Sunday, January 07, 2007

சதாமின் தூக்கு - சிறுவன் பலி?

சதாம் தூக்கிலிடப்பட்டது குறித்து ஆங்காங்கே சில கருத்துப் பரிமாறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நமது 'சர்வேசரும்' இது குறித்து சர்வே பதிவு செய்து, வெளியிட்ட முடிவில், பெரும்பாலோர் துக்கப்பட்டிருக்கிறார்கள்.

நமது மக்கள் எப்போதுமே உயிர்பலியை ஆதரிப்பதில்லை. என்கவுண்டரில் சுடப்படுகின்ற ரவுடிகளுக்கே கூட பச்சதாபப் படுகிறவர்கள், நிதானமாய் ஆராயாமல், அவசரமாய் நிறைவேற்றப்பட்ட சதாமின் தூக்கினை எப்படி ஆதரிப்பார்கள்?

Image and video hosting by TinyPic

இந்தத் துக்கம் ஒரு புறமிருக்க, இன்னொரு துயரச் செய்தியை கேளுங்கள். சதாம் தூக்கிலிடப்பட்ட செய்தியை, தொலைக்காட்சியில் கண்ட ஸ்பானிஷ் 10 வயது சிறுவன், அது போல 'மிமிக்' செய்ய முயன்று, மரணப்பட்டுப் போயிருக்கிறான். ஆழ்ந்த அனுதாபங்கள். CNN-ல், இந்தச் செய்தித் துளியைப் பாருங்கள்.

தொலைக்காட்சியில் இதனைப் பார்த்தவன், தனது மாமாவிடம் இது குறித்து வினவ, 'சதாம் கெட்டவன், அதனாலேயே அந்தத் தண்டனை' என சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார், அந்தக் காட்சி அவனைப் பாதித்த அவலம் புரியாமல். வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு, தூக்கின் காட்சி நினைவில் வந்திருக்க வேண்டும், தொலைக்காட்சியில் கண்டதை, விளையாட்டாய்த் தனக்குத் தானே செய்ய முயற்சித்திருக்கவேண்டும், வினையாகி உயிர் பிரிந்திருக்கிறது.

சதாமின் தூக்கினைவிட, இந்தச் செய்தி மிக வருத்தமளித்தது. மீடியாக்கள் இது போன்ற செய்திகளை, காட்சித்தொகுப்பாய்க் திரும்பத் திரும்ப காட்டுவது, எத்தகைய பாதிப்புகளைக் கொடுத்திருக்கிறது பாருங்கள்? மீடியாக்கள், இது போன்ற செய்திகளை எச்சரிக்கை உணர்வோடு அணுக வேண்டும்.

பெற்றோரும் இது போன்று உளவியல் ரீதியாக பாதிக்கப் படும் என எண்ணுகின்ற செய்திகளை குழந்தைகள் முன்னர் பார்ப்பதனைத் தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்விற்காக, என்னைப் பாதித்த இந்தச் செய்தியினை உங்களோடு பகிர்கிறேன்.

11 Comments:

said...

:(((((((((((((

said...

எனக்கு வந்த மின்னஞ்சல்
Teenager hangs herself over Saddam's execution
> (AFP)
>
> 4 January 2007
> KOLKATA - A 15-year-old girl from eastern India hanged herself in response to the execution of Iraqi dictator Saddam Hussein, police and family members said on Thursday.
> "She said they had hanged a patriot. We didn't take her seriously when she told us that she wanted to feel the pain Saddam did during the execution," the girl's father, Manmohan Karmakar, told AFP by phone from the town of Kharda.
> He said his daughter, called Moon Moon, had become extremely depressed after watching Saddam's execution on television. "She kept watching the scene over and again and didn't take food on Saturday and Sunday to protest the hanging," he said.
> Police superintendent Pravin Kumar confirmed the suicide, saying the girl had strung herself up from a ceiling fan and was found dead early on Wednesday.
> The communist-ruled state of West Bengal has condemned Saturday's execution of Saddam, with thousands of people taking to the streets ..

said...

இது போல மற்றொரு சம்பவம் பாகிஸ்தானிலும்
நடந்ததாக அறிந்தேன்...

எங்கு போகிறோம் நாம்??

said...

உலகமே மகிழ்ந்திருந்தது என நினைத்தேன்.

மிக்க வருத்தமளிக்கிறது.

ஆனாலும், இதை வைத்து சதாம் என்ற கொடுங்கோலனுக்கு கிடைத்த தண்டனையை நீர்த்து போனதாக நினைக்கக்கூடாது.

பல லட்சம் ஈராக் மக்களின் நிம்மதியை பார்க்க வேண்டும்

said...

மிகவும் வருத்தமிக்க நிகழ்வு.

