Saturday, August 26, 2006

வேட்டையாடு விளையாடு


'இதோ வருது...அதோ வருது' என்ற எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்த 'வேட்டையாடு..விளையாடு' ஒரு வழியாய் தடைகளைத் தாண்டி வந்து விட்டது. 'கமல் படம்' என்ற எதிர்பார்ப்பு தியேட்டருக்கு இழுத்து வர, அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்யும் விதமாய், பரபரப்பாய் படத்தை நகர்த்திச் சென்றிருக்கும் கெளதமிற்கு ஒரு சபாஷ். சும்மா சொல்லக் கூடாது, டெக்னிகலாக படம் நன்றாக வந்திருக்கிறது.

போலிஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ்ஜின் மகள் கற்பழித்து கொலை செய்யப்பட, துயரம் தாளாத மனைவிக்காக, அமெரிக்கா செல்கிறார் பிரகாஷ்ராஜ். அங்கு அவரும்,அவர் மனைவியும் கொல்லப்பட, யாரந்த குற்றவாளி என்பதைக் கமல் கண்டுபிடித்து, பழி வாங்குவதே கதை.
நூலிழை அளவுதான் கதை, என்றாலும் சொல்லியிருக்கும் விதம் அசத்தல். முன்பாதி விறுவிறுப்பும், பின்பாதி காதலும்,கண்டுபிடிப்புமாக நகர்கிறது.

'காக்க காக்க'-வில் 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' ஆபிசர் வாழ்க்கை என்றால், இதில் 'கிரைம் பிராஞ்ச்' ஆபிசர். ஆனால், முன்னதில் இருந்த 'கண்ணியம்', இதில் இல்லை. 'கிரைம்' என்பதால், நடக்கும் கொலைகளும்,கற்பழிப்புகளும், அதைக் காட்டியிருக்கும் விதமும் சற்றே அதிகமோ என எண்ணத் தோன்றுகிறது. இன்னம் கொஞ்சம் நீட்டியிருந்தால், 'குற்றம் - நடந்தது என்ன?' என டி.வி தொடர் போலாகிருக்கும்.

'வசூல் ராஜா'-வில் பார்த்ததைவிட, இதில் அழகாய் இருக்கிறார், கமல். அலட்டாமல், மிகையில்லாமல் கச்சிதமாய்ச் செய்திருப்பது சிறப்பு. குறைந்த நேரமே வந்தாலும், குத்துவிளக்காய் கமலினி முகர்ஜி. 'பார்த்த முதல் நாளே..' பாடலில், கமல்ஹாசன்,காதல்ஹாசன்.

வழக்கமாக துள்ளலாய் வரும் ஜோ, படத்தில் 'இப்பல்லாம் நான் அழுமூஞ்சி ஆயிட்டேன்' என அவரே சொல்லும் வசனம் போல, அமெரிக்க டைவர்ஸியாக அழுகையுடனே அறிமுகமாகிறார். கமல் திடிரென காதலைச் சொல்லும் காட்சியில், பதில் சொல்ல திணறும் ஜோ, மனதில் நிற்கிறார்.

இசை ஹாரிஸ். பாடல்களை விட, பின்னனி இசையில் நன்கு தெரிகிறார். விறுவிறுப்பாகச் செல்லும் படத்திற்கு, ஒளிப்பதிவும் சிறப்பு. க்ளைமாக்ஸ் சேஸிங் சிறப்பு.

கமல் படம் என்று சொல்வதைவிட, கெளதமின் படம் என்று சொல்லவைத்திருக்கும் இயக்குநர், கமலுக்காக வைத்திருக்கும் ஆரம்ப சண்டைக் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

காமெடியே இல்லாமல், ரசிகர்களை இரண்டரை மணிநேரம் இருக்கையில் கட்டிப்போட்டது டைரக்டரின் சாமர்த்தியம் என்றால்,சைக்கோத்தனமான கொலைகளும்,கற்பழிப்புகளும் வன்முறையாய் காட்டியிருக்கும் விதம் எந்த அளவுக்கு, பெண்கள், மற்றும் குழந்தைகளை திருப்தி படுத்தும் என்பது ஒரு கேள்விக்குறி.

'கிரைம்' சப்ஜக்ட் என்பதால், எந்த அளவிற்கு ரீபிட் ஆடியன்ஸ் கிடைக்கும் என்பது இன்னொரு கேள்விக்குறி.

