Friday, January 19, 2007

வலைதிரட்டிகளும் சாதீயமும்

'சாதி இரண்டொழிய வேறில்லை' - என்று மூத்த புலவர் ஒளவையாரும், 'சாதிகள் இல்லையடி பாப்பா' - என்று பின் வந்த பாரதியாரும் பாடிய போதும், கற்காலம் தொட்டு இக்காலம் வரை, இந்தச் சாதிப் பித்து மட்டும் மனுசனை விட்டுப் போகவே மாட்டேங்குது. அது போவதற்கான சாத்தியக் கூறுகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவே இல்லை.

பத்தாம் வகுப்பு வரை ஒரளவுக்கு இந்தச் சாதிகள் அறிந்தும் அறியாமல் இருப்பமையால், சக மாணவர்களோடு தோழமை உணர்வோடு இருக்கிறது. அதன் பிறகு மேல்படிப்பு, இட ஒதுக்கீடு என விரிசல் காண ஆரம்பித்து, அதற்கு மேல் மெல்ல நிலை கொள்ள ஆரம்பித்து கல்யாணம், காட்சி, பிள்ளை குட்டி என்று தொடர ஆரம்பித்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.

சமத்துவ புரமும், சமபந்தி போஜனங்களும், கலப்புத் திருமணங்களும் இதை எல்லாம் போக்கிவிடும் என்பதெல்லாம் உண்மையாகி விடவில்லை.

பாரதியின் பாட்டும், ஒளவையின் செய்யுளும், உயிர்ப்பற்று போய்விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, இந்தச் சமூகமும் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றது.

வலைப்பூக்களும், சமூகத்தின் ஒரு பிரதிபலிப்புதானே? இங்கும் சாதீயத்தின் ஆதிக்கம் குறைந்து போய்விடவில்லை. சென்ற வருடத்தின் பின் பாதியிலிருந்து என்ன காரணத்துக்காகவோ தெரியவில்லை, சாதீயப் பதிவுகள் அதிகமாகி விட்டன.

இது குறித்து, பல பதிவுகள் வேதனைப் பட்டு வந்துவிட்டன. இன்று கூட அற்புதன் எழுதியிருக்கிறார். ஆனாலும் இது மாதிரியான சாதீயப் பதிவுகள் நின்று போய்விடவில்லை. எப்படி நிற்கும், சிலருக்கு இதுவே உயிர் மூச்சாய் இருக்கும் பட்சத்தில்? இம்மாதிரி எழுதி, ஒருவருக்கொருவர் இரத்தக் கொதிப்பை ஏத்திக் கொள்வதைத் தவிர, என்ன பயன் தந்திருக்கும், இம்மாதிரியான பதிவுகள்.

இப்படி எழுதப்படுகின்ற வலைப்பூக்கள், திரட்டிகளால் திரட்டப்பட்டு எல்லோர் முன்னும் மேடையேற்றப் படுகின்றபோதுதான், அதன் தாக்கம் அதிகமாகிறது.

தேன்கூடும் திரட்டுகிறது, தமிழ்மணமும் திரட்டுகிறது, ஆனால், தமிழ்மணத்தின் மீதுதான் குற்றச்சாட்டு அதிகமாயிருக்கிறது. எனது சமீபத்திய இரு பதிவுகளில் இது குறித்து வலைநண்பர்கள் சாடியிருந்தனர்.

'வலைஞர்கள் எழுதுவதற்கு திரட்டிகள் என்ன செய்யமுடியும்?' என்ற கேள்வியை பதிலாய்த் தருகின்ற தமிழ்மணம், 'ஏன் தேன்கூட்டின் மீது இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் எழவில்லை?' என்ற கோணத்தில் யோசிக்கலாமே?

தேன்கூட்டினை விட, தமிழ்மணம் அதிகம் வாசகர்களால் படிக்கப் படுகிறது என்பது மட்டுமே இதற்குக் காரணமாயிருக்க முடியாது.

தமிழ்மணத்தில், பின்னூட்டங்களின் எண்ணிக்கை, முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் பதிப்பிக்கப் படுவது கூட ஒரு காரணமாயிருக்கலாம்.

