Sunday, November 12, 2006

வலைப்பூ...தலைப்பு...வாழப்பூ

காட்சி - 1

Image and video hosting by TinyPic (வெளியே மழை பொழிபொழி என்று பொழிந்து கொண்டிருக்கிறது. நடிகர் வடிவேலு, அவரது அலுவலகத்தில் நடந்து கொண்டிருக்கிறார். சக நடிகர்கள் கஞ்சா கருப்பு, மயில்சாமி, திருநெல்வேலி பெரியவர் அங்கங்கே உள்ள இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள்.)

'என்னாடா இந்த மழை இப்படி போடு போடுன்னு போட்டுக்கிட்டு இருக்கு..ஒரு பயல வெளிய விடாது போலிருக்க, இன்னைக்குள்ள அவுட்டோர் சூட்டிங் அவ்வளவுதானா' - என்று தன்பாணியில் சொல்லிக்கொண்டே, தன் அலுவலக இருக்கையில் வந்து உட்கார்ந்தார் 'வைகைப்புயல்' வடிவேலு.

கஞ்சா கருப்பு: 'அட போங்கண்ணே..இதுக்குப் போயி வருத்தப்பட்டுகிட்டு. மழை பெஞ்ச்சா, பள்ளிக்கூடம்லாம் லீவு உட்டுருக்காங்கண்ணே..நீங்களும் சாப்பிட்ட முனியாண்டி விலாஸ் பிரியாணி செரிக்க, கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கண்ணே'

வடி: அடடடா...பாசக்கார பய டா நீ... கொஞ்சம் முதுகுக்கு பின்னாடி வந்து புடிச்சு விடறியா..குறுக்கெல்லாம் வலிக்குதுடா'

(ம்க்கும்..கோழி பிரியாணி கிடைச்சா அமுக்க வேண்டியது..அப்புறம் தொந்தி எங்க குறைய- கஞ்சா கருப்பு முணுமுணுத்தபடி அருகில் வந்து முதுகு பிடித்து விடுகிறார்.)

வடி: என்னடா..முணுமுணுக்கிற...

க.க: அட போங்கண்ணே..எப்ப பாத்தாலும் நீங்க என்ன எடுபிடி வேலைக்குத்தான் கூப்புடறீங்க. மயிலையும், பெரிசையும் பாருங்க..கம்யூட்டர்ல என்னமோ படிச்சுக்கிட்டு இருக்காங்க.

வடி: என்னாது..கம்யூட்டர் படிக்கிறானுங்களா? நல்லா பாத்தியாடா.. இவனுங்க என்னத்தடா படிக்கப் போறானுங்க. அந்த ஆபரேட்டர் செவத்தப் பிள்ளய முறச்சி முறச்சி பாத்துட்டு இருக்கப் போறானுங்க..

க.க: அடப்போங்கண்ணே....அப்படின்னாதான் நானும் போயி இருப்பேனே.. என்னமோ அப்படி எழுது..இப்படி எழுதுன்னு கிறுக்கு கணக்கா பேசிக்கிட்டு என்னமோ கம்யூட்டர்ல பண்ணிட்டு இருக்கானுங்க.

வடி: நிசமாவாடாச் சொல்றே.. நம்ம பயலுவலுக்கு புத்தி வந்துருச்சா.. வா போய் பார்க்கலாம்.

(வடிவேலுவும், க.கருப்பும் பக்கத்து அறைக்குள் நுழைகின்றனர். அங்கே மயில்சாமியும், நெல்லைப் பெரியவரும் கம்யூட்டரில் ப்ளாக் படித்து கமெண்ட் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.)

வடி: கம்யூட்டர்ல என்னாங்கடா பண்ணிகிட்டு இருக்கீங்க. பெரிய ஆளாயிட்டீங்க போல இருக்கு.

மயில்: ஹி..ஹி.. இல்ல பாஸ். சும்மாதான் ப்ளாக் படிச்சுட்டு கமெண்ட் போட்டுட்டு இருக்கோம்

வடி: அதென்னங்கடா கூத்து..ப்ளாக்..வொயிட்டுன்னுகிட்டு.

மயில்: என்ன பாஸ் நீங்க. ப்ளாக்னா என்னான்னு தெரியாம கம்யூட்டர் இல்லிட்டரேட்டா இருக்கீங்க.

வடி: டேய்..நிறுத்து. விசயத்த கேட்டா பதிலச் சொல்லு. இந்தக் குத்துற வேலையெல்லாம் வச்சுக்காதே ஆமா சொல்லிபுட்டேன். (திருநெவேலிப் பெரிசப் பாத்து) ..பெரிசு..உனக்குத் தெரியுமா, தெரிஞ்சா கொஞ்சம் விளக்கறது..

