Saturday, March 03, 2007

சுடரின் வேகம் போதுமானதா?

மறைந்த நண்பர் 'தேன்கூடு'- சாகரன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்ட சுடர், ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.

பாலாஜியால் பிப்ரவரி 4-ஆம் தேதி துவக்கிவைக்கப்பட்டு, இன்றுவரை 24 பதிவுகள் இணைக்கப்பட்டிருக்கின்றது. இதில் இரண்டு பதிவுகள் இடைச்செருகல். ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகளுக்கு மிகாமல், இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு, இரண்டு நாளைக்கு ஒரு பதிவு என்ற வண்ணத்தில் இருப்பது போன்ற தோற்றம். இவ்வளவு 'ஆக்டிவ்'-ஆ இருக்கின்ற வலைப்பதிவில், மொத்தம் 40 பதிவுகளாவது, ஒரு மாதத்தில், வந்திருக்கவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

ஆரம்பத்தில் வேகமாய் நகர்வது போலிருந்த சுடர், தற்போது மெல்லவே நகர்வது
போன்ற தோற்றம் அல்லது பிரமை?!! சுடர் நட்பு வட்டத்தில் சுழலுவதில் தவறில்லை, ஆனால் வேகம் குறையாதிருந்தால் நன்றாயிருக்கும். சுடரை ஒப்படைப்பவர்கள், அதன் துரிதவேகத்துக்கும் உதவ செய்யன செய்தால், 'சாகரனின்' விருப்பம் ஈடேற வகை செய்யும்.

உங்கள் எண்ணம் என்ன? சர்வேசன் வேலையை, நான் கொஞ்சம் எடுத்து அவர் வேலையைக் குறைக்கிறேன். (சர்வேசன்..ஏற்கனவே நீங்க உங்க பதிவுல மார்ச்-ல வேலை அதிகமாகும்-னு சொல்லியிருக்கீங்க..,அதான் :)) )

8 Comments:

said...

ஸ்லோவாதாங்க போவுது சுடர்.

ஏப்ரல் வரைக்கும்தான் இருக்கணும்னு வேற சொல்லியிருக்காங்க.

இரண்டு நாளைக்கு ஒண்ணு வந்தா நல்லா இருக்கும்.

சர்வே போட்டு ஜமாய்ச்சிட்டீங்க. யார் போட்டா என்ன, உலகை வாட்டும் கேள்விகளுக்கு விடை கிடைத்தால் போதும் :)

(மார்ச்ல வேலை பளு ஜாஸ்திதான். கொஞ்சம் ஒதுங்கிதான் இருக்க வேண்டியிருக்கும்) - குத்தகைக்கு விடலாம்னு இருக்கேன், சர்வேசன :)

said...

ஆமாம். அதிகமாக வேண்டும்.

said...

உங்கள் ககருத்தை நான் அமோதிக்கிறேன் சிவா. :-)

said...

சுடர் இது வரைக்கும் நம்ம தாய்க்குலம் பக்கமே போகலையே.[விதிமுறைகள் தெரியலை] இருந்தாலும் இப்ப டெட் ஸ்லோ தான்.ஆரம்பத்துல இருந்த வேகம் இல்லை .[ஆமா யாருகிட்ட இப்ப இருக்கு?]

said...

இப்படி மெதுவா போனா, சுடர் ஏத்துற ஆர்வமே, குறைந்து போகும், 'ஆக்டிவ்' பதிவர்கள் கிட்ட சுடர் போச்சுன்னா, வேகம் கூடும், வலைப்பதிவுகள் பக்கம் குறைத்துவிட்டவர்கள் கிட்ட போனா குறைஞ்சிடுது. பார்க்கலாம், இனி வரும் சுடராவது சூடாகுதான்னு..

said...

குமரன், மை ஃபிரண்ட்,

வேகம் அதிகமானா, சுடரோட ஒளி இன்னும் பிரகாசிக்கும், அது மறைந்த நண்பரின் அவாவினைப் பூர்த்தி செய்யும்.

வருகின்ற நண்பர்கள், தொடரோட்டத்தினை வேகப்படுத்தட்டும்.

said...

கண்மணி,

சுடர் தாய்குலம் பக்கம் எல்லாம் போயிருக்கு, இப்ப 'அப்படிபோடுமரத்துகிட்ட நிக்குது.

said...

இதுவரை பெற்றிருக்கும் வாக்குகள்:

1. ஆமாம், அதிகமாக வேண்டும் என 80 சதவிகிதத்தினர் சொல்லியிருக்கிறார்கள்.

2. 8% இதுவே போதும் என்று சொல்லிருக்காக..

3. 12 - கருத்துச் சொல்ல மனமில்லைன்னு சொல்லியிருக்காக.

அடுத்துச் சுடர் ஏத்துறவங்க, இத கொஞ்சம் மனசுல வச்சுக்கங்கய்யா..