Wednesday, January 17, 2007

அயோத்தியாமண்டபமும்,தமிழ்மண மண்டபமும்

தலைப்பைப் பார்த்தவுடனேயே புரியுமே..எதப் பத்தி பேச வாரேன்னு? எல்லாம் நம்ம சுஜாதாவோட கதையை வச்சு, 'சூடா' போண்டா, பஜ்ஜி போட்டு கதைச்சிகிட்டு இருக்கிறத பத்திதான்..

வலையுலகில் உங்க பேர் சீக்கிரம் பாப்புலர் ஆகணுமா? 'நான் பிராமணன்'னோ, இல்லா 'பாப்பான்னா உதைப்பேன்'னோ ஒரு தலைப்பு வச்சு ஒரு பதிவு போடுங்க. ஹிட்-டு பிச்சிகிட்டு போகும். அப்படி ஒரு 'ஹாட்' சப்ஜக்ட் அது.

சும்மாவே மென்னுகிட்டு இருக்கிறவங்களுக்கு, 'அவாள்' (அதாங்க அவல்)..கிடைச்சா மாதிரி சுஜாதாவோட கதை கிடைச்சிருக்கு சும்மா விட்டுடுவாங்களா என்ன?

என்னதான் இருக்கு அந்த கதையிலன்னு, ஆவலைத் தூண்டி படிக்க வச்ச வலை நண்பர்களுக்கு நன்றி. படிச்சதுக்கு அப்புறம் நம்ம கருத்தச் சொல்லலேன்னா எப்படி?

இது மாதிரி நிகழ்வுகளின் தாக்கத்தில் நடப்பது போன்ற நிறைய கதைகளை ஏற்கனவே சுஜாதா எழுதியிருக்கிறார். அத்தோடு இதுவும் போயிருக்கும், வலைஞர்களின் ஆதரவால், மிகைப்படுத்தப்பட்ட விளம்பரம் கிடைத்திருக்கிறது இக்கதைக்கு. என்னைப் பொறுத்தவரையில், இது ஒரு சாதாரணச் சிறுகதை, தேவையற்ற விளம்பரத்திற்கு ஆளாகியிருக்கிறது.

"இதன் நாயகி அடாவடியாகவும், கோபக்காரியாகவும் சித்தரிக்கப் பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். அவள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் என்பதால், எல்லா பிற்படுத்தப் பட்டவர்களும் அப்படியே என வாசகர்கள் எண்ணிவிடுவார்கள்" - என்பது இக்கதையின் மீதான குற்றச் சாட்டு.

இந்தக் கதையை படித்தபிறகு சத்தியமாய் அப்படித் தோன்றவில்லை. சகஜமான துடுக்கான பெண்ணாகத் தெரிகிறாரே தவிர, குற்றச்சாட்டில் கூறுவது போலான தோற்றம் கண்டிப்பாக இல்லவே இல்லை.

அது அடாவடியாக, கோபமாக பேசுவதும் கூட, கட்டினவனின்
குடும்பத்தாரின் ஆசிர்வாதம் வாங்கத்தான் என்பது, புரிகிற மாதிரிதான் எழுதியிருக்கிறார். அந்த கோபம் கூட பாசிடிவாகத்தான், அந்தப் பெண்மேல் தெரிகிற மாதிரி எழுதியிருக்கிறார். இறுதியில் அந்தப் பெண், அமெரிக்கா ட்ரிப்-பைத் தள்ளி வைத்து, அடிபட்ட பெரியவருக்கு ஆதரவாக அருகிலேயே இருகிறார். இந்தச் சூழலில், எப்படி பாலபாரதிக்கு அதுமாதிரியான பார்வை பட்டது என்பது புரியவில்லை.

இன்றைக்கு திரைக்கு வருகின்ற பெரும்பாலான படங்களின் நாயகிகள், சுட்டிப் பெண்ணாகத்தான் காட்டப் படுகிறார்கள். சில படங்களில், வில்லியாகக் கூட காட்டப்படுகிறார்கள். மூன்று மணிநேரப் படங்களில், தெரிந்துவிடாத சாதீய உணர்வா இதில் வெளிப்பட்டு விடுகிறது? மிகைப் படுத்தப்பட்ட கற்பனையாகவே படுகிறது, இக்கதை குறித்த குற்றச்சாட்டு.

சுஜாதாவின் பெரும்பாலான கதைகளின் முடிவில், வாசகன் எதிர்பாராத 'ட்விஸ்ட்' இருக்கும், இந்தக் கதையிலும் அது மாதிரி 'அயோத்தியா மண்டப அடிஉதை பெட்ரோல் குண்டு வீச்சு' சம்பவத்தை நினைவுறுத்தியிருக்கிறார்.

