Friday, December 08, 2006

கூகுள் ஆண்டவரும், குமரனின் தமிழ்மண விலகலும்

கம்ப்யூட்டருக்கு உயிர் கொடுத்து எல்லா தரப்பு மக்களையும் உபயோகிக்க வகை செய்த பெருமை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உண்டென்றால், அதற்கு நிகராக அந்தப் பெருமையில் பங்கு கொள்ளும் இன்னொரு நிறுவனம் 'கூகுள்' என்றால் மிகையில்லை.

'பையன் பெரிய அறிவு ஜீவி. என்ன கேட்டாலும் 'டாண்..டாண்னு பதில் சொல்லுவான், கம்யூட்டர் ப்ரெய்ன்' னு சில ப்ரைட் ஸ்டூடண்ட்ஸப் பத்திச் சொல்வோம். அந்த மாதிரி, கணிணிப் பயன்பாட்டில் 'கூகுள் தேடல்' ஒரு ப்ரைட் வாத்தியார். நிறைய கணிணித்துறை வல்லுநர்களுக்கு, கூகுள்தான் தெய்வமே. அதுனாலதான் கூகுளாண்டவர்ங்கிறாங்க சிலபேர்.

'கேளுங்கள் கொடுக்கப்படும்..தட்டுங்கள் திறக்கப்படும்'னு சொல்றதுக்கு ஏற்ப,
அடிக்கிற புரோகிராம்ல பிழையிருக்கிறதா? இல்லை முழு ப்ரோக்ராமுமே வேணுமா...key words-ஐ கூகுள்ல தட்டிக் கேளுங்க...வேணுங்கறது கூகுளில் கிடைக்கும்.

கணிணிப் பயன்பாடு குறித்த கேள்வி மட்டுமல்ல, சாதரணமா 'இப்ப சிங்கப்பூர்ல டைம் என்ன இருக்கும்?'(current local time in singapore) னு ஒரு கேள்வி கேட்டீங்கன்னா, உடனே உங்க கண் முன்னாடி விடை சொல்லிடும்.

யாஹூ, எம்.எஸ்.என் - தேடுதல்கள் கூட, அவ்வளவு துல்லியமா தேடுதல் வேட்டை முடிவுகளைத் தருவதில்லை.

என்னய்யா, சும்மா கூகுள் புராணம் பாடிகிட்டு இருக்கீறு? போட்ட தலைப்புக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்-ன்னு யாரோ முணுமுணுக்கிறீங்க. வந்துட்டேங்க பாயிண்டுக்கு.

நேத்து நம்ம குமரன் "தமிழ்மணத்துல இருந்து விடை பெறுகிறேன்"னு ஒரு பதிவ பதிப்பிச்சிருந்தார். ஆனாலும் தொடர்ந்து பதிவுகளை, தன் வலையில் அவ்வப்போது பதிவிடுவதாகச் சொல்லியிருந்தார்.

அவர் அப்படி பதிவிட்டால், நமக்கு எப்படித் தெரியும், ஓவ்வொரு முறையும் அவர் வலைப்பதிவு பக்கம் போய்ப் பார்ப்பது சிரமமாச்சேன்னு, யோசிச்சிகிட்டு இருக்கிறப்ப 'Google Labs'ன், கூகிள் ரீடர்ங்கிற இலவச சேவை கண்ணில் பட்டது.

இதுவும் ஈ-மெயில் மாதிரிதாங்க. இந்த சேவையை உபயோகப்படுத்தி, எப்பப்ப நீங்க சந்தா பண்ணியிருக்கிற வலைப்பதிவர் புதுப் பதிவுகள் பதிகிறாரோ, அப்ப எல்லாம், அந்தப் பதிவுகள் உங்க ரீடர்-ல சேர்ந்துக்கும்.

உபயோகிப்பதும் ரொம்ப சுலபம். நாம எல்லோருக்கும் கண்டிப்பா கூகுள் ஈ-மெயில் அக்கவுண்ட் இருக்கும். கூகிள் ரீடர் (http://www.google.com/reader/view) தளத்திற்குச் சென்று, உங்க கூகுள் அக்கவுண்ட்-க்கு 'லாக்-இன்' பண்ணினீர்கள் என்றால், உங்கள் ப்ரொளசரின் இடதுபுறம், கீழே காண்பது போல உள்ள திரை தோன்றும்.

