Monday, November 20, 2006

வலைப்பூ...தலைப்பூ...வாழப்பூ (4)

தொடர்ச்சி...கீழே
காட்சி : 7
(போட்டிக் கதைக்கு அதிகப் பின்னூட்டம் வர செயல்படுத்தப் பட்ட அனைத்துத் திட்டங்களும் பெரும் வெற்றியைப் பெற்றுத்தந்தது. போட்டிக்கான இறுதி நாள் முடிந்து, வாசகர்கள் ஓட்டளிக்கும் நாளும் வந்தது.)

வடி: அசத்திபுட்டோம்ல. யப்பா..ஒரு மாசமா விடாம முயற்சி பண்ணி இருக்கோம். எப்படியும் ஜெயிச்சுருவோம்ல. குறஞ்ச பட்சம் ஒரு ரெண்டாவது, மூணாவது இடத்தயாவது புடிச்சிர மாட்டோம்? என்ன நான் சொல்லுறது..

க.கருப்பு: அட என்னண்ணே இப்படி கேட்டு புட்டீக. நீங்க செயிக்காம யாரு செயிப்பாக. சோப்ராஜுக்குத்தான்ண்ணே ஓட்டு. பூலந்தேவிக்கு வேட்டுதாண்ணே.

பெரிசு: தலைவனுக்கு இல்லாத ஓட்டா? வேற எவனுக்கு உளுதுன்னு பாத்துருவேம்ல.

க.கருப்பு: உட்டா சோடா பாட்டில் வீசிடுவே போலிருக்க. பெரிசு, உனக்கும் ஓட்டு இருக்கு. மறக்காம போட்டுடு. வயசுகாலத்துல மறந்துரப் போறே.

வடி: எல்லாப் பயலுவலும் ஒழுங்கா ஓட்டப் போட்டுரணும். ஆமா சொல்லிபுட்டேன். என்ன இந்த மயிலுப்பயல காணோம்.

(மயில்சாமி உள்ளே நுழைகிறார்)

மயிலு: வணக்கம் பாஸ்.

வடி: என்னடா..இவ்வளவு நேரம்.

மயில்: இல்ல பாஸ். உங்களுக்காக மயிலாப்பூர் கபாலிசுவரர் கோயில்ல அர்ச்சனை பண்ணிட்டு வரேன். பிரசாதம் எடுத்துக்கோங்க.

வடி: அடடடா.. என்னா பாசம்..என்னா பாசம்.. நீதாண்டா என்னோட வாரிசு.

மயில்: ஹ..ஹா...தாங்க் யூ பாஸ். உங்களுக்காக, ஈமெயில்ல ஓட்டு கேன்வாஸ் பண்ணிட்டு வாரேன். இன்னிக்குத்தான ஓட்டுப் போட கடைசி நாள், யாரும் மறந்துரக் கூடாதில்லயா. அதான் பாஸ்.

வடி: ரிசல்ட் என்னக்கிடா தெரியும்? ரெண்டு நாள்ல சொல்லிடுவாங்களா?

க.கருப்பு: அதுக்கு ரெண்டு, மூணு நாள் ஆவும்னே. எழுபது எம்பது பேரு எழுதுனா அவ்வளவு நாள் ஆகும்லாண்ணே.

வடி: அதுவும் சரிதாண்டா... அப்ப நாமளும் மூணு நாளு கழிச்சு பாக்கலாம்டா. இவ்வளவு நாள் டென்சனா வேலை பாத்திருக்கீங்க. ஓட்டப் போட்டுட்டு ரெஸ்ட் எடுங்கடா.

பெரிசு: தலைவன் தலைவந்தாண்டா.. நம்ம கஷ்ட நஷ்டம் புரிஞ்சிருக்காரு. தலவரே..சம்பளத்த கட் பண்ணிட மாட்டீரே..

க.கருப்பு: பெரிசுக்கு எப்பவுமே சந்தேகப் புத்தி.. சந்தேகப் படாம போ.. வெற்றி விழால பாப்போம்..காட்சி - 8

(தேன்கூடு போட்டி முடிவுகள் வெளியாகும் நாள். நால்வர் கூட்டணி டென்சனாக இருக்கிறது. வடிவேலு நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறார். க.கருப்பும், பெரியவரும் குசுகுசுவெனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மயில்சாமி கம்ப்யூட்டரில் 'தேன்கூடு' பக்கத்தினை அடிக்கடி ரெப்ரஷ் செய்து கொண்டிருக்கிறார்.)


வடி: ஸ்...ஸ்...யப்பா...இப்பவே கண்ணக் கட்டுதே...

பெரிசு: எலே தலைவனுக்கு மயக்கம் வருதாம்ல...போயி சோடா வாங்கிட்டு வா...

