Tuesday, June 06, 2006

'ஹம்மிங்பர்ட்'

கழிந்த ஞாயிற்றுக்கிழமை நல்ல சாப்பாட்டுக்கு பிறகு, வீடு ஒதுங்க வைக்கணும்னு பிளான். ஆனா, 'அல்வா' பாண்டி 'இன்னைக்கி வேணாண்டா'ன்னு கொட்டாவி விட்டுக்கிட்டே சொன்னாரு. 'அண்ணாச்சி, இதயேதான் ரெண்டு வாரமா சொல்லிட்டு இருக்கிய, இன்னக்கி எப்படியிம் பண்ணிரனும்னு சொல்லிக்கிட்டெ, சும்மா செய்ய ஆரம்பிச்சா போரடிக்க ஆரம்பிச்சிரும்னு, எதாவது பாட்டு ஒன்ன போட்டுட்டே ஆரம்பிக்கலாம்னு சொன்னேன். அப்படின்னா 'ஹரிணி' பாட்டு போட்றா-ன்னார். (பாண்டிக்கு ஹரிணி குரல் பிடிக்கறதுக்கு இன்னொரு காரணம், 'சிம்ரன்'-னுக்கு அந்த வாய்ஸ் ஃபிட் ஆறதும் ஒன்னு. ) எனக்கோ 'ஜானகி' ஹிட்ஸ் போடணும்னு நினைப்பு, ஆனா 'அல்வா' பாண்டிக்கு 'ஹரிணி' ஹிட்ஸ் வேணும்னு ஆசை. எனக்கும் ஹரிணி புடிக்கும்தான், ஆனா, ஜானகி பாட்டு கேக்க ஆசை, என்ன பண்ணுறது! சரிடா மக்கா, 'பூவா/தலையா' போட்டு பாத்து டிசைட் பண்ணலாம்னு சொல்லவே, சரிடான்னு ஒரு 'குவார்ட்டர' எடுத்தோம். (குவார்ட்டர்-னா, அந்த குவார்ட்டர் இல்லங்கண்ணா, டாலர் குவார்ட்டர்). பாண்டியே டாஸ் போட்டாரு, எனக்கு எப்போதும் 'பூ' தான் பிடிக்கும், அததான் கேப்பேன்னு தெரிஞ்சுகிட்டு, அது வராத மாதிரி இருக்க, பூவை வைத்தே டாஸ் பண்ணினாரு. ஆனா, அன்னைக்கு 'லக்' எனக்காச்சே.. விழுந்தது 'பூ'.. அண்ணாத்த டான்ஸப்போட்டுக்கிட்டே, சிடி-யை எடுக்க, 'அல்வா' பாண்டி 'வாழுடா'ன்னு வாழ்த்திக்கிட்டே பொட்டி எடுக்கப்போனார்.

சிடியை போட்டா, மொத பாட்டே, ஜானகியம்மா 'ல லி ல லி ல லோ..' ன்னு ஆரம்பிச்சாங்க.. குறைச்சிருந்த 'வால்யூம' கொஞ்சம் கூட்டினேன். பாண்டி அதுக்குள்ளே எச்சரிக்கை பண்ணினார். அமெரிக்கால அழகழகா சவுண்ட் சிஸ்டம் இருந்தென்ன புண்ணியம், ஒரு பிடிச்ச பாட்ட சத்தம் வச்சி கேக்க முடியுதான்னு முனகிக்கிட்டே, குறைக்கிற மாதிரி குறச்சேன். ஆனாலும், அந்த ஹம்மிங்-க குறைக்க மனசு வரல.. ராஜாவும் கலக்கியிருப்பாரு.. மச்சானப் பாத்தீங்களா-ன்னு அப்படியே மெல்லிய சிரிப்போட பாடுற வாய்ஸ், மழை பெய்யுறப்ப வர்ற மண்வாசம் மாதிரி..அப்படியே ஊருப்பக்கம் கூட்டிக்கிட்டு போயிடுச்சு..

அடுத்த பாட்டு... 'அ ஆங் ஹா..' ன்னு ஜானகியம்மாவோட ஹம்மிங்.. அப்படியெ மனச பிசையற மெலடி. 'அன்னக்கிளி' உன்னத்தேடுதே..'..

அடுத்த பாட்டு 'சிங்கார வேலனே தேவா'ன்னு நாதஸ்வரத்தோடு, இணைஞ்சி பாடற பாட்டு.. என்ன படம்னு தெரியல, யாருக்குப் பிண்ணனி பாடுனாங்கன்னு தெரியல..அப்படியெ ஒரு கண்ணியமான இளம் பெண்ணுக்கு பாடற மாதிரி சின்னத்துறுதுறுப்புடன் பாடியிருப்பாங்க..

ஒவ்வொரு பாட்டா அங்க நின்னு, இங்க நின்னு கேட்டுக்கிட்டு இருக்கறதப்பாத்த 'அல்வா' பாண்டி, 'எல என்னா, எல்லாத்தயும் எந் தலயில கட்டிக்கிட்டு, நீ சோக்கா பாட்டு கேக்க' ன்னு சத்தம் போடவே, கொஞ்சம் குற்ற உணர்ச்சியுடன் 'இதோ வந்துட்டம்வே-ன்னு சொல்லிக்கிட்டே கூடமாட ஒத்தாச பண்ணப்போனேன்..

அந்த 'ல லி ல லோ' மட்டும் காதுக்குள்ளேயே ஒலிச்சிக்கிட்டிருந்தது..

8 Comments:

said...

While reading, you made us to feel the presence with you. Good flow, at last have you did the cleanup or not? While I was staying with my bachelor friends, the same used to happen, I mean to delay the cleanup :)

said...

Thanks Mahesh, we completed about 80% cleaning on that day! Thanks for your encouragement, visit my page and give your comments as and when you have time.

Thanks again..

said...

சிவா,

ஜானகி அம்மா பாடல் என்றால் எனக்கும் பிடிக்கும், அப்போ அப்போ தேவையில்லாத பாடல்கள் பாடுவாங்க.

எனக்கு ரொம்ப பிடிச்சது பூவரசம்பூ பூத்தாச்சு, பொண்ணு தேதி .... பாடல்.

எங்க தெருவில் நிறைய பூவரசம் மரங்கள் இருக்கும், அதை பார்க்கும் போது எல்லாம் அந்த பாடல் நினைவுக்கு வரும்...

நம்ம ஊர்க்கதைகள் நிறைய எடுத்துவிடுங்க...

said...

ஆமாம், பரஞ்சோதியாரே, சில தேவையில்லாத பாடல்களும் பாடியிருக்காங்க. பூவரசம் பூ-பாடல் எனக்கும் பிடிக்கும்..

said...

ஆமாம், பரஞ்சோதியாரே, சில தேவையில்லாத பாடல்களும் பாடியிருக்காங்க. பூவரசம் பூ-பாடல் எனக்கும் பிடிக்கும்..

said...

ஆமாம், பரஞ்சோதியாரே, சில தேவையில்லாத பாடல்களும் பாடியிருக்காங்க. பூவரசம் பூ-பாடல் எனக்கும் பிடிக்கும்..

said...

ஜாலியா எழுதியிருக்கீறீர்கள்.

said...

நன்றி ஸ்ரீராம், அப்பப்ப வாங்க, உங்க கருத்துக்களையும் பதியுங்க, ஏன் நீங்க இன்னும் ப்லாக் தமிழ்ல ஆரம்பிக்கல..