Tuesday, September 05, 2006

சில்லென்று ஒரு காதல்

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான் சூர்யா. மணி நள்ளிரவு இரண்டு மணி. இன்னமும் தூக்கம் வரவில்லை. வழக்கமாய் படுத்தால் தூங்கிவிடும் பழக்கமுள்ள அவனுக்கு, இன்று என்னவோ தூக்கமே வரவில்லை. சென்ற வாரம் செங்கல்பட்டில் இருந்து, சென்னை வந்து, அம்மா,அப்பா, அக்கா உட்பட எல்லோரும் பார்த்து திருப்திபட்டிருந்த பெண்ணை, நாளை 'பெண்' பார்க்கப் போவது குறித்த சிந்தனை மனதில் ஓடியபடி இருந்தமையால், அவனால் தூங்க முடியவில்லை.

அம்மாவிற்கு பெண்ணை மிகவும் பிடித்திருந்தது. அதுவும் அவள் கூந்தலழகை அடிக்கடி மெச்சிக்கொண்டிருந்தது மனதில் ஓடியது. 'ச்..சே, போட்டோவாவது கேட்டு வாங்கி பார்த்திருக்கலாம். ஆனால், அம்மா, 'போட்டோல பார்க்கிறத விட, நேர்ல அழகாயிருக்கா, அதனால நேர்லயே பாத்துக்கோ'-ன்னு சொல்லிட்டதால, மீற முடியலை. அக்காவும், 'ஆமாடா, பொண்ணு லட்சணமாயிருக்கா, சினேகா மாதிரி. உனக்கு கண்டிப்பாய் பிடிக்கும்' என்று ஆமோதிக்க, அப்போதே அவன் மனது ரெக்கை கட்ட ஆரம்ப்பித்திருந்தது.

சூர்யாவும் பார்க்க லட்சணமான பையன்தான். சாஃப்ட்வேர் கம்பெனியில், கை நிறைய சம்பாதிப்பவன். சொந்தம் தவிர, பிற பெண்கள் என்றால் கொஞ்சம் அலர்ஜி. அதுபாதி, அவன் தூக்கம் போனதற்கு காரணம்.

"நாளைக்குப் பார்க்கப் போற பெண், எப்படி இருப்பாள், தனியாக பேசச் சொன்னால், என்ன பேசுவது" போன்ற சிந்தனைகள் அவனது தூக்கத்தை அலைக்கழித்தன. அவளும் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில்தான் பணிபுரிகிறாள். வசந்தின்னு முழுப்பெயர் சொல்லி கூப்பிடலாமா, இல்லல 'வசு' ன்னு அழைக்கலமா? ஒருபுறம் பெண்ணின் அருகாமை என்ற சிந்தனை கிளர்ச்சியூட்டினாலும், மறுபுறம் இனமறியா பயமும்,தயக்கமும் அலைக்கழித்தன. எப்போது தூங்கினான் என்று தெரியாது, பாதி கனவிலும், பாதி நினைவிலுமாக 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்' என்று சினேகாவுடன் ஆடிப்பாடியபடியே தூங்கிப்போனான்.

-----00000-----

'சில்லென்று ஒரு காதல்..சில்லென்று ஒரு..'...டிவியில் பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. திடுக்கிட்டு விழித்தான் சூர்யா. படுக்கைக்கு எதிரே இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி 9.40... அலறிக்கொண்டு எழுந்தான். நண்பர்கள் எல்லோரும் அலுவலகத்துக்கு கிளம்பிச் சென்று இருந்தனர். பேச்சிலர் பசங்களா வீடெடுத்துத் தங்கியிருந்தார்கள். செங்கல்பட்டிலிருந்து தினமும் வருவது கடினம் என்பதால், சூர்யாவும் அவர்களோடு தங்கியிருந்தான். பெண் பார்க்கப் போவதால், அவன் அன்று விடுப்பு எடுத்திருந்தான். செல்போனை எடுத்துப் பார்த்தான். மூன்று 'மிஸ்ஸ்டு' கால்ஸ். அக்காதான் அழைத்திருந்தது. அப்படியே டயல் செய்தான். மறுமுனையில் அக்காதான் எடுத்தது.

'எட்டுமணில இருந்து கூப்பிட்டுகிட்டே இருக்கேன், அப்புறம் லேண்ட் லைன்ல கால் பண்ணப்ப விக்ரம் சொன்னான், இன்னும் தூங்கிகிட்டு இருக்கேன்னு. என்னடா, ஒரே ட்ரீமா? இப்பதான் எழுந்தியா?'

'ஆமாங்கா, தூங்கிட்டேன். என்ன விசயம்?'

'நாலு நாலறைக்கு, மைலாப்பூர் மாமா வீட்டுக்கு வந்திரு. அங்கிருந்து மாமா,நீ, நா மூணுபேரும் போலாம், பொண்ணு பாக்க'.

'ஆர்த்தி வரலயா, அவளும் பாக்கணும்னு சொன்னாளே....'. ஆர்த்தி சூர்யாவின் +2 படிக்கும் தங்கை.

'அது எதுக்குடா, வாயாடி ஏதாவது உன்ன கிண்டல் பண்ணிகிட்டு இருக்கப்போறா...'

'இல்லக்கா அவளும் வரட்டும்..நீங்க முதல்ல போனப்பவே கூட்டிட்டுப் போகலன்னு குறைப்பட்டா....'

'அதான் அம்மா ஸ்கூலுக்குப் போன்னு சொல்லியும் லீவு போட்டுட்டு உக்காந்திருக்கு, சரி நீ ரெடியாயிட்டு சொல்லு. ஷேவ் எல்லாம் பண்ணிக்கோ. வழக்கம் போல காலை டிபனை அவாய்ட் பண்ணாத. எதாவது சாப்பிடு, இல்ல முகம் சோர்வா தெரியும். '

'சரிக்கா..'

