Saturday, April 07, 2007

சீறி வரும் சிவாஜி

மே மாதம் அக்னி நட்சத்திர வெயிலில் சும்மாவே அனல் பறக்கும், இந்த அனலோடு, தணல் பறக்க மே 17-ல் வெளிவர இருக்கிறது சூப்பர் ஸ்டாரின் சிவாஜி. சும்மாவே ரஜினி படமென்றால், ஆளாளுக்கு ஒரு 'ஹைப்' கிரியேட் பண்ணுவாங்க, அத்தோடு இது 'பிரம்மாண்டம்' புகழ் ஷங்கரின் இயக்கம் வேறு, ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்குக் கேட்கவா வேணும்?

Image and video hosting by TinyPic 'பாய்ஸில்' கோட்டை விட்ட ஷங்கர், 'அன்னியனில்' எழுந்து நின்றார். அந்த வெற்றியில், உற்சாகமாய் உழைத்திருப்பது வெளிவந்திருக்கும் 'சிவாஜி' புகைப்படங்களைப் பார்க்கையில் தெரிகிறது.

ரஜினிக்கும் அதே போல்தான், 'பாபா'வின் அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு, சந்திரமுகியின் வெற்றி, தொடர்ந்து நடிக்க ஆசையைத் தூண்டியிருக்க வேண்டும். சிவாஜி பிலிம்சின் சந்திரமுகி வெற்றிக்கு நன்றியாய், இந்த படத்திற்கு 'சிவாஜி' என்றே பெயர் வைத்து விட்டாரோ?

ஹாரிஸை விட்டுவிட்டு மீண்டும் ரஹ்மானை நாடியிருக்கிறார் ஷங்கர், தயாரிப்பு 'ஏவிஎம்' என்பதாலும் இருக்கலாம். பொதுவாக ரஹ்மான் பாடல்கள், கேட்ட முதல் நாளே இனிப்பதில்லை, 'சிவாஜி'யின் இசை கொஞ்சம் விதிவிலக்கு. சஹாரா டூயட்டும், பல்லேலக்காவும் கேட்ட மாத்திரத்திலேயே பிடித்துப் போனது. பல்லேலக்கா பாடல் கொஞ்சம் சந்திரமுகி 'தேவுடா' பாடலை நினைவுபடுத்திகிறது. எஸ்பிபியும், அதே ஸ்டைலில் பாடியிருப்பதால் அப்படித் தோன்றலாமோ?

ஏவிஎம்-ஷங்கர்--ரஜினி-ரஹ்மான் எனப் பிரம்மாண்டங்கள் இணைந்திருப்பதில் எதிர்பார்ப்புகள் கூடியிருக்கும் அதே வேளையில், எதிர்ப்புகளும் சம அளவு விளம்பரம் பெறுகின்றன. அது சரி, காய்ச்ச மரத்தில்தானே கல்லடி படும்!

அதிக பொருட்செலவில் தயாராவதால், சீக்கிரமே போட்ட முதலை எடுக்க, டிக்கெட் விலையை, திரையிட்ட சில நாட்களுக்கு அதிகமாக விற்க முயற்சிக்கின்றனர் விநியோகஸ்தர்கள், அப்படி விற்றால் 'போராடுவேன்' என்று வீர முழக்கமிடுகிறார் விஜய.டி.ராஜேந்தர்.

Image and video hosting by TinyPic இன்னொரு பக்கம், காவிரி பிரச்னையை வைத்து ரஜினியின் சார்புநிலையை விமர்சித்து 'தமிழினத் துரோகி' பட்டம் கட்டுகிறது ஒரு கூட்டம். கன்னடத்தில், ''சிவாஜியை'த் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பொன்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றது.

சிவாஜியின் திரைப்பாடல்கள், காட்சிகள் முறையாக வெளிவரும் முன்பே, இணையம், சிடி என அங்கங்கே கசிந்து கொண்டிருக்கின்றது.

