Thursday, February 01, 2007

மலைச்சிங்கம் வென்ற மாதரசி?


"காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாத,
காட்டுப் புலி வழிமறிக்கும் கலங்கி நிக்காத,
மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு"-ன்னு இளையராசா பாடினது மாதிரி, அமெரிக்காவுலயும் ஒரு மம்பட்டியான் இருந்திருந்தா, ஜிம்-நீல் ஹாம் குடும்பத்தாருக்கு வசதியாய் இருந்திருக்கும்.

ஜிம் (70) - நீல் ஹாம் (65) தம்பதியர் 60 வயதைக் கடந்தவர்கள். அமெரிக்கர்கள்தாம் எந்த வயதிலும் துடிப்போடு உடல்நலம் பேணுவாங்களே, அது மாதிரிதான் இந்தத் தம்பதியரும், மலை ஏற சென்ற வாரம், கலிஃபோர்னியாவில் உள்ள ரெட்வுட் பார்க்குக்குச் சென்றிருக்கின்றனர். இந்த மலைப்பகுதியில், 'பூமா' வகையைச் சார்ந்த மலைச்சிங்கங்கள் உண்டென்பது, இங்கு மலையேற வருபவர்களுக்குத் தெரியும்.



பொதுவாகவே, இவ்வகை மலைச்சிங்கங்கள், துரத்தி வேட்டையாடுவதில் ஆர்வமுள்ளவையாம், மனிதனையும் வேட்டையாட வல்லவை என்றாலும், பெரும்பாலும் மனிதனைக் கண்டால் ஓடிவிடுமாம். ஆனால், இவர்கள் துரதிருஷ்டம், இவர்கள் போன வேளையில், இவர்களிருவரையும் கண்ட அது, ஜிம்-மைப் பிடித்துக் கொண்டது. அவரது தலையைக் கவ்வி இருக்கிறது. முறத்தால், புலி விரட்டிய பண்டைய தமிழ்ப்பெண் போல, நீல் ஹாம்தான், அருகிலிருந்த மரக்கிளைகளை ஒடித்து, அதனோடு சண்டையிட்டு, தன் கணவனை மீட்டிருக்கிறார். சாதாரண விசயமில்லை அது!


இருந்தபோதும், ஜிம் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்றே அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தமாதம், இவர்களுக்கு 50 - வது திருமணநாளைக் கொண்டாட இருக்கிறார்கள், நீலின் துணிச்சலான செயல், வீண்போகாமல் சீக்கிரமே உடல் தேற இறைவன் அருளட்டும்.

3 Comments:

said...

நானும் சில trailsல Warning board பாத்திருக்கேன். உஷாரா இருக்கணும் இனி.

தாத்தா குணமடைய இறைவன் அருளட்டும்.

said...

Was she fight with the animal shown in the pic? brave heart!!! Let him recover soon!

said...

great!! 'mara amerikkachi'.wishing the couple to celebrate their 50th wedding annversery, a real golden jubilee!
collecting news from various aspects like an octobus is to be appriciated!
Kyani