Sunday, January 28, 2007

புது பிளாக்கருக்கு மாறீட்டேங்க!

ரொம்ப நாளா ஆசை..புது பிளாக்கருக்கு மாறணும்னு. ஆனா, மாறினவங்க எல்லாம், அங்க பிரச்னை, இங்க பிரச்னைன்னு சொல்லவே, பயமா இருந்துச்சு. சரி, கொஞ்ச நாளாகட்டும்னு விட்டுட்டேன்.

அப்புறம் பாத்தா, நம்ம பாலாஜி, அவரோட பதிவுல 'புதிய பிளாக்கருக்கு மாறலாம் வாங்க!!! ன்னு அழைப்பு விடுத்திருந்ததைப் படிச்சேன். சூப்பரா சொல்லியிருந்தாரு, தேங்க்ஸ்ங்கண்ணா! புதிய பொலிவில், அவரது ப்ளாக்கும் இருக்கிறதைப் பாத்துட்டு, உடனே செயல்ல இறங்கினேன். அதன் விளைவுதான் புதுப் பொலிவில் 'மின்மினி'
http://vettipaiyal.blogspot.com/2007/01/blog-post_1921.html

டெம்ப்ளேட்-ஐ மாற்றிய பிற்பாடு, ஏற்கனவே பின்னூட்டம் இட்டவங்க பேரெல்லாம், பூச்சிபூச்சியாய்த் தெரிய, 'அடடான்னு' வாயைப் பிளக்கிறப்ப, வந்தாரு நம்ம 'ஜெகத்', சரியான கைக்கண்ணாடியாய். அவரு காட்டிய வழியைப் பின்பற்றி, பூச்சியை அடிச்சனுப்பியாச்சு.
http://kaiman-alavu.blogspot.com/2007/01/blog-post_23.html

அதுக்கப்புறம், 'தமிழ்மண்த்தின்' பதிவு அட்டையை சரிபடுத்த வேண்டியிருந்தது. அதுக்கும் அவங்க ஒரு குறிப்பேடு, எளிதாய்க் கொடுத்திருந்தாங்க. அத முடிச்சேன்.
http://blog.thamizmanam.com/archives/51

அப்புறம், தேன்கூட்டின் 'கமெண்ட்'-க்காக வேண்டியவற்றைச் சரிபடுத்தினேன். அவங்களும் குறிப்பு கொடுத்திருக்காங்க.
http://www.thenkoodu.com/wiki/doku.php?id=betablogger_pinger_code


அப்புறம், ஏற்கனவே, எழுதியிருந்த பதிவுகளுக்கெல்லாம், 'Label'-இட்டு, அதையும் முகப்பில கொண்டு வந்தாச்சு.

ஆக, அப்படி, இப்படி எல்லாத்தையும் முடிக்க கிட்டதட்ட, இரண்டு மணிநேரம் ஆனது, எல்லாத்தையும் முடிக்க. எப்படி இருக்குன்னு சொல்லுங்க!


இதற்கு காரணமாக இருந்த, பாலாஜி,ஜெகத்,தமிழ்மணம்,தேன்கூட்டிற்கு நன்றி!..


நான் மாறிட்டேன்...அப்ப நீங்க!!!!!!?

6 Comments:

said...

அப்புறமென்ன அடிச்சு ஆட வேண்டியது தானே!!!

கலக்குங்கப்பா..!!

said...

ஆமாம் பாரதி, எழுத நிறைய விசயமிருக்கிறது, ஒவ்வொன்றாய்ப் பதிய வேண்டியதுதான், வருகைக்கு நன்றி.

said...

ஹூம்...இவ்வளவு வேலை செய்யனும்மான்னு தான் நான் இன்னும் செய்யவே இல்லை. எப்போ நேரம் கிடைக்குதுன்னு பார்க்கலாம் (சோம்பேரித்தனம் வேற)...

said...

It looks nice!

said...

சீனு,

அவ்வளவு நேரம் செலவழித்தாலும், பரவயில்லை, உபயோகம்தாங்க. சீக்கிரம் நேரம் ஒதுக்கி மாறிடுங்க!

said...

Thanks Kavitha,