Image and video hosting by TinyPic

அதில் 'Add Subscription' என்பதன் மேல் 'க்ளிக்' செய்யவும். உங்கள் ப்ரொளசரின் இடதுபுறம், கீழே காண்பது போல உள்ள திரை தோன்றும்.

Image and video hosting by TinyPic

தெரிகின்ற கட்டத்தினுள், எந்த ப்ளாக்கரின் பதிவுகளுக்கு 'சந்தா' செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அவரது ப்ளாக் முகவரியினை இட்டு, "Add" பட்டனைத் தட்டவும்.

Image and video hosting by TinyPic

அவ்வளவுதான், இனி அவர் எப்போதெல்லாம் புதுப் பதிவு பதிகிறாரோ, அப்போதெல்லாம், இந்த ரீடரின் - In-box-ல் தகவல் வந்துவிடும், இங்கிருந்தே நீங்கள் படிக்கலாம்.

நீங்கள் படித்தது பிடித்திருந்தால், அந்த இடுகையின் கீழேயுள்ள 'Share'-ஐ க்ளிக் செய்து, அவற்றை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.Image and video hosting by TinyPic

உங்கள் ப்ளாக்கில் கூட பதிவு செய்து கொள்ளலாம். தகவல் உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன். சரிதானே?

ப்ளாக்கில பதிவு பண்ணினா, எப்படி இருக்கும்னு பார்க்கணுமா, கீழே பாருங்க என்னோட கூகிள் ரீடரை..

24 Comments:

said...

நல்ல பதிவு சிவா,

குமரன் முதலிய நல்லவர்கள் போவது தமிழ்மணத்துக்கு இழப்பே. இதற்கு முன் இந்த மாதம் ஜயராமனும் ஏதோ பிரச்சனையால் விரட்டப்பட்டதாக கேள்வி. போகிற போக்கை பார்த்தால், தமிழ்மணத்தில் "மணக்கும்" சில பதிவுகள்தான் பாக்கி இருக்கும் போல.

said...

நீங்கள் firefox உபயோகிப்பவராக் இருந்தால் wizz RSS reader உபயோகித்து பாருங்கள். அந்த கூகிள் ரீடரை உங்கள் கணினியில் நிறுவியதுபோல்.

said...

தகவலுக்கு நன்றி!
இதைப் பயன் படுத்துவேன்.
தமிழ் மணம் எங்கே?, போகிறதெனப் புரியவில்லை.
யோகன் பாரிஸ்

said...

இததான் நான் செய்கிறேன். நான் விரும்பி படிக்கும் பதிவர்களை ரீடரில் இணைத்துவிடுவதால் அவர்கள் எப்போது பதிவிட்டாலும் அவர்களது புதிய பதிவு(கள்) நான் என் ரீடரை ஓப்பன் செய்யும் போது எனக்கு தனியாக தெரியும். நல்ல வசதி, ஆனால் ஒரே குறை, பின்னூட்டம் இட முடியாது, அதனை செய்ய, அந்தப்பதிவினை டபுள் கிளிக்கி அதன் பின் பின்னூட்டம் இடவேண்டும்.

said...

வணக்கம் சிவா.. வந்ததுமே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க.. ஷேரில் என்னுடைய பதிவை பார்த்ததுதான் அந்த ஆச்சர்யத்துக்கு காரணம்.. ஹீ ஹீ ஹீ..

said...

நன்றி ஏமாறதவரே.

உங்களது மற்ற கருத்துக்கள் குறித்து, தனிப்பதிவு எழுத எண்ணம்.

said...

A very helpful post!
Thanks a lot!

said...

மிக்க நன்றி நெல்லை சிவா. எனக்கு இது மிக உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். தொடர்ந்து படிக்க வேண்டும் என்று பல வலைப்பூக்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். அவற்றை எல்லாம் இந்த ரீடரில் போட்டுவிட்டால் நன்றாக இருக்கும். செய்யத் தொடங்கிவிடுகிறேன். மீண்டும் நன்றி.

said...

ரொம்ப நாளாக கூகுள் ரீடர் பத்தி கேள்விப்பட்டிருந்தேன். ஒரு தடவை நோண்டிப் பார்த்துட்டு புரியாம விட்டுட்டேன். இப்ப உங்க இடுகை பார்த்து ஆர்வம் வந்து நானும் ரீடர் ஆரம்பிச்சுட்டேன். நன்றி. இது போன்ற விதயங்களை தொடர்ந்து அறியத்தாருங்கள்.

said...

கருத்துக்கும், வருகைக்கும் நன்றி நாடோடி.

said...

