Thursday, February 15, 2007

வந்துட்டேண்ணா...வந்துட்டேன்..

சில விசயங்கள் நாம செய்யணும்னு ஆசைப்படறது, ஆனா அத முயற்சிக்கையில ஆசைப்பட்ட அளவு அவ்வளவு எளிதான விசயமாகிவிடாது.


அதுமாதிரிதான், 'வலைஜாலிஞர்' சர்வேசர், பாட்டுக்குப் பாட்டு போட்டிக்குப் பெயர் கொடுக்கையில் எளிதாக இருந்தது . ஆனா, நம்ம ஷைலஜா மேடம் 'ய்'-ல முடிக்க, சர்வேசர் 'ய'கர வரிசையில ஆரம்ப்பிக்கச் சொல்லிட்டார். யகர வரிசையில, பெண்கள் பாடுறதுக்கு நிறைய பாடல் இருக்கு. ஆண்குரலில் பாட, சோகப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. 'யார் வீட்டு ரோஜா' பாடலாம்னா, சில peak curve அலர்ஜியாகுது. கடைசியா ரெண்டு மூணு, முயற்சி பண்ணி ஏதோ சுமாரா தேறினத அனுப்பியாச்சு.


சர்வேசர் வேற, அதுக்குள்ள 'எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்'னு அறிவிப்பு வேற விட்டுட்டார். ஓசியில ஒரு விளம்பரம் கிடைக்குதே, இன்னொரு அறிவிப்பு வரும் வரை காத்திருக்கலாமான்னு நினச்சேன்.. அடுத்து வரிசையில இருக்கிறவங்க அடிக்க வந்துரக் கூடாதே-ன்னுட்டு அனுப்பி வச்சுட்டேன்.


அவரு ப்ளாக்ல போட்டப்புறம், இங்கேயும் 'லிங்கி'ரலாம். ஏற்கனவே, நிறைய பேர் பாடியிருக்காங்க, கேட்க இங்க 'க்ளிக்' குங்க.


இந்தக் குரலிசைக்கு முன்னோடியா இருந்தது, சிறில் அலெக்ஸ்தான். அவருடைய செய்தி வாசிப்பு பதிவுதான் முதல் குரல் பதிவு. அதைக் கேட்ட பொழுதே அவருக்கு வாழ்த்துச் சொல்லி, விரிவாக பின்னூட்டமிட வேண்டுமென்று நினைத்தேன். (இந்தப் பதிவின் ஆரம்ப வரிகளை ஒரு முறை படிச்சுடுங்க.) இதன் மூலமா சொல்லிக்கிறேன். வித்தியாசமா, முயற்சிக்கிற வலைப்பதிவர்கள்ளே அலெக்ஸும் ஒருவர், 200 பதிவு தாண்டினவரு, இரண்டாயிரமும் தாண்ட வல்லவர். மேலும் பல புதுமைகளை தமிழ் வலைப்பூவுக்கு அறிமுகப் படுத்த வாழ்த்துக்கள், அலெக்ஸ்.


பாட்டுக்குப் பாட்டுக்கு பாட தாமதமானதுக்கு, அடுத்து பாட இருக்கிற பதிவர்கள் மன்னிக்க. இதுவரைக்கும், பாட தயாராகதவங்க, இப்ப ரெடியாகுங்க.. பேர் கொடுக்க சர்வேசனைப் பாருங்க..
மெல்லிசை மன்னர் உடல் நலம் குறித்துச் சொன்ன பிறகே, இந்தப் போட்டியை ஆரம்பித்து இருந்தார், மெல்லிசையார் எனது அபிமான இசை அமைப்பாளர்களில் ஒருவர், இசையில் இளையராஜா என்றால், 'ட்யூனில்' மெல்லிசையார் என்பது மறுக்க முடியாத ஒன்று. அவர் பற்றி தனிப் பதிவு எழுத எண்ணம். மெல்லிசையாரின், உடல்நலம் நன்றாக, கடவுள் அருளட்டும்.

12 Comments:

said...

