Saturday, December 02, 2006

தேன்கூடு போட்டி - சர்வே முடிவுகள்

தேன்கூடு போட்டி குறித்த சர்வே-க்கு அப்புறம் நிறைய சர்வேக்கள் வந்து, முடிவுகளையும் அறிவிச்சுட்டாங்க. நம்ம சர்வே-க்கும் முடிவு அறிவிக்க வேண்டாமா? அதான், முடிவுகளைக் கீழே பதிப்பிச்சாச்சு.

புதியவர்கள் ஊக்குவிக்கப் படுவதாகச் சொல்கின்ற கருத்துக்கும், பிரபல்யங்களின் படைப்புகள் மட்டுமே படிக்கப் படுகின்றன என்ற கருத்துக்கும், மிகச் சிறிதளவே வித்தியாசம்.

இது குறித்து, கடந்த மாத தேன்கூடு போட்டி முடிவுகள் அறிவிப்புகளிலும், கருத்துக்கள் பரிமாறப் பட்டிருக்கின்றன.

இது குறித்து மேலும் சொல்ல ஒன்றும் இல்லை என நினைக்கிறேன், தேன் கூடே இம்மாதத்தோடு போட்டிக்கு 'பைபை' சொல்ல இருக்கிறார்களாம்.

இது குறித்து எனக்குச் சற்று வருத்தமே, சரியோ, தவறோ போட்டின்னு ஒன்னு வச்சு, எல்லோருடைய சிந்தனைக் கதவையும் திறந்து, படைப்புகளை ஆக்க உதவிய தேன்கூடு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும்.

யாருக்கு எப்படியோ, எனக்கு இந்தப் போட்டியே, நிறைய படைப்புகளை படைப்பிக்கவும், புதுப்புது வலைநண்பர்களை அடையாளம் காட்டவும் உதவியது என்றால், மிகையில்லை.
அதுக்காகவும் தேன்கூட்டிற்கு ஒரு 'ஓ'.


0 Comments: