Thursday, November 16, 2006

வலைப்பூ... தலைப்பு...வாழப்பூ (2)


காட்சி - 2


(வலைப்பூ... தலைப்பு...வாழப்பூ ப்ளாக் தொடங்கிய வேகத்திலேயே பிரபல்யமாகத் தொடங்கிற்று. வெற்றிக் களிப்பில் நால்வர் கூட்டணி)

க.கருப்பு: அண்ணே... நம்ம மயில்சாமி சொன்னா மாதிரி, நம்ம ப்ளாக் செம பாப்புலர்ன்ணே.

வடி: பாப்புலரா.. என்னடா சொல்லுற நீயி.. எப்படி பாப்புலர்னு சொல்லுறே?

பெருசு: அட அது ஒன்னுமில்ல தலவரே. எழுதுனத படிச்சிட்டு போறவுக எல்லாம், பின்னூட்டம் போடுவாக. (பின்னூட்டமா..அப்படின்னா என்பது போல முழிக்கிறார் வடிவேலு) பின்னூட்டம்னா அதான் தலைவர கமண்டு போடுவாக. அது 60 கமெண்ட் கிட்ட வந்துருக்கு. அத வச்சுதான் சொல்றான்.


வடி: அறுபது பேரு படிச்சுருக்கானுங்களா, பரவாயில்லயே.. ரொம்ப ஆர்வமாத்தான் இருக்காய்ங்க போல..

மயில்: பாஸ்.. எல்லாத்தையும் பால்னு நினைக்காதீங்க. போட்டோவ பாத்த உடனே ஜொள்ளு வுட்டு, ஜொள்ள பின்னூட்டத்துலயும் காட்டியிருக்காங்க. உயிரக் கொடுத்து, தகவல் சேகரிச்சு எழுதுறவங்களுக்கெல்லாம், 5-10 பின்னூட்டமே கஷ்டம் பாஸ். உங்க முத ரெண்டு பதிவுக்கே, இவ்வளவு பின்னூட்டம்னா எல்லாம் போட்டோ பண்ணுற மாயம் பாஸ்.

வடி: போட்டோவுக்காடா இந்த ஜொள்ளு வுடுறாங்க, ஆஹா.. இப்படியே போட்டோ போட்டு கூட்டம் சேக்கணும்னா நமக்கு இந்தப் பொழப்பு வேணாம்டா சாமி. ஆள வுடுங்கப்பா.. நா வரலடா இந்த விளையாட்டுக்கு.. வில்லங்கத்துல மாட்டி உட்டுருவீக போல..

க.க: அட என்னண்ணே நீங்க. சினிமால நயன்தாராவ ஒரு பாட்டுக்கு கூட்டி ஆட்டம் போட கூட்டம் சேக்கிறீங்கள்ளாண்ணே.. அதுமாதிரித்தாண்ணே இதுவும். கூட்டத்த கூட்டியாச்சில்ல, இன்னக்கி மயிலண்ணே 'எல்லாம் டமாசு'ன்னு ஒரு பதிவப் போட்டு, உங்கள 'இண்ட்ரடியூசு' பண்ணி உடுவாருண்ணே.. அப்புறம் உங்க மதுரைச் சங்கத் தமிழ்லே சூப்பர் பண்ணலாம்னே.

வடி: அடப்பாவிகளா... ஏமாந்த பயலுவ எல்லாம் என்ன நொங்கு எடுக்கவாடா இண்ட்ரடியூசு பண்ணப்போறீங்க.. ஆழந்தெரியாம கால உட்டுட்டனோ?'

மயில்: என்னா பாஸ், இப்படிச்சொல்லிட்டீங்க. நீங்க ஒரு லீடிங் காமெடியன். "ஆரம்பமே தமாசு பண்ணி, 'வாழப்பூ' ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணி, இப்படி பண்ணினேன்..மக்களே. மன்னிச்சுக்கோங்க.. இனி இனிய தமிழ் பேசலாம்..வளக்கலாம்..னு.. ஸ்மூத் பண்ணிடலாம். உங்க பாப்புலாரிட்டிக்கு, மன்னிச்சு தோஸ்த்-ஆயிடுவாங்க.

வடி: (ஆஹா..ஒரு செட்டப்பாதான் இருக்காய்ங்க போல என்று மனசுக்குள் முணுமுணுத்தவாறே). என்னமோடா, இதுவும் நல்லாதான் இருக்கு. இன்னும் கொஞ்சம் ஆடித்தான் பாக்கலாமே..போடு..போடு..பதிவப் போடு..

