Saturday, May 27, 2006

Flash Drive -> மின்னல் தட்டு?



ஒரு காலத்தில் ஃபிளாப்பியையும், காம்பக்ட் டிஸ்க்குகளையும் பயன்படுத்தி வந்த கம்ப்யூட்டர் உலகம், இன்று 'Small is beautiful' என்பதற்கேற்ப Flash Drive (மின்னல் தட்டு என்று சொல்லலாமா?) என்ற புதிய சாதனத்தின் உபயோகத்தில்! குஷ்புவிடமிருந்து சிம்ரன்னுக்கு மாறிய தமிழ் சினிமா போல, இந்த 'Slim Beauty' ஃபிளாப்பி/சிடிக்களை பின்னே தள்ளி முன்னுக்கு வந்திருக்கிறது. 2GB வரை தகவல்களை பதிவு செய்ய இயலும். எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச் செல்ல வசதி. எத்தனை முறையும் மறு பதிவு செய்து கொள்ளலாம்.

பெரும்பாலான இந்திய MNC நிறுவனங்கள், இவற்றை பணி செய்யும் இடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை.,அவர்களின் பிரத்யேகமான 'டேட்டா'-க்களை, எளிதில் கடத்திச் செல்ல இயலும் என்பதால், இதை கணிணியுடன் இணைக்கும் 'USB Port' -னை, செயலிழக்கச் செய்து விடுகிறார்கள்.

முதலில் எந்த வித 'பாதுகாப்பு' வசதியும் இல்லாமல் வந்து கொண்டிருந்த இந்த Flash Drive, இப்போது பாதுகாப்பு வசதியுடன் வருகிறது. அதாவது, உங்களின் 'டேட்டா-வை காப்பி செய்யும் போது, 'Secure Protection-யுடன்' பாஸ்வர்ட் கொடுத்து பதிவு செய்தீர்களானால், அவற்றை வேறு யாராலும் பார்க்க இயலாது. பதிவு செய்தவரே ஆனாலும், பாஸ்வர்ட் கொடுத்தால்தான் பார்க்க இயலும். சிறியதாக இருப்பதால், மறதியில் எங்காவது தொலைத்துவிட வாய்ப்புண்டு. ஆகையால், இந்த 'பாஸ்வர்ட்' வசதி மிக அவசியமான ஒன்று. எனது நண்பர், அவரது Tax detail உட்பட எல்லா கணக்கு வழக்குகளையும் இதில் பதிவு செய்து, எங்கோ தொலைத்து விட்டு, இரண்டு நாட்கள் நிம்மதியில்லாமல் இருந்தார், கடைசியில் அவரது பெட்டியிலே இருந்தது வேறு விசயம்.

2GB வரை பதிவு செய்ய வசதி இருப்பதால், குட்டி குட்டி சாப்ட்வேர் எல்லாம் இதில் இருந்தே, ஓட்டிக்கொள்ளலாம். 2GB யின் விலை $40க்கு அமெரிக்க டாலரில், இந்தியாவில் இன்னும் கொஞ்சம் அதிகமிருக்கலாம். நிறைய வலை அன்பர்கள், இதனை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கலாம், மற்றவர்களுக்காக இதன் படம் மேலே...

2 Comments:

said...

Sive,

Good article, very useful ifo.
(FYI - 4GB is available here).

krishnan
(Qatar)

said...

Yes Krishnan, It is available here too, but while the 'GB' grows, Size also increases! Now U3 Smart Service Disks are also in the market, Tiny things attracts :)