எது எப்படியாயினும், படம் நன்றாக வந்திருக்கிறது என்பதே என் கருத்து. மத்தத நீங்க பாத்துட்டுச் சொல்லுங்க..

24 Comments:

said...

So, padam pakkalam. I will see and tell after that...

said...

உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது...

படம் எதிர்பார்த்த அளவிற்க்கு நிறைவு செய்யவில்லை என்பது என் கருத்து, முதல் பாதி விறு விறுப்பு பின் பாதி கொஞ்சம் தொய்வு.. .

said...

படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ , கமலின் ரசிகர்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள்

said...

வே உம்ம விமர்சனம் நல்லாருக்கு. படம் சிட்னில கூட ரிலீஸ் ஆகிருக்கு, ஆனா டிக்கெட் கெடக்கல. அதுக்கென்ன அடுத்த மாசம் இந்தியா வந்து பாத்துக்கிடுதேன்.

said...

Thanks for the reiview ... Film is very good ....

said...

அட இன்னுமொரு விமர்சனம் சுட்டுங்க

said...

உங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது.

said...

---முன்னதில் இருந்த 'கண்ணியம்', இதில் இல்லை. ---

---கமல் திடிரென காதலைச் சொல்லும் காட்சியில், பதில் சொல்ல திணறும் ஜோ,---

----பாடல்களை விட, பின்னனி இசையில் நன்கு தெரிகிறார்.----

கலக்கல் விமர்சனம்!

said...

சரவணன், படம் பாத்துட்டீங்களா? உடனேயே விமர்சனத்த படிச்சு, கமெண்ட்ஸ்-ம் கொடுத்ததுக்கு நன்றி

said...

விவேகா, இங்குள்ள எனக்குத் தெரிந்த கமலின் ரசிகர்கள் அவ்வளவு திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. மும்பை எக்ஸ்பிரஸ்-வை விட இது நன்றாக வந்திருப்பதாக உள்ள திருப்திதான் அது.

said...

அண்ணே, நெல்லை அண்ணே, நம்ம ஊர்லேயே போயி பாக்க போறேளோ? சூப்பருங்க, ஆனா எந்த தியேட்டர்ல போட்டிருக்கான்னு தெரியல, பாம்பே தியேட்டர்னா சவுண்ட் நல்லாருக்கும்.

said...

ஆராதனா, உங்க கமெண்ட்க்கு நன்றி, உங்க பேர படிச்சதும், 'டக்கு'ன்னு ஜோதிகா ஞாபகம், ஏன்னா, இந்த படத்துல ஜோதிகா பேர், உங்க பேர்தான் :)

said...

பாஸ்டன் பாலா சார், உங்க விமர்சனம் ஒரு VV - ஒரு திறனாய்வு ஸ்டைல்ல கலக்கியிருக்கீங்களே.

http://etamil.blogspot.com/2006/08/vettaiyaadu-vilaiyaadu-movie-review.html

said...

இளா, உங்க விமர்சனமும் படித்தேன், கேமிரா மேன் திரு-ன்னு போட்டிருந்தீங்க, அது ரவிவர்மா.

said...

ரிபீட் ஆடியன்ஸ் பத்திலாம் யோசிக்கிறீங்க... தயாரிப்பாளர் வேண்டப் பட்டவரா மின்மினி... ;-)

boston பாலாவும் ஜெஸிலாவும் கூட இதப் பத்தி பதிவு போட்டுட்டாங்க

வேட்டையாடு விளையாடுன்னு ஒரு குறிச்சொல்ல சேர்த்திருந்தா இன்னேரம் முதல் பக்கத்துல வந்துருக்கும்னு நினைக்கிறேன்!

என்னோடது

said...

