Wednesday, February 28, 2007

நீங்க 30 ப்ளஸ்-ஆ?

தர்ட்டி ப்ளஸ்-னாலே ஒதுக்கப் படறோமோன்னு நினைக்க ஆரம்பிப்பாங்க, தர்ட்டி ப்ளஸ் தாண்டின இளம் வயோதிகர்கள்? :) அந்த 'தர்ட்டி ப்ளஸ்' அலர்ஜி, தமிழ்மண பின்னூட்ட இடுகைகளுக்கும் வந்தாச்சு.

என்னைப் பொறுத்த வரையில், இது ஒரு நல்ல முயற்சிதான். பரீட்சித்துப் பார்ப்பதில் தவறில்லை. இது ஏதோ, மின்மினியின் பதிவுகள் இளமையாகவே இருப்பதினால் - அதாங்க, 30 மைனஸ் :)) சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க. ஏற்கனவே, இந்தப் பின்னூட்டங்கள் குறித்து எனது இரு வேறு பதிவுகளில் கருத்துச் சொல்லியிருக்கிறேன். ஒன்று கதை நடையில், இன்னொன்று ஜாதீயம் குறித்த பதிவில்.

சகபதிவர் சேதுக்கரசி மிகச் சரியாய்ச் சொல்லியிருப்பது போல, தமிழ்மணத்தின் இந்தப் முகப்புப் பின்னூட்டப் பகுதி Prime Real Estate-தான். இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள, ஏகப்பட்ட போட்டிகளும், தனக்குத்தானே பின்னூட்டமிடுதலும், அரட்டை கச்சேரிகளும்.. என வகைவகையான யுக்திகளைக் கையாளப்பட்டு வந்தன. இது பறிபோவது, இவர்களுக்கு வருத்தத்துக்குரிய விசயமாக இருக்கலாம்.

ஆனால், தமிழ்மணத்தின் இந்த முயற்சி, ஒரு வகையில் ஜாதீயச் சண்டைகளும், தனிநபர் தாக்குதல்களும் குறைய வாய்ப்பளிக்கும் என்றே தோன்றுகிறது. தேவையில்லாமல், அத்தைகைய பதிவுகள், கண்ணில் பட்டு, எரிச்சலூட்டிக் கொண்டிருக்காது.


இது ஒரு சோதனை முயற்சி என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள் தமிழ்மண நிர்வாகத்தினர். மேலும், சேதுக்கரசி அவர்கள் விடுத்திருக்கும் இன்னொரு வேண்டுகோளான, '24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' பகுதியில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், 30+ உட்பட எல்லா மறுமொழிகளும் தெரியவைக்க முயல்கிறோம் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

தவிரவும், இம்முயற்சி குழு மனப்பான்மையும், மதவாதங்களும், ஜாதீயமும், தனிநபர் தாக்குதல்களும் மட்டுமே Prime Real Estate-ஐ ஆக்ரமிக்காமல், சில புதிய பதிவர்களின் எழுத்துக்களுக்கும் இடம் கொடுத்து வெளிச்சம் கிட்டச் செய்யும் என்றும் தோன்றுகிறது.

தமிழ்மணத்தாரின் முயற்சிகள், இங்கேயே நின்றுவிடப் போவதில்லை, நல்ல பதிவர்களையும், நல்ல எழுத்துக்களையும் அடையாளம் காண, இன்னமும் முயற்சித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அந்த வகையில், இந்தச் சோதனை முயற்சியை, சோதனையாகவே எதிர்கொண்டு, தமிழ்மணத்திற்கு உதவலாமே!

9 Comments:

said...

present sir[im first] coming bk again with e-kalappai

said...

கலப்பையோடதான வாரீங்க, உலக்கை இல்லீயே..வாங்க..வாங்க.

said...

அட.. நம்மளையும் குறிப்பிட்டதுக்கு நன்றி நெல்லை சிவா!

//present sir[im first] coming bk again with e-kalappai//

இந்த ஃபர்ஸ்ட், பிரசண்ட் சார், உள்ளேன் ஐயா, நான் தான் ஃபர்ஸ்டா? இப்படிப்பட்ட "உபயோகமான" மறுமொழியெல்லாம் வுட்டீங்கன்னு வைங்க.. சீக்கிரம் 30+ அடிச்சு காணாமயே போயிடுவீங்க ;-)

said...

hmmmm...30+ க்கு இன்னொரு பின்னூட்டம்...

said...

சேதுக்கரசி சொன்னதுதான் வழி மொழியணும்.

நான் எப்பவாவதுதான் 30+

அதனால் அவ்வளவாக் கவலை இல்லை:-)

said...

உங்களுடையது சிறப்பான பின்னூட்டமாச்சே அரசியாரே..

நம்மளுதெல்லாம், பிரசண்ட் சார் போட்டா கூட 30+ தாண்டாதுங்க! அதுனால கவலையில்லை.

said...

ஜி ,

சூப்பருங்க, நன்றி.

said...

http://blog.thamizmanam.com/archives/85#comment-2404

said...

நற நற..பிரசன்ட் சார் சொன்னா பதிய மாட்டீங்களோ.நேற்று ஈ கலப்பை சரியாக உழவில்லை.
அது சரி நம்மள மாதிரி சாரி என்ன மாதிரி[!!!!!!!!!????] ஜல்லி பதிவர் ஏன் 30+ பத்தி கவலைப்படணும்.ஏதோ 5,10 கெடச்சாலே போதும் தானே