(நாட்கள் நகருகிறது. வடிவேலுவும், ப்ளாக்கால் வசீகரிக்கப் படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு...)காட்சி - 3


(வடிவேலு அலுவலகக் கம்ப்யூட்டரில் பின்னூட்டம் வந்திருக்கிறதா, என்று பாத்துக்கொண்டிருக்கிறார். உடன் கஞ்சா கருப்பு பக்கத்தில். மயில்சாமியும், பெருசும் உள்ளே நுழைகிறார்கள்.)


மயில்: வணக்கம் பாஸ், என்ன கால்ஷீட் ஷெட்யூல் பாத்துட்டு இருக்கீங்களா?
வடி: வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. உன்னத்தான் எதிர் பாத்துட்டு இருந்தேன்..

மயில்: எதுக்கு பாஸ்? பாங்குக்கு போணுமா? பணம் ஏதும் வித்டிரா பண்ணனுமா?

வடி: அட ..அதெல்லாம் இல்லப்பா.. சொன்னா கிண்டல் பண்ணப்படாது..

மயில்: இல்ல பாஸ். சொல்லுங்க.

வடி: நக்கல் பண்ணப் படாது...சொல்லிருவேன்..

மயில்: என்ன்ன பாஸ்.. டென்சன் பண்ணுறீங்கள..

வடி: இல்லப்பா ...அது வந்து...

க.க: அட.. என்ன அண்ணே வந்து போயின்னு இழுத்துக்கிட்டு.. டப்புன்னு போட்டு உடைப்பீங்களா. அத உட்டுட்டு ஏம்ப்பு.. அண்ண தேன்கூடு போட்டி பத்தின அறிவிப்ப படிச்சிருச்சி. அதான், போட்டிக்கு கத எழுதலாமான்னு யோசிச்சிட்டுருக்கு.. அதச் சொல்லத்தான் இப்படி இழுக்கிறாரு..இல்லண்ணே..

பெருசு: கதயா.. நேத்து கண்ணாடி போட்டுட்டு டைரக்டர்னுட்டு கத சொல்லிட்டுருந்தான... அந்தக் கதையையா எழுதப் போறீங்க தலைவரே..

க.க: ஓ...அதான் அண்ணே கத .கத ன்னு காலயில இருந்து பொழம்புறாரோ? அண்ணே..இந்தக் களவாண்ட கதயெல்லாம் வேண்டாம்ணே..இப்பதான் இம்சை அரசன் கதப் பிரச்சினை...

மயில்: டேய்... அது வேற..இது வேற... அவனவன் அங்கே இங்கே கேட்ட/படிச்ச கதையையே சொந்தக் கத மாதிரி மாத்தி எழுதிட்டு இருக்கான்.. நம்ம பாஸ் எழுதினா தப்பா என்ன? நீங்க சொல்லுங்க பாஸ்..

வடி: ஏம்ப்பா..ஏம்ப்பா...கொஞ்சம் பொறுமையய இருக்கப்படாதா? ஒரு வார்த்த சொல்லி முடிக்கறதுக்குள்ள நீங்களா கத கட்டுனா எப்படிப்பா? அவன் சொன்னா மாதிரி, இந்த மாசத் தேன்குடு போட்டிக்கி இலவசம்னு டைட்டில் கொடுத்துருக்காங்க. ஏதாவது கத கவித எழுதலாம்னு பாக்கிறேம்ப்பா...நீ என்னா சொல்ற..ஏதாவது தீம் வச்சிருக்கயா?


க.கருப்பு: ஏதாவது ஹைகூ எழுதுங்கண்ணே..

வடி: அதென்னதுடா ஹைகூவுன்னுட்டு... சத்தமா கூவுறதா?

க.கருப்பு: அய்யோ..அய்யோ..தமிள வளக்கப் போறேன்னு சொல்றீய..இப்படி கேட்டா. ஹைகூவுங்கறது ஒரு வகைக் கவிதைன்னே..

பெருசு: ஏலே..நீ என்ன ஒம் புத்திசாலித்தனத்த தலைவர் கிட்ட காட்டுறியோ? கவிதைன்னா என்னான்னு தெரியுமால உனக்கு?

க.கருப்பு: யோவ்..பெரிசு..என்னா சவால் உடுறியா? இப்ப படிக்கிறேன் கேளு..


'கழிவறை அருகே
காமப் பெண்டிரின்
காதல் பார்வை
கவிழ்ந்தான் அவன்
கிடைத்தது
எய்ட்ஸ்
இலவசமாய்'

க.க: இது எப்படியிருக்கு?


