Sunday, February 18, 2007

கண்மணியின் முதல் வருகைக்குப் பரிசு - காய்கறிக்கலை - 3


இந்தக் காய்கறிக் கலை படங்களை போட்டு, படம் காட்டிட்டு இருக்கறப்பா, நம்ம கண்மணியின் கண் 'மின்மினி' பக்கம் பட்டுடுச்சு. முதல் வருகைக்கு பரிசு எங்கப்பா?-ன்னு ஒரு கேள்விய போட்டுட்டாங்க, கொடுக்காம போக முடியுமா? அதாங்க, இந்த பாகம் - 3 - ஐ, அவங்களுக்கான ஸ்பெஷலா போட்டிராலாம், திருப்திதானுங்களே கண்மணி.. :))யாரு இந்த கண்மணி-ன்னு கேக்கறவங்க அவங்களோட 'பல்சுவை பக்கம்'
போய்ப் பாருங்க..

"அ....முதல்...ஃ வரை கவிதை...முதல்...கடிஜோக் வரை... கோலம்..முதல்..கோழிகுருமா வரை பழமொழி...முதல்...பாட்டிவைத்தியம் வரை எல்லாம்..பேசுவோம் வாங்க வந்து சிரிச்சிட்டுப் போங்க" -ன்னு கூப்பிட்டு வச்சு விருந்து போட்டிருக்காங்க, போய்ப் பாருங்க.சூப்பரா இதுவரைக்கும் எங்க குடும்பப் படங்கள்ளாம் பாத்தீங்களா? ஜாலியா வந்துட்டுப் போனதுக்கு 'டாங்க்ஸ்-ங்கண்ணா'?

இனிமே சமைக்கிறப்போ, காய்கறி வெட்ட முன்னாடி, என்ன பாவனை காட்டுறோம்-னு பாத்துட்டு வெட்டுறீங்களா?

- முற்றும்


13 Comments:

said...

மிக அருமை நண்பரே... நச்சின்னு முடிச்சீங்க... Muje dil maange more... ன்னு மனசு கேக்குது...

நா(ன்) ஒரு புது ஃபிளாகர்ங்கணா...கொஞ்சம் நம்ம பதிவுகள‌ படிச்சி கருத்து சொன்னீங்கன்னா சந்தோசப்படுவேன்...

said...

ஹலோ! எல்லாரும் வந்தாச்சா..
happy feet மாதிரி நாமும் march
பண்ணலாமா?
நமக்குத்தான் feet-டே இல்லையே..

சிருஷ்டிகர்த்தாவின் கற்பனையையும்
மிஞ்சும் கொஞ்சும் மீன்கள்
என்ன அழகு!!

டேய்! அவன போட்டுத்தள்ளூங்கடா..
இல்லனா நா ஒங்கள போட்ருவேண்டா
ஹா..ஹா..
ஒகே பாஸ்
ஹி..ஹி..action படங்கள் பார்த்த
பாதிப்பு
நானனி

said...

மாறன்,

கலக்கிட்டீங்க, கமெண்டுல. உங்க 'ப்ளாக்' பக்கம் வந்து பாத்திருக்கேன், மூன்று பதிவுக்கும் கமெண்ட் போட விரும்புகிறேன், திரும்ப வாரேன்.

புதுப்புது மக்கள், புதுப்புது சிந்தனைகள், நல்ல படங்கள பத்தி எழுதுங்க, பார்க்க உதவியாய் இருக்கும்.

said...

நானானி

இப்பதான் நீங்க யாருன்னு, க்ளோசா கண்டுபிடிச்சா மாதிரி இருந்தது, ஆனா, இப்ப வந்திருக்கிற கமெண்ட் பாத்தா, நான் நினைச்ச ஆளில்லைங்கிற மாதிரி படுதே.

சூப்பர் கவிதைங்க..

said...