//கமலுக்காக வைத்திருக்கும் ஆரம்ப சண்டைக் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.//
ஆம். மற்றவர்களுக்கும் தனக்கும் ஒரு வித்தியாசத்தை கமல் வைத்திருக்க வேண்டும். நல்லவேளை, அதைச் செய், இதைச் செய், அப்படிச் செய்யாதே, இப்படிச் செய்யாதே, பெண்ணென்றால் அப்படி, ஆணென்றால் இப்படி என்று "புத்திமதி சொல்லி" தொடக்கப்பாடல் இல்லாமல் வந்தாரே என்று மகிழலாம்.
//படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ , கமலின் ரசிகர்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள்//
அப்படித் தெரியவில்லை.
முக்கிய விசயம், இது கமல் படமன்று. முழுக்க முழுக்க கெளதம் படம்.
பாடல்களை ஒலித்தட்டுக்களாக வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். படத்தில் செருகுவதெல்லாம் கோமாளித்தனமாகவே படுகிறது.
இசையமைப்பென்பது, படத்துக்கான பின்னணி இசையமைப்புத்தான் என்ற புரிதல் இசையமைப்பாளருக்கு வரவேண்டுமென்றால் பாடல்களில்லாத படங்கள் பற்றி யோசிக்கவேண்டும்.
நாலு பாடல்களை இசையமைத்தால் படத்துக்கான பணி முடிந்துவிட்டது என்ற விளக்கதோடுதான் இன்றைய தமிழ் இசையமைப்புலகம் இயங்குகிறது.

வேட்டையாடு விளையாடு இல் இசையமைப்புப் பரவாயில்லை. ஆனால் சில இடங்களில் முழு அமைதியைத் தந்திருக்கலாம். குண்டூசி விழுந்தாலும் கேட்கும் மெளனத்தால் கனமான உணர்வைத் தந்திருக்க முடியும். (இதை உணர Saving private ryan இல் சில காட்சிகள் உள்ளன.)

said...

நேற்று இரவுதான் நான் இப்படத்தைப் பார்த்தேன். கமலின் நடிப்பு சிறப்பாக உள்ளது. சில இடங்களில் கமலிலும்விட வில்லன் அமுதா அட போட வைக்கிறார். முதல்காட்சி பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வந்த சிலர் கூறினார்கள் காக்க காக்கவில் கௌதம் கமலை நடிக்கவைத்துள்ளார் என்று ஆனால் படம் பார்த்த பிறகுதான் தெரிந்தது அவர்கள் சொன்னதெல்லாம் ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்யென்று.

said...

இப்படியான ஒரு துப்பறியும் கதைக்கு பாடல்கள் தேவைதான என்பதை இயக்குனர் சிந்தித்திருக்க வேண்டும். பாடல் காட்சிகள் வரும்போது ஒருவித சலிப்புத்தன்மையை தியேட்டரில் உள்ள எல்லோரின் முகத்திலும் பார்க்க முடிந்தது. பாடல்கள் இத்திரைக்கதையின் வேகத்தைக் குறைத்துள்ளதென்றால் மிகையில்லை.

said...

பிணவறை என்பதை பிணவரை என எழுதியிருந்தார்கள். இவ்வளவு பெரிய கதாநாயகன் மற்றும் சிறந்த இயக்குனரின் படத்தில் இவ்வெழுத்துப் பிழை இடம்பெற்றிருந்தது மனதில் நெருடலைக் கொடுத்தது. படம் எடுத்து முடித்த பின்பு கமல் இதைப் பார்க்கவில்லையோ என்ற ஒரு சந்தேகமும் எழுகிறது.

said...

ராசுக்குட்டி,

நஷ்டத்திலதான் படத்த வெளியிடுவதாக சொல்லியிருந்ததால, அது பத்தியும் சிந்தனை வந்தது, மத்தபடி,ஒன்னுமில்லைங்க.. உங்க விமர்சனமும் நல்லாயிருந்தது.

said...

நன்றி இளையவன், உங்க கருத்துக்கு. நீங்க சொன்ன தமிழ் எழுத்துபிழையை நானும் கவனித்தேன், பாஸ்டன் பாலாவும் அவரது விமரிசனத்தில் எழுதியிருந்தார். கமல் ஒரு தமிழ் ஆர்வலர், ரிவ்யூ பார்த்து சொல்லியிருக்கலாம், எளிதாய் எல்லோருக்கும் தெரிவது, எப்படி அவ்வளவு பெரிய டீம் பார்வையிலும் தப்பியது என்று தெரியவில்லை.

said...

Nice Review. I saw the movie, but don't like that much,because of the vulgarity & violence.

said...

விமர்சனத்த பார்த்தா படம் பார்க்கலாம் அப்படித்தானே!

ஆமா ஏன் இவ்வளவு கால இடைவெளி.

said...

இன்னும் படம் பாகலியா,அரசே! பாருங்க.

ஆபிஸ்-ல புராஜக்ட் சென்ற மாதம் 'லைவ்'-ஆனதினால வேலை ஜாஸ்தி. இப்ப தேவலை, அதான் லேட்-டா வந்துட்டேன்.