பெருசு: எலே.. இது கவிதையால...ரயில்வே டிபார்ட்மெண்ட்ல 'எய்ட்ஸ்' விளம்பரத்துக்கு எழுதுன மாதிரில்லா இருக்கு. இலக்கிய ரேஞ்சுக்கு போணும் சொல்லிட்டு இருக்குற தலைய கிண்டல் பண்ணுறயோ?

மயில்: பாஸ்..நாம ஒரு கொள்ளக் கூட்டக் கத எழுதலாம் பாஸ்.

க.க: நினச்சேன்..ஏம்ப்பு... நீ பாஸ்..பாஸ்னு சொல்றப்பவே நினைச்சேன். இந்தக்
கததான் சொல்லுவேன்னு. ஆளுகளயும் ..மூஞ்..

வடி: யப்பா. புலவர் பெருமானே..கொஞ்சம் நிறுத்துறயா.. சல சலன்னு நமக்குள்ளேயே புலம்பிகிட்டு.. அவன் கதய கேளு. நீ சொல்லுப்பா..சுருக்கமாச் சொல்லு. இதுவே ரொம்ப நீளமா போகுது..

மயில்: ஓகே பாஸ்.. நம்ம கதைக்கு டைட்டில் 'சோப்ராஜும், சொக்கத்தங்கமும்' வச்சிரலாம். சோப்ராஜ்தான் நம்ம கதையோட கதாநாயகன். ஊர்ல உள்ள பணக்காரங்ககிட்ட எல்லாம் கொள்ளையடிச்சு காசு புடுங்குறதுதான் அவன் வேலை.


க.க.: அத அப்புறம் ஏழைங்களுக்கு கொடுப்பானாக்கும்.. ஹே..இது ஜெண்டில்மேன் கதையாச்சே..


மயில்: டேய்..எல்லாக் கதயும் எங்கயாவது படிச்ச பாத்த மாதிரிதாண்டா இருக்கும். ப்ரெசெண்டேசந்தாண்டா வித்தியாசப் படும். பாஸ்..இவன் என் மூடைக் கெடுக்கறான் பாஸ்.

வடி: அய்யய்ய்ய்ய்யோ... டேய்.. வாயப் பொத்திக்கிட்டு சும்மா இருடா..அவன் கதயச் சொல்லட்டும்.

மயில்: தேங்க்ஸ் பாஸ். அப்படி கொள்ளையடிக்கிற சோப்ராஜ், ஒரு நாள் ராத்திரி ஒரு வீட்ல போய் கொள்ளையடிக்கப் போறான். போன இடத்துல, அந்தக் குடும்பமே தற்கொலைக்கு முயற்சிக்குது. அதப் பாத்த அவன், அதத் தடுக்க நினைக்கிறான். என்ன காரணத்துக்கு தற்கொலை பண்ணிக்கப் போறாங்கன்னு ஆராயறப்ப, இருக்குற மூணு பொண்ணுங்களுக்கும் வரதட்சனை கொடுத்து கல்யாணம் பண்ணி வைக்க முடியாம, கஷ்டத்துல தற்கொலைக்கு முயற்சிக்கிறாங்கன்னு தெரியுது. உடனே அவன், அதுவரைக்கும் கொள்ளையடிச்ச பணத்த அவங்களுக்குக் கொடுத்து, அவங்களுக்கு கல்யாணம் பண்ணிவச்சு, சாவிலிருந்து காப்பாத்தி வாழ வைக்கிறான். 'திருடன்னாலும், சோப்ராஜின் மனசு என்னவோ சொக்கத்தங்கம்தான்'னு டச்சிங்கா முடிச்சிடலாம். எப்படி பாஸ்..

வடி: அடடா...அசத்திபுட்டான்யா. உடம்பெல்லாம் உனக்கு மூளைடா..(மயில் அசடு வழிகிறார்)

பெருசு: எல்லாம் சரிதாண்டே.. இலவசத்துக்கும், இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு யாராவது கேட்டா?

வடி: அட..ஆமா இல்ல?

க.க: அட..பெருசு. சோப்ராஜு அந்தத் தங்கத்த, அந்தக் குடும்பத்துக்கு இலவசமா கொடுத்து, சாவிலிருந்து காப்பாத்திட்டான்'னு கடைசி வரில எழுதிடுவோம்ல.. அப்ப அங்க 'இலவசம்' வந்துடும்லே.. எப்படி?

வடி: என்னமோ அட்ஜஸ்ட் பண்ணுற மாதிரி இருக்கே? மத்த கதைக்கு மத்தியில இது எடுபடுமாடா?

