Saturday, February 17, 2007

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த காய்கறிக் கலை - 2


'கல்லிலே கலை வண்ணம் கண்டார்'னு பாடினவங்க, இந்த காய்கறில வித்தை பண்றவங்கள பாத்திருந்தா மாத்திப் பாடியிருப்பாங்களோ? ஆனா, கல்லிலே கண்ட கலைவண்ணம், காலத்துக்கும் நிலைத்து இருக்கும். காய்கறி வாடிபோகுமே?

ஆனாலும், மக்களுக்கு தோணியிருக்கிற கற்பனை ஊற்று, ஆச்சரியமாத் தானிருக்கு,




எங்க வீட்டு குட்டிப் பசங்க எல்லோருக்கும் இந்தப் படங்கள்ளாம், ரொம்பப் பிடிச்சிருக்கு, அதுலேயும் அந்த மீனும், அழுகிற (cry) ஆரஞ்சும் சூப்பரோ சூப்பர்..















ஆவலோட எதிர்பார்த்த உங்க பார்வைக்கு, விடுபட்ட படங்கள் இங்கே..









நீங்க மட்டும் பாக்காதீங்க, உங்க வீட்டுப் பாப்பாவுக்கும் காட்டுங்க. இது மாதிரி விசயங்கள், அவங்களோட கற்பனா சக்தியை கூட்டும்.

இன்னும் மூணு படம் மிச்சமிருக்கு, அதுல தான் அந்த மீனும் வருது. இதுவே, பக்கம் பெரிசானதுனால, அடுத்ததுல போடறேன்.


13 Comments:

said...

இரண்டு பதிவுகளும் பார்த்தேன். அருமையான கற்பனை. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கும்...

said...

kalakkals.. thaniyaa idhukku oru potti vaikkalaame namakkulla :)

said...

superb.from where did u get these pics?nice

said...

சூப்ப்பரப்பூ...அபாரமான‌ க‌ற்பனை...ஒவ்வொன்னுல‌யும் ஒரு கதை இருக்கோ?...

சிவா அவர்கள், இந்த படங்களை வைத்து ஒரு கவிதைப் போட்டியே நடத்தலாம்...

said...

cone icecream கீழே விழுந்ததுக்கு ஆரஞ்சின் அழுகை,ரோமம் நீக்காத ஆடுகள்,என்ன கற்பனை!!மிச்சம் மீதிக்காக காத்திருக்கும்
நான்

said...

நன்றி சேதுக்கரசியாரே, அடுத்த பதிவும் ரெடியாகிக் கொண்டிருக்கின்றது!

said...

சர்வேசா,

எல்லாம் உங்க போட்டியும், போட்டியில வந்த அனானி கொடுத்த உந்துதல்தான், இல்லன்னா, எனக்கு வந்த இ-மெயில அப்படி படிச்சுட்டுப் போயிருப்பேன்.

said...

கண்மணி அவர்களே,

இதுவே உங்கள் முதல் வருகைன்னு நினைக்கிறேன்,

வெள்ளிக்கிழமையாச்சுன்னா, நம்ம பசங்க இது மாதிரி எங்கிருந்தோ புடிச்சு இ-மெயில்ல அனுப்புவாங்க, அதுல வந்தது தாங்க இது.

said...

ஆமாங்க மாறன், இதப் பாத்ததுமே, எனக்கும் அம்புலிமாமா,ரத்னபாலா கதை எழுதணும்னு தோணித்து,

நீங்க கவிதைப்போட்டி நடத்தலாம்னு சொன்னீங்க, அதே யோசனை, நம்ம நானானிக்கும் தோணியிருக்குப் பாருங்க,

உங்க பின்னூட்டத்த படிக்கறப்பவே, அவங்க பின்னூட்டமும் வந்திருந்தது, உங்க எண்ணத்த அவங்க பிரதிபலிச்சுட்டாங்க..

said...

cone icecream
கீழே விழுந்ததுக்கு
ஆரஞ்சின் அழுகை,
ரோமம் நீக்காத ஆடுகள்!

என்ன கற்பனை!!
மிச்சம் மீதிக்காக காத்திருக்கும்

- நானானி,

கொன்னுட்டீங்க போங்க, மாறன் கேட்டாரு, நீங்க கொடுத்தீட்டீங்க.. உங்க கற்பனை வளமும் நன்று!

said...

நாநானி,

கவித.. கவித.. கலக்கிபுட்டிங்கப்பூ...

-மாறன்

said...

முதல் வருகைக்கு ஏதோ பரிசுன்னாங்களே எங்கப்பா?ஹி..ஹி
இரண்டாம் வருகையும் கணக்கில சேத்துடுங்க.
உலக அழகிகளைவிட நல்ல வடிவா இருக்கதுகள் [அட நான் காய்கறியச் சொன்னேன்]ஹி..ஹி

said...

கண்மணி,

முதல் வருகைக்கு பரிசா என்ன குடுக்கலாம், அடுத்த காய்கறிக் கலை படங்களை உங்களுக்குன்னு சொல்லிடலாம், :)