:((

said...

அடப்பாவமே.

தூக்கில் போடும் வைபவத்தை காட்டியது கண்ணியமான செயல் அல்ல.
In Sadams case, I believe it was done to convince people that he was really being killed.

Though parents have the responsibility to switch channels when such scenes are being telecast, it is nearly impossible, because these days, media shows bad stuff almost all the time.

Lot of perverts amongst us. Lot more adding everyday.

Thanks for the advice.

said...

Anonymous said...
என்ற முறைமையே வலைப்பதிவு உலகில் எனக்கு பிடிக்காத விடயம்.
தன்பெயர் சொல்ல விருப்பம் இல்லாமை என்பது தனிமனித சுதந்திரம் என நாம் கருதினாலும். அப்படிச் சொல்வதில்(Anonymous said...)
என்பதில் உள் ஒளிந்திருக்கும் அரசியலை இந்த வலைப்பதிவாளர் புரிந்துக் கொள்வது நலம்.

இனி Anonymous சொல்லும் விடயத்திற்கு வருவோம்.

"""ஆனாலும், இதை வைத்து சதாம் என்ற கொடுங்கோலனுக்கு கிடைத்த தண்டனையை நீர்த்து போனதாக நினைக்கக்கூடாது.

பல லட்சம் ஈராக் மக்களின் நிம்மதியை பார்க்க வேண்டும்''''

என Anonymous சொல்லும் பொழுது எழுகின்ற கேள்வி இது.

எந்த % ஈராக் மக்கள் சதாமின் மரணத்தால் சந்தோஷம் அடைந்தார்கள் என்ற தகவல் Anonymous வசம் உண்டா என்ற கேள்வி எழுகிறது?
ஏனெனில் இது ஜனநாயகம் யுகம் இல்லையா?
அதனால் இந்த கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று.

இன்றைய உலக சூழலில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது (அதாவது சதாமின் மரணத்தின் நிகழ்வின் பொழுது) சதாமின் நடத்தை அல்ல.
அமெரிக்காவின் நடத்தை என்பதை புரித்துக் கொண்டால் மட்டுமே பரவாக சதாமின் மரணத்தையிட்டு எழும்பி இருக்கும் உலக அளவான அதிர்வில் உள் பொதிந்திருக்கும் அரசியலையும் நியாயத்தையும் புரிந்துக் கொள்ள முடியும்.

சதாமின் மரணத்திற்கு பின் புஷ்வும்,
ஈராக்கின் ஆட்சியாளர்களும் விடுத்திருக்கும் அறிக்கையும் ஒரு வகையில்
Anonymous வகைச் சார்ந்தது தான்!!!!!

said...

பாகிஸ்தான் சம்பவத்தின் செய்தி இங்கே...

http://www.news24.com/News24/World/News/0,9294,2-10-1462_2050341,00.html

said...

மேமன்கவி சார், உங்களின் இ-மெயில் தகவலும், கார்த்திக் அவர்களின் தகவல் குறித்த செய்தியும் பல தளங்களில் வெளியாகி உள்ளன.

இது போன்ற நிகழ்ச்சிகள் பார்க்கக் கூடிய சிறுவர்கள் மத்தியில், உளவியல் ரீதியாக ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் கண்கூடு.

சம்பந்தப் பட்டவர்கள்,மீடியாக்கள் சிந்தித்து செயல்பட்டால் நன்று.

அனானி,

அமெரிக்கா அதன் சார்புக்கு ஆதரவு திரட்ட, இது போன்ற நிகழ்வுகளை 'சதாம் கெட்டவன்' என்று சொல்லிக் கொள்ள பயன்படுத்துகிறது. மீடியாக்களும் துணை போகின்றன.

'உலகமே மகிழ்ந்திருந்தது' என்று நினைத்திருந்தீர்கள் என்றால், அது சரியல்ல.

said...

நண்ப நெல்லை சிவா அவர்களே!

நீங்கள் சொன்ன கருத்து
100க்கு 100 உண்மை!
ஆனால்
மீடியாக்களின் குறிப்பாக VISUAL MEDIA
களின் பொறுப்புணர்ச்சியுடன்
இந்த மூன்று பிள்ளைகளின் மரணத்திற்கு அமெரிக்காவே முழு பொறுப்பேற்க வேண்டும்.என்பதே கருத்து.

பிற்குறிப்பு_
உங்கள் வலைப்பதிவுகள் கலைத்துவமாக இருக்கின்றன. பாராட்டுக்கள்!

said...

நன்றி மேமன்கவி அவர்களே..உங்களின் வாழ்த்துக்கள், மேலும் சிறப்பாய் எழுதத் தூண்டுவதற்கு ஊக்கம் அளிப்பதாய் இருக்கின்றது.