நல்லாருக்கு..பாடியது. குரலில் ஏன் ஒரு தயக்கம்..நடுக்கம்..தைரியமாகப்பாடலாமே.ட்ப்..ட்ப்..ட்ப்..கை தட்டும் சத்தம் கேக்குதா..கேக்குதா?

said...

போகிற போக்கில் நமக்கும் ஒரு விளம்பரமா. நன்றி.

'முதல் குரல் பதிவு' நீங்க கேட்டதா?

முன்னால நிறையபேர் போட்டிருக்காங்க.
ரெம்ப நேரம் ஆகுது ரெக்கார்ட் பண்ணி எடிட் பண்ணி போட. இதில் சீக்கிரம் தேர்ந்துடுவேன்னு நினைக்கிறேன்.

பாப்போம். (இன்னைக்கு பயங்கர தூக்கம் வருவதால் No recording!!!)

:))

பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

said...

டப்..டப்..கைதட்டும் சத்தம் கேட்டுதா? மன்னிக்கவும், பேருபெத்தபேரை போட மறந்தேன்.அது..
நாந்தேன்

said...

அனானி, குரலில் ஒரு தயக்கம் மாதிரி தான் தெரியுது.

தங்கமணிக்கு கேக்காம கதவ சாத்தி பாடி இருப்பாரோ?

said...

அனானி,சர்வேசா..

ரெண்டுபேர் சொல்றதும் நிசந்தானுங்கோ.. சர்வேசர்,அட்டெண்டென்ஸ் குடுக்கச்சொல்லி, விளம்பரம் கொடுத்துட்டாரேன்னுட்டு, நைட்டே பாடிட ட்ரை பண்ணினேன். காலைல பாடினா, சத்தம் போட்டு கத்தலாம், நைட்ல முடியுமா, அப்புறம் பக்கத்து வீட்டு துரை வந்து கதவ தட்டிடுவாரு..

அடுத்த முறை தூள் கிளப்பிடலாம் வாத்தியாரே..

said...

அலெக்ஸ்,

உங்களோட பதிவுதான் முதல்ல தமிழ்-ல கேட்ட பதிவு, வேற யாரும் போட்டிருக்காங்களா, என்ன?

உங்க குரல் நல்லா இருக்கு, நல்ல பாட்டும் செலக்ட் பண்ணியிருந்தீங்க.

said...

அடடா,

யாரு இந்த நாந்தேன்..நான், சப்பாத்தி, பரோட்டாவில இருந்து, இப்ப 'தேனு'க்குப் போயிட்டீங்க.

said...

அடடா..தலையை பிச்சுக்கணும் போலிருக்குதா? விட்டால் கொத்துபரோட்டா போட்டுவிடுவீர் போல..இது அகம்பாவமான -நான்-அல்ல, பவ்விய்மான-நான். ஆகவே இந்த ஆட்டை கொஞ்சம் தொடரட்டுமே

said...

மெல்லிசை மன்னரின் இசையில் வயலின்கள் சேர்ந்து கம்பீரம் கொடுக்கும்.குழலிசை நெஞ்சை வருடிச்செல்லும்.கண்ணதாசனுடன் அவர், எப்படி பாடலும் இசையும் கை கோத்தது என்று சொல்வது கேட்க மிகவும் சுவையாயிருக்கும்.திரையுலகம் அவரை மறந்தது கொடுமை.ரசிகர்களாகிய நாமாவது அவர் சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்போம்
நான்

said...

அச்சச்சோ,சிவா'ஜி'! ய கரத்துல பாடச்சொல்லி உங்கள சிரமப்படுத்திடேனா, ஆனாலும் பாடின பாட்டு ஜோராத்தானே இருக்கு?
ஷைலஜா

said...

அனானி,

இப்படியே கொஞ்ச நாள் பண்ணிகிட்டு இருங்க, ஏதாவது ஒரு வார்த்தையில இருந்து உங்கள பிடிச்சுடறேனா இல்லையா பாருங்க..

said...

ஷைலஜா,

நீங்க ரொம்ப ஈஸியாத்தான் கொடுத்தீங்க, ஏதோ நல்லாருக்குன்னு சொல்றீங்க, அப்ப அடுத்த கட்டத்துக்கு ரெடியாகலாம்னு நெனைக்கிறேன்..