என்னலே நண்பா உம்ம அன்புக்கு அளவே இல்லாமப் போச்சு.ஏதோ நான் வெளையாட்டாக் கேக்கப் போயி நம்ம பேருல ஒரு பதிவே போட்டுடிச்சே இந்த பய புள்ள.இதைத்தான் வம்ப வெலைக்கு வாங்கறதுன்னு சொல்லுவாக.இந்த அனானியும்,கழுகும் கண்மணிதான் சிவாவின் பினாமி ங்கன்னு ஏதோ அவிங்கதான் கண்டுபுடிச்சா போல மார்தட்டப் போறாங்க.நானும் ஒரு பதிவு இன்னைய ராவுக்கு போடறதா இருந்தேன் என்னைப் பாதித்த பத்து பேருன்னு ,அதுல உம்ம பேரும் உண்டு.இப்ப நான் எதோ பதிலுக்கு சேத்த மாதிரியா இருக்கும்னுதான் கவலை.
இது ஏதோ விளம்பர டிரிக்குன்னு மக்கா போட்டுத் தாக்கப் போறாங்க.அதுக்கொண்ணும் நீரு கவலைப்படாதேயும்.
நன்றி சிவா.உண்மையிலேயே புல்லரிச்சிப் போச்சு.ஹி..ஹி

said...

நன்றி சிவா அவர்களே...குற்றம் இருப்பினும், சுட்டிக் காட்டடுங்கள்...

ந‌ன்றி,
~மாற‌ன்

said...

கண்மணி,

நீங்க கேட்டு இல்லைன்னு சொல்ல முடியுமா?

நம்மள்ளாம் இன்னும் கழுகுப்பார்வையில படற அளவு எழுதலன்னுதான் நினைக்கிறேன், அதயும் மீறி சொன்னாங்கன்னா, இலவச விளம்பரம்னு நினச்சுக்க வேண்டியதுதான்,

ஆமா, இவ்வளவு விசயம் பேசறதப் பாத்தா, நீங்க விவரமான ஆளுதான் போல.

வாரேன்..வாரேன்..வாரேன்ல..அதாங்க உங்க ப்ளாக் பக்கம் வந்து, கமெண்ட் போடத்தான்..

said...

simply wonderful!
Nice concept!
Congrats, KaNmaNi

said...

Thanks SK,

said...

படங்கள் அருமை சிவா.

said...

வியக்க வைக்கிறது
காய்கறிக் கலை!

பச்சைப் பப்பாளிப் பன்றி
படு பாந்தம் என்றால்
சிவப்புப் பப்பாளி
சீமை எலி
சிமிட்டுது கண்ணை
சீமாட்டி போல..

நடுவால நறுக்கிய
காப்சிகம் எல்லாம்
கை மொளச்சுக்
கால் மொளச்சுத்
தாவித் தத்தித்
தவளைகளானது
தத்ரூபம்.

வாத்துக்கு ஒரு
வந்தனம்;
மீன்களோ அத்தனை
அற்புதம்!

கத்திரிக்கா பென்குயின்களும்
காளான்களின் துள்ளலும்
கலக்கல் என்றால்
காப்சிக மொசக்குட்டி
அசத்தல்!

அழும் ஆரஞ்சும்
சுற்றி நிற்கும்
வாய் பிளந்த
வாண்டுகளும்
அட்டகாசம்!

காலிப் பூக்கள் 'மே மே' எனக்
கத்திடுமோ என்று ஒரு அச்சம்;
எந்தக் கறிகாயையும் விட்டு
வைக்காதீங்க இனி மிச்சம்!

கடைசியா அந்தக் குண்டுக் கன்ன
கொடமொளகாய்ங்க மீட்டிங்-
எகிறி எங்கேயோ போயிடுச்சு
உங்க முயற்சிக்கான ரேட்டிங்!

-ராமலக்ஷ்மி

said...

இம்புட்டு நாளா எங்கிருந்தீக.ஆளையேக் காங்கலையே
நல்லாயிருக்கியளா?

said...

அட ஆமாங்க. ஊருப் பக்கம் வந்திருக்கம்லா.. நெட் கனெக்ட் பண்ணுனா, வருது வருது வந்துகிட்டே இருக்குது..இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க...தமிழ்மணம் பக்கம் வந்து நாளாச்சு..நிறைய படிக்கோணும்..