Tuesday, February 13, 2007

போட்டி ஆரம்பிச்சாச்சு, குருமா பண்ணிடலாமா?

என்னா போட்டின்னு கேக்கறீங்களா?

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்க வச்சு ஆரம்பிச்ச போட்டிக்கு புகைப்படங்கள்ளாம் வந்தாச்சு, சர்வேசன் கட்டம் கட்டி காட்டியிருக்காரு. ஓட்டு போட்டு, போட்டியை 'கமகம''க்க வைங்க பார்க்கலாம்.

ஒருஒரு போட்டோக்கும், சும்மா ஜாலியா கமெண்ட் போடலாமா? போட்டோ எடுத்த அண்ணன்மார்/அக்காமார், கோவிச்சுடாதீங்க.. :))

போட்டோ - A - எங்க நிறம் வேறேன்னாலும், ஒரே கோட்டுக்குள்ள வந்துட்டோம், நீங்களும் வந்துருவீங்கதானே, தமிழர்களே..அட்லீஸ்ட் ஓட்டுபோடவாவது?

போட்டோ - B - நாளக்கி காதலர்தினமாம், நானும் கொண்டாடத்தான் வந்திருக்கேன், ஆனா, உதட்டுலே வெங்காய வாசம், ஒகே வா?

போட்டோ - C - தக்காளிப் பொண்ணு, பல்லவன் பஸ்ஸிலே, வெங்காயப் பசங்க உரசரானுங்கோ, உருளைக்கிழங்கு பொடியங்கோ எஸ்கார்ட்டாம்.

போட்டோ - D - ஒரு கோப்பைக்குள் எங்கள் குடியிருப்பு..

போட்டோ - E - காமாலை கண்ணுக்கு மஞ்சள், இந்தக் காமிராவின் கண்ணுக்குமா? மஞ்சளின் மங்கலம், இந்தப் போட்டோலேயும் தங்கட்டும்.

போட்டோ - F - வெங்காயம் உரிச்சா கண்ணுக்கு அலர்ஜி, இங்க கண்ணுக்கு குளிர்ச்சி?

போட்டோ - G - வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு..அது எல்லாத்துக்கும்தான்!

போட்டோ - H - நாமிருவர் (தக்காளி,வெங்காயம்), நமக்கு ஒருவர்(உருளை)

போட்டோ - I - கூட்டமாய் ஒரு கும்மாளம்.

போட்டோ - J - அரசியல்வாதியின் கூழைக் கும்பிடு, ஓட்டு போட்டுருங்க!

போட்டோ - K - சர்வேசன் போட்டியில எங்காளுங்க கலந்துக்குறாங்களாம், அதான் குடும்பத்தோட பார்க்க வந்துருக்கோம்!

போட்டோ - L - ஒடுக்கப்பட்ட தக்காளி, ஆர்ப்பரிக்கும் வெங்காயம்!

போட்டோ - M - ஆகாயத் தாமரை அல்ல..வெங்காயத் தாமரை, அல்லித் தக்காளி உடன்

போட்டோ - N - உ.வெ தாத்தா..அதாங்க உருளைக்கிழங்கு, வெங்காய தாத்தா

போட்டோ - O - கொடுவா மீசை கிழங்கு பாரு..ஓட்டுப் போடு தூள்!

போட்டோ - P - தக தக தக தக்காளி வேட்டை!

படங்களோட பாக்கணுமா? இங்க 'க்ளிக்' பண்ணுங்க!

2 Comments:

said...

நச்சுங்க.

லிங்குக்கு பதிலா படங்களையே காட்டியிருக்கலாம், இல்லன்னா நம்ம ஸ்லைட் ஷோவ காபி/பேஸ்ட் செஞ்சிருக்கலாம் :)

அப்படியே, பொன்ஸ், Adiya வோட கடைசி ரெண்டு படத்துக்கும் கூட ஒரு விமர்சனம் போட்ருங்க :)

(அடி வாங்கினீங்கன்னா நான் பொறுப்புல்ல)

said...

அப்படிதாங்க முதல்ல நினைச்சேன், அப்புறம் பாத்தா, நீங்க 'காப்பிரைட்' எல்லாம் போட்டிருக்கீங்க..எதுக்கு வம்புன்னு விட்டுட்டேன்..இப்ப போட்டுறலாம்.. :)