Monday, October 23, 2006

சமூகப் பொறுப்புணர்த்தும் பதிவுகள்

வலையுலகம் மிகப் பரந்தது. இந்தப் ப்ளாக்கும் அப்படித்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆவல், எதிர்பார்ப்பு.

சிலருக்கு சினிமா. சிலருக்கு இலக்கியம். சிலருக்கு ஆன்மீகம். சிலருக்கு விளம்பரம். சிலருக்கு அரசியல். சிலருக்கு தனிமனித தாக்குதல். சிலருக்கு அரட்டை. சிலருக்கு கொள்கை பரப்பு செயல். சிலருக்கு சமூக ஆர்வம்.

இதில் என்னைப் பொறுத்தவரை, சமூக ஆர்வம் தவிர மற்றவைகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று போய்விடுகின்றன. சமூக ஆர்வலர்கள், எல்லை தாண்டி வியாபிப்பவர்கள். அது போன்றவர்களின் கருத்துக்கள், இவ்வலையுலகம் ஏறுவது அரிது. சமூக ஆர்வம் இருப்பவர்களுக்கு, அதை வெளிப்படையாய்ச் சொல்வதற்கு பயம் கூட. இதையும் தாண்டி பதிப்பவர்கள் குறைவுதான்.

சமீபமாய் நான் படித்த பதிவுகளில், இரண்டு பதிவுகள் என்னைக் கவர்ந்தது. (மேலும் நிறைய பதிவுகள் இருக்கலாம், நான் படித்ததைச் சொல்கிறேன். உங்களைக் கவர்ந்தவைகள் இருந்தாலும் சொல்லுங்கள்...)

முதலாவது: துள்ளி வருகுது வேல்

"இனி, உன் விழிகள் சிவந்தால்.... உலகம் விடியும்", என்ற கம்யூனிச சிந்தனை எண்ணச் சிதறல்களோடு புதிதாய்த் துவக்கப் பட்டிருக்கிறது. சபாபதி சரவணன் இதற்குச் சொந்தக்காரர்.

சமீபத்திய பதிவு: இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது
இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது


இன்னொன்று: BadNewsIndia - மெத்தனமாக இருக்காதீர்கள்
'நாம் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டும் பதிவுகள்!!" என்ற சராசரி உணர்வோடு துவக்கப்பட்டிருக்கின்ற விழிப்புணர்வுப் பதிவு.

அரட்டைகளுக்கும், ஆர்ப்பரிப்புகளுக்கும் இடையே இப்பதிவுகள் என்ன சாதிக்கப் போகின்றன என்பது கேள்விக்குறியாயினும், சில நற்சிந்தனைகளை வலைஞரிடையே தோற்றுவிக்குமானால், அதுவே இவர்களின் வெற்றியாயிருக்கும். அரசியல்வாதிகளைத் திருத்த முடியுமா என்பதனைக் கேள்விக்குறியாக்கி, தனி மனித வாழ்வைத் நற்சிந்தனையாக்கினாலே அது நல்லெதிர்காலத்திற்கு விதையிடும் என எண்ணுகிறேன்.

நான் முன்னரே கூறியது போல், இந்த வலையுலகம் என்பது படிப்பறிவில்லா பாமரர்களால் எழுதப்படுபவை அல்ல. படித்துத் திறனுள்ளவர்களாலேயே எழுதப்படுவன. இந்த வலையுலகம் இப்போது எல்லோரது கவனத்தையும் ஈர்க்கத் துவங்கியுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதையுணர்ந்து எல்லோரும் நற்சிந்தனை விதைத்தால் நலம்தான்.

நிறைய பத்திரிக்கையாளர்களும் இப்போது ப்ளாக் பக்கம் வருகிறார்கள். அவர்கள் ப்ளாக்குகள் மூலமாக கேள்விப்படுகின்ற சில நற்சிந்தனைகளை அல்லது எழுப்படுகின்ற பிரச்னைகளை மேலும் விரிவாக்குவார்களேயானால், அது இந்தச் சமூகத்திற்குச் செய்கின்ற நற்செயலாய் இருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களாக.

'பழி சொல்லுதல் எளிது, வழி சொல்லுதல் கடினம்'. - யாரையும் குறை சொல்லுவது என் நோக்கமல்ல. நல்லன நடக்க சில முயற்சிகள் 'ப்ளாக்' மூலம் நடந்தால் நலம் என்பதே என் நோக்கம்.

உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்...

4 Comments:

said...

நெல்லை சிவா,
தங்களின் பதிவிர்க்கு மிக்க நன்றி.

//இந்த வலையுலகம் இப்போது எல்லோரது கவனத்தையும் ஈர்க்கத் துவங்கியுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதையுணர்ந்து எல்லோரும் நற்சிந்தனை விதைத்தால் நலம்தான்.//

சரியாகச் சொன்னீர்கள்.

சினிமா, பாட்டு, அரட்டை எல்லாமும் தேவைதான். ஆனால், பொது நலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நல்ல சிந்தனைகளை இப்பொழுது விதைத்தால் அது நம் அடுத்த தலைமுறைக்கு நன்மை விளைவிக்கும் என்பதே என் கருத்தும்.
முடிந்த மட்டும் பிரிவினையை கூட்டும் பதிவுகளை தவிர்ப்போம்.

துள்ளி வரும் வேலயும் பார்த்தேன் - நல்ல பதிவுகள்.

நன்றி!

said...

நன்றி பி.என்.ஐ. நல்ல விசயங்களைத் தொடருங்கள்.

said...

என் மனமார்ந்த நன்றியை பெற்றுக்கொள்ளுங்கள் நெல்லைசிவா

said...

நன்றி சரவணன். உங்கள் நல் எண்ணங்கள் தொடர வாழ்த்துக்கள்.