க.கருப்பு: யோவ்..பெரிசு.. அது வழக்கமா நம்ம அண்ணே சொல்றதுதானே.. உனக்கு ரிசல்ட் டென்சன்லே மண்ட குழம்பிப் போச்சா...

வடி: நிறுத்துங்கப்பா..உங்க புராணத்த.. புதுப்படம் ரிலீசாரப்பக் கூட இவ்வளவு டென்சனா இல்ல.. இந்த ரிசல்ட் வர்ரதுக்குள்ள மண்ட வெடிச்சுரும்போல இருக்கே..யப்பா.

(அந்த நேரம் மயில்சாமி....'பாஸ்....ரிசல்ட் வந்திருச்சி...' என்று அலறுகிறார். வடிவேலு,க.கருப்பு, பெரியவர் எல்லோரும் கம்யூட்டர் அருகே செல்ல ஓடுகிறார்கள்)


க.கருப்பு: மயிலு... என்னா அண்ணே முத இடத்த புடிச்சிட்டாரா?

மயில்: பாஸ்.....(இழுக்கிறார்)

வடி: என்னாடா இழுக்கிற.... அப்ப முத இடத்துல வரலயா...

மயில்: கவுத்துட்டானுங்க பாஸ்....கவுத்துட்டானுங்க...

வடி: அட என்னப்பா...அழாம சொல்லு... எனக்கு டென்சனாகுது...

க.கருப்பு: (கம்யூட்டரை எட்டிப் பார்த்து) ....அண்ணே ..உங்களுக்கு ஒன்னாவது இடந்தாண்ணே..

வடி: ஒன்னாவது இடம்னா சந்தோசப் படாம ஏண்டா அழுறான் இவன்...

க.கருப்பு: அது வந்துண்ணே...வந்துண்ணே....

வடி: என்னடா...வந்து..போயின்னு இழுத்துகிட்டு...சொல்லுடா..

க.கருப்பு: நெஞ்சப் புடிச்சுக்குங்கண்ணே....உங்களுக்கு பதினொன்னாவது இடம்ணே..

வடி: என்னாடா சொல்றீங்க...கண்ணுல விளக்கெண்ணெய விட்டுட்டு பாருங்கடா...எவ்வளவு உழைச்சிருக்கோம்..

மயில்: அவன் சொல்லுறது சரிதான் பாஸ்... நாலு ஓட்டுல நீங்க பத்தாவது இடத்த தவற விட்டுட்டீங்கண்ணே... பத்துக்குள்ள வந்திருந்தீங்கன்னா, நடுவர் குழு உங்கள முத மூணுக்குள்ள தேர்ந்தெடுத்திருக்கும்...நாலு ஓட்டு...நாலு ஓட்டு மிஸ் ஆகிடுச்சு பாஸ்..


பெரிசு:....தலைவரே....தலைவரே...ம்ம்..ம்ஹும்..ம்ஹும்..(அழுகிறார்)

க.கருப்பு: ஏம் பெருசு அழுறே...அண்ணனே வருத்தத்துல இருக்காப்பல...

பெரிசு: நா(ந்) துரோகம் பண்ணிட்டேன் தலவரே...லீவு கொடுத்து காசும் கொடுத்தியளா... சந்தோசத்தில, சரக்கு வாங்கி அடிச்சுட்டு தூங்கிட்டந்தலவரே...ஓட்டு போட மறந்துட்டன்..

க.கருப்பு: சரி பெரிசு...அதுக்குப் போயி நீ எதுக்கு அழுறே... நீ மட்டும் போட்டாலும், ரெண்டு ஓட்டுல தோத்துருப்பாரு..இதுக்குப் போயி ஏன் அழறே...

வடி: என்ன கருப்பு... சொல்லுறே... அவரு ஒருத்தரு போடலேண்ணா மூணு ஓட்டுலதான தோக்கனும்...கணக்கு தெரியாமச் சொல்லுறியா.....ஆமா...நீ ஒழுங்கா ஓட்டுப் போட்டியா...இல்ல..

க.கருப்பு: நா...நா....நா..போட்டேண்ணே....ஓட்டு போட்டேண்..

வடி: என்னடா...இழுக்கிற...ஓட்டுப் போட்டது சரி...எனக்குத்தான போட்ட...

க.கருப்பு: அண்ணே மன்னிச்சுருங்கண்னே...அங்கதாண்ணே தெரியாம தப்பு நடந்துபோச்சி... போட்டிக்கத பூலந்தேவிய நினச்சுகிட்ட இருந்தனா, ஓட்டு போடறப்ப அங்க போயி போட்டுட்டண்ணே...மன்னிச்சுருங்கண்ணே...

வடி: அடப்பாவிகளா...தண்ணி உட்டுள்ளாடா வளத்தேன்...இப்படி தெளிவா ஆப்பு வச்சிட்டீங்களடா...உங்கள...(அடிக்க எத்தனிக்கிறார்)

மயில்: அவனுங்கள அடிக்காதீங்க பாஸ்...