சாதீயம் பற்றி எழுதப் படுகின்ற இடுகைகளுக்கு கிடைக்கின்ற பின்னூட்டம், கண்ணைப் பறிக்கின்ற விதத்தில் அதிக எண்ணிக்கையோடு முன்னேறுகையில், ஆதரவாளர்கள் அதிகக் களிப்போடு கைதட்டவும், இம்மாதிரி பதிவுகளுக்கு பின்னூட்டம் இடக்கூடாது என்ற எண்ணத்தோடு இருப்பவர்களுக்கு, அவர்களின் கெக்கலிப்பு BP-யைக் கிளறி விட, அவர்களும் வேறு வழியில்லாமல், சங்கைக் கையிலெடுத்து ஊத ஆரம்பித்து விடுகிறார்கள்.

தமிழ்மணத்தில் பின்னூட்டங்களை, தேன்கூடு போல, scroll-ல் சிறியதாகக் காட்டலாம்.

தமிழ்மணத்தில் 'இடுகையை தடை செய்ய' வசதியிருக்கிறது. இது எந்த அளவில் உபயோகப் படுத்தப் படுகிறது என்பது தெரியவில்லை. இதன் உபயோகம் விரிவாக விளக்கப்படுமானால், இதை உபயோகித்துக் கூட, இம்மாதிரியான பதிவுகளைத் தவிர்க்கலாம். இம்மாதிரி கிடைக்கும் எதிர்ப்புகளை, எல்லோரும் அறியத்தரலாம்.

இது போன்ற விசயங்கள் ஒரு புறமிருக்க, தெரிந்தே சில விசயங்கள் தமிழ்மணம் அனுமதிக்கின்றதோ என எண்ணும் விதமாய், இம்மாத விவாதக் களத்திற்கு 'தமிழக அரசியலில் சாதீயம் - தேவைதானா? என்று தலைப்பிட்டு துவக்கியிருக்கிறார்கள். அரசியலும் சாதீயமும் என்றோ பிரிக்க இயலாத ஒன்றாக ஆகிவிட்ட வேளையில், இந்த விவாதக்களம் என்ன புதுச் சிந்தனையைத் தோற்றுவிக்கும்? ஒருவேளை, விவாதக்களம் பிரபல்யமாக உதவலாம்.

எனக்குத் தோணியதை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். இது எல்லாம் ஒரு ஆரோக்கியமான வலையுலக அனுபவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியது. 'சேவல் கூவியே விடியாத பொழுதுகள், காக்கை கூவியா' விடியப் போகிறது? இருந்தாலும், 'ஊதுகிற சங்கை ஊதி வைப்போம், கேக்குகிற காது மட்டும் கேக்கட்டும்' என்ற எண்ணம்தான்.

உங்கள் எண்ணத்தையும் பகிருங்கள், ஆரோக்கியமான வலையுலகம் படைக்க!

22 Comments:

said...

1. கூகுள் ஆண்டவரும், குமரனின் தமிழ்மண விலகலும்
2. தேன்கூடு போட்டி - சர்வே முடிவுகள்
3. தேன்கூடு போட்டி - இலவச சர்வே

ஏங்க சிவா, உங்களின் பழைய போஸ்டுகலான இந்த லிஸ்டிலேயா இந்த போஸ்டு வலைதிரட்டிகளும் சாதீயமும் tag குத்திக்கிட்டு வரும்?

said...

அனானி,


பார்க்க:

1.கூகுள் ஆண்டவரும், குமரனின் தமிழ்மண விலகலும்
2. அயோத்தியா மண்டபமும்,தமிழ்மணமண்டபமும்.

said...

இவ்வளவு சொன்ன நீங்களும் பழைய பஜனை பாடுகிறீர்கள் பாருங்கள். தேன்கூட்டின் அப்பட்டமான அரசியலைப் பேச ஒருவரும் இல்லை என்பதுதான் வேதனை. மாற்றுக்கருத்துகளுக்கு இடமளிக்கும் தமிழ்மணத்தைத்தான் குத்துதோ குடையுதோ எனக்கத்த வேண்டியது.

said...