க.க: கல்யாணம்னா என்னான்னு தெரியாமலேயே, ஒரு அர லூசுப் பையன் தாலி கட்டுவானாம், அத பொண்ணு ஏத்துகிட்டு லவ் பண்ணுற சீனை எல்லாம் பாத்து வச்சுருக்காங்கள்ள மக்கள்..அதுக்கே அட்ஜஸ்ட் பண்ணுன மக்கள் இதுக்கு அட்ஜஸ்ட் பண்ண மாட்டாங்களா?

மயில்: பாஸ்.. நீங்க ஏன் பாஸ் இதெல்லாம் பத்திக் கவலைப் படுறீங்க. பாப்புலரா இருக்கறவங்க கதையைத்தான் படிப்பாங்க ஓட்டு போடுவாங்க. நீங்க ஏற்கனவே பாப்புலராயிட்டீங்க. அப்புறம் ஏங்க இதுலாம் யோசிக்கிறீங்க. நிச்சயம் ஹிட்தான் பாஸ். எழுதிரலாம்.

பெரிசு: இது சரியா தல..முதல்ல பொண்ணு படத்தப் போட்டு, சைட்ட ஹிட் பண்ணுனீங்க..இப்ப என்னடான்னா கொள்ளக் கூட்டக் கத எழுதிறீங்க.. அப்புறம் தமிழ்ப்பணி எங்கேன்னு யாரவது கேள்வி கேட்டா?

க.க: யோவ்..பெருசு...என்னாய்யா.. ராங் சைடுல கேள்வி கேட்டு, அண்ணன குழப்புற. (வடிவேலுவைப்பாத்து) அண்ணே..நீங்க கவலைப் படாதீங்கண்ணே..நம்ம கதைதான் ஜெயிக்கும். ஜெயிச்சதுக்கு அப்புறம், தமிழோவியத்துல போயி 'தமிழ்' வளக்கலாம்ணே.. ஏம்ப்பு..நீ எழுதுப்பு...

வடி: சொல்றதும் கேக்கறதும் நல்லாத்தான் இருக்கு.. நடக்குமாப்பா?

மயில்: கவலப்படாத தல..நாங்க இருக்கோம்.
(மயில்சாமி கதை எழுதத் துவங்க, வடிவேலும் இதர சகாக்களும் துணை அமர்கிறார்கள்)

இன்னைக்கு இங்க நிறுத்தி. நாளைக்குத் தொடரலாமா? :)

7 Comments:

said...

"மயில்: பாஸ்.. நீங்க ஏன் பாஸ் இதெல்லாம் பத்திக் கவலைப் படுறீங்க. பாப்புலரா இருக்கறவங்க கதையைத்தான் படிப்பாங்க ஓட்டு போடுவாங்க. நீங்க ஏற்கனவே பாப்புலராயிட்டீங்க. அப்புறம் ஏங்க இதுலாம் யோசிக்கிறீங்க. நிச்சயம் ஹிட்தான் பாஸ். எழுதிரலாம்."
:))
அற்புதம் ஐயா :))

said...

கலக்கல சிவா,
பதிவுக்கு நடுவுல ஏகப்பட்ட உள்குத்து இருக்கும் போல(ஒரு கட்டத்துல உள்குத்துக்கு நடுவுல பதிவோன்னு ஒரு பிரமை உண்டாயிடிச்சி :)) ) ஆனா சூப்பர் ஒரே சிரிப்பா போச்சி போங்க. :))

said...

Super play Siva..I enjoyed it..Waiting for the next..

said...

அன்பு சிவா
குறும்புகளும், பகடியும் நிறைந்து உங்களுக்கே உரித்தான மொழியில் விறுவிறுப்பாக பதிவு செல்கிறது. \

தொடரட்டும்.

வாழ்த்துகளும். பாராட்டுக்களும்.

said...

நன்றி ஸ்ரீஷிவ்.

said...

சந்தோஷ்,

ஜாலியா எழுதனும்னு எழுதுனதுதாங்க. மத்தபடி எந்த குத்து நோக்கமும் கிடையாதுங்க..இது ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சுகிட்டு இருந்த பதிவு. இந்தப் போட்டிக்குச் சரியாய் அமைந்தது.

நன்றி சந்தோஷ்.

said...

நன்றி கவிதா. நேற்றே எழுதவேண்டும் என்று நினைத்தேன். அலுவல் பணி, முடியவில்லை, இன்னைக்கு எழுதிடலாம்னு இருக்கிறேன்..தொடர்ந்து படிங்க.