சந்திரமுகியின் வெற்றிக்குப் பிறகு வருவதால், 'சிவாஜி'யின் வெற்றி பெரிதாக எதிர்பார்க்கப் படுகிறது. வெளிவந்திருக்கின்ற ஸ்டில்ஸ்கள், ரஜினியின் பொலிவையும், ஸ்டைலையும் காட்டுகிறது. பாடல்களும் அவ்விதமே, கதைக்களமோ, கருவோ தென்படவில்லை. பொதுவாக, ஷங்கரின் படத்தின் கருவில், ஏதாவது ஒரு அழுத்தமான 'மெஸேஜ்' இருக்கும். இந்தப் படத்தில் அது என்னவாய் இருக்கும் என்பது சஸ்பென்சாகவே வைக்கப்பட்டிருக்கின்றது.

Image and video hosting by TinyPic
ரஜினியைப் பொறுத்த வரையில் வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டாலும், ஷங்கரைப் பொறுத்த வரையில் இன்னொரு ஜெண்டில்மேனாக, 'இந்தியனா'க, 'முதல்வனா'க, தமிழ்த் திரையுலகிற்கு ஒரு முன் மாதிரியாக இருக்குமா என்பது, ஸ்டில்ஸ்களைப் பார்க்கும் போது, நம்பிக்கையாய்த் தெரியவில்லை.

எதுவாயினும், தமிழ்த்திரை ரசிகர்கள், 'மே - மாதத்தில் ஒரு தீபாவளி' காணத்தயாராகிவிட்டார்கள். ஏப்ரல்-14 ரீலிஸிலிருந்து, மே-17 -க்குத் தள்ளிப் போட்டிருக்கின்றார்கள். ஒரு வெற்றி ஒத்திப் போடப்பட்டிருக்கின்றது என்று சொல்லலாமா? பொறுத்திருப்போம்.

15 Comments:

said...

நன்றி சிவா.
நல்லாப் போகணும் இந்தப் படம்.
வேற யாருக்காகவும் இல்லை. ரஜினி படம் பார்த்தா சந்தோஷமாகப் பொழுது போகும்னு நினைக்கிற எங்களுக்காகத் தான்.:-)

said...

கவலையே படாதீங்க வல்லியம்மா, கண்டிப்பா நல்லா போகும்னுதான் பேசிக்கிறாங்க..

said...

Where did you get the last picture? Rajini with Vikram,ajith..etc?

said...

பாபா கூட எடுக்கப்பட்ட விதத்தாலேயே தோற்றதே தவிர, அதுவும் ஒரு சிறந்த படமே!

சிவாஜி கண்டிப்பாக வெற்றி பெறும்!
மற்றபடி, வல்லியம்மாவின் விருப்பமே என்னுடையதும்!
:))

said...

என்ன கவிதா, ரொம்ப நாளா காணேம், எல்லாம் இணையத்தில சுட்டதுதான்..

said...

// தமிழ்த் திரையுலகிற்கு ஒரு முன் மாதிரியாக இருக்குமா என்பது, ஸ்டில்ஸ்களைப் பார்க்கும் போது, நம்பிக்கையாய்த் தெரியவில்லை//

ஸ்டில்ஸ் ப்ரமாதமா வந்திருக்கேங்க.
வெறும் மசாலா படமா இருக்குங்கறீங்களா? தத்துவம் எதுவும் சொல்லாம?
தத்துவம் சொன்னா மட்டும் கேட்டு திருந்த போறோமா என்ன? :)

said...

வாங்க சர்வேசன்,

இந்தியன்-ல ஊழல் எதிர்ப்பு, அந்நியன்-ல தனிமனித ஒழுக்கம்,
ஜெண்டில்மேன்-ல 'இடஒதுக்கீடு',
முதல்வன்-ல அரசு மீது மக்களின் எதிர்பார்ப்பு என ஏதாவது ஒரு பிரச்னையை முன்னிறுத்தியிருப்பார்,

அந்தக் கதைகளின் தாக்கம், பின்வரும் தமிழ்ப்படங்களில் தொடர்ந்தது,

வெளியாகியிருக்கின்ற ஸ்டில்ஸ்கள் இம்மாதிரியான காட்சிகளுக்கு, எந்த முன்னுதாரணங்களும் இல்லையென்பதால்தான் அப்படி குறிப்பிட்டிருக்கிறேன்.

