Tuesday, March 06, 2007

சமீபத்தில் நான் ரசித்த புதிய ப்ளாக்...

அட..நிறைய பேரு நான் ரசித்த படம்..நான் ரசித்த பாடல் அப்படின்னு பதிவு போட்டுருக்காங்க.. அது மாதிரி, நான் ரசித்த ப்ளாக்-னு ஒன்னு போடலாமுன்னுதான் இந்தப் பதிவு.

'தேன்கூடு' வலைத்தளத்தில், கில்லி பரிந்துரைகள் அவ்வப்போது, பார்ப்பதுண்டு, அப்படி போன வாரம் பார்த்துக் கொண்டிருந்தப்பதான், 'தமிழ் சினிமாவும், அஸிஸ்டெண்ட் டைரக்டர்களும்'-னு சினிமா குறித்த பதிவு கண்ணில் பட்டது.

அத 'க்ளிக்' - பண்ணி, போய் பார்த்தா 'சினிமாவப் பத்தி' -ங்கிற மாறனோட ப்ளாக்.

தமிழ்மாறன் - என்ற பெயரில், எனது சில பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு, ப்ளாக்கிற்கு அழைப்பும் விடுத்திருந்தார். அப்பவே போய் பாத்து, கமெண்ட்-டும் போட்டுட்டேன், ஆனா, அதே ப்ளாக் நம்ம கில்லியோட பரிந்துரையிலயும் இருந்தது பார்க்குறப்போ, சந்தோஷமா இருந்திச்சு.

ஏற்கனவே, நம்ம கண்மணி வேற, புதிய ப்ளாக்கர வரவேற்கிறதுல நம்மள சிறப்பாச் சொன்னதால, அந்தப் பேர காப்பாத்திக்க வேணாமா, அதான் 'கில்லியோட' கூடுதல் பரிந்துரையில் நானும் சேர்ந்து கொண்டு, நீங்க இந்த ப்ளாக் பக்கம் போயிப் பாருங்கன்னு ஒரு சுட்டிக்காட்டலாம்னுதான் இந்தப் பதிவு.

இந்த அறிமுகத்துக்கு முன்னாடியே, நம்ம வலையுலகப் பிரபலங்களாகிய, பாலா, துளசி கோபால், சர்வேசன், இலவசக்கொத்தனார், A n& , கார்த்திகேயன் எல்லாரும் படிச்சு, பின்னூட்டமிட்டுருக்காங்க, நீங்களும் படிச்சிருக்கலாம், இல்லேன்னா, ஒரு எட்டு போய்ப் பாருங்க.


புதிய எழுத்துக்களும், புதியவர்களும் வலைப்பூக்களுக்கு அவசியம் தேவை, சில சமயம் அவை, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போன்ற தோற்றங்களிலிருந்து ஒரு மாறுதலைக் காண உதவலாம்.

கொஞ்ச நாள், ஜாலியா போகட்டும் வலைப்பதிவு, ஜாதிச் சண்டைகளையும், மதக் கேலிகளையும் தள்ளிவைத்து, கொஞ்சம் ஜாலியாவும், நட்பாகவும் கொண்டு போகலாம் வலையுலகை. இந்த வகையில், சக பதிவர் 'சர்வேசனுக்கு' விசேஷ நன்றி சொல்லனும், மனுசர் புகைப்பட போட்டி, பாட்டுப் பாட்டு, நேயர் விருப்பம்-னு கலக்கு கலக்கறார். அரட்டை அரங்கம் வேறு வடிவமைத்துக் கொடுத்திருக்கார், இன்னமும் சோதித்துப் பார்க்கவில்லை.

சமிபமா சகபதிவர் 'ரவிசங்கரும்' கருத்தைக் கவரும் விதமா, வலைப்பூக்களுக்கு நலம் சேர்க்கும் விதமா, கண்ணி பற்றி அறியத்தருகிற மாதிரி எழுதி வருகிறார். இவரது முயற்சிகளும் பாராட்டுக்குரியதே.

மாறனோட பதிவு குறித்து, அவர் பதிவில் இட்ட பின்னூட்டம், இங்கும் ஒரு அறிமுகப் பார்வையாக:

//சும்மா கலக்கலா அலசியிருக்கீங்க, தமிழ் சினிமா-வ இங்கிலீஷ் பார்முலால பாத்திருக்கீங்க,

ஆனா, 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்' முழக்கமிட்டானே ஒரு கவிஞன், அவன் வாயிலா பார்த்தா, இங்கிலீஷ் படத்த தமிழ்-ல எல்லாரும் பாக்க வச்சிருக்காங்கன்னு ஆறுதல் பண்ணிக்கலாம்.

ஆனா, என்ன இவங்க எல்லாம் சொந்தச் சரக்குன்னு சொல்லுறது தப்பு. அந்த வகையில, உங்க/நம்ம பேவரிட் டைரக்டரு, 'derailed'-ஒட தாக்கத்த சொல்லிதான் படத்த வெளியிட்டு இருக்காரு.