யோகன் பாரிஸ்,

கருத்துக்கு நன்றி. வலைப்பதிவர்களின் செயல்களுக்கு, தமிழ்மணம் காரணமாக முடியாது, என்பது என் கருத்து.

said...

நன்றி அனானி,

பின்னூட்டம் குறித்த தகவலுக்கும் நன்றி.

said...

மை ஃபிரண்ட்,

உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி சொல்ல வேண்டும். இந்த பதிவு எழுத நீங்களும் ஒரு தூண்டுகோல்.

உங்கள் பதிவும் சிறப்பாக வந்து கொண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள்.

said...

உங்கள் கருத்துக்கு நன்றி எஸ்.கே அய்யா.

said...

குமரன்,

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் பதிவு, ஏற்கனவே என் ரீடரில் இருக்கிறது :)

ரீடரில் இருந்து பின்னூட்டம் இட முடியாது என்பது 'அனானி' தந்த தகவல். அதற்கு, அந்தந்த பதிவர் ப்ளாக்கிற்குச் சென்றுதான் பதிய வேண்டும்.

said...

ஓ..ஓ..அதுக்குள்ளேயே உபயோகிக்கத் தொடங்கி விட்டீர்களே, ரவி சங்கர்.

ஏதோ நாம உபயோகிக்கிறது, மத்தவங்களுக்கும் பயன்படட்டும் என்ற எண்ணம்தான்...

அறிந்த/அறிகின்ற தகவல்களை அவ்வப்போது தருகிறேன்.

said...

கூகிள் திரட்டியை வைத்து தேன்கூட்டின் கூகிள் பக்கம் பார்த்தீங்களா?

http://google.thenkoodu.com

said...

தகவலுக்கு நன்றி!

said...

நன்றி சிவா. இன்று ஒரு தகவலாக இது எனக்குக் கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி.
ரீடரைப் பார்த்துவிட்டு வருகிறேன்.

said...

Girish,

தேன்கூட்டின் கூகிள் திரட்டி பார்த்தேன். நிறைய புதிது புதிதாய் முயற்சிக்கிறார்கள், முன்பிருந்ததை விட தேன்கூடு பொலிவோடு இருக்கிற தோற்றம்.

திரட்டி'ஜி' நன்றாக இருக்கிறது, மிகக் குறைந்த அளவே உபயோகப்படும் என்று தோன்றுகிறது

said...

வருகைக்கும், அதைவிட கருத்தினைச் சொன்னதற்கும் நன்றி.

நிறையபேர் படித்தாலும், கருத்துச் சொல்ல நேரம் செலவிடுவதில்லை.

வல்லிசிம்ஹன்,

உபயோகப் படுத்திப் பாருங்கள். எளிதுதான்.

said...

நெல்லையைப் பார்த்தவுடனே உள்ள புகுந்துப் பார்த்தேன். அருமையான பதிவு.

தமிழ்மணம் போல ரீடரும் ஒரு திரட்டி. கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடி பார்த்தேன். அப்ப பதிவுலகில் இல்லைங்கிற்தால அப்டியே விட்டுட்டேன். இப்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.

said...

//திரட்டி'ஜி' நன்றாக இருக்கிறது, மிகக் குறைந்த அளவே உபயோகப்படும் என்று தோன்றுகிறது//

இல்லிங்க.. சரியா உபயோகிச்சா, நிறையவே உபயோகப்படும். யோசிச்சு பாருங்க. குமரன் மாதிரி மட்டுமில்லாம திரட்டிகள் எதிலயும் சேராத எத்தனையோ பதிவுகளை கூகிள் திரட்டி காண்பிக்குது. விடாது கருப்பும் வருது, சிகப்பும் வருது. அனைத்து போலிகளின் தளமும் தெரியுது. அதைத் தவிர பிளாக் மென்பொருளை உபயோகப்படுத்தற இணையதளங்களிலிருந்தும் திரட்டி காட்டுது.தமிழுக்கான நீண்டகால அடிப்படையில் சரியான திரட்டி கூகிள்தான்னு நினைக்கிறேன்.(யாரும் விலகறேன்னு சொல்ல முடியாது பாருங்க:-)) அதினாலத்தான் தேன்கூட்டில இதை முன்னிலைப்படுத்தறாங்க போல.

said...

ரவிசங்கர் தளத்தின் மூலம் இங்கு வந்தேன்.

மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அறிமுகத்திற்கு மிக்க நன்றி!