'பெரியார் சிலையை' யாரோ உடைத்தற்கு, சென்னையில் ஒரு அயோத்தியா மண்டபம் அடிக்கப் படுமானால், அது தப்பில்லையா? அதையேதான், அந்தப் பெரியவரின் குரலில், ‘‘எதுக்கு என்னை அடிச்சா? எதுக்கு கடையை எரிச்சா? நான் யாருக்கும் துரோகம் பண்ணலையே’’ ன்னு கேட்டிருக்கிறார். மிக யதார்த்தமான கேள்வியது. உணர்வுப்பூர்வமாக பார்க்காமல், அறிவுப் பூர்வமாக பார்த்தால் புரியும். அயோத்தியா மண்டபச் சம்பவம் படித்த எல்லோர் மனதிலும், கண்டிப்பாக எழுந்திருக்கும் அந்தக் கேள்வி.

இதில் எங்கு பிழை என்பது புரியவில்லை. இந்தக் கதையை எழுதியது 'சுஜாதா' என்ற பிராமணர், வெளியிட்டது 'குமுதம்' என்ற திமுக - தி.க பிடிக்காத பத்திரிக்கை. இது மாதிரியான பார்வைகள், இந்தக் கதையை திசை திருப்பி விட்டதோ? எது எப்படியோ, வழக்கமான சுஜாதவின் சிறந்த கதைகளுக்குக் கூட கிடைக்காத விளம்பரம், மிகச் சுமாரான இந்தக் கதைக்கு கிடைத்திருக்கிறது.

'சிறுமை கண்டு பொங்குவாய் வாவா'-ன்னு பாடினதுக்கு ஏற்ப, எங்கு மனிதமும், மனித நேயமும் சிறுமைப்படுத்தப்பட்டாலும், அதற்கு எதிர் குரல் கொடுக்கலாம், அது பார்ப்பனீயத்திலிருந்து வந்தாலும் சரி, அல்லது பண முதலைகளிடமிருந்து வந்தாலும் சரி. அதை விடுத்து, இது போன்ற உப்புச் சப்பற்ற விசயங்களைப் பெரிது படுத்துவது, திரைப்படங்களிலன் தமிழ் தலைப்புக்கு வரிவிலக்கு' என்பது மாதிரி, ஒரு விளம்பரமாகவே பயன்படுமே அன்றி வேறு எந்தப் பயனுமிராது.

28 Comments:

said...

உஙள் முழுக் கட்டுரையுடனும் நான்
ஒத்துப் போகிறேன்!

பாராட்டுகள்!

said...

Well written Siva, I totally accept your view.

said...

//'பெரியார் சிலையை' யாரோ உடைத்தற்கு, சென்னையில் ஒரு அயோத்தியா மண்டபம் அடிக்கப் படுமானால், அது தப்பில்லையா? //

இதைப் பற்றி எழுதப்பட்ட பல பதிவுகளில் இந்த கேள்வி கேட்கப் படவும் இல்லை. பதில் சொல்லப் படவும் இல்லை. என்னமோ போங்க...

said...

வணக்கம் நெல்லை சிவா! என்னங்க இப்பெல்லாம் ரொம்ப காப் இருக்கு ஒவ்வொரு பதிவுக்கும் நடுவுல ? நலம் தானே?

சரியான கருத்துக்கள்.
இந்த மாதிரி ஒண்ணும் இல்லாத மேட்டர ஊதி பெருசு படுத்தி அடிச்சுக்கிட்டு பொழுத கழிக்கரதுல ஒரு சுகம் (ஹிட்ஸ்) காண ஆரம்பிச்சிட்டாங்க.

யாருக்கும் பிரயோஜனமே இல்லாத வாதங்கள் இவை (என் சர்வேக்களைப் போல் :)) . எங்க போய் முடியப் போவுதோ.

said...

நன்றி எஸ்கே சார்,

said...

Thanks Sree, longtime no see? :)

said...
This comment has been removed by a blog administrator.
said...

சர்வேசன்,

நீங்க பயங்கரமா கலக்குறீங்க. ஜனரஞ்சகமா சர்வே நடத்துறீங்க.

நிறைய எழுத ஆரம்பித்து, அங்கங்கே பாதியில் நிற்கிறது. சொந்த வேலையில், சற்று பிஸி.

கூடிய விரைவில், சுறுசுறுப்பாகி விடுவேன் என்று நினைக்கிறேன். :)

கருத்துக்கு நன்றி,

said...

கருத்துக்கு நன்றி ஸ்ரீதர்,

சில பதிவுகள், இந்தக் கேள்வியினைத் தொட்டுப் போயிருக்கின்றன. சிலர் எதற்கு வம்பு என்று, வாளாவிருந்திருப்பார்கள்.

said...

சரியான பார்வை.

said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி, சாத்வீகன்.

said...