மற்றபடி, ஷங்கரின் டெக்னிகாலிட்டி உலகறிந்த விசயம். அந்த எதிர்பார்ப்பை அவர் ஈடுகட்டுவார்.

said...

படங்க எல்லாம் சூப்பர்.

மார்கெடிங் ஸ்டில்ஸ வெச்சு சங்கர் பட்த்துல வர மெசேஜ கண்டுபுடிக்க முடியும்னு எனக்கு தோனல...
சிவாஜில வர சில ஸ்டில்ஸ் (Ex:வெள்ள தலமுடி) அந்நியன போல இருப்பதா தான் எனக்கு தோனுது...

~மாறன்

said...

படம் வெளிவரும் வேளையில் எந்த சலசலப்பும(காவேரி நீர் பிரச்சனைதான்)வேண்டாமென்று கமுக்கமாக இருக்கும் ஒரு கன்னடநடிகரை இவ்வளவு தூக்கி வைக்கவேண்டுமா? கலைக்கு மொழிவேறுபாடு தமிழனுக்கு இல்லை.
ஆனால் கன்னடத்தில் நடிகர்கள் கொடிபிடிக்கிறார்களே! தமிழன் என்ன
இ-வாயனா?

said...

தமிழன் இ.வாயன்னு சட்டுன்னு சொல்ல முடியலை, ஆனா, வெகுளி. வேடிக்கை பாத்துட்டு போய்கிட்டே இருப்பான்.

said...

எதார்த்தமான கதையம்சங்களைக் கொண்ட படங்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கும் இன்றைய தமிழ் சூழலில் “சிவாஜி” படத்தின் தாக்கம் எதிர் மறையாகவே இருக்கக்கூடும்.

said...

அட என்ன சிவா நீங்க, எல்லோரும் சிவாஜி படம் தோக்கனும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க, நீங்க வெற்றிக்கு அடிபோடுறீங்க..

ம்..பாப்போம்..உங்க தீர்ப்பு எப்படின்னு..

said...

//மார்கெடிங் ஸ்டில்ஸ வெச்சு சங்கர் பட்த்துல வர மெசேஜ கண்டுபுடிக்க முடியும்னு எனக்கு தோனல...//

எல்லாம் ஒரு யூகம்தான் மாறன். இந்த ஸ்டில்ஸ்-ல ஒரு சீரியஸ் படம் வரும்னு தோணலை எனக்கு!

said...

//எதார்த்தமான கதையம்சங்களைக் கொண்ட படங்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கும் இன்றைய தமிழ் சூழலில் “சிவாஜி” படத்தின் தாக்கம் எதிர் மறையாகவே இருக்கக்கூடும்//

அனானி,

நீங்க சொல்றது சரின்னு படல. இப்ப வந்து வெற்றிகரமா ஓடின/ஓடிக்கொண்டிருக்கின்ற விஜய்,அஜீத் படங்கள் எல்லாம் எதார்த்தமான படங்களா? அவை பாதிப்பைத் தராதா?

ரஜினி என்பதால் பார்வையின் கோணம் மாறுகின்றதா?

said...

ஷங்கரின் பேட்டி சன் டிவியில் பார்த்தேன். இந்தப் படத்தோட மெஸேஜ் 'நல்லது செய்ய நினைக்கிறவ்ங்களுக்கு, எவ்வளவு கெடுதல் நடக்குது'ங்குறத சொல்லியிருக்கிறதோட, 'இந்தியப் பொருளாதாரம் மேலும் முன்னேற' ஒரு விழிப்புணர்வுச் செய்தி சொல்லியிருப்பதாக பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

பார்க்கலாம், எப்படியிருக்குன்னு!