'வர்ரப்ப பாண்டி பஜார் வழியே வா.. நாயுடு ஹால் பக்கத்துல மூணு மணிக்கெல்லாம் ஃப்ரெஷ் மல்லிப்பூ வந்திருக்கும். ஒரு 20 முழம் வாங்கிக்கோ. அது போக ஒரு 5 முழம் தனியா வாங்கிக்கோ.'இந்தா, உன் லூசு தங்கச்சி ஏதோ பேசணுமாம், சட்டுபுட்டுன்னு பேசிட்டு ரெடியாகு'

'என்னண்ணா, நேத்து நைட்லாம் தூங்கியிருக்க மாட்டியீயே, அக்கா 'சினேகா'ன்னு சொன்னதால, 'பல்லாங்குழியின்..னுட்டு டூயட் பாடியிருப்பீயே. எனக்கு கலகல-ன்னுதான் அண்ணிவேணும் ஜோதிகா மாதிரி'

'யேய்.. அதிகப்பிரசங்கி...சொல்லுடி..என்ன?'

'நானும் பொண்ணு பாக்க வருவேன்...அம்மாவும்,அக்காவும் வேண்டாம்னுட்டு இருக்காங்க..ஆனா நா வருவேன், நீதான் சொல்லணும் அம்மாகிட்ட..'

'சரி..சரி...வம்பு பண்ணாத..நா ரெடியாகணும்'

'ஓகே...ஓகே...பொண்ணு பாக்க, நா இங்க இருந்து டீ சர்ட்/ஜீன்ஸ் எடுத்து வாரேன். மாமா வீட்ல, நீ டிரஸ் மாத்திக்கிடலாம். நீ ஏதாவது வெள்ளையும்,சொள்ளையுமா வரப்போறே..'

'ஏய்..பேண்ட்..சர்ட் தான் சரியாயிருக்கும்..'

'போண்ணா, நா சொல்றத கேளு..'

'சரிம்மா..அதயே போட்டுக்கறேன். இப்ப என்னய விடுறயா...எனக்கு நேரமாவுது..நா ரெடியாரேன்..'

'சரி..பை..பை..'

-----00000-----

அப்படி,இப்படி என்று ஒரு வழியாய் கிளம்ப மணி மதியம் இரண்டரை ஆயிற்று. செல்போனைத் தேடி எடுத்துக் கொண்டவன், தன் ஸ்ப்ளெண்டரை ஸ்டார்ட் செய்தான். மதிய வெயிலுக்கு சென்னையின் சாலை காத்து வாங்கியது. பாண்டிபஜாரை நெருங்குகையில் சற்று கூட்டம். மூன்று மணிக்கும், நாயுடு ஹால் அருகே கூட்டம் இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு, பூ விற்பவர்களைத் தேடினான். மதிய வெயிலுக்கு, கடையின் கதவு திறந்து மூடுகையில் வெளியே வந்த 'ஏசி' குளிரும், மல்லிகை மணமும் இதமாயிருந்தது.

'பூ வேணுமா?' என்றது அருகிலிருந்த பூக்காரியின் குரல்.

'ஆமாம்மா, 20 முழம் ஒரு பேக்-கும், 5 முழம் தனியாகவும் கொடுங்க' என்ற படியே நூறு ரூபாய்த்தாளை நீட்டினான்.

'சில்லறை கொடு அய்யரே'

'தி நகர்,பாண்டி பஜார்-னாலே, வாங்கற எல்லோரும் உங்களுக்கு அய்யருங்க தானா' என்று கேலி செய்தபடியே சில்லறையை கொடுத்து, பூவை வாங்கிக் கொண்டு வண்டியருகே வந்தவன், சற்று தயங்கியபடி நின்றான். காரணம், அங்கு நின்று கொண்டிருந்த தேவதை. நீல நிற ஜீன்ஸும், 'பிங்க்' நிற டாப்ஸும் அணிந்திருந்தாள். மெலிதான உதட்டுப் பூச்சு. ஒற்றைக் கத்தையாய் ஒரு சில முடிக் கொத்துக்கள், அவள் அசைகையில் அது முன் கன்னங்களைத் தொட்டுச் சென்றது அழகாயிருந்தது.

அவன் பார்வை அவளைத் துளைத்திருக்க வேண்டும், 'யாரோ பார்க்கிறார்கள்' என்ற எண்ணம் ஏற்பட, அருகில் வந்து கொண்டிருந்த அவனை நோக்கினாள்.

'எக்ஸ்கியூஸ் மீ..கொஞ்சம் நகர்ந்துக்கிறீங்களா, வண்டிய எடுக்கணும்' என்றான் அருகில் வந்தபடி.

'ஓ..ஸாரி..' என்றபடியே சிறு புன்முறுவலுடன் சற்று நகர்ந்து, அவன் வண்டியை எடுக்க வழிவிட்டாள்.

பூவை பாக்ஸில் வைத்து, கிளம்ப முயன்றவனை, மீண்டும் பார்க்கத் தூண்டியது, அவள் முகம்.

சற்றே திரும்பியவனைப் பார்த்து, 'எக்ஸ்கியூஸ் மீ சார்...'உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா, உங்களோட 5 நிமிடம் எடுத்துக்கலாமா?' என்று வினவ, புருவம் உயர்த்தி, 'ஏன்' என்பது போல் பார்த்தான்.

'ஐ யம் பூஜா..பைனல் இயர் எம்.ஏ சைக்காலஜி ஸ்டூடண்ட்.. பைனல் இயர் புராஜக்ட்-ஆ, 'திருமணம்/வாழ்க்கைத்துணை' பற்றி இந்தக்கால இளைஞர்களின் சிந்தனை குறித்து டேட்டா, கலெக்ட் பண்றோம். அதுக்கான கேள்விகளுக்கு, உங்களோட பதில் தேவை..கொஞ்சம் உங்க டைம் கிடைக்குமா, ப்ளீஸ்' என்றாள் கொஞ்சலாக.

சும்மாவே பொண்ணுங்ககிட்ட பேசத் தயங்குகிறவன், கேள்வி-பதிலில் எசகு பிசகாக மாட்டிக்குவோமோ என்று பயந்தான். 'இல்லீங்க..அவசரமா மைலாப்பூர் போறேன்..ஸாரி' என்றபடியே விலக முயற்சித்தான்.