தமிழ்மண விவாதக்களத்தில் அத்தலைப்பில் விவாதத்தைத் தொடங்கியது யாரென்று பாருங்கள். தமிழ்மணம் களமமைத்துக் கொடுத்ததோடு சரியென்று நினைக்கிறேன்.

என்னைக்கேட்டால் அவர்கள் இன்னும் கொஞ்சம் அக்கறையெடுத்து இவ்விவாதக்களத்தைக் கொண்டு செல்லலாம். மட்டுறுத்துனர் மா.சிவகுமாரையும் காணவில்லை. விவாதக்கள உறுப்பினர்களில் இருவரையும் எங்கேயும் பார்க்க முடியவில்லை. என்ன விவாதக்களமோ

said...

சாதியை பற்றியும் பேசக்கூடாது,
மதத்தை பற்றியும் பேசக்கூடாது.
சாதியும்,மதமும் இல்லாமல் இந்தியாவில் சிறு துரும்புகூட அசைவதில்லை என்ற உண்மை தெரிந்தவர்கள் இதுபோன்று பேசமாட்டார்கள்.

ஆதிக்க நிலையில் இருப்பவர்களுக்குத்தான் இதைப்பற்றி பேசினால் தாங்கமுடிவதில்லை.
சாதியால்,சகமனிதன் ஒடுக்கப்படவில்லை எனில் சாதியைப்பற்றி பேசத்தேவை இல்லை.
சாதியால் பெரும்பான்மையான மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படவில்லை எனில் சாதியைப் பற்றி பேசத்தேவை இல்லை.

"சாதிகள் இரண்டு ஒழிய,வேறு சாதிகள் இருக்கப்போவதில்லை",ஆதிக்க சாதி,ஆணவ சாதி ஒழியவேண்டும்.

"சாதிகள் இல்லையடா பார்ப்பா",இதுதான் பாரதி சொன்னது.

said...
This comment has been removed by a blog administrator.
said...

எல்லாம் அனானியாகவே போட்டா, எப்படிங்க.

இந்த விவாதத்தில் பெயர் சொல்ல என்ன கூச்சம்?

தேன்கூட்டின் அப்பட்டமான அரசியல் பற்றியதல்ல, இந்த விவாதத்தின் நோக்கம்,

said...

தேன்கூட்டின் மீது இத்தகைய குற்றச்சாட்டு எழாததற்கு காரணம், தேன்கூட்டில் சாதியப் பதிவுகள் அதிகம் திரட்டப்படுவதில்லைன்னு நினைக்கிறேன்.

சமீபத்தில் என்னுடைய வலைப்பதிவை தேன்கூட்டில் இணைத்தபோது வந்த மடல்:

We will try to review your blog and approve it soon. You might be aware, we have certain rules in place like below :

1) We do not allow sites that feature adult content (nudity included), promote gambling, promote illegal activities, promote hate, feature warez, and/or are not blogs. We will also reject blogs intended to do nothing more than garner traffic for another site. This is to keep the directory and aggregator both useful and also to cut down on spam.
2) Thenkoodu Portal does not wish to be associated with certain types of content, behavior and/or products, and will not accept blogs that contain this type of content. This includes, but is not limited to: (a) Violence, excessive use of vulgar or obscene language (b) Propaganda, potentially offensive or controversial content (c) Political, religious or charitable organizations, issues or causes.
3) Your blog should have minimum of 3-5 posts and preferably one week old before submiting to Thenkoodu. (Please understand, this rule is not to discourage you. Rather it will help us to evaluate and approve your blog request much faster).

You can find more details on our policies from here: http://www.thenkoodu.com/addblogprofile.php. We don't accept all sites, so please don't take it personally should your site not be accepted.

said...

என்ன சார் நீங்களும் சாதீயம் டாபிக்குக்கு வந்துட்டீங்க.

சாதீயம் பேசாதே என்றால், நம் இணைய வாசிகள் சிலருக்கு அலர்ஜி வந்துடும்.

"அதெப்படி பேசாமல் இருப்பது. என் இனத்தவர் படும் இன்னல் புரியவில்லையா உனக்கு? அது இதுன்னு கெளம்பிடுவாங்க."

