Tuesday, April 03, 2007

'ஒரு மாதிரி' எல்லாம் ஒரு மாதிரியா???!!!!

கடந்த சில வாரங்களா தமிழ்ப்பதிவுலகம் 'ஒரு மாதிரி' வியர்டு பதிவுகளா பதிப்பிக்க ஆரம்பிச்சு, இப்பதான் கொஞ்சம் குறையறா மாதிரி இருக்கு. நம்மளயும் வியர்டு பதிவுக்கு அழைத்திருந்தார், சர்வே புகழ் சர்வேசர். கொஞ்சம் வேலை அதிகமிருந்ததால், பதிவிட நேரமில்லாது போனது.

இரண்டு நாளைக்கு முன்னர்தான், 'Happy Feet' DVD ரீலிசாக, அதைப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான், இந்த வியர்டுக்கான அழைப்பு நினைவுக்கு வந்தது. 'Happy Feet'-ன் பெங்குயினுக்கு, கால் வியர்டாக இருக்க, அது பெங்குயின் கூட்டத்திடமிருந்து ஒரு வகையில் தனிமைப் படுத்தப் படுகிறது. அந்த வியர்டு காலை வைத்து, அது தன் இனம் காக்க எப்படி மெஸேஜ் சொல்லுதுன்னு அழகா படம் புடிச்சிருந்தாங்க.

இது மாதிரியே ஆபிரகாம் லிங்கனின் சிறுவயதுப் பருவம் பற்றி உலவும் கதைகளில் ஒன்றில் அவர், பலூன் வியாபாரியிடம் 'கருப்பு வண்ண' பலூனில் காற்றடைத்தால், பறக்குமா என்று கேட்பார், அதற்கு பலூன் வியாபாரி 'பலூனுக்கு வெளியே உள்ள நிறத்தில் ஒன்றுமில்லை, உள்ளே இருக்கும் காற்றுதான் மேலே பறக்க காரணம் என்பார். இந்தச் சம்பவம், அவர் மனதில் ஓரு ஆழ்ந்த சிந்தனையையும், நம்பிக்கையையும் தோற்றுவித்ததாகக் கூறுவார்கள்.

இதுமாதிரியான வித்தியாசமான சிந்தனைகள், வேறுபடுத்திக் காட்டுவதோடு, வாழ்வின் உயரேயும் கொண்டு செல்கின்றது. இப்படியான சிந்தனைகள் எல்லாம் நமக்கும் வந்தா நல்லாதான் இருக்கும். ஆனா நமக்கு வர்ரதெல்லாம், கிறுக்குச் சிந்தனையா இருக்கே, என்ன பண்ண? :)

எங்க வீட்டுல தங்கஅரளிப் பூமரம் உண்டு. கார்த்திகை, மார்கழி மாதங்களில், மரம் நிறைய பூ பூத்திருக்கும். பச்சை நிற இலைகளினூடே, மஞ்சள் நிறப் பூக்கள், பார்க்க ரம்மியமாய் இருக்கும். இதைப் பார்த்து ரசிப்பதற்காகவே, நண்பன் வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று, அங்கிருந்து பார்ப்போம். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அக்கா கிட்டேயிருந்து ரெக்வெஸ்ட் வரும், 'டேய்..தம்பி.. சாமிக்குக் கொஞ்சம் பூப் பறிச்சுக் கொடுடா' ன்னு கேப்பாங்க. 'பூ மரத்திலே இருந்தாதான் கொத்துக் கொத்தா பார்க்க அழகாயிருக்கு, சாமிக்கு வச்சா இரண்டுமணி நேரத்திலேயே வாடிடும்'னு சொல்லி மாட்டேன்னிடுவேன். சின்னவயசுல பண்ணினது, இப்ப நினைச்சா பறிச்சுக் கொடுத்திருக்கலாமோன்னு இருக்கும். இப்பவும், பூக்களைப் பறிக்காம ரசிக்கிறதுதான் புடிக்குது. ஆனா, ரங்கமணி வந்து வூட்டுல வளர்க்கிற ரோஜாவ பறிச்சுட்டுப் போனா, செடியில இருக்கிறத விட உன் தலையில இருக்கிறதுதான் அழகுன்னு சொல்லோணும்...ம்ம்..