''உங்களுக்கு ஆட்சேபம் இல்லைன்னா, நான் ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் போகனும், போற வழியில என்னை ட்ராப் பண்ணமுடியுமா? அப்படியே, நான் எனக்கு வேண்டிய டேட்டாவினை பைக்கிலேயே கலெக்ட் பண்ணிக்குவேன்..ப்ளீஸ் சார், கோ-அபரேட் பண்ணுங்க சார். ஒரு ஸ்டுடண்-டுக்கு ஹெல்ப் பண்ணின மாதிரியிருக்கும்''

அழகின் கெஞ்சலை, அசட்டை பண்ணமுடியவில்லை. வேண்டியவர்கள் யாரும் பார்த்து தவறாக எண்ணிவிடுவார்களோ என்ற அச்சம் லேசாய் எட்டிப்பார்த்தாலும், 'சரி வாங்க.. போலாம்.' என்றான். தேவதை பின் அமர, வண்டி பயணித்தது.

சத்தம் செய்யாமல் வண்டி 'ஸ்மூத்' ஆகச் செல்ல, மவுனத்தைக் கலைக்கும் விதமாய் பூஜாவின் குரல்.

'முத கேள்வி திருமணம் பற்றி சார்.. எம்மாதிரியான திருமணம் உங்களுடைய இஷ்டம். காதல் திருமணமா? பெரியவங்க பாத்து நிச்சயிக்கபடுற திருமணமா? உங்களது சாய்ஸ்க்கான காரணம்?"

'ம்..ம்..பெரியவங்க பார்த்து முடிக்கற கல்யாணம்தான். லவ் மேரேஜ்-ல, காதலிக்கும்போதே எல்லாத் திரில்லும் முடிஞ்சிரும். ஆனா, அரேஞ்ச்டு மேரேஜ்-ல கல்யாணத்துக்கப்புறம்தான் வாழ்க்கையே ஆரம்பிக்கிறதானல த்ரில் அதிகமிருக்கும்னு நினைக்கிறேன்'

'சார் ரொம்ப ஹோம்லி டைப்னு நினைக்கிறேன்..என்று சிரித்தவளாக, 'காதல் கல்யாணம்/அரேஞ்ட் மேரேஜ்..எதுவானாலும், கணவன் - மனைவியிடையே காதல் நிலைத்திருக்க என்ன தேவைன்னு நினைக்கிறீங்க?'

'யோசிக்க வைக்கிறீங்களே..ம்..ம்...பரஸ்பரம் மதிப்பும்,நட்பும் பாசமும் இருந்தா, கண்டிப்பாக நிலைத்திருக்கும்னு சொல்லலாம்..முக்கியமா ஈகோ இல்லாம இருக்கணும்"

'ம்...ஒகே..அடுத்தது..உங்க வாழ்க்கைத்துணைகிட்ட கண்டிப்பா இருக்கணும்னு நினைக்கிற குணாதிசயங்கள் மூணு சொல்லமுடியுமா?'

'யா..முதல் தேவை..அனுசரித்துப் போகிற குணம். அப்புறம் யார் பத்தியும் குறை கூறாம எதையும் பாசிட்டிவா பார்க்கிற பக்குவம்..தேவைக்கு செலவழிக்கிற எண்ணம்..'.

'ஏன் சார்..நீங்க 30+ஆ..' என்று அவள் கேட்டு சிரிக்க. 'ஏங்க..பிராக்டிகலா இல்லையா?..பட்..நீங்க எக்ஸ்பெக்டேஷன் தானே கேக்கறீங்க..' என்று சிரித்தான். 'கண்டிப்பா இருக்க கூடாதுன்னு ஏதாவது குணாதிசயம்னு ஏதாவது கேள்வியிருக்கா, அப்படின்னா 'அழுகை'-ன்னு போட்டுக்கங்க என்றான்.

'இம்பாஸிபிள்..சார்..கண்ணீர்தானே சார் பெண்களோட முக்கிய ஆயுதம்..'

'கருத்துச் சுதந்திரம்..அந்த சுதந்திரம் இந்த சுதந்திரம் வேணும்னு கேக்கற அளவுக்கு வளர்ந்து இருக்கறீங்க, ஏங்க இன்னும் பொண்ணுங்க கண்ணீர ஆயுதமா நம்பிகிட்டு இருக்கணும். அந்தக்காலத்துல படிப்பு கிடையாது..இப்பதான் படிச்சு மேலே வர்ரீங்களே..புத்தியை வச்சு, சமமா சமாளிக்கணும். பெண்களின் கண்ணீர் எனக்கு பிடிக்காத ஒன்று'. பேசிக் கொண்டே வந்தவன், ரெட் சிக்னல் விழுவதை உணர்ந்தவனாக, பிரேக் அடித்தான். மெல்லியதாய் தோள்கள் உரசின.

'தேங்க்ஸ் பார் த சிக்னல்.. எங்க நீங்க போற வேகத்துக்கு சீக்கிரம் என்னை இறங்க வேண்டிய இடத்துல ட்ராப் பண்ணிடுவீங்களோன்னு பார்த்தேன்..அப்புறம் மிச்ச கேள்விய கேக்க முடியாது' என்றாள் சிரித்தபடியே..

'அப்ப இன்னும் முடியலையா..கேள்வி கேக்கறது சுலபம்ங்க..பதில் சொல்றதுதான் கஷ்டம்'

'இது இலகுவான கேள்விதான் சார்.. மெளனராகத்தில, உங்களுக்கு 'கார்த்திக்-ரேவதி' காதல் புடிச்சுதா, இல்லை 'மோகன் - ரேவதி' காதலா? ஏன்?'

அதற்குள் சிக்னல் விழுந்துவிடவே, வண்டியை நகர்த்தியவனாக பதிலுரைக்கத் தொடங்கினான். 'மோகன் - ரேவதி காதல்தான். முன்னது படிக்கற காலத்துல துடிப்பில டக்குன்னு வர்ர காதல். ஆனா, பின்னது அனுசரனையோடு அன்பால உணரப்படுற காதல்..அதுதான் எனக்கு பிடிச்சது..இப்ப 30+ன்னு சொல்வீங்களே.. ' என்றான்.