//சும்மாவே மென்னுகிட்டு இருக்கிறவங்களுக்கு, 'அவாள்' (அதாங்க அவல்)..கிடைச்சா மாதிரி சுஜாதாவோட கதை கிடைச்சிருக்கு சும்மா விட்டுடுவாங்களா என்ன?//

:))

ஆமோதிக்கிறேன்.

said...

தங்கள் கருத்துடன் முழுதாக ஒத்துப்போகிறேன்.....சுஜாதா பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பதே இந்த எதிர்ப்புக்களுக்கு காரணம்.....மேலும் சிலருக்கு தங்களால் இப்படி எழுத வரவில்லையே என்பதும் ஒருகாரணமாக இருக்கலாம்...ஹிஹிஹி

said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அருண்

said...

ஹை அனானி,

வருகைக்கு நன்றி, முந்தைய சுஜாதாவின் கதைகளில் ஒரு துள்ளலும், பஞ்ச்சும் இருக்கும், இப்போது வரும் கதைகளில் சாரம் குறையவே இருப்பது போல் தோன்றுகிறது.

சுஜாதா மாதிரி எழுத இயலவில்லை என்பது, எதிர்ப்புக்குக் காரணமாக இருக்க முடியாது என்பது என் கருத்து.

said...

//மிக யதார்த்தமான கேள்வியது. உணர்வுப்பூர்வமாக பார்க்காமல், அறிவுப் பூர்வமாக பார்த்தால் புரியும்.//

There is no time for the perverts to think sensibily, they wanted to create a hype and have been humbled by the logical thinking people and now to side track the thrashings received, have come out with another story of "Poli" and getting "jallis" from the pervert group.

said...

i am aasath

On 2004 end, Sankaraachaari (religion of Advaidaa) had arrested for a Murder case. While he turn on at Meenambakkam, all Brahmin persons came there with cried eyes... Why?

said...

அய்யா,
தமிழ் மண மண்டபம் இப்போது சில ஈனங்களிடம் சிக்கி தவிக்கிறது.தரித்திரத்துக்கு பால..ம் போடுபவர்களிடமிருந்து இதைக் காக்க எங்கள் தெய்வம் பசும் பொன் அய்யாதான் வர வேண்டும்.
அன்புடன்
பாண்டியன்

said...

//and now to side track the thrashings received, have come out with another story of "Poli" and getting "jallis" from the pervert group.//

அனானி அய்யா,
அந்த போலி கதையை சொன்னவர் முழிக்கிற முழியைப் பாத்தா அப்படிதான் தோன்றுகிறது.இசகு பிசகா செஞ்சி,ஆடு திருடிய கள்ளன் போலத் தான் முழிக்கிறாரு.இருந்தாலும் அவர் ஒரு பெர்வெர்ட் என்று சொல்வது சரியாகாது.

பாலா

said...

ஆசாத்,

நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கும், இந்தக் கதை பற்றிய விவாதத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

எந்த ஒரு நேசிக்கப் படுகின்ற தலைவருக்கும்/மனிதனுக்கும், இன்னல் நேர்ந்தால், அந்தந்த இனத்தவர்/சார்ந்தவர் தங்கள் மனக்குமுறலை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவர், சங்கராச்சாரியாருக்கு அவ்விதம் வெளிப்படுத்தியிருக்கலாம்.

said...

பாண்டியன் சார்,

தமிழ்மணத்துக்கும், இது மாதிரி எழுதுபவர்களுக்கும் சம்பந்தம் இருக்க முடியாது. தமிழ்மணம் ஒரு திரட்டி மட்டுமே. இதற்கு தமிழ்மணத்தைக் குறை கூறுவது எந்த விதத்திலும் சரியாகாது.

said...

பாலா,

உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன். எனக்கு முன்னர், க்ருத்துச் சொன்னமைக்கு நன்றி.

said...

// மிக யதார்த்தமான கேள்வியது. உணர்வுப்பூர்வமாக பார்க்காமல், அறிவுப் பூர்வமாக பார்த்தால் புரியும். அயோத்தியா மண்டபச் சம்பவம் படித்த எல்லோர் மனதிலும், கண்டிப்பாக எழுந்திருக்கும் அந்தக் கேள்வி.
//
நிச்சயமாக!

said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜீவா.

said...

சிவா,

மிக மிக நல்லதொரு பதிவு, அவசியமான ஒன்றும் கூட ! நன்றி.

said...

சிவா,

மிக மிக நல்லதொரு பதிவு, அவசியமான ஒன்றும் கூட ! நன்றி.

said...

நன்றி, அன்பு பாலா.

said...

சிவா,
கருத்தைப் பதிய அனானியாகத் தான் பின்னூட்டம் இட வேண்டும் என்று அஞ்சும் அளவுக்கு நிலைமை இருப்பது மோசம்.
ஆனால் இந்தப் பதிவு மிகவும் தேவை.அதற்கு ஆதரவு தெரிவிப்பதும் பதிவர்களின் கடமை.