இப்படி ஒருத்தன் அடுத்தவன தாக்கி தாக்கி பேசிதான், இவங்க இன்னல் எல்லாம் குறையப்போகுதோ?

எரியர கொள்ளியில எண்ணை விடும் செயல்தான் இவர்கள் செய்வது.

பள்ளியில் சொல்லித் தராததை, வீட்டில் சொல்லித் தராததை, இவர்கள் இணையத்தில் சொல்லிக் கொடுத்து, இளம் சந்ததியனரை சாதீயப் பாதையில் இட்டுச் செல்லும் உலக மகா குசும்பர்கள் இவர்கள்.

அரசியல் சுயநல சோம்பேறிகள் ஆதாயத்துக்காக செய்யும் செயலை, இணைய சோம்பேறிகள், 'புரட்சி எழுத்தாளன்' என்ற கெட்டப்புக்காக செய்து தன் இன நலம் காக்கிறேன் என்று தன்னைத் தானே சொறிந்து கொள்கிறார்கள்.

ஔவையும், பாரதியும் சொல்லித் திருந்தல... ஹ்ம்!

said...

//தமிழ்மண விவாதக்களத்தில் அத்தலைப்பில் விவாதத்தைத் தொடங்கியது யாரென்று பாருங்கள். தமிழ்மணம் களமமைத்துக் கொடுத்ததோடு சரியென்று நினைக்கிறேன்.//

திரட்டி இடுகையை திரட்டுவது ஒரு தானியங்கிச் செயலாக இருக்கலாம், ஆனால் 'களம் அமைத்துக் கொடுப்பது' என்பது ஒரு தானியங்கிச் செயல் அல்ல. இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. விவாதக் களத்தில், தமிழ்மணத்தின் பங்கு ஒதுக்கிவிடக் கூடிய ஒன்றல்ல, அனானி.

said...

//இவ்வளவு சொன்ன நீங்களும் பழைய பஜனை பாடுகிறீர்கள் பாருங்கள்//

ஓ..ஓ..இது ஏற்கனவே பாடிய பஜனையா..முந்தைய பஜனைக்கான லிங்க் கொடுத்தால், படித்தறியலாம்.

//மாற்றுக்கருத்துகளுக்கு இடமளிக்கும் தமிழ்மணத்தைத்தான் குத்துதோ குடையுதோ எனக்கத்த வேண்டியது//

தமிழ்மணத்தின் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று, இந்தக் கட்டுரையில் சொல்லப்படவே இல்லை. பின் ஏனிந்த வாதம்?

ஏனிந்த அனானித் திரை, வெளிப்படையாகவே பேசலாமே நண்பரே?

said...

//சாதியை பற்றியும் பேசக்கூடாது,
மதத்தை பற்றியும் பேசக்கூடாது.
சாதியும்,மதமும் இல்லாமல் இந்தியாவில் சிறு துரும்புகூட அசைவதில்லை என்ற உண்மை தெரிந்தவர்கள் இதுபோன்று பேசமாட்டார்கள்//

முற்றிலும் உண்மை. அதற்காக, சும்மா சாதிப் பேசி பொழுதைக் கழிக்க வேண்டாம் என்பதுதான் நோக்கம். வேண்டிய இடத்தில், வேண்டிய தருணத்தில், சிறுமைப் படுத்தப் படுகின்ற பொழுதினில் பேசுங்கள், அதை விடுத்து சும்மா திட்டி பொழுது போக்க உபயோகிக்க வேண்டாமே!

said...

//தேன்கூட்டின் மீது இத்தகைய குற்றச்சாட்டு எழாததற்கு காரணம், தேன்கூட்டில் சாதியப் பதிவுகள் அதிகம் திரட்டப்படுவதில்லைன்னு நினைக்கிறேன்//

ஒரேயடியாக அப்படிச் சொல்லிவிட முடியும் என்று தோன்றவில்லை கிரிஷ்.

said...

பி.என்.ஐ சார்,

உங்களை மாதிரி பெரியவங்க சொல்லித் திருந்தாதவங்க, நான் சுட்டிக்காட்டியா மாறப் போறாங்க.