'சத்தியமா...' என்றபடியே பெரிதாய்ச் சிரித்தவள், 'கடைசி கேள்வி சார்.. எப்பவும் உங்களுக்கு பிடிச்ச லவ் டூயட் பாட்டு எது சார்?'

'இது உங்க ஆய்வுக்கேள்வில இருக்கா..இல்ல சொந்தக் கேள்வியா?'

'ஐயோ..ஆய்வுக்கேள்விதான்..சில பேர்..'நிலா காயுது..நேரம் நல்ல நேரம்..னு' கூடச் சொல்லியிருக்காங்க..' என்றபடி கண்சிமிட்ட

'பதில் சொல்றவரோட தரம் பாக்கறீங்களாக்கும்..' என்றவன், 'எனக்குப் பிடிச்சது..எஸ்பிபி-சொர்ணலதா பாடும், 'நெஞ்சைத்தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி..ங்கற பாடல் என்றான்.

'நீங்க கண்டிப்பா 30+ஆ தான் இருப்பீங்க சார்.. ..எனிவே...ரொம்ப தேங்க்ஸ் சார். ரொம்ப பொறுமையா பதில் சொன்னதுக்கு. கரெக்டா, ட்ராப் பண்ற எடத்துல இண்டர்வ்யூவ முடிச்சிட்டேன். சார்..' என்றபடி இறங்கத் தயாரானாள். சூர்யாவும் வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

வண்டியிலிருந்து இறங்கியவள், 'அவசரமா போற உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன். உங்க ஒத்துழைப்புக்கு நன்றி..' என்றாள்.

'ஆமாங்க..அவசரம்தான்..இன்னைக்கி எனக்கு அலையன்ஸ் பார்க்கிறாங்க. வீட்ல இன்னும் வரலையேன்னு நினைச்சுட்டு இருப்பாங்க.'

'ஒ..ஒ..தென் யூ ஆர் மை ரைட் சாய்ஸ். அதான், எல்லா கேள்விக்கும் பதில் தயாரா வச்சிருந்தீங்க போல. ஆல் த பெஸ்ட் சார். ஆனா, பொண்ணு என்ன பாட்டு பிடிக்கும்னு கேட்டா அட்லீஸ்ட் ஏதாவது ஒரு ரஹ்மான் பாட்டு சொல்லுங்க சார். இல்லன்னா, பொண்ணு நீங்க ரொம்ப பழைய காலத்து ஆளுன்னு நினைச்சுடப் போறாங்க'

'அதெப்படிங்க..நீங்க கூடத்தான் ஜுன்ஸ்,டாப்ஸ் போட்டு இருக்கீங்க. அதுக்காக உங்கள 'மாடர்ன் டிரஸ்' மங்காத்தான்னு சொல்றதா..இல்ல, கழுத்தில பிள்ளையார் டாலர் வச்ச செயின் போட்டிருக்கறதால 'மாடர்ன் மகாலட்சுமி'ன்னு சொல்லவா..'

'ஓகே..ஒகே...கூல் சார்..ஜஸ்ட் ஃபன்... ஆல் த பெஸ்ட் அண்ட் தேங்க்ஸ் ஃபார் த லிப்ட்'

'பை...' என்றபடியே பைக்கை உதைத்தான் வீடு நோக்கி. இன்று வசந்தியைப் பெண் பார்க்க போகவில்லையென்றால், இவளிடமே அட்ரஸ் வாங்கி காதலிக்கத் தொடங்கியிருப்பேனோ' என்று எண்ணியவனாக பைக்கை மைலாப்பூர் நோக்கிச் செலுத்தினான்.

-----00000-----
பெண்வீடு. அக்கா,மாமா,தங்கை உடன் வர, டாக்ஸி பிடித்து பெண்வீடு வந்தாயிற்று. நல்ல விசாலமாக இருந்தது வீடு. மாப்பிள்ளைக்கெனெ தனி சேர் போட்டிருந்தார்கள். எதிரே ஒரு தனிசேர் காலியாக இருந்தது. வசந்தியின் உறவினர்கள் இடது புறமும், இவன் உறவினர்கள் வலதுபுறமுமாக அமர்ந்து, 'கலகல' வெனெ பஜ்ஜி,சொஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள். சூர்யாவுக்கு சற்று படபடப்பாக இருந்தது. ஏனோ, "என்ன பாட்டு பிடிக்கும்னு கேட்டா ஏதாவது ரஹ்மான் பாட்டு சொல்லுங்க சார்" என்ற பூஜாவின் குரல் காதில் ஒலித்தது. என்ன பாட்டு சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவனை, 'பொண்ணு வாரா..நல்லா பாத்துக்கடா' என்ற அக்காவின் குரல் நிமிரச் செய்தது. குனிந்த தலை நிமிராமல், பட்டுச்சேலையில் மகாலட்சுமியாக பெண் 'காபி' எடுத்து வந்து கொண்டிருந்தாள். முதல்ல 'மாப்பிள்ளளக்கு கொடும்மா' என யாரோ பெரிசு சொல்ல, சற்றே நிமிர்ந்து அவனைப் பார்த்தவாரே அவனருகில் வந்தாள். நிமிர்ந்து பார்த்த சூர்யா, சற்றே திடுக்கிட்டான், இந்தப் பெண்..இந்தப் பெண்..பூஜா போல இருக்கிறாளே..கனவோ..' என்று எண்ணி சற்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு பார்க்க, காபி டிரேயே-யை அவன் முன்னே நீட்டியவள், அவன் காதருகே அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாய்.. 'என்ன பாட்டு புடிக்கும்னு கேட்டா, 'சில்லுன்னு ஒரு காதல்-னு ரஹ்மான் பாட்டச் சொல்லு' என்று சொல்லி அவளுக்கென்று இருந்த இருக்கையில் போய் அமர்ந்தாள். சூர்யாவிற்கு சற்று 'ஷாக்'காயிருந்தது.

