Saturday, April 29, 2006

கவிதை என்று கிறுக்கிய காலத்தில், எனக்குப் பிடித்த ஒன்று...இதோ


விண்மீன்
--------
நிலவெனும் பெண்
கோலமிட வைத்த புள்ளிகள்...
கோடுகளை இழுத்து
கோலமாக்குமுன்
அவளே 'அமாவாசை' யானதால்
இணைக்க ஆளில்லாமல்
இறைந்து கிடக்கின்றன..

------------------------------------------------------------------------------------

1 Comments:

said...

நிலவென்னும் பெண், விண்மீன்கள் புள்ளிகள், கோலமிடுவதற்கு முன் அமாவசை, இது இப்படியே தொடரும் போது எப்பொழுது கோலம் முடியும்?

நல்ல கற்பனை. வாழ்த்துக்கள்.