அப்புறம் டிரெஸ் விசயத்திலேயும் கொஞ்சம் கிறுக்கு உண்டு. கலர் கலரா போடப் பிடிக்கும். அதுல கிறுக்கு என்னன்னா, நானா பார்த்து செலக்ட் பண்ணின டிரெஸ்-ஆ இருந்தாதான் அடிக்கடி போடப்பிடிக்கும். இல்லைன்னா, கொடுத்த அந்தச் சமயத்துக்கு போடுவேன், அப்புறம் கொடுத்தவங்க ஞாபகப் படுத்தறப்போதான் அந்த டிரெஸ் ஞாபகத்திற்கு வரும்.

சர்வேசன் தயிர்சாதத்திற்கு, ரசம் ஊற்றி சாப்பிடறதப் பற்றிச் சொல்லியிருந்தாரு, எனக்கும் அந்த டேஸ்ட் உண்டு, ஆனா அதவிட, தயிர் சாதத்திற்கு Fish Fry வச்சு சாப்பிட ரொம்பப் பிடிக்கும். வேலை நிமித்தமா, கல்கத்தாவில் ஆறேழு மாதங்கள் தங்கினப்போ, என்னோட ஃபேவரிட் உணவு தயிர்சாதம்-பச்சை மிளகாய்-Fish Fry. தயிரோட, Fish Fry சேர்த்தா ஜீரணமாறது கஷ்டம்னு சொல்வானுங்க பிரண்ட்ஸுங்க, 'கல்லையும் செறிக்கிற வயசு, போடான்னிடுவேன்.'

படிக்கிறப்ப, பரீட்சை செண்டிமெண்ட் ரொம்பவே உண்டு. காலைல எழுந்திருக்கிறப்ப அம்மாதான் எழுப்பனும், சின்னக்காதான் காலை உணவு தட்டுல எடுத்து வைக்கணும், கடைசிப் பரீட்சை முடிஞ்ச அன்னிக்கு கண்டிப்பாய் ஏதாவது சினிமா பார்க்கணும்..இதெல்லாம் நடந்தாதான் ஸ்கோர் நல்லாருக்கும்னு ஒரு கிறுக்கு. இதே கிறுக்கு, பின்னாடி இந்தியா கிரிக்கெட் ஆடறப்போ இருந்துச்சு. இப்ப இல்லைங்க.

எங்காவது டூர் போயிட்டு வந்தா, அந்தந்த ஊர்களிலே, சில பொருட்கள் வீட்ல உள்ளவங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கும், வாங்கணும்னு தோணும், ஆனா வாங்கிட்டு வந்து, விலை அதிகமா இருந்துச்சுன்னா, 'உன்ன ஏமாத்திட்டாண்டா'ன்னு சொல்லுவாங்களோன்னுட்டு இருக்கும். அதுனால, சிம்பிளா ஏதாவது வாங்கிக் கொடுத்துட்டு, 'அதப் பாத்தேன்..நல்லா இருந்துது..இதப் பாத்தேன் நல்லா இருந்துது..வாங்கிட்டு வந்தா திட்டுவியோன்னுட்டு வாங்கல'ன்னு சொல்லி, அதுக்கு திட்டு வாங்குவேன். கிப்ட் கொடுக்கிறதும் ஒரு வகையான ஆர்ட், அந்த ஆர்ட் நம்மகிட்ட தயக்கமான ஒன்னு.

