Tuesday, May 30, 2006

எழுத ஒன்று..படங்காட்ட ஒன்று

நான் எடுத்த..எனக்குப் பிடித்த சில புகைப்படங்களையும், மின்மினியிலேயே பிரசுரித்துக் கொண்டிருந்தேன். நண்பர் கார்த்திக்கின் ஆலோசனையின் பேரில், அதனை தனி 'ப்ளாக்' கில் வெளியிட ஏற்பாடு செய்தாயிற்று.

இனி எழுத 'மின்மினி'.. படங்காட்ட 'காமிரா பார்வை'

இதோ புதிய 'காமிரா பார்வை' - http://cameraparvai.blogspot.com/

Sunday, May 28, 2006

ஒரு மரத்துப் பூக்கள்


வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலருமே....

மதுமிதா..உங்கள் ஆய்விற்காக..

வலைப்பதிவர் பெயர்: சிவராம்.சண்முகம் http://vinmathi.blogspot.com/
வலைப்பூ பெயர் : மின்மினி
சுட்டி(url) : http://vinmathi.blogspot.com

ஊர்: பிறந்தது : திருநெல்வேலி
வாழ்வது : சென்னை
தற்போது வசிப்பது : கலிபோர்னியா
நாடு : இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர் : கூகுள் என்ற திறந்த புத்தகம். யுனிகோடன் என்ற பேனா, தமிழில் எழுத ஆவலேற்படுத்திய 'தமிழ்மணம்'!


முதல் பதிவு ஆரம்பித்த நாள் : ஏப்பிரல், 27 வருடம் : 2006

இது எத்தனையாவது பதிவு : ஏழாவது பதிவு

இப்பதிவின் சுட்டி(url): http://vinmathi.blogspot.com/2006/05/blog-post_114879609444046844.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள் : என் நாடு, என் மக்கள் எனெக்கென்று ஒரு வலைப்பூ என்ற எண்ணத்தில்தான். அத்தோடு எனது 'வெண்ணிலா' கனவும் கூட..(?! - பார்க்க எனது முதல் பதிவு)

http://vinmathi.blogspot.com/2006/04/blog-post_27.html

சந்தித்த அனுபவங்கள்: இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இன்றுடன் ஒரு மாதம் முடிந்திருக்கிறது. முதல் பதிவிலேயே யாரோ 'காசி' என்ற புனிதப் பெயர் கொண்டவரிடமிருந்து, மற்ற சில வலைப்பதிவர்களைத் தாக்கி ஆபாசமாக வரிகளில் இரண்டு கடிதங்கள். நல்ல வேளையாக மட்டுறுத்தலுடன், 'மின்மினி' setup செய்யப்பட்டிருந்தமையால், அசிங்கம் தவிர்க்கப்பட்டது. நல் நெற்பயிரிடையேயும், சில புற்கள்! என்ன செய்ய...இருப்பினும், சற்று வருத்தமாக இருந்தது!

பெற்ற நண்பர்கள்: பள்ளி, கல்லூரி, பணி என்ற எல்லை தாண்டி சிகரம் தொடவே இந்த வலைப்பூ முயற்சியும் கூட!

கற்றவை: கற்றதைச் சொல்ல கற்றுக் கொண்டிருக்கிறேன்! இன்னும் கையளவிலே இருக்கிறேன், அதற்குள் உலகளவிற்கு முயற்சிக்கிறேன்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எழுத்தில் சுதந்திரம் இருக்கிறது, என்பதற்காக எழுத விரும்பவில்லை. எண்ணங்களின் கட்டுப்பாட்டிலே எழுத விரும்புகிறேன். மானுடம் வளர்க்கவே எழுத எண்ணுகிறேன், மற்றோரை வருத்தவோ, வறுக்கவோ எழுத விருப்பம் இல்லை.

இனி செய்ய நினைப்பவை: நல்ல எண்ணங்களையும், சிந்த்தனைகளையும் விதைப்பதோடு, சில அறிவியல் தகவல்களையும், பொழுது போக்கு அம்சங்களையும் தாங்கியதாக 'மின்மினி' யை பொழிவாக்க ஆசை. இப்போதுதான் துளிர்க்கிறேன், சின்னச்சின்னதாக ஆசைகளில், அலையாடிவிட்டு, பேரின்பத்திற்கு வருகிறேன்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: வாழ்க்கையின் ரசிகன் - எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணுபவன் - வாழ்ந்து, வாழ வைக்க ஆசைப்படுபவன் - நானிறந்தாலும், என்னின் நல் நினைவுகள் இவ்வுலகில் நிலைத்திருக்கும் விதமாய் வாழ ஆசைப்படுபவன்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:

இந்த வலைப்பதிவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பத்திரிக்கை என்று சொல்லலாம். இதில் பதிவு செய்பவர்கள் யாவரும், அடிப்படை அறிவைவிட சற்று அதிகமான திறனுடேயே இருப்பர். இப்படிப்பட்ட நபர்களிடம் இருந்த்து வரும் பதிவுகள் அதற்கான தரத்துடன் இருத்தல் வேண்டும் என்பது எனது அவா. தனி நபர் துதிபாடலும், ஆபாசங்களும் இல்லாதிருந்தால் வலைப்பூ மிகச் சிறப்பாய் மணக்கும்.