சூப்பரான அலசல், நிறைய புது டைரக்டர்கள் ஏன் புது வலைப்பதிவர்கள் கூட அசத்தலான ஆரம்பத்தக் கொடுத்து, அப்புறம் ஏமாற்றிருவாங்க. நீங்க, அது மாதிரி செய்யாம தொடர்ந்து கலக்கோணும்-னு கேட்டூக்கறேன்//

மாறன், உங்களோட எழுத்தோட்டம், இயல்பா ஒரு நண்பனோட உரையாடுகிற ஸ்டைல்ல இருக்கிறது ஒரு சிறப்பம்சம். சினிமாவப் பத்தி -ன்னு ப்ளாக்-கோட தலைப்பு வச்சிருக்கிறதால, அது பத்தி மட்டும்தான், எழுதணும்னு ஒரு சட்டம் போட்டுக்காம, எழுதத் தோணுறத, எழுத ஆரம்பிங்க. வாழ்த்துக்கள், மாறன்! தொடர்ந்து எழுதுங்க.

14 Comments:

said...

ஒரு சக பிளாக்கரோட பதிவப் பத்தி ஒரு முன்னோட்டப் பதிவு கொடுக்கும் பெருந்தன்மைதான் 'நெல்லையின்[சிவாவின்] சிறப்பு.நிறையப் பேரு இதுபோல செய்யறாங்க ஆனா அவங்கெல்லாம் ஒரே 'கும்மி'ஆளுங்க.
மனமார்ந்த பாராட்டுக்கள் உங்க சேவைக்கு.

said...

அட என்னங்க கண்மணி,

பதிவு போட்ட உடனே ஒரு கமெண்ட் போட்டுத்தாக்கறீங்க.

பாத்துங்க, கம்யூட்டர் பார்த்து,பார்த்து கண் மணி சிவந்துடப் போகுது,

பொன்ஸ்ஸோட 'வலைச்சரம்' பார்த்தீங்களா?, உங்களுக்கு பெரிய பாராட்டுப் பத்திரமே வாசித்திருக்காங்க.. பறக்க ஆரம்பிச்சிட்டீங்க, கலக்குங்க!

said...

அறிமுகப்படுத்தியதற்கு நன்றி :)

said...

நீங்க அறிமுகமெல்லாம் தாண்டிட்டீங்க, ரவி. உருப்படியா விசயம் பேசிக்கிட்டிருக்கிற, உங்கள் ஞாபகமும் வந்தது, இந்த வலைப்பூ அறிமுகம் எழுதுற நேரத்துல, அப்படியே அதையும் இணைத்துவிட்டேன். நீங்க, இப்ப அடுத்த கட்ட எதிர்பார்ப்பில இருக்கீங்க, வாழ்த்துக்கள் மேலும் சாதிக்க!

ரவி-ன்னு பேரு வச்சாலே உருப்படியான விசயங்கள்தான் பேசுவாங்க போல, நம்ம செந்தழல் ரவி போல.. :)

said...

good work siva

said...

சிவா.. நீங்க சொல்லியதாலே எல்லா ப்ளாக்கு நானும் ஒரூ விசிட் அடிச்சாச்சு.. ;-)

said...

என்னடா இது ஈ-மெயில்ல புதுசா ரெண்டு கமெண்ட்டுங்கோ வந்து இருக்குதே காரணம் என்னான்னு பாத்தா, நெல்லை சிவா அவர்களின் அறிமுகபடுத்தும் பக்கம்...இப்படி ஒரு பதிவை எதிர்பார்கவில்லை...உங்க நல்ல மனசுக்கு நன்றி...

-மாறன்

said...

வாங்க கார்த்திக், கல்யாணகலாட்டா எல்லாம், முடிச்சு, திரும்பவும் வலைப்பதிய ஆரம்பிச்சாச்சு போல. கலக்குங்க.

said...

மை ஃபிரண்ட்,

பொன்ஸ்ஸோட 'வலைச்சரம்' பார்த்தீங்களா?, உங்களுக்கும் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்காங்க,

வாழ்த்துக்களுடன், நன்றியும்.

said...

மாறன்,

அடுத்த பதிவு எப்போ?

said...

நெல்லை சிவா, ரொம்ப நன்றி. 'சினிமா'ன்னு தலைப்பு பாத்ததும், மாறனோட ப்ளாகுக்கு ஓடிப்போய் ஆஜர் சொல்லிட்டேன்.
என்னடா வெட்டியா போட்டியெல்லாம் வச்சு டைம் வேஸ்ட் பண்றோமான்னு ஒருபக்கம் இடிச்சுது. உங்க வரவேற்ப பாத்ததும், அடுத்தத தாமதிக்காமல் வைக்கணும்னு தோணுது :) பாப்போம்.

said...

//மை ஃபிரண்ட்,

பொன்ஸ்ஸோட 'வலைச்சரம்' பார்த்தீங்களா?, உங்களுக்கும் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்காங்க,

வாழ்த்துக்களுடன், நன்றியும்.//

ஆமாங்க.. இப்பத்தான் பார்த்து என் அங்குக்கு ஒரு நன்றி பின்னூட்டம் போட்டுட்டு வந்திருக்கேண்.. ;-)

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, சிவா.

said...

வணக்கமுங்க,

இத்த பாருங்க, அப்பாலிக்கா, உங்க கிட்ட இருக்கர கலீஜ் மேட்டரெல்லாம் பட்டியல் போடுங்க :(

http://surveysan.blogspot.com/2007/03/weird.html