சாதீயம் என்பது ஒழிந்துவிடும் என்பது வெறும் கனவுதானுங்க. நமது அரசியலைப்பும், அரசியல்வாதிகளும் அதை விடுத்து வந்து விட மாட்டார்கள்.

இன்றைக்கு நம்மிடையே சாதீயம் தாண்டி, மக்களிடையே செல்வாக்கு உள்ள தலைவர்கள் யாருமில்லை. சாதிக்கொரு தலைவர்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள், இந்த நிலையில் சாதி என்பது காணாமல் போய்விடும் என்று நினைப்பது, கற்பனையில் கூட இயலாத ஒன்று.

எனது நோக்கம், வலையுலகம் ஆரோக்கியமாக இருக்க, தேவையற்ற பொழுதினில் வீணான வாதங்களை வைத்து, கண்டவர்களைத் திட்டி குழாயடிச் சண்டை போல, வலையடிச் சண்டையாய் திசை மாறிப் போக வேண்டாம் என்பதுவே.

said...

ராஜசன்,

தமிழ்மணத்தாரின் பணியின் பளுவால், உங்கள் வேண்டுகோள், தாமதப் பட்டிருக்கலாம். சற்றே பொறுத்திருங்கள்,

உங்களின் இடுகை, இந்த விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாதமையால் நீக்கிவிட்டேன், மன்னிக்க!

said...

**--சாதீயம் பற்றி எழுதப் படுகின்ற இடுகைகளுக்கு கிடைக்கின்ற பின்னூட்டம், கண்ணைப் பறிக்கின்ற விதத்தில் அதிக எண்ணிக்கையோடு முன்னேறுகையில், ஆதரவாளர்கள் அதிகக் களிப்போடு கைதட்டவும், இம்மாதிரி பதிவுகளுக்கு பின்னூட்டம் இடக்கூடாது என்ற எண்ணத்தோடு இருப்பவர்களுக்கு, அவர்களின் கெக்கலிப்பு BP-யைக் கிளறி விட, அவர்களும் வேறு வழியில்லாமல், சங்கைக் கையிலெடுத்து ஊத ஆரம்பித்து விடுகிறார்கள்.

தமிழ்மணத்தில் பின்னூட்டங்களை, தேன்கூடு போல, scroll-ல் சிறியதாகக் காட்டலாம்**--

:)

Yea, minimizing review comments into a scroll bar may reduce the publicity to such posts.

As usual, Good post from you.

said...

//குழாயடிச் சண்டை போல, வலையடிச் சண்டையாய் திசை மாறிப் போக வேண்டாம் என்பதுவே//

Infact, the other one is better, atleast there is a purpose to get water, but scolding on behalf of cast is no use, I don't think so, these guys will realize.

said...

வாங்க கவிதா, ரொம்ப நாளா ஆளே காணோம், கருத்துக்கு நன்றி.

said...

/atleast there is a purpose to get water/

:))

said...

சிவா,
உங்களின் எண்ணமே எனதும்.சாதியத்தைப் பற்றிக் கதைத்தாலும் புதிதாக எதாவது எழுதுங்களேன்? புதிதாக சிந்தியுங்களேன்.உங்கள் சொந்த அனுபவங்களை எழுதுங்களேன்?
மீண்டும்,மீண்டும் ஒரே விடயங்கள்,அதே குழுக்கள்.அலுத்துவிட்டது.தமிழில் எவ்வளவு புதிய விடயங்களை,துறை சார் விடயங்களை, அனுபவங்களை எழுதலாம்.

said...

மிகச் சரி,அற்புதன்.

என்னாலானவற்றைச் செய்து கொண்டுதானிருக்கிறேன், இன்னமும் செய்வேன், மற்றவர்களும் அவ்வழி வரவே இப்பதிவு.

நன்றி உங்கள் வருகை+கருத்து

said...

அண்ணே..

எப்படி இடுகை தடை செய்வது வேலை செய்துன்னு கேட்டீகளே, இன்னைக்கு பண்ணிட்டாக.

தமிழ்மணப் பதிவுல பாருங்க..

http://blog.thamizmanam.com/archives/76

இப்படித்தான் வேலை செய்து, ஒகே-ங்களா?