Sunday, February 11, 2007

பச்சைக்கிளி முத்துச்சரம்


'வேட்டையாடு விளையாடு' - வெற்றிக்குப்பிறகு, கெளதமின் இயக்கத்தில் வெளிவர இருக்கின்ற படம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. வழக்கம் போல, ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை. அந்த ஆர்வத்தில், இணையத்தில் தேடி, அதன் பாடல்களை கேட்டேன்..

மொத்தம் ஐந்து பாடல்கள், ஒரு பாடல் இருமுறை வருகிறது. இரண்டு பாட்டு மிக அருமை. அதிலும் 'பாம்பே ஜெயஸ்ரீயின்' 'உனக்குள் நானே' பாடல் சூப்பரோ சூப்பர். அந்தக் குரலும், ட்யூனும், அவ்வப்போது 'வசீகரா'வை நினைவு படுத்தினாலும், குரலின் வசீகரத்திற்கு மன்னித்து விடலாம், இதே பாடலை 'மதுஸ்ரீ'-யும் பாடியிருக்கிறார், ஆயினும் வசீகரத்தின் வசீகரம் இல்லை.

இன்னொரு இனிமையான பாடல்: 'கருகரு விழிகளால் ஒரு கண்மை எனைக் கடத்துதே' எனத் தொடங்கும் கார்த்திக், கிரிஷ், நரேஷ் பாடிய பாடல். துடிப்பாய் இருக்கிறது. 'தாமரைஇலை நீர் நீதானா..' என்ற வரிகளில், இசையோடு வாய்ஸ் ப்ளெண்ட் ஆகிறமாதிரி பண்ணியிருப்பது அழகாய் இருக்கிறது.

அடுத்து சுமாராய்க் கவர்வது 'உன் சிரிப்பினில்' எனத் தொடங்கும் பாடல்..கெளதமிராவும், ராபியும் பாடியிருக்கிறார்கள், இதற்கு முன்னர் ஏதும் பாடியிருக்கிறாரா தெரியவில்லை. ட்ரெய்லரில் இந்தப்பாடலைத்தான் ஓட விட்டிருக்கிறார்கள். மென்மை தெரிகிற ஆண்குரலிசை, 'சரத்குமாருக்கு' ஒத்துப் போகுமா?

'காதல் கொஞ்சம்' பாடல் அவ்வளவு எனக்குப் பிடிக்கவில்லை.

கெளதம் - ஹாரிஸ் கூட்டணியில் பாடல்கள், இதுவரை நன்றாகவே வந்திருக்கிறது, இதுவும் அப்படியே.

ரஹ்மானின் வாரிசாக வந்தாலும், தனக்கென ஒரு பாணியை கொண்டுவந்துவிட்டார் ஹாரிஸ் என்றே சொல்லவேண்டும். தவிரவும், பின்னனி இசையிலும், ஒரு தனித்துவம் தெரிகிறது.


கெளதம் ஒரு தமிழ்ப் பிரியர், தன் கதாபாத்திரத்திற்கு தமிழ்ப் பெயரே வைப்பார், பாடல்களிலும் அந்தக் கவனம் தெரிகிறது..

சரத் ஒரு 'லைப்' எதிர்பார்த்து இருக்கிறார், 'ஹாட்' ட்ரிக் அடித்த கெளதம் அதைத் தக்கவைத்து, சரத்துக்கு உதவுவாரா? பார்க்கலாம்..

பாட்டு கேக்கணுமா:..இங்கே 'க்ளிக்'குங்க

7 Comments:

said...

உனக்குள் நானே பாடலை எழுதியவர் நடிகை ரோகிணியாம். அழகான பாடல் வரிகள்.

உன் சிரிப்பினில் பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச மாதிரி இருக்கு!

said...

என்னை ரொம்பவும் கவர்ந்ததும் "கரு கரு" பாடல்ததான். அதுவும் "தாமரை இலை நீர்" என்ற வரியில் தொடங்குவதைத்தான் என் ரிங்தோனாக நான் பயன் படுத்துகிறேன்.

"காதல் கொஞ்சம்" என்று நரேஷ் பாடிய பாடல் எனக்கு பிடித்த இன்னொரு பாடல்.. ;-)

said...

ஓ..அது ரோகிணி எழுதிய பாடலா? நன்றாக இருக்கிறது, புதுப் பெண் கவிஞர் :) தகவலுக்கு நன்றி, தம்பி.

உன் சிரிப்பினில் பாடல், ட்ரெய்லரில் காட்டப்படுவதால், சீக்கிரம் ஹிட் ஆகலாம்..

said...

கருகரு பாடல், மிக இனிமை ஃபிரண்ட், 'காதல் கொஞ்சம்' பிடித்திருக்கிறதா.. :)

said...

என்னுடைய கவுண்டவுனில் 'உன் விழிகளில்' தான் ஃபர்ஸ்ட்... :))))

அடுத்தது நீங்க சொன்னப் பாடல்கள்...

said...

என்ன ஜி, உங்க தேர்வைத்தான், தம்பியும் சொல்லியிருக்காரு.

பார்க்கலாம், படமாக்கம் எப்படியிருக்கிறது என்பது கூட, பாடலை இன்னும் உயர்த்திவிடும்.

பாடல் காட்சிகளை படம்பிடிப்பதில், கெளதம் ஓகே ரகம்தான், தவிரவும் சரத்தும், ஜோவும் பாடும் பாடலாயிருந்தால்..? Let's wait and see.. :)

said...

த.வெ.உ போடோ அனுப்பலியே. என்ன ஆச்சு?