அமெரிக்காவுல நிறைய 'வியர்டு'ங்க உண்டு. 'Sony Playstation 3' - வீடியோ விளையாட்டுச் சாதனம் விற்பனைக்கு வந்த புதிதில், நடுங்கும் குளிரில் முந்தைய நாள் நள்ளிரவே கூடாரம் அடித்து, காத்துக் கிடந்து முதல் ஆளாய்ப் போய், US$750 கொடுத்து ப்ளே ஸ்டேசனை வாங்கி, வெளியே வந்து, காத்துக் கிடக்கிற மற்ற எல்லோர்கிட்டேயும் அதக் காட்டி உபயோகிக்காமலேயே போட்டு உடைக்கிற பப்ளிசிட்டி கிறுக்குகளும் உண்டு. அந்தமாதிரி இல்லாம, நவீனமா வருகிற காட்ஜெட்டுகளை வாங்கி உபயோகிக்கிற மோகம் உண்டு.

இன்னும் நிறைய கிறுக்குகள் உண்டு, எல்லாத்தையும் சொல்லி மாட்டிக்க வேணாம்னு இத்தோடு நிறுத்திக்கலாம். இப்ப என் முறைக்கு, நானும் ஒரு ஐந்து பேரோட குணத்த காட்டச் சொல்ல வேணாமா?

1. வினையூக்கி
2.காட்டாறு
3.மாறன்
4.இட்லிவடை
5.நானானி

இவங்க எல்லாம் இதுவரை 'Weird'-ஆ எழுதலைன்னு நினைச்சு கூப்பிட்டிருக்கிறேன். உங்க கால நேரம் பார்த்து எழுதுங்க!

மற்ற வியர்டுங்க குறித்த குறிப்பு வேணுமா? அதுக்குன்னே ஒருத்தர் 'வியர்டு ஆஸ்பத்திரி' கட்டி வச்சு, கேஸ் ஹிஸ்டரி எல்லாம் பதிவுபண்ணியிருக்காரு, போய்ப் பாருங்க!

19 Comments:

said...

ஒருவழியா வியர்டிட்டீங்க.

தயிர் சாதம் fish-fry செம காம்பினேஷன்.

இன்னிக்கு ராத்திரியே ட்ரை பண்ணிடறேன்.

said...

ஆமாங்க சர்வேசன், ராத்திரிக்கு தயிர்சாதம் - fish fry சாப்பிட்டா, இன்னும் திட்டுதான், மதியச் சாப்பாட்டுக்கு டிரை பண்ணுங்க.

said...

நெல்லை சிவா,
அழைப்புக்கு மிக்க நன்றி. நான் ஏற்கனவே திரு.ஜோசப் அவர்களின் அழைப்பில்
எனது வியர்டு குணங்களைப் பதிந்து விட்டேன்.

said...

//என்னோட ஃபேவரிட் உணவு தயிர்சாதம்-பச்சை மிளகாய்-Fish Fry. தயிரோட, Fish Fry சேர்த்தா ஜீரணமாறது கஷ்டம்னு சொல்வானுங்க பிரண்ட்ஸுங்க, 'கல்லையும் செறிக்கிற வயசு, போடான்னிடுவேன்.'
//
:) :)

said...

//இது மாதிரியே ஆபிரகாம் லிங்கனின் சிறுவயதுப் பருவம் பற்றி உலவும் கதைகளில் ஒன்றில் அவர், பலூன் வியாபாரியிடம் 'கருப்பு வண்ண' பலூனில் காற்றடைத்தால், பறக்குமா என்று கேட்பார், அதற்கு பலூன் வியாபாரி 'பலூனுக்கு வெளியே உள்ள நிறத்தில் ஒன்றுமில்லை, உள்ளே இருக்கும் காற்றுதான் மேலே பறக்க காரணம் என்பார். இந்தச் சம்பவம், அவர் மனதில் ஓரு ஆழ்ந்த சிந்தனையையும், நம்பிக்கையையும் தோற்றுவித்ததாகக் கூறுவார்கள்.

//
வியர்டு பதிவில் கூட அற்புதமான துணுக்கு. நன்றி நெல்லை சிவா

said...

போட்டாச்சு .. போட்டாச்சு ;) ;)

said...

வினையூக்கி,

ஏற்கனவே போட்ட பதிவ படிக்க விட்டுட்டேன், உங்க தகவல் மூலமா படிச்சுட்டேன்.