வடி: பின்ன இவனுங்கள கொஞ்சச் சொல்றியா..என்ன்ன வேல பண்ணியிருக்கானுக...ஏமாத்திப் புட்டான்யா...

மயில்: பாஸ்.. அவனுங்க பண்ணுனது தப்புன்னா...நா பண்ணுனதும் தப்புதான்...

வடி: என்னடா ..சொல்லுற..அதிர்ச்சி மேல அதிர்ச்சியா கொடுக்கிறீங்களடா..

மயில்: பதறாதீங்க பாஸ்.. உங்களுக்கு ஓட்டு போடணும்னுதான் தேன்கூட்டுக்குப் போனேன்.. வரிசையா எல்லார் கதயும் இருந்துதா. உங்க கதை எங்க இருக்குன்னு பாத்துகிட்டே வந்தேன். கடைசில 'Vote Now' ன்னு ஒரு பட்டன் இருந்துச்சு. யாருக்கும் ஓட்டு போடாம, 'Vote Now' ங்குற பட்டனத் தட்டுனா, ஏதாவது 'Error Message' சொல்லுறாங்களான்னு பாக்கலாம்னு டெஸ்ட் பண்ணுற ஐடியாவுல, உங்க கதைய செலக்ட் பண்ணாம 'Vote Now'ங்குற பட்டனத் தட்டிட்டேன். ஆனா, அது எந்த 'Error Message' ம் சொல்லாம, உங்க ஓட்டு சேக்கப்பட்டது, நன்றின்னு சொல்லி, என் ஓட்ட செல்லாத ஓட்டாக்கிடுச்சு பாஸ். அதுக்கு அப்புறம் என்ன ஓட்டு போட விடல...என்ன மன்னிச்சுடுங்க பாஸ்.

வடி: யூ..டூ ப்ரூட்டஸ்? உனக்கு டெஸ்ட் பண்ண என் ஓட்டு தானாடா கிடைச்சுது. எல்லாப் பயலுவலும் நம்ப வச்சு கழுத்தறுத்தீட்டிங்கள்..... ஏய்....(யோசித்தபடியே) ..இரு..இரு... நா ஓட்டுப் போடலயில 'Vote Now'ங்கிற பட்டன பாக்கலியேடா....

மயில் & க.க: என்னது 'வோட் நவ்' பட்டனப் பாக்கலியா... அப்ப எப்படித் தல ஓட்டப் போட்டீங்க...'

வடி: இது என்னடா புதுக்கதையா இருக்கு.... நம்ம கதைக்கு மேல... ஸ்டார்..ஸ்டாரா ..கைய மேலத் தூக்கி ஒன்னு.. கைய கீழக் காட்டி ஒன்னுன்னு இருக்குமே..அதுல ஆள்காட்டி விரல மேலத் தூக்கி வச்சிருக்குமே அதுலதான் க்ளிக் பண்ணி என் ஓட்டப் போட்டேன்.. அதுவும் 'உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது நன்றி' ன்னு அழகாச் சொல்லிச்சே...

க.கருப்பு: என்னண்ணே...உங்க தலையிலே நீங்களே மண்ண வாரிப் போட்டுட்டீக.. அது ஓட்டுலயே சேந்திருக்காதே..

மயில்: ஆமாம் பாஸ்...நீங்க தப்பு பண்ணீட்டீங்க.. அது தமிழ்மணத்தோட கருவிப்பட்டை. உங்க கத படிச்சவங்க, உடனடியா புடிச்சிருக்கு, இல்லைங்கறதச் சொல்றதுக்குதான் அத வச்சிருக்காங்க. நீங்க ஓட்டுப் போட வேண்டியது தேன்கூட்டில...

வடி: போங்கடா...புண்ணாக்குத் தலையங்களா....சொல்லிக் கொடுக்கிறத ஒழுங்காச் சொல்லிக் கொடுக்க மாட்டீங்களாடா. என்னயும் முட்டாளாக்கிட்டீங்களாடா..

க.கருப்பு: பரவாயில்லண்ண விடுங்க... உங்களுக்கு 'முட்டாள்களின் தலைவன்'னு பட்டம் குடுத்துரலாம்...

வடி: எனக்கு வேணும்...எனக்கு வேணும்...(நொந்து கொள்கிறார்)

மயில்: கவலப் படாதீங்க பாஸ். அடுத்த போட்டியில ஜெயிச்சிரலாம்.

க.கருப்பு: ஆமாண்ணே.. நம்மள மாதிரி உள்ளவங்களுக்குத்தான தேன்கூடு அறிவிப்புல சொல்லியிருக்காங்க.."வெற்றி, ஒரு உற்சாக உந்துதல். ஆனால் முடிவுகள் முழுமையானதல்ல"ன்னு.. மனசத் தேத்திக்கிட்டு அடுத்த வாட்டி மோதிப் பாக்கலாம்ணே..

