Tuesday, October 24, 2006

ஒரு CTRL+ALT+DEL -க்கு 'ஓ' போடலாமா?


நல்லா வேலை பண்ணிக்கிட்டு இருக்கிற கம்ப்யூட்டர் திடீர்னு மக்கர் பண்ணிச்சுன்னா என்னா பண்ணுவீங்க?

'சொன்னபடி கேளு...மக்கர் பண்ணாதே'-ன்னு கமல் மாதிரி பிரம்ப எடுத்துட்டு பாட முடியுமா என்ன?

மூக்கணாங் கயிறைப் பிடிச்சி இழுக்கிற மாதிரி, உடனேயே கம்யூட்டர் தட்டச்சு பலகையின் 'CTRL+ALT+DEL' - கீயை அமுக்கிட மாட்டீங்க?

ஜம்பமா ஓடிக்கிட்டு இருக்கிற சாப்ட்வேர்களை எல்லாம் ஒரு மூலைக்கு அனுப்பிவிட்டு, 'கம்யூட்டரை நிறுத்தனுமா? என்னா செய்யனும்' னு கேக்க வைக்கிற அந்த கமெண்ட்-க்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?

'டேவிட் பிராட்லி' என்ற IBM இன்ஜினியர்தான் அதன் காரணகர்த்தா. 1980களில், சொன்ன பேச்சைக் கேக்காத கம்யூட்டர்களை, வழிக்குக் கொண்டுவரும் முயற்சியில் பிராட்லி உட்பட 12 இன்ஜினியர்கள் ஈடுபட, முடிவாய் பிராட்லி 1 நிமிடம் 23 செகண்ட்ஸ்-ல் அதற்கான புரோகிராமை எழுதிமுடித்தாராம்.

இதன்பின்னர் வேறு என்னவோ கண்டுபிடிப்பெல்லாம் செய்தாலும் அவரைப் பிரபலமடையச் செய்ததென்னவோ இந்தக் கண்ட்ரோல்+ஆல்ட்+டெல் தான்.

இது குறித்த பேட்டி ஒன்றில், பிராட்லி கூறியது: "கண்டு பிடிச்சது என்னவோ நானென்றாலும், இதற்குப் புகழ் சேர்த்த பெருமை பில்கேட்ஸ்க்குத்தான். ஒவ்வொருமுறை விண்டோஸ் மக்கர் பண்ணும்போதும், துணை வருவது இந்தக் கண்ட்ரோல்+ஆல்ட்+டெல் தானே, அவர் எப்ப எல்லாம் தோற்கிராறோ, அப்போதேல்லாம் நான் ஜெயிக்கிறேன்" என்றாராம். குசும்புதான் போங்க...

(முன்னரே தெரிந்த தகவலென்றால் மன்னிக்க, இது மற்றவர்கள் ரசிக்க.)

16 Comments:

said...

"ஓ" போட, இங்க வாங்க

CTRL+ALT+DEL - ஒரு தகவல் - தமிழ்வாக்கு.காம்

said...

சொன்ன உங்களுக்கு ஒரு ஓ!!
மிஸ்டர் ப்ராட்லீக்கு ஒரு ஓஓஓ.
நன்றி. தகவலுக்கு.

said...

Supernga..CTRL-ALT-DEL patriya thagavalukku

- Mani

said...

நன்றி அனானி.

said...

வல்லிசிம்ஹனுக்கும் ஒரு 'ஓ'... :)

நன்றிங்க..வருக்கைக்கும் கருத்துக்கும்.

said...

நன்றி மணி. எப்ப ப்ளாக்கர் அக்கவுண்ட் வச்சுக்கப் போறீங்க!

said...

Ohhhhhhhhh..... gooood..

said...

நன்றி. தகவலுக்கு.....

said...

முதல்வன் என்ற படத்தில் ஒருவர், நிஜ வாழ்க்கையில் VCR போல rewind button இருந்தா நல்லா இருக்கும்ல என்று அழகாக ஒரு dialogue இருக்கும்.

எனக்கென்னவோ rewind ஐ விட, நீங்கள் சொல்லும் CTRL+ALT+DEL வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிரது.

வேண்டாததை easy யா நிறுத்தி விடலாமே!

said...

மிக நன்றாக இருந்தது......

said...

நன்றி துளிர். புதிதாய்த் துளிர்க்கிறீர்கள் போல. (உங்கள் பதிவைச் சொன்னேன்) தழித்துச் செழித்து வளர வாழ்த்துக்கள்!

said...

நன்றி துளிர். புதிதாய்த் துளிர்க்கிறீர்கள் போல. (உங்கள் பதிவைச் சொன்னேன்) தழித்துச் செழித்து வளர வாழ்த்துக்கள்!

said...

BNI Sir,

CTRL+ALT+DEL-ல கூட உங்களின் சமூகசிந்தனையா? எப்படித்தான் அப்படி நினைக்க முடிகிறதோ?

நன்றி உங்கள் வருகைக்கும்,சிந்தனைக்கும்.

said...

நன்றி கோபு. இப்போதுதான் முதல் வருகை போல. அடிக்கடி வாங்க.

said...

நல்ல தகவல் தான். தகவலுக்கு நன்றி. தாராளமாக ஓஓஓ போடலாம் தான்.

said...

நன்றி கலை சார், ரொம்ப நாளா ஆளே காணோம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு வந்தது குறித்து மகிழ்ச்சி.