்கம்

ஒவ்வொரு முறையும் வலைப்பதிவர் சந்திப்பு குறித்த அறிவிப்பு வரும்போது ஆர்வமாயிருக்கும். புதியதாய் ஏதாவது ஒரு நற்பலன் அந்தக் கூட்டத்தின் பயனாய் விளையும் என்ற நம்பிக்கையும் இருக்கும். ஆனால், கூட்டம் முடிந்த பின், அதைத் தொடர்ந்து வரும் பதிவர் கூட்டம் சார்ந்த பதிவுகளை படிக்க நேரும் போது, ஒரு வித ஏமாற்றமே எதிரொலிக்கும்.

இது குறித்து நண்பர் ரவிசங்கர் ஏற்கனவே, 'வலைப்பதிவர் சந்திப்பால் என்ன பயன்?" என்ற கேள்விக்கணையோடு ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் நானிட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதி கீழே:

//நானும் கூட உங்கள் சிந்தனையோடு ஒத்துப் போகிறேன்,புதுசா கல்லூரி திறந்து ஓரிரு வாரங்கள் ஜாலியாகப் போவதில்லையா, அதுமாதிரிதான் இதுவும் என நினைக்கிறேன்.ஆரம்பகால சந்திப்புகள், இப்படித்தான் போகும், போகப்போக ஆக்கமாய் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. //

இம்முறை வெளிவந்த/வந்துகொண்டிருக்கின்ற வலைப்பதிவர் சந்திப்பு குறித்த பதிவுகளைப் படிக்கும் போது, எனது நம்பிக்கைகள் காக்கப் பட்டிருக்கின்ற சந்தோஷம் கிட்டுகிறது.

'பொன்ஸ்' அவர்களின் பதிவும், லக்கிலுக்-கின் பதிவும் படிக்க, நேர்முக வர்ணணை போலிருக்கின்றது.

படித்த வரையில், எனக்குப் பிடித்த சில பகுதிகளை 'ஹைலைட்' பண்ணி, மீட்டிங்க் அட்டெண்ட் பண்ணாத குறையை தீர்த்துக்கிறேன்


"வலைபதிவுகளை எழுதுபவர்களே படிப்பவர்கள் என்ற நிலையை மாற்றி நம்மைத் தவிர்த்த சமுகமும் வலைபதிவுகளைப் படிக்கத் தொடங்கும் பொழுது தான் இவற்றிற்கு ஒரு பயன் இருக்கும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக கோவையில் நடத்தப் போகும் ப்ளாக் கேம்ப் வழிவகுக்கும்" - செல்லா

மாணவர்களை வலைபதிவுக்கு அழைத்து வரவேண்டும், அழைத்து வரும் பணிகளில் ஏற்கனவே சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள் - பாலபாரதி

"சிறுவர்கள் படிக்கும் அளவுக்கு முதலில் வலைபதிவுகளை ஆரோக்கியமாக்குவோம், அதன்பின் அவர்களை அழைத்துவருவது நல்லது"
- ஓகைரசித்த நகைச்சுவை:

//"எனக்கு Writing-ஐவிட Visualதான் ஸார் அதிகம் பிடிச்சது.." என்றார் ஓசை செல்லா. இதற்கும் ஒரு ஏவுகணையை உடனே வீசினார் மா.சி. "அப்புறம் எதுக்கு ஸார் இங்க வந்தீங்க.. விஷ¥வல்தான் முக்கியம்னா நீங்க இங்க வந்திருக்கவே கூடாது. இங்க இருக்குறவங்க writers.." என்று ஆணித்தரமாக தன் வாதத்தை எடுத்து வைத்தார் மா.சி. "பெண் பதிவர்களும் நிறைய பேர் உங்க தளத்துக்குள்ள வர்றாங்க.. நீங்க இப்படி பண்ணா யார் பின்னூட்டம் போடுவாங்க..?" என்று மா.சி. 'உடன்பிறப்பாகவே' மாறி உணர்ச்சி பொங்க.. உள்ளன்போடு கண்டிப்பான குரலில் கேட்க.. இதை ஆமோதிப்பதைப் போல் சகோதரி பொன்ஸ், ஓசை செல்லாவை நிமிர்ந்து பார்க்காமலேயே 'ஆமாம்' என்று தலையாட்ட.. செல்லா அமைதியானார்//


'குங்குமம்' கவரேஜ், 'மக்கள் டிவி கவரேஜ்' என வலையுலகை வெளியுலகிற்கு பிரபலப் படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளும் பாராட்டுக்குரியது.

