Sunday, March 25, 2007

ஒரு ப்ளஸ்...இரு மைனஸ்..

சென்ற வாரம் சிந்தாநதியோட வலைச்சரத்திற்கு ஒரு வார ஆசிரியரா போயி இருந்தது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. வலைஞர்களின், பல்வேறுபட்ட திறன்மிகு முகங்கள் தென்பட்டது. சும்மா எழுதுறது ரொம்ப ஈஸி, ஆனா, இன்னொருத்தர் சுட்டும் விதமா எழுதறது, அவ்வளவு சுலபமில்லை. வள்ளுவன் இன்றிருந்தால்,

"சுட்டுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சுட்டும் வண்ணம் எழுதுதல்"
- ன்னுட்டு பாடியிருப்பாரோ?


ம்..ம்.. எப்படியோ, சிந்தாநதியோட நன்முயற்சியில நானும் பங்கெடுத்தது குறித்து எனக்கும் சந்தோஷமே! வலைச்சரம் சுட்டும் நல்லெழுத்துக்கள் மூலமாய், திறன்மிகு எழுத்துக்கள் சிறப்படையட்டும். இதன் விளைவாய், மேலும் பல நல்லெழுத்துக்கள் தமிழ் வலையுலகில் உலா வரட்டும்.

ப்ளஸ்... குறித்துச் சொல்லியாயிற்று, மைனஸ் என்னவாயிருக்கும்னு யோசிக்கிறீங்களா? அ
தாங்க எல்லாரும் துவைச்சி காயப் போட்டிக்கொண்டிருக்கும் நம்ம கிரிக்கெட் அணியின் தோல்விதாங்க அது.

இந்திய அணி ரொம்பப் பிரமாதமா பார்மில் இல்லை என்றாலும், உலகக்கோப்பைக்கு சற்று முந்தைய பந்தயங்களில், நம்பிக்கையாய் விளையாடி இருந்தார்கள். ஆனால், வங்கதேசத்தோடு ஆடிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியபோது, மனசு வெறுத்துத்தான் போனது. அப்போதே, மனதில் தோன்றிவிட்டது, இந்தப்பசங்க சூப்பர் 8-க்குள் போகக்கூடாதென்று. எத்தனை நாளைக்குத்தான் இப்படி அழுதழுது பார்த்துக்கொண்டிருப்பது? அழுத்தமாய், ஆணித்தரமாய், solid-ஆய் வெற்றிதரும் இந்திய அணியை என்றுதான் பார்ப்பது? ம்..ம்..ஆனால், இந்தத் தோல்விக்கு நம்ம தேசத்து மக்கள் காட்டும் ரியாக்சன் கொஞ்சம் ஓவர்தான் என்று தோன்றுகிறது. விளையாட்டு விளையாட்டாய்ப் பார்க்கப்பட வேண்டும், நாம் நம் அணி மீது வைத்திருந்தது அதீத நம்பிக்கை, அவர்களின் பலம் அவ்வளவுதான்! இதில் கிடைத்த ஏமாற்றத்திற்கு, இவ்வளவு எதிர்ப்பு காட்டுகின்ற மக்கள், நம்மகிட்ட ஓட்டு வாங்கி, ஐந்து வருடம் சூப்பரா மக்கள ஏமாற்றி, தானும் தன் சகாக்களும் சுருட்டிக்கொள்ள வகை செய்கிற அரசியல்வாதி தருகின்ற ஏமாற்றத்திற்கு பாடம் புகட்டினால், ஏதாவது பயனுண்டு. 'செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பானாயிற்றே..நம் மக்கள். :)

இரண்டாவது மைனஸ்.. அட..அது ஒன்னுமில்லைங்க.. வியர்டு(weird) சமாசாரந்தாங்க... போட்டோ போட்டியில செயிச்சதுக்கு, இப்படி ஒரு வில்லங்கமான அழைப்பு வரும்னு முன்னமே தெரியாமப் போச்சே.. நம்ம சர்வேசரு 'Hall-of-Fame' - ஆளுங்களுக்கு விட்டிருக்கிற weird - அழைப்பிலே நம்மளயும் சேத்து விட்டு, நம்ம மைனஸ்-ஸ புலம்ப்பச் சொல்றாரு.. ம்...புலம்புவோம்...நாளைக்கு..

4 Comments:

said...

நல்லா இருந்தது உங்க 'வலைச்சரம்' எடிஷன்.

உங்க வியர்டுக்காக காத்திருக்கும்,
சர்வேசன் :)

said...

oru 5 varushaththukku cricket-i ooram kattinaal eppadi irukkum?
naanani

said...

"சுட்டுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சுட்டும் வண்ணம் எழுதுதல்"
- ன்னுட்டு பாடியிருப்பாரோ?///


இலக்கணப்படி தப்பு.. அதனால அப்படி பாடிருக்க மாட்டாரு

said...

சுட்டுதல் யார்க்கும் எளிய; அரியவாம்
சுட்டிய வண்ணம் செயல்

என்று இன்று ஒரு நண்பருக்கான தனிமடலில் எழுதியனுப்பினேன்.
எதேச்சையாக அதே போன்ற குறளை இந்த வலைப்பூவில் கண்டேன்.
நிகழ்வுகளின் ஒத்திசைவை வியந்ததன் விளைவாய் இப்பின்னூட்டம்