'என்னடா..பொண்ணு பிடிச்சிருக்கா..' - அக்காதான் கேட்டாள். திகைப்பிலிருந்து விடுபடாமலிருந்த சூர்யா, என்ன சொல்வது என்று தெரியாமல், 'அவங்களுக்கு பிடிச்சிருக்கா'ன்னு கேளுங்க' என்றான்.

'பொண்ணுக்கெல்லாம் பிடிச்சிருக்குன்னு அவ முன்னமே சொல்லிட்டா, நீதாண்டா சொல்லனும்'

'எப்ப சொன்னாங்க?' என்று கேட்டவண்ணம் பெண்ணைப் பார்க்க, வசந்தி அலையஸ் பூஜா அவனைப் பார்த்து நளினமாய் புன்னகைத்தாள். அக்காவை நோக்கி, முழித்தவனிடம், 'எல்லாம் உன் தங்கை யோசனைதான். தனியா பேசச் சொன்னா, சங்கோஜப் படுவியோன்னுட்டு 'கேஷுவலா' இருக்கட்டுமேன்னு, தங்கச்சி யோசனைப் படி அனுப்பி வச்சோம். அவ பேசிட்டு ஓகேன்னுட்டா, உனக்கும் ஓகே தானே?'

ஆமோதிப்பவன் போல தலையசைத்தவன், தங்கையைப் பார்த்து முறைக்க, அவளோ, அங்கு ஓடிக்கொண்டிருந்த 'டிவி' பெட்டியை கை நீட்டினாள்.

அங்கே 'ஜோதிகா' 'சில்லுன்னு ஒரு காதல்' பாடல் பின்னணியில் ஆடிக் கொண்டிருந்தார்.

**************************

தேன்கூடு - செப்டம்பர் மாதப் போட்டிக்கு.தேன்கூடு போட்டிக்கு இன்னுமொரு கதை: தவிப்பு

70 Comments:

said...

copy panni vaichrukane padichtu comments podurane

said...

வித்தியாசமான சிந்தனை... இந்த திட்டம் கூட நல்லா இருக்கே.. நன்று..வெற்றிபெற வாழ்த்துக்கள்

தேம்பா

said...

நல்லா கீது சார்.

said...

"ஜிவ்வுன்னு ஒரு கதை"
நல்லா இருந்தது.
இதை கதைங்கறதை விட திரைக்கதைன்னு சொல்லாம். நல்லா ரசிக்க முடிந்தது.
வாழ்த்துகள்.

said...

முடிவு ஊகிக்கக் கூடியதாக இருந்தாலும்...நல்லாயிருந்தது. பாராட்டுகள்.

said...

நல்ல இயல்பான கதை. ஆனா உண்மையிலே இப்படியெல்லாம் கூட நடக்குமா?? நடந்தால் சுவாரசியம் தான்.... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்... :)

said...

நன்றி, கார்த்திக் பிரபு, படிங்க, படிச்சுட்டு மறக்காம, உங்க கருத்தச் சொல்லுங்க. ஆவலாயிருக்கேன்..

said...

நன்றி, கார்த்திக் பிரபு, படிங்க, படிச்சுட்டு மறக்காம, உங்க கருத்தச் சொல்லுங்க. ஆவலாயிருக்கேன்..

said...

கலக்கிட்டே மாப்பூ..

said...

'/இந்த திட்டம் கூட நல்லா இருக்கே//

:))

தேம்பா, தங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

said...

நல்லாருக்கு..

பூஜாதான் பொன்ன்னுன்னு தெரிஞ்சாலும் அவளுக்கு எப்படி இவனை அடையாளம் தெரிஞ்சதுன்னு யோசிச்சிகிட்டே படிச்சென்.. :-)

said...

சின்னதம்பி..சூப்பருங்க..இப்பதான் முதவாட்டி நம்மூட்டுக்கு வந்திருக்கீங்கோ..நல்வரவு..

said...

தமிழி..திரைக்கதைன்னு சொல்றீங்களா..ஸ்டெப் பை ஸ்டெப் பில்டப் பண்ணவேண்டியதாயிடுச்சு..

said...

ராகவன், முடிவு ஊகிக்கமுடியும் என்பது சரி, எப்படி தெரிகிறது என்பதுதான் யூகிக்கமுடியாதது.. :)

நன்றி ராகவன், வருகைக்கும் வாழ்த்துக்கும்.

said...

அமுதன்,

உண்மையிலே இப்படி நடந்தா நல்லாருக்கும்தான்,

இப்படி நடந்து, பின் வீட்டு சம்மதத்தோட வாய்ப்பு இருக்கு. :)

வாழ்த்துக்கு நன்றி..வாழ்த்துக்கள் ஓட்டாக மாறினால், சந்தோஷம்.

said...

சந்தோஷ்..

படிச்சு சந்தோஷப் பட்டிருப்பீங்க..வாக்கும் போட்டீங்கன்னா, சந்தோசப் படுவேன்..நன்றி

said...

//பூஜாதான் பொன்ன்னுன்னு தெரிஞ்சாலும் அவளுக்கு எப்படி இவனை அடையாளம் தெரிஞ்சதுன்னு யோசிச்சிகிட்டே படிச்சென்.. :-) //

ஓசை சார், வழக்கமா என்னோட கதைகள் எல்லாம் படிச்சு கருத்துச் சொல்வீங்க, இதுக்கும் சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்..ஆனா, 'தவிப்பு' படிக்கலியோ? இல்ல, படிச்சு புடிக்கலியா..எதுனாலும் கருத்துச் சொன்னீங்கன்னா, மகிழ்ச்சி.

said...

a wonderful story. really intersting. all the very best to the writer. a thoughtful story. very realistic.........!
........Tamilselvi

said...

it is very good. very intersting and realistic.

said...

என்ன, சிவா..அடிச்சி ஆடறீங்க..இம் மாதப் போட்டிக்கே, இரண்டு கதைகளா? இரண்டும் நல்லா வந்திருக்கு..வாழ்த்துக்கள்.

-ஸ்ரீ

said...