திரு: அட அது ஒன்னுமில்லங்க. கம்யூட்டர் படிச்ச பயலுவ எல்லலம் பொழுது போகாத சும்மா தமிள வளக்கறேன்னுட்டு, என்னத்தயோ கன்னா,பின்னான்னு எழுதுறானுங்கள்ளா. அவனவன், தனக்கோசரமா, ஒரு பத்திரிக்கை நடத்துறதா நினைச்சு ஒரு பேர வச்சிகிட்டு ப்ளாக் எழுதுறானுவ. ப்ளாக் இலவசமா இருக்கிறதால, எழுதுறது சொலபமா போச்சில்லா'

வடி: ஓ..ஒ..இப்படிலாம் கூட தமிழ வளக்கிறாய்ங்களா நம்ம மக்க. ஓசின்னா நாம கூட ஒன்ன ஆரம்பிக்கலாமா?

க.கருப்பு: அண்ணே, ஓசின்னா எனக்கு ஒன்னு ஆரம்பிச்சு கொடுங்கண்ணே..

தி.பெரிசு: எல, சாமியே சைக்கிள்ள போலயாம், அதுக்குள்ள நீ 'பைக்' கேக்கா..

மயில்: ஸ்..ஸ்....சும்மா இருங்கப்பா.. பாஸ், விவேக்குக்கு முன்னாடி, நாம முந்திக்கணும். நீங்க மட்டும் வலைப்பூ ஆரம்பிச்சீங்கன்னா, உங்களுக்கு பீல்டுல ஒரு மாடர்ன் லுக் கிடைக்கும் பாஸ். நீங்க மட்டும் 'ங்'னு ஒரு வார்த்த சொல்லுங்க, 'வைகைப் புயலின் தமிழ்ப்புயல்' ன்னு தலைப்பு வச்சு 'ங்'தமிழ்மணத்துல ரிஜுஸ்டர் பண்ணிடலாம் பாஸ்?

வடி: அது என்னாடா வலைப்பூ....புரியலியே.. இந்தக் கம்யூட்டர்ன்னாலே காசப் புடுங்குவாங்களாடா..நீயும் அது மாதிரி ஏதும் வழி பண்ணுறியா? (விவேக்குக்கே, திருப்பதி ஜாங்கிரி கொடுத்த பார்ட்டியாச்சே நீ..உங்கிட்ட உஷாராத்தான இருக்கணும்.' என்று தனக்குள் முணுமுணுக்கிறார்.)

மயில்: என்ன பாஸ் நீங்க, உங்க கிட்ட போய்..காசு பணம்லாம் கேப்பேனா.வலைப்பூவுக்கு, .'வைகைப்புயலின் தமிழ்ப்புயல்' தலைப்பு புடிச்சிருக்கா சொல்லுங்க..

வடி: அட..என்னப்பா நீ வலைப்பு தலைப்பு வாழப்பூன்னுகிட்டு..

க.கருப்பு: அண்ணே..'வைகைப்புயல' விட, 'வலைப்பூ தலைப்பு வாழப்பூ' நல்லாருக்குண்ணே..

மயில்: டேய் என்ன நீ..கொஞ்சம் டீசண்டா கொண்டு போலாம்னு பாத்தா, வாழப்பூ..மட்டைன்னுகிட்டு..

தி.பெரிசு: எலே மயிலு. வாழப்பூ தான்ல நல்லாருக்கு. உனக்கு வாழப்பூ எப்ப வரும்னு தெரியுமால? வாழை நல்லா வளர்ந்து முத்தி, குலை தள்ளுனாத்தான் வரும். அது மாதிரி, நம்ம வடிவேலுவோட சிந்தனையில முத்திய வாழ்க்கைப் பூக்கள்த்தான் கருத்தா சொல்ல வர்ரார்னு டெம்ப்ளேட்ல போடாலாம்லா' வலப்பு தலப்பு வாழப்பூ தான்பா நல்லாருக்கு.

வடி: அடா..அடா..அடா.. நீங்கச் சொல்லச் சொல்ல ஆசயா இருக்கேடா...

க.கருப்பு: அப்புறம் என்னண்ணே.. 'வலைப்பு..தலைப்பு..வாழப்பூ'ன்னு டைட்டிலப் போட்டுருவோம்ணே..என்னா மயிலு.

வடி: ஆமா..ராசா.. அப்படியே கீழே 'வடிவேலுவின் சிந்தையில் முத்திய சிந்தனைப்பூ' ன்னு ஒரு லைனப் போட்டுர்ரா..

மயில்: சூப்பர் பாஸ். ஆனா ஒரு சஜசன் பாஸ்.. 'வடிவேலுங்கறத' எடுத்துட்டு 'என் சிந்தையில் முத்திய சிந்தனைப்பூ' ன்னு போடலாம் பாஸ்...

வடி:ஏண்டா..எம் பேர இருட்டடிப்புச் செய்யற..

