Sunday, May 28, 2006

மதுமிதா..உங்கள் ஆய்விற்காக..

வலைப்பதிவர் பெயர்: சிவராம்.சண்முகம் http://vinmathi.blogspot.com/
வலைப்பூ பெயர் : மின்மினி
சுட்டி(url) : http://vinmathi.blogspot.com

ஊர்: பிறந்தது : திருநெல்வேலி
வாழ்வது : சென்னை
தற்போது வசிப்பது : கலிபோர்னியா
நாடு : இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர் : கூகுள் என்ற திறந்த புத்தகம். யுனிகோடன் என்ற பேனா, தமிழில் எழுத ஆவலேற்படுத்திய 'தமிழ்மணம்'!


முதல் பதிவு ஆரம்பித்த நாள் : ஏப்பிரல், 27 வருடம் : 2006

இது எத்தனையாவது பதிவு : ஏழாவது பதிவு

இப்பதிவின் சுட்டி(url): http://vinmathi.blogspot.com/2006/05/blog-post_114879609444046844.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள் : என் நாடு, என் மக்கள் எனெக்கென்று ஒரு வலைப்பூ என்ற எண்ணத்தில்தான். அத்தோடு எனது 'வெண்ணிலா' கனவும் கூட..(?! - பார்க்க எனது முதல் பதிவு)

http://vinmathi.blogspot.com/2006/04/blog-post_27.html

சந்தித்த அனுபவங்கள்: இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இன்றுடன் ஒரு மாதம் முடிந்திருக்கிறது. முதல் பதிவிலேயே யாரோ 'காசி' என்ற புனிதப் பெயர் கொண்டவரிடமிருந்து, மற்ற சில வலைப்பதிவர்களைத் தாக்கி ஆபாசமாக வரிகளில் இரண்டு கடிதங்கள். நல்ல வேளையாக மட்டுறுத்தலுடன், 'மின்மினி' setup செய்யப்பட்டிருந்தமையால், அசிங்கம் தவிர்க்கப்பட்டது. நல் நெற்பயிரிடையேயும், சில புற்கள்! என்ன செய்ய...இருப்பினும், சற்று வருத்தமாக இருந்தது!

பெற்ற நண்பர்கள்: பள்ளி, கல்லூரி, பணி என்ற எல்லை தாண்டி சிகரம் தொடவே இந்த வலைப்பூ முயற்சியும் கூட!

கற்றவை: கற்றதைச் சொல்ல கற்றுக் கொண்டிருக்கிறேன்! இன்னும் கையளவிலே இருக்கிறேன், அதற்குள் உலகளவிற்கு முயற்சிக்கிறேன்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எழுத்தில் சுதந்திரம் இருக்கிறது, என்பதற்காக எழுத விரும்பவில்லை. எண்ணங்களின் கட்டுப்பாட்டிலே எழுத விரும்புகிறேன். மானுடம் வளர்க்கவே எழுத எண்ணுகிறேன், மற்றோரை வருத்தவோ, வறுக்கவோ எழுத விருப்பம் இல்லை.

இனி செய்ய நினைப்பவை: நல்ல எண்ணங்களையும், சிந்த்தனைகளையும் விதைப்பதோடு, சில அறிவியல் தகவல்களையும், பொழுது போக்கு அம்சங்களையும் தாங்கியதாக 'மின்மினி' யை பொழிவாக்க ஆசை. இப்போதுதான் துளிர்க்கிறேன், சின்னச்சின்னதாக ஆசைகளில், அலையாடிவிட்டு, பேரின்பத்திற்கு வருகிறேன்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: வாழ்க்கையின் ரசிகன் - எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணுபவன் - வாழ்ந்து, வாழ வைக்க ஆசைப்படுபவன் - நானிறந்தாலும், என்னின் நல் நினைவுகள் இவ்வுலகில் நிலைத்திருக்கும் விதமாய் வாழ ஆசைப்படுபவன்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:

இந்த வலைப்பதிவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பத்திரிக்கை என்று சொல்லலாம். இதில் பதிவு செய்பவர்கள் யாவரும், அடிப்படை அறிவைவிட சற்று அதிகமான திறனுடேயே இருப்பர். இப்படிப்பட்ட நபர்களிடம் இருந்த்து வரும் பதிவுகள் அதற்கான தரத்துடன் இருத்தல் வேண்டும் என்பது எனது அவா. தனி நபர் துதிபாடலும், ஆபாசங்களும் இல்லாதிருந்தால் வலைப்பூ மிகச் சிறப்பாய் மணக்கும்.

9 Comments:

said...

இந்த வலைப்பதிவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பத்திரிக்கை என்று சொல்லலாம். இதில் பதிவு செய்பவர்கள் யாவரும், அடிப்படை அறிவைவிட சற்று அதிகமான திறனுடேயே இருப்பர். இப்படிப்பட்ட நபர்களிடம் இருந்த்து வரும் பதிவுகள் அதற்கான தரத்துடன் இருத்தல் வேண்டும் என்பது எனது அவா. தனி நபர் துதிபாடலும், ஆபாசங்களும் இல்லாதிருந்தால் வலைப்பூ மிகச் சிறப்பாய் மணக்கும்.


அன்பு சிவா மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ளதை தான் நானும் அனைத்து வலைப்பதிவு நண்பர்களிடமும் கூற ஆசைப்படுகிறேன். தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்னும் எண்ணம் அனைவருக்கும் ஏற்படும் விதத்தில் நாம் நடந்துக்கொள்வோம்.

உங்கள் எண்ணங்களை மிக அருமையாக விளைக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz

said...

அன்பு மஞ்சூர் ராசா,

உங்களின் எண்ணப்பதிவிற்கு நன்றி. தமிழன் என்று தலை நிமிர்வோம்!

அன்புடன் சிவா.

said...

அட நம்ம ஊர்க்காரரா நீங்க..

வலைப்பதிவுக்கு புதிதாக அடியெடுத்துவைக்கும் தங்களை வரவேற்கின்றேன்.

said...

நன்றி, ரசிகவ்..உங்கள் பதிப்புகளும் பார்த்தேன்..யதார்த்தமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

said...

sivaram
welcome. the comment sent by the name `kasi' may not be from original kasi. he is the founder of thamizmanam. kindly check

said...

தாணு,

அது தமிழ்மண காசியிடமிருந்து அல்ல, அதோ பெயர் கொண்ட வேறு நபரிடமிருந்து..

said...

ஆகா, நம்ம ஊர்க்காரர், வாங்கப்பூ.

உங்க பெயரிலேயே ஒருத்தர் இருக்கார், அப்புவிளை சிவா.

நல்லாவே சொல்லியிருக்கீங்க, மாற்றம் கட்டாயம் வரும் என்று நம்புவோம்.

said...

உங்கள் வரவேற்பிற்கு நன்றி பரஞ்சோதி, உங்கள் படைப்புகளையும் பார்த்தேன் ரசித்தேன்..நிறைய எழுதியிருக்கிறீர்கள், இப்போதுதான் வந்திருக்கிறேன், மெல்ல படித்து சொல்கிறேன், என் கருத்தினை. உங்கள் வருகைக்கும் என் நன்றி

said...

I very much appreciate all your views about life and what kind of messages you want your MINMINI to convey to people. Especially your views about freedom in writing is superb, I wish all writers should make a note of this, intention of writing should always aim genuinely to make others enjoy their writings or to pass on good messages out of it but never intend to hurt anybody.