Saturday, May 27, 2006

ஷிகாகோவில் அண்ணா மேம்பாலம்!?

Flash Drive -> மின்னல் தட்டு?ஒரு காலத்தில் ஃபிளாப்பியையும், காம்பக்ட் டிஸ்க்குகளையும் பயன்படுத்தி வந்த கம்ப்யூட்டர் உலகம், இன்று 'Small is beautiful' என்பதற்கேற்ப Flash Drive (மின்னல் தட்டு என்று சொல்லலாமா?) என்ற புதிய சாதனத்தின் உபயோகத்தில்! குஷ்புவிடமிருந்து சிம்ரன்னுக்கு மாறிய தமிழ் சினிமா போல, இந்த 'Slim Beauty' ஃபிளாப்பி/சிடிக்களை பின்னே தள்ளி முன்னுக்கு வந்திருக்கிறது. 2GB வரை தகவல்களை பதிவு செய்ய இயலும். எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச் செல்ல வசதி. எத்தனை முறையும் மறு பதிவு செய்து கொள்ளலாம்.

பெரும்பாலான இந்திய MNC நிறுவனங்கள், இவற்றை பணி செய்யும் இடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை.,அவர்களின் பிரத்யேகமான 'டேட்டா'-க்களை, எளிதில் கடத்திச் செல்ல இயலும் என்பதால், இதை கணிணியுடன் இணைக்கும் 'USB Port' -னை, செயலிழக்கச் செய்து விடுகிறார்கள்.

முதலில் எந்த வித 'பாதுகாப்பு' வசதியும் இல்லாமல் வந்து கொண்டிருந்த இந்த Flash Drive, இப்போது பாதுகாப்பு வசதியுடன் வருகிறது. அதாவது, உங்களின் 'டேட்டா-வை காப்பி செய்யும் போது, 'Secure Protection-யுடன்' பாஸ்வர்ட் கொடுத்து பதிவு செய்தீர்களானால், அவற்றை வேறு யாராலும் பார்க்க இயலாது. பதிவு செய்தவரே ஆனாலும், பாஸ்வர்ட் கொடுத்தால்தான் பார்க்க இயலும். சிறியதாக இருப்பதால், மறதியில் எங்காவது தொலைத்துவிட வாய்ப்புண்டு. ஆகையால், இந்த 'பாஸ்வர்ட்' வசதி மிக அவசியமான ஒன்று. எனது நண்பர், அவரது Tax detail உட்பட எல்லா கணக்கு வழக்குகளையும் இதில் பதிவு செய்து, எங்கோ தொலைத்து விட்டு, இரண்டு நாட்கள் நிம்மதியில்லாமல் இருந்தார், கடைசியில் அவரது பெட்டியிலே இருந்தது வேறு விசயம்.

2GB வரை பதிவு செய்ய வசதி இருப்பதால், குட்டி குட்டி சாப்ட்வேர் எல்லாம் இதில் இருந்தே, ஓட்டிக்கொள்ளலாம். 2GB யின் விலை $40க்கு அமெரிக்க டாலரில், இந்தியாவில் இன்னும் கொஞ்சம் அதிகமிருக்கலாம். நிறைய வலை அன்பர்கள், இதனை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கலாம், மற்றவர்களுக்காக இதன் படம் மேலே...

Monday, May 22, 2006


இன்று கலிபோர்னியா தமிழ்க்கழகத்தின் சார்பாக நடத்தப் பெற்ற ஆண்டு விழாவிற்குப் போயிருந்தேன். நேர்த்தியாக செய்திருந்தார்கள். பங்கு பெற்ற குழந்தைக்ளும் குதூகலமாக ஆடிப்பாடியது அழகாய் இருந்தது. மழலைகள் அமெரிக்க தமிழில் கொஞ்சியது, தமிழின் இனிமையை வெளிக்காட்டியது. மென்மேலும் இப்பணி சிறக்க வாழ்த்துக்கள்!

Link: http://catamilacademy.org/

Thursday, May 18, 2006


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், கார்த்திக்! 'ட்ரீட் முடிஞ்சி நண்பர்கள் கமண்ட்....மயூரியில் சூப்பர் சாப்பாடு,மச்சி!