வடி: போதும்டா சாமி...இதுக்கே இந்த பாடு...இன்னொரு போட்டியா...இத விட நா கூட்டாளிங்க அடி வாங்கிக்கறேன்.. நீங்க பாருங்கடா....நா எம் பொழப்ப பாக்குறேன்... (யம்மா...ஆங்...இப்படி நொங்கிப் புட்டாய்ங்களே..இனி இந்தப் பக்கம் வருவே...யம்மா..முனகிக் கொண்டே செல்கிறார்)
*--முற்றும்--*
(ஒரு வழியாய் முற்றும் போட்டுட்டனா? பொறுமையாப் படிச்ச உங்களுக்கு நன்றி.)


11 Comments:

said...

ஆமாண்ணே.. நம்மள மாதிரி உள்ளவங்களுக்குத்தான தேன்கூடு அறிவிப்புல சொல்லியிருக்காங்க.."வெற்றி, ஒரு உற்சாக உந்துதல். ஆனால் முடிவுகள் முழுமையானதல்ல"ன்னு.. மனசத் தேத்திக்கிட்டு அடுத்த வாட்டி மோதிப் பாக்கலாம்ணே
---
என்ன சிவா, முன்னாடியே உஷார் பண்ணிக்கிறீங்களோ?

மொத்தமும் படித்தேன். வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க. நிறைய சுட்டிக்காட்டுதலுடன்.

கூடிய விரைவில் ப்லாக் ஆரம்பிக்கிறேன்.

வாழ்த்துக்கள்!

said...

நன்றி மணியன், எல்லாப் பதிவும் பொறுமையா படிச்சதுக்கே நன்றி சொல்லணும்.

புதிய ப்லாக்-குக்கு வாழ்த்துக்கள்.

said...

ஒரே மூச்சில் எல்லாம் படிச்சாச்சு.
நிறைய உள்குத்து வெளிக்குத்து எல்லாம் மிக்ஸ் பண்ணி அருமையா வந்திருக்கு.

வாழ்த்துக்கள் சிவா.

ஒவ்வொரு dialogue க்கும் முன்னாடி பேருக்கு பதிலா வடிவேலு, க.கருப்பு இவங்களோட போடோவ சின்னதா போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் :)

said...

/யாருக்கும் ஓட்டு போடாம, 'Vote Now' ங்குற பட்டனத் தட்டுனா, ஏதாவது 'Error Message' சொல்லுறாங்களான்னு பாக்கலாம்னு டெஸ்ட் பண்ணுற ஐடியாவுல, உங்க கதைய செலக்ட் பண்ணாம 'Vote Now'ங்குற பட்டனத் தட்டிட்டேன். ஆனா, அது எந்த 'Error Message' ம் சொல்லாம, உங்க ஓட்டு சேக்கப்பட்டது, நன்றின்னு சொல்லி, என் ஓட்ட செல்லாத ஓட்டாக்கிடுச்சு பாஸ். /

எனது அனுபவத்த, கதையில சேத்துட்டீங்க போல. மொத்தத்தில் ரசித்தேன். எப்படி முடிக்கப் போறீங்கண்ணு எதிர் பார்த்தேன். உங்க 'பஞ்ச்'சோட முடிச்சீட்டீங்க. வாழ்த்துக்கள்.

- ஸ்ரீ

said...

ஹா ஹா ஹா
உண்மைலயே கலக்கல்தான் போங்க, ஆமாம் எங்க போயிங்க ஓட்டு போடனும்? ;) லிங்க்கே
கொடுக்கலையே? :D


- Siva Sankar

said...

நன்றி ஸ்ரீ. எல்லாம் நீங்க பகிர்ந்துகிட்டதுதான். தேன்கூட்டிற்கு, தனியாக அதனை அனுப்பியிருந்தேன். இம்முறை சரிசெய்வதாகச் சொல்லியிருந்தார்கள். அதற்காக உங்கள் ஓட்டை மீண்டும் பரீட்சித்துப் பார்த்துவிடாதீர்கள். :)

said...

naalaruukku! vadivelu group chuttudaporango! copyright saithu vaiyungo.

said...

naalaruukku! vadivelu group chuttudaporango! copyright saithu vaiyungo.

said...

நன்றி அனானியாரே.. படிச்சு கருத்துச் சொன்னதுக்கு.

said...

சூப்பரா வலை காமடி பண்ணியிருக்கேள். நன்னாயிருக்கு போங்கோ.

said...

கல கல என கலக்கீட்டிக...உஷாருங்கோ..எதாவது படத்தில் காமடி ட்ராக்கில் சொருகி விடுவார்கள்.

நான்.