கருத்துக்கு நன்றி, நண்பரே.

said...

-L-L-D-a-s-u ,

ஹைய்யா.. எனக்கு தாஸு ஹாஸ்பிடல்ல இடம் கிடைச்சிருச்சு... :)))

said...

சிவா, அழைத்தமைக்கு நன்றி! மங்கை யக்கா ஏற்கனவே என்னை வியர்டுன்னு பறைசாற்ற வைத்துவிட்டாரே! இதோ அந்த பதிவு:
http://kaattaaru.blogspot.com/2007/03/blog-post_27.html

said...

"பச்சை நிற இலைகளினூடே, மஞ்சள் நிறப் பூக்கள், பார்க்க ரம்மியமாய் இருக்கும். இதைப் பார்த்து ரசிப்பதற்காகவே, நண்பன் வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று, அங்கிருந்து பார்ப்போம்."

ஃப்ரெண்டு வீட்டு மொட்ட மாடிக்கு பிகர பாக்க போவேன்னு தைரியமா சொல்லியிருக்கலாமோ? ;)

ஓகே...ஓகே...அப்ப‌டி சொல்லியிருந்தா அது விய‌ர்டு கிடையாது தான் :)

அழைப்பு விடுத்தமைக்கு நன்றி...முயற்சி செய்கிறேன்...

~மாறன்

said...

ஓ..நீங்களும் ஏற்கனவே வியர்டிட்டீங்களா, அப்ப ஓகே..

said...

எப்பா மாறா,

அழைத்ததுக்கு வம்புல மாட்டி வுட்டுறுவீக போல,

பூவும் அழகு, பூவையரும் அழகுதானுங்கோ..

சீக்கிரம் ஒரு வியர்டைப் போடுங்க..

said...

ண்னா... போட்டுடேனுங்கன்னா....

said...

ஒரு வழியா போட்டிட்டீங்களா மாறன், படிச்சேன்.. நல்லாயிருந்தது,

//why are you rotating the ground man//...

said...

பழைய நினைவுகளை கிளறிக்கொண்டிருக்கிறேன். சீக்கிரம் பதிகிறேன்.
அழைப்புக்கு நன்றி!

said...

அழைப்புக்கு நன்றி! சிவா!
ஒரு வழியாக வியர்டிவிட்டேன்
எப்டின்னு நீங்கதான் சொல்லோணும்.

said...

ஒரு வழியா வியர்டிட்டீங்களா? வந்து பார்க்கிறேன்..

said...

நல்ல பைத்தியம்தான் நல்ல பைத்தியம்னு சொல்லுவாங்க. நாமெல்லாம் ஒரே வகைனு தெருஞ்சுகிற சந்தோஷம் நல்லாவே இருக்கு.
அதுவும் வாங்கணும்னு நினைச்சேன் சொல்லறீங்க பாரு.
அதுக்கு முட்டிக்க நாலு சுவர் வேணும்.
இப்படி சொல்லியே கழுத்தறுக்கவர் எங்க வீட்டிலும் என் தம்பிதான்.
ஏய் அதைப் பார்த்தோண்ண உன் நினைப்புதான் வந்ததுனு சொல்லி சிரிப்பு வெற.:-0)

said...

//அதுவும் வாங்கணும்னு நினைச்சேன் சொல்லறீங்க பாரு.
அதுக்கு முட்டிக்க நாலு சுவர் வேணும்.
இப்படி சொல்லியே கழுத்தறுக்கவர் எங்க வீட்டிலும் என் தம்பிதான். ஏய் அதைப் பார்த்தோண்ண உன் நினைப்புதான் வந்ததுனு சொல்லி சிரிப்பு வெற.:-0)//

வீட்டுக்கு வீடு அதேதானா, வல்லியம்மா..

என்ன இருந்தாலும் நினைச்சோம்ல..அதுவே வாங்கிக் கொடுத்ததுக்கு சமானம்தானே... :)