ஆஹா ரெண்டு கதையா?

ஹும்ம்ம் கலக்குங்க.

said...

ஆமாம், ஸ்ரீ, இரண்டு கதைகள். இந்த மாதத் தலைப்பு தூண்டிய சிந்தனைகள், இவற்றுள் 'தவிப்பு' எனது அனுபவம் கதையாக விவரித்திருக்கிறேன். :)

நன்றி, இரண்டையும் படித்ததற்கும், கருத்துக்கும்.

said...

அடப்பாவி மக்கா...எங்கிட்டு இருந்துதான் உங்களுக்கெல்லாம் இப்படி யோசிக்க நேரம் கெடய்க்குதோ...

அவனவன் மண்டைய பிச்சிட்டு அலைஞ்சிட்டு இருக்கும்போது இப்படி சில்லுன்னு கதை போட்டு அசத்றீங்க...நல்லாயிருக்கு கத....முன்னப்பின்ன தெரியாத புள்ள கெஞ்சலா கேட்டவுடனெ லிப்ட் கொடுக்கற பய நாளைப்பின்ன இதுமாதிரி வேறொரு புள்ளைக்கு லிப்ட் கொடுப்பான்ல...அது ஏன் அந்த கிறுக்குபய புள்ள புத்தில ஏறல...

ஹி..ஹி..என்னவோ நம்மாள முடிஞ்சது கொளுத்திப் போட்டாச்சி...வர்ட்டா...

said...

hi siva

கதையை படித்து விட்டேன்..இது வரை வந்த கதைகளில் உங்கள் கதை பெட்டரா இருக்கு..ஆனா போட்டி
முடிவுகள் எப்போதுமே எதிர்பார்த்த மாதிரி இல்ல...

ஆனால் லிப்ட் கேட்ட பெண் தான் கடைசியில் அந்த பெண்ணாக இருப்பாள் என எல்லாரும்
யூகித்திருப்பார்கள்..ஆனால் என்ன செய்ய சந்தோசமான முடிவுகள் கொண்ட படங்களை பார்த்து பழகி விட்ட நமக்கு
இப்படி தான் எழுத தோணும்..

பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.என்னுடைய கெஸ் பார்க்கலாம் என்ன நடக்கிறதென!!

said...

தமிழ்ச்செல்வி,

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

உங்கள் வலைப்பதிவுக்கும் வந்து பார்த்தேன். இப்போதுதான் துவங்கியிருக்கிறீர்கள், நிறைய எழுத வாழ்த்துக்கள்.

இந்தத் தேன்கூடு போட்டி பற்றித் தெரிந்திருப்பீர்கள், பிற கதைகளையும் படியுங்கள்.ஒட்டெடுப்பில் கலந்து கொண்டு, உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

இந்த வருகைக்கும்,புதிய வலைப்பூ வருகைக்கும் நன்றியும் வாழ்த்தும்..

said...

ஆமாம், சமுத்ரா. இரண்டு கதையையும் படித்திருப்பீர்கள். உங்கள் ஆதரவுக்கும் நன்றி.

said...

சதயம் அண்ணாச்சி..

நம்ம தேவதைங்கள நீங்க சரியா புரிஞ்சிகிடலியோ? இப்படி கேக்குறீகளே. அவங்கள எல்லாம் லேசுல மடக்க முடியாது. மடங்கியாச்சுன்னா, மடக்குனவன அப்புறம் லேசுல வெளியே போக விடமாட்டாங்க. பட்டாசா கொளுத்தி போடுவீயன்னு பாத்தா, மத்தாப்ப கொளுத்தியிருக்கீயளே? :)

சும்மா தமாசுக்குத்தான்..அப்படிச் சொன்னேன். இப்ப உள்ள பெண்களெல்லாம், அநாவசியமா, சந்தேகப்பட மாட்டாங்கன்றது என் நினைப்பு. அது மட்டுமல்ல, திருமணம்ங்கறது சம்மதத்துல தொடங்கப்படணும், சந்தேகத்துல அல்ல.'சூர்யா சொல்ற மாதிரி, 'பாசிட்டிவா' பாக்கணும். :)

ரொம்ப நன்றிங்க..அனுபவிச்சு நீங்க எழுதின ரசனையான பின்னூட்டத்திற்கும், அது தருகின்ற ஊக்கத்துக்கும்.

said...

Perfect timing, I am mentioning about the title of this story with the movie release :)

Very nice story, I enjoyed it.all the best

said...

நல்லா எழுதியிருக்கீங்க..எல்லோரும் தலைப்பைச் சுற்றி எழுதிக் கொண்டிருக்க, உங்கள் கதை, அதைப்பற்றி கவலைப்படாமல், 'நச்' சென்று போகிறது. வாழ்த்துக்கள்!

said...

"வசந்தின்னு முழுப்பெயர் சொல்லி கூப்பிடலாமா, இல்லல 'வசு' ன்னு அழைக்கலமா" - ரசித்த வரிகள். வாழ்த்துக்கள் !!

***

வர்ணனைகளை குறைத்து, உரையாடல்களிலேயே நகர்கிறது
நல்ல முயற்சி

***

யதார்த்தமான வரிகள், கதைக்கு பலம். க்ளைமேக்ஸ், முன்பே யூகிக்க முடிகிறது.

***

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை இங்கே
பாருங்கள்
!!

said...

Nice Picture...& story too.

said...

நன்றி கவிதா, அருண்.

said...

நன்றி, சோ.பையரே..உங்க விமர்சனமும் சூடா போய்கிட்டு இருக்கே..வாழ்த்துக்கள்.

said...

கார்த்திக் சார்,

சொன்ன மாதிரியே, படிச்சுட்டு கருத்துச் சொல்லீட்டீங்களே..ஞாபகம் இல்லையோன்னு நினச்சேன்.

வாக்கின் முடிவுகள் எப்படியிருந்தாலும், இந்தச் சிறுகதை, என்னுடைய மற்ற கதைகளைவிட அதிகம் பேரைக் கவர்ந்திருக்கின்றது. அதுவே எனக்கு மகிழ்ச்சிதான். மற்றவை, நடப்பது போல் நடக்கட்டும்.

