Wednesday, August 30, 2006

இன்டெர்நெட் தொலைபேசி

கணிணியின் உபயோகம் பல்வேறு துறைகளுக்கு பல்வேறு விதமாக பயன்பட்டுக்கொண்டிருக்கையில், தொலைத்தொடர்புத் துறையில் அதன் பங்கு அதி முக்கியமாகிக் கொண்டுஇருக்கிறது.

யாஹூ,எம்எஸ்என்,கூகுள் என வார்த்தை 'சாட்'டில் தொடங்கிய செயல்பாடுகள், ஒலிவடிவத்துக்கு மாறியன. கடந்த ஒரிரு வருடங்களாக தொலைத்தொடர்புதுறைகளும், கணிணி மூலமான 'Voice Over IP' பயன்பாடுகளை வேகப்படுத்த தொடங்கியுள்ளன. இந்தியாவில் இதன் வேகம், அந்த அளவிற்கு வரவில்லை. இப்போதுதான், அதிவேக இன்டெர்நெட் வசதிகள் வரத்தொடங்கியுள்ளன.

அமெரிக்காவில், இதன் வளர்ச்சி குறிப்பிடதக்க அளவில் இருக்கிறது. கடந்த கால் இறுதி ஆண்டில் மட்டும் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இன்டெர்நெட் தொலைபேசிகள் விற்பனையாகியிருக்கின்றன. சென்ற வருடத்தை விட இது 42% சதவிகித வளர்ச்சி.

அமெரிக்காவில் இருக்கும், பிரபல நிறுவனங்களின் வாய்ப்(VoIP) பங்குகள் குறித்து, இணையத்தில் தேடியபோது கிடைத்த தகவல் கீழே:

 1. Vonage - 53.9%
 2. Verizon Voicewing - 5.5%
 3. AT&T - SBC CallVantage - 5.5%
 4. SunRocket -4.0%
 5. Lingo - 2.6%
 6. NetZero Voice - 2.5%
 7. Broadvoice - 2.2%
 8. AOL - 1.6 %
 9. 8x8 (Packet8) - 1.1 %
 10. Earthlink - 0.9%
 11. Other - 20.5%

சரி, இதெல்லாம் எதுக்கு நமக்குங்கிறீங்களா? நம்ம தோஸ்த், ஒரு மூணுமாச புராஜக்ட்டுக்காக அமெரிக்கா வந்தவர், இங்குள்ள நண்பர்களிடையே தொடர்புகொள்ள 'CallingCard' வாங்கனும்னார். அவருக்கு இந்த வாய்ப்(VoIP) சேவை குறித்துச் சொல்லி, இதனை தற்காலிகமாக இலவசமாக வழங்கும் ஒரு சில நிறுவனங்களின் URL கொடுத்துதவினேன்.

அது போல இங்கு வருகைதருபவர்களுக்கும், ஏன் இங்கு இருப்பவர்களுக்கும் உதவுமேயேன இங்கு பதிகிறேன். இந்த URL மூலமாக, மென்பொருளை உங்கள் கணிணியில் இறக்கம் செய்து கொண்டு, பின் டயல் செய்து பேசவேண்டியதுதான்...மற்ற விபரங்களுக்கு, அந்தந்த இணையத்திலேயே தகவல் அறிந்து கொள்ளுங்கள்..

http://www.packet8.net/about/softalk.asp

http://www.skype.com/download/

13 Comments:

said...

நெல்லை சிவா
இதே மாதிரி அங்கு வருவதற்க்கும் உதவினால் நல்லா இருக்கும்.
சும்மா,:-))

said...

நன்றி!

said...

குமார்,

இப்ப ஜாப் மார்கட் இங்க நல்லாருக்குங்க, ட்ரை பண்ணினா வரலாம்ங்க..

said...

பாஸ்டன் பாலா,

தமிழ்மணத்துக்கு வரும் எல்லா தகவல்களையும் படிச்சு பின்னூட்டமும் இடுறீங்க, நீங்க வேறே தனியா தொடர்ந்து எழுதுறீங்க, கலக்குறீங்க. 'விசயஞானி'-ன்ற பட்டம் உங்களுக்கு கொடுக்கலாம்-னு நினைக்கிறேன். :)

நன்றி பாலா, தங்கள் ஊக்கத்துக்கு!

said...

//பாஸ்டன் பாலா,
கலக்குறீங்க. 'விசயஞானி'-ன்ற பட்டம் உங்களுக்கு கொடுக்கலாம்-னு நினைக்கிறேன். :)
//

தப்பு..தப்பு 'விதய ஞானி'

:)

said...

அநியாயத்துக்கு கால வாரறீரே ;-)
நமக்கு அரசியலில் பிரகாசமான எதிர்காலம் இருக்கு :-P

said...

voipcheap.com
www.tad.com
skype.com
hotfoon.com
jajah.com
efonica.com

said...

நன்றி அலெக்ஸ்,மாயவரத்தான்,பாலா.

said...

மூணு மாசம் முந்தி காலிங் கார்டுக்கு வால்மார்ட்டா, கே மார்ட்டான்னு அலைஞ்ச காலத்துல இதைப் படிச்சிருக்கலாம்.. ம்ம்ம்ம்ம்...

said...

please check this

http://smoothtalk.blogspot.com/2006/04/voip.html

said...

//*---மூணு மாசம் முந்தி காலிங் கார்டுக்கு வால்மார்ட்டா, கே மார்ட்டான்னு அலைஞ்ச காலத்துல இதைப் படிச்சிருக்கலாம்.. ம்ம்ம்ம்ம்---*//

அதுக்கென்ன பொன்ஸ், இன்னொருவாட்டி வந்துருங்க.

said...

நன்றி ஸ்மூத்டாக், உங்க பதிவும் படித்தேன், நல்லாயிருந்தது.

said...

aiya indru thagalathu katturi padithan nan ipoluthu AEGANISTAN il irukiran enagu internet elavasm india vil uupayokiga computer illamel eyangakudiya tholaipasi , adapter viparangalai enaku thariyapatothamudiuma
pepu_92@yahoo.co.in