Wednesday, November 22, 2006

தேன்கூடு போட்டி - இலவச சர்வே

நாளுக்கு நாள் புதிய வலைப்பூக்கள் அறிமுகம் ஆகிக் கொண்டேயிருக்கிறது. எத்தனை வலைப்பூக்கள் தொடர்ந்து பதியப் படுகிறது என்பது கேள்விக்குறியாக இருந்த போதும், சில புதியவர்கள் முதல் பதிவிலேயே தனிக்கவனம் பெற்று, 'அட' சொல்ல வைக்கிறார்கள். அந்த வகையில், சமீபமா நா 'அட' சொன்ன புதிய தளம்,

'சர்வே'சன் - ஆக்கியவன் அல்ல அளப்பவன்

சர்வே எப்படியடா பண்ணியிருக்கிறார் என்று பார்த்தால், 'வருகைப் பதிவர்' எண்ணிக்கை போல, இதுவும் ஒரு இலவச உதவிதான்.

'இலவசம்' ங்கிற தலைப்பினை ஒட்டி நடக்கின்ற தேன்கூடு போட்டி குறித்தும், ஒரு சர்வே எடுத்தால் என்ன என்று தோன்றியது. இலவசம் தான, ஒன்னு பண்ணிப் பாத்தா போச்சுன்னுட்டு, உங்கள் முன்னே சமர்பித்தாச்சு. நீங்களும் உங்க கருத்தச் சொல்லுங்க.


பி.கு: சர்வேசருக்கு நன்றி. :)



2 Comments:

said...

இதுவரை பெற்றிருக்கும் வாக்குகள்:

வலையில் சுவாரஸ்யம்: 22%

சும்மா போரடிக்கிறங்கப்பா: 8%

புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது: 42%

பிரபலம் ஆனவர்கள் எழுத்துக்கள் மட்டுமே படிக்கப் படுகிறது 26%

போட்டியா? அப்படின்னா? 2%

said...

புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது என்பதே பெரும்பாலானோர் கருத்து.

தேன்கூடு பெருமைப்பட்டுக் கொள்ளலாம். :)

இந்த வார இறுதிவரை பார்க்கலாம், எப்படி போகிறதென்று.