சிரத்தை எடுத்து படிச்சு, கருத்துச் சொன்னதற்கு நன்றி.

said...

நல்லா இருந்துச்சு... ஜெயிக்க வாழ்த்துக்கள்!!!!!

said...

hi siva i have written one story for thenkoodu contest ..do read in my page and share ur comments ..thanks

said...

neenga vithyaasamaa oru lift kuduthuirukinga.romba nalaa irukkudhu.vaazthukkal.

said...

நன்றி உதயகுமார்.வாழ்த்துக்கு நன்றி. வாக்கும் மறந்துராதீங்க. :)

said...

நன்றி சுமதி, உங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும். மறந்துராம, வாக்கெடுப்பில் கலந்துக்கங்க.

said...

இரு கதைகளும் உங்கள் உழைப்பைத் தெரிவிக்கின்றன. உட்கார்ந்து யோசிப்பீங்களோ?
நிச்சயம் உங்களுக்கு ஒரு பரிசு கிடைக்கும். (அதான், நான் கூட எழுதலையே :-))!)
- IBNU HAMDUN

said...

பெண்களின் கண்ணீர் பிடிக்காத ஒன்றாமா? அத நம்பித்தான்யா இன்னக்கி டி.வி சீரியல்லாம் ஓடிட்டுருக்கு..:)

நல்ல வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்.

- பார்த்திபன்

said...

யூத்புல்லா எழுதியிருக்கீங்க. இந்த ஐடியா கூட நல்லாயிருக்கே. ஆமா, நீங்க 30+ ஆ? :)

said...

கார்த்திக்,

நல்லா இருக்கு, எதோ பழைய நினைவுகள கிளப்பிட்டிங்க.....ஆஹாஹா!!!

போட்டி விதிகள் தெரியாது....ஆனா இது நல்ல கதை....

said...

கார்த்திக்,

உங்க கதையும் நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்

said...

//*இரு கதைகளும் உங்கள் உழைப்பைத் தெரிவிக்கின்றன. உட்கார்ந்து யோசிப்பீங்களோ?
நிச்சயம் உங்களுக்கு ஒரு பரிசு கிடைக்கும். (அதான், நான் கூட எழுதலையே :-))!)
- IBNU HAMDUN *//

நன்றி இப்னு. முதல் கதையைவிட, இதற்குத்தான், அதிக நேரம் தேவைப்பட்டது. எல்லாம் உங்கள் சிந்தை கவரவே :)). வாழ்த்துக்கு நன்றி. நல்ல நகைச்சுவை உணர்வுள்ள நீங்களும் எழுதலாமே? வாருங்கள்.

said...

//*பெண்களின் கண்ணீர் பிடிக்காத ஒன்றாமா? அத நம்பித்தான்யா இன்னக்கி டி.வி சீரியல்லாம் ஓடிட்டுருக்கு..:)
- பார்த்திபன்
*//

நீங்க சொல்றது சரிதான்..ஆனா, இந்தக்காலத்துப் பெண்கள் கொஞ்சம் தைரியசாலிகள்தான்..

வாழ்த்துக்கு நன்றி

said...

//*சுந்தர் said...
யூத்புல்லா எழுதியிருக்கீங்க. இந்த ஐடியா கூட நல்லாயிருக்கே. ஆமா, நீங்க 30+ ஆ? :) *//

ஐடியா சரி..30+ கிண்டல்தானே? :)

வாழ்த்துக்கு நன்றி..வாக்களிக்க வந்திரும்.

said...

//*கார்த்திக்:

நல்லா இருக்கு, எதோ பழைய நினைவுகள கிளப்பிட்டிங்க.....ஆஹாஹா!!!

போட்டி விதிகள் தெரியாது....ஆனா இது நல்ல கதை.... *//

நன்றி கார்த்திக். போட்டி விதிகள் தேன்கூட்டில் பார்க்கலாமே, மறந்துடாதீங்க ஓட்டளிக்க.

said...

நல்ல கதை சிவா.. சில்லுனு... :)

ஓட்டு கேட்காதீங்க.. நான் ஓட்டு போடணும்னா எல்லா படைப்பும் பார்த்து தான் முடிவு செய்வது.. அதனால், சாரி :)

said...

நல்ல கதை சிவா.. சில்லுனு... :)

ஓட்டு கேட்காதீங்க.. நான் ஓட்டு போடணும்னா எல்லா படைப்பும் பார்த்து தான் முடிவு செய்வது.. அதனால், சாரி :)

said...

சூப்பரா இருக்குங்க...

முடிவு ஓரளவுக்கு தெரிஞ்சாலும் படிக்க சுவாரசியமா இருந்தது...

//'நெஞ்சைத்தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி..ங்கற பாடல் என்றான்.//
உண்மையாலுமே கொஞ்சம் பழைய பாட்டாத்தான் இருக்கு... நீங்க 30+ஆ???

என் ஓட்டு கண்டிப்பா உண்டு :-)

said...

நன்றி பொன்ஸ்..உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும்.

எல்லா கதையையும் படிச்சு, ஓட்டளிக்கோணும்ங்ற உங்க எண்ணம் எல்லா வாக்காளர்களுக்கும் இருந்தா, இந்தப்போட்டி இன்னும் பல எழுத்தாளர்களை உருவாக்கும், இல்லையேல், புதியவர்கள் ஒன்றிரண்டிலேயே ஆர்வமடங்கிவிடுவர்.

உங்களது பின்னூட்டம்தான் 50 தாண்ட உதவியிருக்கிறது, பார்க்கலாம், உங்கள் கைராசி :)).

said...

நன்றி வெட்டிபையல் சார்..(எப்படிங்க இந்த பெயர்ல உங்கள விழிக்கிறது :( )

இது முதல் வருகைன்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கும் நன்றி. 40 வது கதையையே இன்னும் முடிக்கல, இன்னும் உங்க கதையை படிக்கல, படிச்சுட்டு சொல்றேன். வாழ்த்துக்கள் உங்களுக்கும்...

said...