அடுத்த கட்ட நம்பிக்கைக்கு 'வலைஞர் கூட்டத்தை' முன்னேற்றிய பாலபாரதிக்கும், தெளிவாய் நிகழ்வை படம் பிடித்துக்காட்டிய சகோதரி பொன்ஸுக்கும் Special Thanks!

14 Comments:

said...

நாங்க கூட டெல்லியில மீட்டிங்க் நடத்தியிருக்கிறோம் :)

சென்ஷி

said...

சென்ஷி ஏம்ப்பா இப்படியெல்லாம்?/

:)

said...

//முத்துலெட்சுமி said...
சென்ஷி ஏம்ப்பா இப்படியெல்லாம்?/

:)//

இல்லைக்கா.. நாமளும் தேசிய அளவில ஒரு சந்திப்ப நடத்திட்டு அதுல எடுத்த தீர்மானத்த மாநிலங்களுக்கு தெரியப்படுத்தலன்னா எப்டி.. அதான் :)

சென்ஷி

said...

நன்றி சிவா. நான் இன்னும் முழுதாகப் படிக்கவில்லை. கூட்டத்தைப் பற்றி மீண்டுமொரு முறை படிக்க நீங்க நியூஸ் கொடுத்துட்டீங்க:-)

said...

// சென்ஷி said...

நாங்க கூட டெல்லியில மீட்டிங்க் நடத்தியிருக்கிறோம் :)

சென்ஷி //

:))))))))))))

said...

// முத்துலெட்சுமி said...

சென்ஷி ஏம்ப்பா இப்படியெல்லாம்?/

:) //

:))))))))))))
:)))))))))))))))))))

said...

அந்த தில்லி சந்திப்பு எப்படிப் போச்சு ;)

said...

என்னாங்க சென்ஷி,

லெட்சுமி மேடம் சொல்றத பார்த்தா, சந்திப்பு நடந்ததா, இல்லையான்னு கேள்விக்குறியா தோணுதே!

பாஸ்டன் பாலாவும் கேள்வி கேட்டிருக்காரு.

நடந்துச்சுன்னா, ஒரு 'மினிட்ஸ் ஆப் த மீட்டிங்' மேட்டரு ஒன்ன பதிவு பண்ணுங்களேன்!

said...

ஆமாங்க வல்லி மேடம்,

இந்த முறை மீட்டிங்க் கொஞ்சம் நம்பிக்கையா தெரியுது.

said...

எங்கே பாலா, வலைப்பதிவர் கூட்டம் பற்றிய உங்களோட பதிவு,

நேர்ல ரொம்ப அழகா இருக்கிறதா பதிவு சொல்லுதே! படத்தோட சேதி சொல்லுங்களேன்!

said...

hello என்ன நெல்லை சிவா இப்படி கேட்டுட்டீங்க..நாங்க தான் பதிவு போட்டுருக்கோமே...படிக்கல போல நீங்க...

சென்ஷி சொல்லறத்கு முன்னால பாஸ்டன் பாலா கூட படிக்கல போல .சென்ஷீ உண்மை தான் நாமளே சொன்னாக்கூட மாநிலங்களுக்கு தெரியல பாருங்க.

http://sirumuyarchi.blogspot.com/2007/04/blog-post_21.html தில்லியில் ஒரு சந்திப்பு என்கிற என்னுடைய பதிவு.
http://senshe-kathalan.blogspot.com/2007/04/1.html தேசிய சந்திப்பு என்கிற சென்ஷியின் ரிப்போர்ட்.

படிங்க இப்பவாச்சும் .

said...

படிச்சுட்டு பின்னூட்டம் கூட போட்டுட்டேன், லட்சுமி மேடம். நல்லாயிருந்தது!

said...

//நெல்லை சிவா said...

எங்கே பாலா, வலைப்பதிவர் கூட்டம் பற்றிய உங்களோட பதிவு,//


போடனும் சிவா.. அதுக்குள்ள அடுந்த பட்டறைக்கான வேலைகள் தலையில் வந்து உட்கார்ந்திருக்கு.

:(

முயல்கிறேன்.(எஸ்கேப் தான் :) )// நேர்ல ரொம்ப அழகா இருக்கிறதா பதிவு சொல்லுதே! படத்தோட சேதி சொல்லுங்களேன்!//

இதுல ஏதும் பாகச வேலை இல்லையே! :(

பயமா இருக்குதுப்பா.. யார் எது சொன்னாலும்.. :)

said...

பாகச வேலையெல்லாம் இல்லீங்க தல, வெகுளியா பார்க்கிற உங்க பார்வையே அழகுதானுங்க :))