மயில்: அட இருங்கண்ணே..மூணுபதிவு போட்டாதான், நீங்க தமிழ்மண்த்துல ரிஜிஸ்டர் பண்ண முடியும். அதுனால, முதல் முணு பதிவ கவர்ச்சியா போடணும். அப்பதான் எல்லாரும் படிக்க வருவாங்க. அதான் முத பதிவுல ஏதாவது ஒரு பாப்புலராகாத நடிகைப் படத்த போட்டு, அவதான் இந்தப் பதிவுக்குச் சொந்தக்காரி மாதிரி எழுதலாம். அழகா இருந்தா, எல்லாரும் சைட்டடிக்க வருவாங்க..நம்ம சைட்டும் ஹிட்டாகிடும். அப்புறமா, 'அட பாவி மக்கா, ஏமாந்தீங்களாடா'ன்னு தலைப்புல நீங்கதான் இந்தப் பதிவுக்குச் சொந்தக்காரர்னு எழுதலாம்...எப்படி ஐடியா?

வடி: அடப் பாவி மக்கா? என்னடா தமிழ வளக்கலாம்னு சொல்லிட்டு, இப்படியெல்லாம் கவர்ச்சி போட்டு ஏமாத்தச் சொல்றே?

க.கருப்பு: அண்ணே..நாலு பேருக்கு நல்லதுன்னா, என்ன வேணாச் செய்யலாம். இது ஒன்னும் தப்பில்லண்ணே..'

வடி: நாலு பேரா...யாருடா...அந்த நாலு பேரு..

க.கருப்பு: நாம நாலு பேருதாண்ணே அது..நம்ம சைட்டு ஹிட்டானா, நமக்குத்தானேன்னே பாப்புலாரிட்டி.. அது நமக்குத்தானேண்ண நல்லது..

வடி: கிழிஞ்சது போ..ஏண்டா பாப்புலாரிட்டிக்காக இப்படி எல்லாமாடா செய்வாங்க.. தமிழ வளக்கலாம்னா, முதல்ல கவர்ச்சிய காட்டிட்டு அப்புறம் வளக்கலாம்ங்கிறீங்க. என்னமோ, உங்கள நம்பி இறங்கறேண்டா... சினிமாலதான் யார்கிட்டயாவது மாட்டி அடிவாங்க வுடுறீங்க..இங்க அதுமாதிரி யார்ட்டேயும் மாட்டி உட்டுராதீங்கடா.

மயில்,க.கருப்பு,தி.பெரிசு: (கோரஸாக): நாங்க பாத்துக்குறோம் தல..கவலையே படாதீங்க..

(வலைப்பு..தலைப்பு...வாழப்பூ' சைட் தொடங்கி, பதிப்பிக்கத் தொடங்குகின்றனர்)..

- இப்போதைக்கு, இங்க நிறுத்தி, 'தொடரும்' போட்டுக்கலாம். :)


10 Comments:

said...

அட்டகாசம் :))) காட்சிகள் கண்முன்னே!

said...

அருமை மின்மினி, உங்கள் தமிழ்பனி தொடரட்டும், கருத்துக்கும் அடிக்கடி வாங்க.

said...

நெல்லை சிவா,
சினிமா வசனம் எழுத போயிடலாம் சார் நீங்க.
அங்கங்க 'செய்தி'யும் சொல்லி இருக்கீங்க.
பாராட்டுக்கள்.

said...

நன்றி. மீனா. உங்கள் முதல் வருகை என்று நினைக்கிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து படிங்க.

said...

நன்றி அனானி, தொடர்ந்து படிங்க.

said...

நன்றி பிஎன்ஐ. சும்மா ஜாலியா எழுதலாம்னுதான் இந்த முயற்சி.

said...

அட, அடுத்த படைப்பா. தூள் கிளப்புங்க. போட்டிக்குப் போட்டி, வித்தியாசம் காட்டுவதோட, சுவாரசியமாவும், எழுதுதுகிறீர்கள்.

வாழ்த்துக்கள்!

said...

:))))))) செம சிரிப்பு.....

said...

நன்றி ஸ்ரீ.

நன்றி அமுதன். தொடர்ந்து படிங்க. அடுத்த பதிவும் எழுதியாச்சு.

said...

குழும நண்பர்களின் கருத்துக்கள்:

சிவசங்கர்:

:))))))) கலக்கல்ஸ் ;)


PositiveRAMA:

ஹா ஹா ஹா :)

சிவசங்கர்

ஓ ,
தல, நீங்க தானா அது? அசத்திட்டீங்க போங்க ;) பின்றீங்க? நான் சமீபகாலத்தில்
படித்த சிறந்த வலைப்பூக்களுள் உங்களுடையதும் ஒன்று, செந்தழல் ரவி, ஜோசப் ஐயா,
துளசி அம்மா போன்றோரும் உளர்...
சிவா...