நேர்தியான வகையில் கதையை கையாண்டு இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

said...

//நன்றி வெட்டிபையல் சார்..(எப்படிங்க இந்த பெயர்ல உங்கள விழிக்கிறது :( )
//
வெட்டினு கூப்பிடுங்க இல்லனா பாலாஜினு கூட சொல்லலாம்!!!

சார் எல்லாம் வேண்டாங்க!!!

//வாழ்த்துக்கள் உங்களுக்கும்...
//
மிக்க நன்றி

said...

நன்றி BN.India. உங்கள் ப்ளாக்-ம் பார்த்தேன். நல்ல சிந்தனை.

உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி.

மற்ற படைப்புகளைக் காண/வாக்களிக்க:

http://www.thenkoodu.com/contestants.php

said...

நன்றி பாலாஜி..உங்க பேரச் சொன்னதுக்கு. பின்னூட்டத்தில அடிச்சி நிரவுறீங்க..வாழ்த்துக்கள்.

said...

சூப்பர் கதை. ஒன் லைன்ல மனசில பட்டதை சொல்லிருக்கேன். பாருங்க...

said...

முரட்டுக்காளை,

நன்றி உங்கள் முயற்சிக்கு. இன்னைக்குத்தான் ஓட்டு போடப்போறேன்.

said...

தல..நல்ல 'ஸ்கீரீன் ப்ளே'. ஓட்டும் போட்டாச்சு. பார்க்கலாம் ரிசல்ட் எப்படி வருதுன்னு.

said...

நன்றி ஆறு.

said...

பதிவில் உள்ள படத்தில்

பூவைக் கண்டால் பூவையைக் காணோம்
பூவையைக் கண்டால் பூவைக் காணோம்.

கதையின் முடிவை முன்னமேயே யூகிக்க இயலுகிறது. எனினும் கதை சொல்லும் நடை நன்றாக இருந்தது.

said...

//நெல்லை சிவா said...
நன்றி பாலாஜி..உங்க பேரச் சொன்னதுக்கு. //
நம்ம பேரு நிறைய பேருக்கு தெரியுமுங்க :-)

//
பின்னூட்டத்தில அடிச்சி நிரவுறீங்க..வாழ்த்துக்கள்.
//
நம்ம கைல எதுவும் இல்லைங்க... எல்லாம் மக்களோட அன்பு ;)

நேத்து என் பிரெண்ட் ஒருத்தர் போன் பண்ணியிருந்தாரு. அவருக்கு பிளாக் எல்லாம் இல்லை. ஆனா தமிழ்மணம் ஒரு வருடத்திற்கு மேலாக படித்து வருகிறார்.

நான் தான் வெட்டிங்கறதே அவருக்கு ஒரு வாராமாத்தான் தெரியும்.

அவர் போன்ல பேசும் போது "நெல்லை சிவா"வ உனக்கு தெரியுமா? அவரோட கதைய படிச்சு பாருனு சொன்னாரு. நான் படிச்சிட்டேன்னு சொன்னதுக்கு. ஏன் அவர மாதிரி உனக்கு நல்லா கதை எழுத தெரியாதா?னு கேட்டாரு.

நான் இப்பதான் புதுசு... முயற்சி செய்யறன்னு சொன்னேன்.

நான் சும்மா விளையாட்டுக்கு சொல்லலைங்க... நெஜமா சொல்றேங்க!!!

அப்பறம் ஓட்டு போட்டாச்சுங்க!!! வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

நன்றி பாலாஜி, நானும் ஓட்டு போட்டிருக்கிறேன், எனக்குப் பிடித்த கதைகளுக்கு. அதில் உங்களுடையதும் உண்டு.

நானும் கத்துகுட்டிதாங்க, உங்களது உங்களது நண்பருக்கும் என் நன்றியைச் சொல்லவும், பெருந்தன்மையா அத பகிர்ந்துகிட்ட உங்களுக்கும் நன்றி.


கோயம்புத்துர்காரங்கன்னாலேயே ஒரு ஜாலி இருக்கும், அது உங்கள் கதையிலும் தென்பட்டது, உங்களது கதைக்கு 'தீயினால் சுட்ட புண்' என்று பெயருக்குப் பதிலாக, 'கரிக்கைச் சோழி'-ன்னு பேர் வச்சிருந்தா, வித்தியாசமான தலைப்பாக இருந்திருக்கும்னு நினைச்சேன்.

கண்டிப்பாக உங்களுக்கு பரிசு கிடைக்கும் என்பது என் எண்ணம். பொறுத்திருப்போம்.

said...

மிக்க நன்றி சிவா.

நண்பரிடம் சொல்லிவிடுகிறேன். கரிக்கை சோழினு வெச்சா படிக்கும் போது ரொம்ப வித்யாசமா இருக்கும். அதுவும் இல்லாம எல்லோருக்கும் அது பிடிக்குமானு ஒரு சந்தேகம் இருந்துச்சு!!!

said...

நல்லகதை. உங்களுக்கே ஓட்டுப் போடுகிறேன் சிவா.

said...

நல்லகதை. உங்களுக்கே ஓட்டுப் போடுகிறேன் சிவா.

said...

நன்றி ராதாராகவன். வாக்களிக்க இறுதி நாள் முடிந்துவிட்டது. உங்களால் வாக்களிக்க இயலாது, இருந்தாலும் உங்களுக்கு கதை பிடித்திருந்ததை பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

வாக்களித்த 32-1=31 பேருக்கு மனமார்ந்த நன்றி.

வாசகர் மதீப்பீட்டில் மூன்றாவது இடமும்,வாசகர்+நடுவர் மதீப்பீட்டில் ஏழாவது இடமும் பெற்றிருக்கிறது இச்சிறுகதை.

எல்லா மனங்களுக்கும், புதிய வெற்றியாளர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!

said...

கலக்கல் கதை சிவா,
அருமையா கொண்டுபோய் இருக்கீங்க, பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணத்தின் நிறைகளை அழகாக எடுத்துரைத்திருக்கின்றீர் நன்றி...
ஸ்ரீஷிவ்..